Monday, October 15, 2007

அமெரிக்காவின் அழுத்தம் சிங்களம் பணியுமா?-செய்திஆய்வு-

Written by Seran - sankathi Oct 15, 2007 at 09:32 AM

சிறிலங்கா மீது தற்போது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்க விரும்பும் அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை உள்நோக்கம் உடையவையா அல்லது தமிழர்கள் மீதான நியாயத் தன்மைகளின் வெளிப்பாடா என அரசியல் ஆய்வாளர்கள் மூலையைப்போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறனர்.
அண்மையில் ஐ.நாவின் 62ஆவது கூட்டத்தொடருக்காக உரையாற்ற சிறிலங்கா ஜனாதிபதியும் அவரது குழுவினரும் அமெரிக்கா சென்றிருந்தனர் அவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் றோஹித போகல்லாகம மற்றும் வெளிவிவகாரச் செயலாளரான பாலித கோகன்ன உட்படப் பலபேரும் சென்றிருந்தனர்.

குறிப்பாக அமெரிக்காவில் இவர்களுக்கு போதிய முக்கியத் துவம் தரப்படவில்லை என்பதோடு மகிந்த ராஜயபக்சவை கூடப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை என்று செய்திகள் வந்துள்ளன.

ஐ.நா கூட்டத் தொடரில் மகிந்த உரையாற்றும் போது அதனைக் கேட்க உலகத் தலைவர்கள் பலரும் அவையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவி; தமக்கு போதிய மரியாதை தரப்பட வில்லை என்பதை என்பதை அறிந்த மகிந்த அமெரிக்காவை போகல்லாகமவை விட்டுவிட்டு தானும் தனது பரிவாரங்களுடன் திரும்பி விட்டார்.

இப்போது றோகித போகல்லாகம அமெரிக்காவில் தங்கி நின்று அமெரிக் அரசு பிரதிநிதிகளை சந்தித்தித்து வருகிறார்.சிறிலங்கா தொடர்பாகக் கடும் போக்கினைக் கொண்டிருப்பதாகவே அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழன் அன்று அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் நிக்கலஸ் போன்றவர்களை சிறிலங்காவிற்கு வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம சந்தித்த போது சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கடும் விசனத்தையும் கவரையையும் தெரிவி;த்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் 45 நிமிட சந்திப்பில் மனித உரிமை துஸ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் பத்திரிகை சுதந்திரம் அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அரசியல் அதிகாரப்பகிர்வு யோசனைகளில் முன்னேற்றம் காணப்படவேண்டுமெனவும் நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்திருந்தார். இதே வேளை பாலித கோஹன்ன இலங்கை இனப்பிரச்சனை விடையத்தில் சர்வதேசம் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அதே வேளை ரோஹித போகல்லாகம இராணுவத்தீர்வை நாடும் எண்ணம் சிறிலங்காவிற்கு இல்லை என்ற கருத்தை அமெரிக்காவில் முன்வைத்துள்ள அதே வேளை மகிந்த ராஜயபக்ச வடபகுதி மீது இராணுவத் தாக்குதலை நடாத்தத் தொடங்கிவிட்டேன் எனச் சி;ங்கள மக்களிடம் கூறியுள்ளார்.மொத்தத்தில் சிங்களப்பேரினவாதிகளின் கூச்சல் தொடர்கிறது.

0 Comments: