Sunday, July 13, 2008

புலிகள் பதுங்குகின்றார்களா?

விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றிப் பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா? என்பதே இன்று கொழும்பிலுள்ள இராணுவ ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்குரியதொரு பொருளாக இருக்கின்றது. இவ்வாறு அவர்கள் குழப்பம் அடைவதற்குச் சில காரணிகள் இருக்கவே செய்கின்றது.

சிறிலங்கா இராணுவத்தரப்பின் தகவல்களைப் பெரும்பாலும் அடிப்படையாகக் கொள்ளும் ஆய்வாளர்களுக்கு இராணுவத்தரப்பால்- இறுதியாக வழங்கப்பட்டுள்ள தகவலானது விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டார்கள்; அவர்கள் வலிந்த தாக்குதல்களில் ஈடுபடும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்பதே ஆகும்.

இது குறித்து அண்மையில் பேசியிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளில் 9,000 பேரைக் கொன்றுவிட்டதாகவும்; இன்னமும் 4,000-5,000 வரையிலான புலிகளே இருப்பதாகவும் தெரிவித்திருந்ததோடு, விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகச் செயற்படும் வலுவை இழந்துவிட்டதாகவும், அவர்களினால் இனி வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இராணுவத்தரப்புத் தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக்கொண்ட விமர்சகர்களினது மதிப்பீடானது விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டனர் என்பதே ஆகும்.

அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இராணுவ ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது யுத்தத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறுவதெல்லாம், வன்னிக் களமுனையில் வெற்றிகளைக் குவித்துவரும் இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் என்ற இராணுவப் பேச்சாளரின் அறிவிப்புக்களும், விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டதாகவே சில இராணுவ விமர்சகர்கள் முடிவிற்கு வருவதற்குக் காரணமாய் உள்ளது.

இதனைத் தவிர வேறு சில இராணுவ ஆய்வாளர்கள் களமுனைகள் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் புலிகள் பலவீனப்பட்டுப் போய்விட்டார்கள் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அதாவது, மன்னார் களமுனையில், விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் காட்டிய எதிர்ப்பைக் காட்டுவதில்லை. ஆகையினால் புலிகள் பலவீனப்பட்டுவிட்டது ஊர்ஜிதப்படுத்தப்படத்தக்கதே என்கின்றனர்.

இவர்கள், மன்னார் மாவட்டத்தில்-மடுவை இராணுவம் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட படை நடவடிக்கையை எதிர்த்து ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்ட விடுதலைப் புலிகள் அதற்கு அப்பால் குறிப்பிடத்தக்க அளவில்- அதாவது மடுப் பிரதேசத்திற்காகப் போரிட்டது போல் போரிடவில்லை.

குறிப்பிடத்தக்க அளவான நிலப்பரப்பை பெரும் எதிர்ப்புக்காட்டாது விட்டு வெளியேறியுள்ளனர். இது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டதையே காட்டுகின்றது எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக விமர்சகர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டதாகக் கூறுகையில், ஒரு தரப்பினர்- பெரும்பாலும் நடுநிலைமையான ஆய்வாளர்கள் சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்களைக் கொண்டும் சரி, களமுனையின் நிலவரத்தையும் கொண்டும் சரி விடுதலைப் புலிகளை மதிப்பிடுதல் வரலாற்றுத் தவறாகிவிடும் எனத் தெரிவிக்கின்றனர்.

இவர்கள், விடுதலைப் புலிகளின் குண இயல்புகளைக் கொண்டே இதனை மதிப்பிடவேண்டும் எனவும், ஆனால் அது ஒரு இயலுமான காரியம் அல்ல எனவும் தெரிவிக்கின்றனர். இதற்குக் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் உதாரணம் காட்ட முற்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் அல்ல எனத் தெரிவிக்கும் அவர்கள் அவ் இயக்கமும், அதன் தலைமையும் 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றைக் கொண்டது என்பதோடு, இரு நாட்டு இராணுவங்களோடு போரிட்டுள்ளதோடு- தற்போதைய நெருக்கடியைவிட மோசமான நெருக்கடியிலும் வெற்றிகரமாகப் போரிட்ட அமைப்பு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இவர்களின் மதிப்பீட்டின்படி, விடுதலைப் புலிகள் இயக்கமானது தனக்கான போர் யுக்தியைத் தானே வகுத்துக்கொள்ளும் அமைப்பாகும். எவரிடமும் கடன் வாங்கியோ எவரின் அழுத்தத்திற்கு உட்பட்டோ அது தனது போர் யுக்தியை அமைத்துக்கொண்டதும் இல்லை மாற்றிக்கொண்டதும் இல்லை.

சிறிலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்து விடுதலைப் புலிகளில் 70 வீதத்தினரை அழித்துவிட்டோம், 90 வீதத்தினரை அழித்துவிட்டோம் எனப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு புலிகளின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், சரணாகதி அல்லது சாவு என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை எனப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த போதும், விடுதலைப் புலிகள் யுத்தத்தை தமது திட்டத்திற்கும், யுக்திக்கும் ஏற்பவே நடத்தினர்.

ஜெயசிக்குறு நடவடிக்கை ஆரம்பித்து சில நாட்களில் புளியங்குளம் கைப்பற்றப்படும் என எதிர்பார்த்திருந்த சிறிலங்கா இராணுவத்தால் இரண்டு மாதங்களுக்கு மேலாக அதனைச் சாதிக்க முடியாது போனது. மாறாகப் புலிகள் புளியங்குளத்தை விட்டுத் தாமாகப் பின்வாங்கியபோதே இது சாத்தியமாகியது. கனகராயன்குளத்திலும், ஏன் மாங்குளத்திலும் கூட அதுவே நடந்தது.

அதாவது, கிளிநொச்சி நகரை ஓயாத அலைகள்-02 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகள் கைப்பற்றிக்கொண்டதும் - மாங்குளத்தை விட்டுப் புலிகள் வெளியேறி இருந்தனர் என்பதே நிஜமானதாகும். அவ்வேளைகளில் களமுனையில் இருந்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு அது நன்கே தெரிந்திருக்கும்.

ஆகையினால், விடுதலைப் புலிகள் ஒரு பிரதேசத்தில் தீவிர எதிர்ப்புக் காட்டுவதும் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கிக் கொள்வதும் அவர்களின் போரியல் யுக்தியின்பாற்பட்டதானதாக இருக்குமே ஒழிய புலிகள் பலவீனப்பட்டுவிட்டதன் அடையாளமாக இதனைக் கொள்வதென்பது- தவறானதொரு முடிவாகவே இருக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு அவர்கள் மற்றொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2006 இல் இராணுவம் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்து கிழக்கை ஆக்கிரமித்ததன் பின்னர் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாக இராணுவத் தரப்பாலும், அரச தரப்பாலும் பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஆனால் ஒரு மாத காலத்தில் மடுப்பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொள்ளமுடியும் என ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை ஒரு வருடம் கடந்த நிலையிலேயே சாத்தியமானதும் - அதுவும் விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்தைவிட்டு அகன்ற பின்பே சாத்தியமானது எனத் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சிறிலங்கா இராணுவம் வன்னிக்களமுனையில் எதிர்பார்த்த அளவில் சாதிக்கவில்லை என்று இராணுவத்தின் இழப்பு ஒரு வாதத்திற்குரியதாக மாறியுள்ளது என்றும் ஆய்வாளர்களில் ஒருதரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

அதாவது, வடக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியைச் சூழ இராணுவம் நான்கு முனைகளில் ஒரு வருடத்திற்கு மேலாகப் போரிட்டு வருகின்றபோது மன்னார்க் களமுனையில் பெரும் இழப்புக்களின் பின்னர் கண்டுள்ள ஓரளவு முன்னேற்றத்தைத் தவிர வேறு முனைகளில் அதனால் சாதிக்கமுடியாது போனது மட்டுமல்ல ஓரிரு முனைகள் குறித்து அதனால் சிந்திக்கவே முடியாது உள்ளது என்கின்றனர்.

குறிப்பாக யாழ். குடாநாட்டில் அதாவது, வடபோரரங்கில் சிறிலங்காப் படைத்தரப்பு கையறு நிலையில் இருப்பதாகவும் தமது வலிந்து தாக்குதல் என்பதைவிட விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் எப்பொழுது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்தே அவை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மணலாற்றுக் களமுனையைத் திறந்த இராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டிருப்பினும்- குறிப்பிடத்தக்கதான முன்னேற்றத்தை அதனால் எட்ட முடியவில்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் பொறிவெடிகளையும் கண்ணிவெடிகளையும் தாண்டி முன்னேற முடியாத நிலையிலேயே அவை உள்ளன.

வவுனியாக் களமுனையிலும் படையினரால் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டமுடியவில்லை. பாலமோட்டை போன்ற சில கிராமங்களிலேயே ஒரு வருடத்திற்கு மேலாக அவை போரிட்டவண்ணமுள்ளன.

இதேவேளை 2007 இன் முதற் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வடக்குக் களமுனைகளில் இராணுவம் குறிப்பிடத்தக்கதானதொரு அளவு இழப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து இராணுவத்தரப்பில் இருந்தும், அரச தரப்பில் இருந்தும் சரியான புள்ளி விபரங்களோ, பொருத்தமான புள்ளி விபரங்களோ வெளியிடப்படுவதில்லை.

இவ்விடயத்தில் அரச தரப்பும், இராணுவத் தரப்பும் உண்மையான தகவல்களை வெளியிடாதது மட்டுமல்ல, முரண்பாடான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக எருக்கலம்பிட்டி கடற்படை முகாமை கடற்புலிகள் தாக்கி அழித்தபோது அதில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்திருந்தது, கடற்படைத் தரப்போ ஆறு கடற்படையினர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியிட்டிருந்தன. இது இழப்புக் குறித்து சிறிலங்காத் தரப்பு வெளியிடும் புள்ளி விபரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதனைத் தவிர இறந்த படையினரின் தொகைக்கும் காயமடைந்த படையினருக்கும் இடையிலான விகிதாசாரத் தொடர்பு பொருத்தப்பாடற்றதாயுள்ளது. யூன் மாதத்தில் 112 படையினர் கொல்லப்பட்டும் 789 படையினர் காயமடைந்தும் உள்ளனர் என்ற விகிதாசாரம் போரில் கொல்லப்படும் காயமடையும் வீரர்களின் சர்வதேச மதிப்பீடுகளுக்கு மாறுபாடானதாகவே உள்ளது. இருப்பினும், காயத்தின் எண்ணிக்கை அதிகம் என்ற அளவில் கூட படையினருக்கான சேதம் பெரிதாக இருப்பதனை இப்புள்ளி விபரங்கள் உறுதி செய்பவையாகவே உள்ளன.

இவை ஒருபுறம் இருக்க, வன்னிக் களமுனையில்- குறிப்பாக மன்னார்க் களமுனையில் அண்மையில் இராணுவத்தினருக்குச் சாதகமானதாகத் தென்படும் களமுனையின் போக்கானது விடுதலைப் புலிகளின் போர் யுக்தியின் ஒரு பகுதி எனவும் சில இராணுவ ஆய்வாளர்கள் கொள்கின்றனர்.

அதாவது, இராணுவத்தைப் பரந்து விரிய அனுமதிப்பதன் மூலம் இராணுவத்தின் செறிவைக் குறைக்கவும் - அதன்மூலம் தமது வலிந்த தாக்குதலுக்கான சாதகமானதொரு சூழ்நிலை ஒன்றை உருவாக்கவும் முடியும் என விடுதலைப் புலிகள் கருதுகின்றனர் எனவும் அவர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.

இந்தவகையில் தற்பொழுது சிறிலங்கா இராணுவ ஆய்வாளர்கள் மட்டத்தில் விடுதலைப் புலிகள் பதுங்குகின்றார்களா? அன்றி பலவீனப்பட்டுப் போய்விட்டார்களா என்பது குறித்து பலமான சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கவே செய்கின்றன.

ஆனால், விடுதலைப் புலிகளின் வரலாறு அதன் தலைமைத்துவத்தின் இராணுவ மதிநுட்பம் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டியது போன்றவற்றை மதிப்பீடு செய்ய முற்படுபவர்கள் பெரும் சமர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உண்டு என நம்புகின்றனர்.

அதாவது, விடுதலைப்புலிகள் பதுங்குகின்றார்கள் என்றே கொள்கின்றனர்.

நன்றி: வெள்ளிநாதம் (11.07.08)

இலங்கை விவகாரம் பல முகங்களைக் காட்டும் இந்தியா

இலங்கைத் தமிழர் குறித்தும் அவர்களது இனப்பிரச்சினை குறித்தும் இந்தியாவிற்குப் பல முகங்கள் உண்டு. ஆனால் சிறிலங்காவிற்கோ சிங்கள ஆட்சியாளருக்கோ இந்தியா குறித்து ஒரு முகம்தான் உண்டு.

இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை குறித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பல்வேறு முகங்களை இந்தியா காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் ஆளும் சிங்கள அரசாங்கங்களினால் அடக்கி ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனைப் பயங்கரவாதப் பிரச்சினையென சிங்கள அரசாங்கங்கள் வெளியுலகிற்குக் காட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வரலாற்று நிலைமையை இந்தியா ஏற்கெனவே நன்கு உணர்ந்துள்ளது. சர்வதேச சமூகமும் உணர்ந்துள்ள தற்போதைய நிலையில் சிங்கள அரசாங்கத்தின் தமிழர் மீதான அடக்குமுறை மனித உரிமைகள் மீறல்களுக் கெதிராக ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமை அமைப்புக்களிலும் உலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து சிங்கள அரசாங்கத்தின் மீது கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வர முற்பட்ட வேளையில் இலங்கையில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் தற்போது இல்லை என்று இந்தியா சிறிலங்காவிற்காக வககாலத்து வாங்கியது. இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியா காட்டிய ஒரு முகம்.

இதேவேளை, அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜேய்சிங், வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சிறிலங்கா சனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலர்- உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டாம் என்றும் சிறிலங்காவிற்குத் தேவையான ஆயுதங்களை இந்தியா வழங்கத் தயாராய் இருக்கின்றது என்ற பேரம் பேச்சை முடித்துவிட்டுச் சென்றுள்ளனர். தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை யுத்தத்திற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கத் தயாராய் இருப்பது என்பது இப்பிரச்சினையில் இந்தியாவின் மற்றைய முகமாகும்.

இதேவேளை இந்தியப் பிரதமரும் உயர் அதிகாரிகளும் புதுடில்லியிலிருந்து இலங்கை இனப்பிரச்சினை பற்றி அறிக்கைகள் வெளியிடும்போது இந்தப் பிரச்சினையை இராணுவ வழிமுறையில் தீர்க்கமுடியாது அரசியல் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துவைக்க முடியும் எனக்கூறி வருவதானது இதன் மற்றொரு முகமே.

மேலும் இலங்கை இனப்பிரச்சினை குறித்தும் தமிழர் மீதான சிங்கள இனவாத அடக்குமுறை குறித்தும் தமிழக அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் தமிழர் இலங்கையில் ஏனைய இனத்தவர் போன்று சகல உரிமைகளுடனும் வாழக்கூடிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று புதுடில்லி கூறியிருக்கிறது. இது அதன் மற்றொரு முகமாகும்.

இந்திய கொள்கை வகுப்பாளர்களின் தவறான எடுகோள்கள் காரணமாக இந்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறைகளில் பல சந்தர்ப்பங்களில் பல முகங்களைக் காட்டுகின்றனர். ஆனால் இந்தியா தொடர்பாக இலங்கையில் சிங்கள ஆட்சியாளருக்கு ஒரு முகமே இருக்கின்றது. அவர்கள் அதில் தெளிவான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலனுக்கு எதிரானதே அந்தக் கொள்கையாகும். இதை அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர��
�.

திருக்கோணமலை துறைமுகப்பகுதியிலுள்ள எண்ணைக் குதங்களில் இந்தியா தனியுரிமைபெற சிறிலங்கா அனுமதிக்கவில்லை. இது முக்கிய அம்சமாகும். கொழும்பில் இந்திய எண்ணைக் கூட்டுத்தாபனத்துடன் சிறிலங்கா அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து முரண்பட்டு வருகின்றனர். அவர்களின் கூட்டுத்தாபனத்தை தேசவுடமையாக்குவோம் என்றும் சிறிலங்கா அமைச்சர் மிரட்டவும் தவறவில்லை.

மேலும் இந்திய மீனவர்களைத் தொடர்ந்து சிங்களக் கடற்படையினர் கொன்றொழித்து வருகின்றனர். இது குறித்து இரு அரசுகளின் உயர்மட்டத்திலும் பல தரப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றிருந்தாலும் சிங்கள மக்களின் மனங்களில் ஆழவேரூன்றிய இந்திய எதிர்ப்புணர்வு சிறிலங்காக் கடற்படையில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

ஒரு நாட்டின் எல்லைக்குள் இன்னுமொரு நாட்டின் மீனவர்கள் புகுந்துவிட்டால் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்துவதே வழமை. ஆனால் சிறிலங்காக் கடற்படையினரோ அவர்களைக் கண்டவுடன் சுட்டுக்கொலை செய்துவிடுகின்னர். இது சிறிலங்காக் கடற்படையினரதும் அவர்களுக்குக் கட்டளை இடுபவர்களினதும் இந்திய எதிர்ப்புக் குறித்த மன உணர்வையே வெளிக்காட்டுகிறது.

ஏன் இந்திய உயர்மட்ட அதிகாரிகளின் கொழும்பு விஜயம் குறித்து ஜே.வி.பி.யின் அநுரா குமாரதிஸநாயக்க (மகிந்தவுடன் சேர்ந்து நிற்கும் அணி) மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

'இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர் ஆகியோர் கலதாரி விடுதியில் இரவு விருந்துக்காக வரவில்லை அரசியல் விளையாட்டுக்காகவே வந்துள்ளனர். இந்தியா எமது நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது. எரிபொருள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியா இன்று தன்னகத்தே கொண்டுள்ளது என அவர் இந்திய உயர் அதிகாரிகளின் விஜயத்தைச் சாடியுள்ளார். ஜே.வி.பி. எப்போது உருவாகியதோ அன்று தொட்டு இன்றுவரை இந்திய எதிர்ப்புக் கொள்கையையே கைக்கொண்டு வருகிறது.

சிங்களப்படைகளுக்குச் சார்பாக விடுதலைப் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தம் செய்த காலத்தில் கூட ஜே.வி.பி. இந்தியாவை பலமாக எதிர்த்தே வந்தது. இந்தியப் பொருட்களை சிங்கள மக்கள் நுகரக்கூடாது என்று கூட தெற்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. விற்போரைப் படுகொலையும் செய்தது.

சிறிலங்காவின் கொள்கை தொடர்பில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங் காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லாகம அண்மையில் 'ரைம்ஸ்நவ்|| என்ற பத்திரிகை ஊடாகக் கேட்டிருந்தார்.

சிறிலங்காவின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பு ஆங்கில இராஜதந்திரிகளுடன் உரையாடும் போது வடக்கு கிழக்குத் தமிழர்கள், வடக்குக் கிழக்குப் பகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைத்து விடுவார்களோ என்று தனக்கு ஒரு அச்சம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இதற்கு அந்த ஆங்கில இராஜதந்திரி கிழக்கைத் துண்டாக உடைத்துச் சிங்களக் குடியேற்றத்தை நிறுவுவதன் மூலம் இந்த அச்சத்தைப் போக்கலாம் என்று கூறியிருந்தார்.

இராணுவ வழி மூலம் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க முற்படாது அரசியல் பேச்சுக்கள் மூலம் தீர்க்க வேண்டுமென கொழும்பிற்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய உயர் அதிகாரிகள் கூறியதற்குச் சிங்கள பௌத்தப் பேரினவாதியும் முக்கியமான அரசியல்வாதியுமான ஒருவர் இந்தியா மீதிருந்த சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, அன்று விடுதலைப் புலிகளுக்குத் தனது நாட்டில் வைத்து ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களைப் பயன்படுத்தி சிறிலங்காப் படையினரைக் கொலை செய்வதற்குச் சதிசெய்த இந்தியா இன்று சிறிலங்கா அரசிற்கே வந்து இப்படி ஒரு ஆலோசனை வழங்கியிருக்கிறது.

தற்போதைக்கு இந்தியாவிற்கு உரிய பணி புலிகளுக்கெதிரான சிறிலங்கா அரசின் யுத்தத்திற்கு இராணுவ ரீதியில் சகல வழிகளிலும் உதவியளிப்பதே தவிர இப்படியான மடத்தனமான ஆலோசனைகளை வழங்கு வதல்ல என்று 'டெய்லி மிரர்" பத்திரிகையில் எஸ்.எல்.குணசேகர எழுதியுள்ள பத்தியில் இந்தச் சீற்றம் வெளிப்பட்டுள்ளது.

அதாவது, சிறிலங்காவிற்கு ஆயுத உதவி செய்வதற்கும் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குமாக கொழும்பிற்கு வந்த இந்திய அதிகாரிகள் ஏதோ ஒரு இராஜதந்திர மரபுக்கிணங்க (தமிழர் மீதுள்ள தார்மீகக் கடப்பாட்டின் அடிப்படையிலல்ல) கூறிய ஒரு கூற்றுக்காக இனவாதியான எஸ்.எல்.குணசேகர வெளிப்படுத்திய சீற்றம் அவர்களுக்குள்ள இந்திய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதோடு இந்தியாவிடம் இருந்து பெறக்கூடிய உதவிகளைச் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப பெறுவதோடு இந்தியாவின் பிராந்திய நலன்சார்ந்த விடயங்களில் விட்டுக்கொடுக்காத உணர்வலைகளையே வெளிப்படுத்தி நிற்கிறது.

சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கூட அடிப்படையில் இந்திய எதிர்ப்புணர்வையே ஆழ்மனப் பதிவாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குக் கொழும்பில் வைத்துச் சிங்களக் கடற்படைச் சிப்பாய் தாக்கிய சம்பவம் சிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புணர்வை வெளிக்காட்டும் குறிகாட்டியாகும். அது மட்டுமல்ல அந்தச் சிப்பாய் சிங்கள அரசாங்கத்தால் தேசிய வீரராகக் கௌரவிக்கப்பட்டிருந்தார். இது சிங்கள மக்களிற்கிருந்த இந்திய எதிர்ப்புணர்வைத் தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுத்த அரசின் நடவடிக்கையாகும்.

சிறிலங்கா அரசியல்வாதிகள், ஆட்சியாளர், சிங்களப் பொதுமக்கள் அனைவரும் இந்திய எதிர்ப்புணர்வைச் சிறிலங்கா சுதந்திரம் பெற்றத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்ற போது பாகிஸ்தானிய யுத்த விமானங்கள் கொழும்பில் எரிபொருள் நிரப்பிச்செல்ல அப்போதைய சிங்கள அரசாங்கம் வழிசெய்து கொடுத்திருந்தது.

இவ்வாறாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை சிங்கள தேசம் வெளிப்படுத்திய வரலாற்றுச் சம்பவங்கள் அன்றில் இருந்து இன்றுவரை காணலாம். தற்போது கூட யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினர் பொருத்தியுள்ள சக்தி வாய்ந்த சீனாவின் 'ராடர்" மூலம் இந்தியாவின் தென்பிராந்தியங்களைச் சீனா கண்காணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 'சார்க்" உச்சிமாநாட்டை ஒட்டி கொழும்பில் நடைபெறப்போகும் இந்தியாவின் படைவலு வெளிப்படுத்துகை அமையப்போகிறது.

அதாவது, 'சார்க்|| மாநாட்டிற்காகக் கொழும்பிற்கு வரும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்காக ஒரு தொகுதி தரைப்படை கொழும்பிற்கு வரவுள்ளதோடு கொழும்பில் அவர் தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பு வான் பாதுகாப்பிற்கு இந்திய விமானப்படையும் கொழும்பின் கடற்பாதுகாப்பிற்கு இந்திய கடற்படையும் வரவுள்ளன. இந்த அணுகுமுறையானது ஒரு வகையில் சிறிலங்கா மீது தனக்கு இருக்கும் மேலாதிக்கத்தை படைவலு மூலம் உணர்த்த முற்பட்டுள்ளதையே காட்டுகிறது. இது ஒருவகையில் சிறிலங்கா விவகாரங்களில் அதிக கரிசனை கொண்டுள்ள சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றிற்கான ஒரு எச்சரிக்கையாகவும் கொள்ளமுடியும்.

இது போன்ற எச்சரிக்கைகள் சிங்கள ஆட்சியாளர் மற்றும் சிங்கள மக்களின் இந்தியாவிற்கெதிரான ஆழ்மனப் பதிவுகளை மாற்றிவிடாது. மாறாக சினத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தி சிங்களத் தீவிரவாதக் கட்சிகளுக்குத் தீனி போடுபவையாகவே அமையும்.

இந்த எதிர்ப்புணர்வு எதிர்காலத்தில் பிராந்திய நலன் குறித்த விவகாரத்தில் இந்தியாவிற்குச் சாதகமான போக்கைச் சிறிலங்கா கைக்கொள்ள தடையாய் இருக்கும். இதற்கு முன்னுதாரணங்களாக கடந்தகால வரலாற்று நிகழ்வுகளும் தற்போதைய குறிகாட்டிகளாக சீனாவுடனும், பாகிஸ்தானிடம் சிறிலங்கா ஆட்சியாளர் கொண்டுள்ள நெருக்கமான உறவையும் நாம் காணலாம்.

இந்தியா எவ்வளவுதான் சிறிலங்காவிற்கு இராணுவ, பொருளாதார ரீதியாக உதவினாலும் சிறிலங்கா, சீனா, பாகிஸ்தானின் உறவை உயிர்த்துடிப்புடனேயே பேணிக்கொள்கிறது. இதை இதுவரை இந்திய இராஜதந்திரத்தால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை என்பது முக்கியமானதாகும்.

ஆகவே, சிறிலங்காவிற்கு சீனா, பாகிஸ்தானுடன் மேலும் உறவு பலப்பட்டு அவை இங்கு பலமாக காலூன்றுமாகில் இந்தியாவின் ஐக்கியத்திற்கும் பிராந்திய நலனுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.

ஆகவே, இந்தியாவின் ஐக்கியமும் பிராந்திய நலனும் பாதுகாக்கப்படவேண்டுமாகில் தமிழீழ மக்களின் ஆதரவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழீழப் பிரதேசமும் முக்கியமானதாகும். ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், இதைக் குறுகிய வட்டத்திற்குள் நின்று அதாவது சிங்கள மக்களின் மனங்களில் ஆணி அறைந்தால் போலுள்ள இந்திய எதிர்ப்புணர்வைச் சரியாக மதிப்பிடாது தமிழீழ மக்கள் தனி நாட்டை அமைத்தால் அது இந்தியாவின் ஐக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சிந்திப்பது யதார்த்தத்திற்கு முரணானது.

ஆகவே, இந்தியா தனது கொள்கையைத் தொப்புள்கொடி உறவுள்ள தமிழீழ மக்களின் தனிநாட்டுக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளாத வரை சிங்கள ஆட்சியாளருக்கு உதவிகளை வழங்கிக்கொண்டிருக்க நிர்ப்பந்திக்கப்படுவதோடு சீனா, பாகிஸ்தானை வைத்துச் சிறிலங்கா இந்தியாவை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.

Friday, July 11, 2008

ஜே.வி.பியினருக்கும் புலிகளுக்கும் முடிச்சுப் போடும் கோமாளித்தனம்

தன்னுடைய "கோயபலஸ்' அரசியல் பிரசாரங்களுக் காக "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச் சுப் போடக்கூட' பின்னிற்காதவர் இலங்கை அரசின் பாது காப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

அவருடைய கோமாளித்தனமான அரசியல் கருத்து வெளிப்பாடுகளால் அவரை அரசியல் விதூஷகராக விமர்சித்துக் கிண்டல் செய்யவும் ஆய்வாளர்கள் தவறு வதில்லை.
அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்து வெளி யிட்டிருக்கின்றார் அவர்.
யுத்த வெறிப் போக்கை மட்டுமே தனது அரசியலுக் கான மூலதனமாகக் கொண்டு, ஆட்சியைக் கொண்டி ழுக்கும் இந்த அரசு, தான் எதிர்நோக்கும் எந்த அரசியல் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு யுத்தம் என்ற கவசத்துக்குப் பின்னால் போய் ஒளிக்க வேண்டிய கட் டாயத்தில் உள்ளது.

"செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேல்' என்பது போல அரசுக்கு வருகின்ற சிக்கல்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள் எல்லாவற்றையும் யுத்தக் கணக்கின் மீது சுமத்திவிட்டுத் தன்னைக் காபந்து பண்ணிக் கொள்ள வேண்டிய சிக்கல் அரசுக்கு. அரசின் அந்த வேலையை அரசியல் விதூஷகரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவே அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டியவராகவும் இருக்கின்றார்.

நாட்டு மக்களின் குறிப்பாகத் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தி ஜே.வி.பி. முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்ட முஸ்தீபில் அரண்டுபோன அரசுத் தலைமை, அந்த அரசியல் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக யுத்தத்தின் பின்னாலேயே பாதுகாப் புத் தேடவேண்டிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கின்றது.

ஜே.வி.பியின் புலி விரோதப் போக்கு ஏன் தமிழர் விரோதப் போக்கு வெளிப்படையானது; அப்பட்ட மானது; பகிரங்கமானது.

பௌத்த சிங்கள மேலாதிக்க வெறியிலும் பேரின வாத மேலாண்மைத் திமிரிலும் அமிழ்ந்து, ஊறி, அதில் மூழ்கிக் கிடக்கும் ஜே.வி.பி., தமிழர் தரப்புடனோ, புலிகளுடனோ சமரசம் செய்து, சமாதானத் தீர்வு காண்பதை எதிர்த்து வருகின்றது. புலிகளுடன் பேசவே கூடாது என்றும், அவர்களை முழு அளவில் அழித்து ஒழிப் பதற்காக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்றும் ஒற்றைக்காலில் நின்று வலியு றுத்தி வந்த தென்னிலங்கைத் தீவிரவாதக் கட்சி அது.

இந்த அரசுத் தலைமையாவது, ஜனாதிபதித் தேர்த லுக்கு முன்னர் "அமைதித் தீர்வு' குறித்து மேலோட்ட மாகவேனும் நடிப்புக்கேனும் தனது ஈடுபாட்டைக் காட்டியது. ஆனால் ஜே.வி.பியோ நாடாளுமன்றத் தேர்தலுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கும் முன்னர் இருந்தே ஒரே நிலைப்பாட்டில்தான் யுத்த வெறிப் போக்கில் தான் இருந்து வருகின்றது.
அது புலிகளுடன் பேசித் தீர்வு காண முயற்சிக் கவே கூடாது. புலிகளை அழித்தொழிக்க இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை முழு அளவில் ஏவி விடவேண்டும். தமிழர்களுக்கென்று பிரதேச, பிராந் திய அதிகாரப் பரவலாக்கல் ஏதும் அவசியமில்லை. தேவையானால் கிராம மட்டத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யலாம் இதுவே ஜே.வி.பியின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வந்தது; இருந்து வருகின்றது.

அத்தகைய ஜே.வி.பி. நேற்று முன்னெடுத்த அரச பொது வேலைநிறுத்தத்தால் அரண்டுபோன அரசுத் தரப்பு, அதைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடி இவ்விடயத்திலும் யுத்தத்தை முன்னிறுத்தி, தப்ப எத்தனிக்கின்றது.

அதற்காக முழு புலி எதிர்ப்பு சிங்கள அமைப்பான ஜே.வி.பியை புலிகளுடன் முடிச்சுப்போட முயல்கிறது அரசு. அந்தக் கைங்கரியத்தை முன்னெடுக்கின்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

""புலிகளுக்கு உதவி செய்வதற்காகத்தான் ஜே.வி. பியினர் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பு வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இவ்விடயத் தில் புலிகளுக்கு ஒத்தாசை புரிந்து அதன் மூலம் அர சுப் படைகளுக்கும் கேடு விளைவிக்கவே ஜே.வி.பி. எத்தனிக்கின்றது.'' என்று அவர் குற்றம் சுமத்துகின்றார்.

""ஜே.வி.பி. அரச ஊழியர்களுக்கு ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு கேட்டு இந்தப் போராட்டத்தை முன் னெடுக்கின்றது. அவர்கள் கேட்கின்றபடி, ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வை அரச ஊழியர்களுக்கு வழங்குவ தாயின் புலிகளுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்படும் கணிசமான தொகையில் வெட்டு விழும். அதைத்தான் புலிகளும் எதிர்பார்க்கின்றார்கள். அதனையே ஜே. வி.பி. செய்வதால் ஜே.வி.பிக்கும் புலிகளுக்கும் ஏதோ தொடர்புகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம்'' இப் படி விளக்கமளிக்க முயல்கின்றார் அமைச்சர் கெஹலிய.

மாதனமுத்தா வழி வந்தோருக்கு இப்படிக் கதை கூறி, சுலபமாக வெற்றிகரமாக அரசியல் நடத்த லாம் என்பதால் இப்படிப் பேசுவதற்கு தென்னிலங் கையில் கைதட்டும், வரவேற்பும் கிடைக்கின்றன.

இக்கூற்றுக்களையெல்லாம் சுலபமாக நம்பும் பொதுமக்கள் இருக்கும்வரை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு என்ன குறை? அவர்கள் காட்டில் எப்போதும் நல்ல மழைதான்!

நன்றி - உதயன்

Monday, July 7, 2008

இந்திய, அமெரிக்கத் தேர்தல்களால் இங்கு தமிழர்களுக்கு நீதி கிட்டுமா?

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய ஒரு முக்கிய விடயத்தை தமிழர் தரப்பு விடுதலைப் புலிகள் தரப்பு மீண்டும் மீண்டும் பாரத தேசத்துக்குச் சுட்டிக்காட்டி வருகின்றது.
"இந்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் இப்பிராந்தியத்தில் தங்களின் நேச சக்திகள் எவை, நண்பனாக வேடம் போட்டுக்கொண்டு குழிபறிக்கும் சக்திகள் எவை என்பதைச் சரியாக அடையாளம் காண வேண்டும்' என்று புலிகள் உரிமையோடு இந்தியாவை வற்புறுத்தி வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தின் "குமுதம்' இதழுக்குப் பேட்டியளித்த விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் பா.நடேசன், இந்திய விவகாரத்தில் இலங்கைத் தரப்பு நடந்துகொண்ட போக்கை வரலாற்றுப் பின்ன ணியோடு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
""இந்திய சீனப் போரின் போதும், இந்திய பாகிஸ் தான் போரின்போதும், இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டையே சிங்கள அரசுகள் எடுத்திருந்தமை வரலாறு. அப்போதெல்லாம் ஈழத் தமிழர்கள் இந்திய அரசுக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். ஆனால் இப்போது ஈழத் தமிழர் தமது சொந்த விடுதலைக்காக இரத்தம் சிந்திப் போராடும்போது, இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவுகின்றதே......? அதை நிறுத்தி எமது விடுதலைப் போராட் டத்துக்கு ஆதரவாகவே அது செயற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.'' என்று நடே சன் கூறியிருக்கின்றார்.

புலிகள் தரப்பிலிருந்தும் ஈழத் தமிழர்கள் பக்கத்தி லிருந்தும் விடுக்கப்படும் இத்தகைய வேண்டுகோள் புதுடில்லியின் காதில் ஏறுமா என்பதே கேள்வி.

ஆனால் தனது தற்போதைய பதவிக் காலத்தின் அந்தத்தில் தான் ஆட்சியில் நீடிப்பதே உறுதியில்லை என்ற நிலையில் அரசியல் செல்வாக்கு வறுமையில் சிக்கி அல்லாடித் தள்ளாடிக் கொண்டிருக்கும் தற்போதைய மன்மோகன்சிங் அரசின் காதில் இந்தக் கோரிக்கை விழுவதோ அதை சாதகமாக அது பரிசீலித்து வலிமையான நடவடிக்கைகளில் இறங்குவதோ சாத்தி யமேயற்ற விடயங்கள் என்பதை அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி விட்டன.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைச் செய்வதா, இல்லையா என்ற "இரண்டுங் கெட்டான்' நிலையில் தவித்துப்போய் நிற்கும் மன்மோகன் அர சால், இலங்கை விவகாரத்தில் நீதியின்பால் நியாயத் தின்பால் நின்று தீர்க்கமான முடிவு எடுக்க முடியாது என்பது திண்ணம். அதற்கான அரசியல் பற்றுறுதியும், துணிச்சலும், திடசங்கற்பமும் மன்மோகன் அரசிடமோ, அதற் குள் அதிகாரம் மிக்கவராக இன்று விளங்கும் சோனியா காந்தியிடமோ இல்லவே இல்லை என்பதும் தெளிவு.

தேவையானால், அண்மையில் தான் கொழும்புக்கு அனுப்பிய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு போன்ற, செல்வாக்குள்ள குழுக்கள் மூலம் கொழும்புக்கு வாய் மூலமாக "டோஸ்' கொடுக்கும் வேலைகளைப் புதுடில்லி செய்து பார்க்கலாம். அதற்கு அப்பால் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து அதனை வழிக்கு வரப் பண்ணும் அல்லது பணியவைக்கச் செய்யும் எந்தச் செல்வாக்கோ, தைரியமோ, ஆளுமையோ இன்றைய புதுடில்லி அரசுத் தலை மைக்கு அடியோடு கிடையவே கிடையாது என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

தனது இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளோடு கொள்கை ரீதியாகப் பகைத்துக்கொண்டு தன்னுடைய அரசையே ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியாது தடுமாறும் புதுடில் லித் தலைமை இலங்கை விவகாரத்தில் நீதியைக் கையில் தூக்கிக் கொண்டு, நியாயத்தை நிலைநிறுத்தப் புறப்பட் டால் அது "மூஞ்சூறு தான் போகக் காணோமாம், அதற் குள் விளக்குமாற்றையும் தன்னோடு சேர்த்துத் தூக்கிக் கொண்டதாம்' என்ற மாதிரியாகிவிடும்.

எனவே தற்போதைய புதுடில்லி அரசிடம் இருந்து தமிழர்கள் நீதி, நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்ப தில் அர்த்தமில்லை.

எனினும், இலங்கை விடயத்தில் மன்மோகன்சிங் அரசின் கையறு நிலைமை குறித்து இந்தியாவில் இவ் வருட முடிவில் அல்லது அடுத்த வருட முற்பகுதி யில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் அமோக வெற் றியீட்டி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க் கப்படுகின்ற பாரதீய ஜனதாக்கட்சியின் சார்பில் அதன் தென்னிந்தியப் புலனாய்வுப் பிரிவு சென் னையில் அவசர அவசரமாகக் கூடி ஆராய்ந்திருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவல நிலைமை குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.
* வடக்கில் தமிழர்களை அழிக்க இலங்கைப் படை கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈழத் தமிழர் களின் கைகளைப் பலப்படுத்துவது.

* அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் சமஷ்டிமுறைத் தீர்வை ஆதரிப்பது.

இவையே அந்த முடிவுகள் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
ஆக, அடுத்த வருடத்துக்குள் வரப்போகின்ற இந்தியப் பொதுத் தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு விடிவு தருவதாக அமையக்கூடும். இந்த நவம்பரில் அமெரிக்காவில் நடை பெறும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவும், இலங்கை போன்ற நாடுகளில் தமது உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இன மக்களுக்கு மீட்சி தர வழி செய்வதாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு அடுத்த வருடத்தோடாவது மீட்சி கிட்டலாம் என்ற நப்பாசையை நம்பிக்கையை இந்திய, அமெரிக்கத் தேர்தல்கள் தருவனவாக உள்ளன என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லலாம்.


thanks uthayan

Sunday, July 6, 2008

பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி?

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.

பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார்.

ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்வுக் கான நியாயமான உரிமைகளுக்கான இந்த நீதியான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடு தமிழக முதல்வருக்கு உண்டு என்ற பொறுப்பை இந்தப் பேட்டியில் நாசூக்காகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார் நடேசன்.

கலைஞர் கருணாநிதியின் தமிழுணர்வு சந்தேகத் துக்கு அப்பாற்பட்டது என்பதையும் ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் கலைஞர் கருணாநிதி என் பதையும் புலிகளின் அரசியற் பொறுப்பாளர் வெளிப் படுத்துகின்றார்.

இப்படி கலைஞர் குறித்து, குறிப்பிடுவதற்கு உரி மையும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பொங்கிட எழுங்கள் என்ற அவரைப் பார்த்துக் கோருவதற்கான நெருக்கமும் உடையவர் நடேசன் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

எண்பதுகளின் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்திலும் செயற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் கலைஞருடன் தொடர்பாடல் நடத்தி வந்த முக்கிய புலிகளின் பிரமுகர் நடேசன் அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவராக விருந்த கலைஞருக்கு மிகநெருக்கமானவராகவும், விருப்புக்குரியவராகவும் இருந்தார் நடேசன்.
அதுமட்டுமல்ல தொண்ணூறுகளின் முற்பகுதி யில் ராஜீவ் படுகொலைக்கு முன்னர்இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் அச்சமயம் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியோடு புலிகள் சார்புப் பிரதிநிதியாக நேரடிப் பேச்சுகளிலும், தொடர்பாடல்களிலும் ஈடுபட் டவர் நடேசன். அந்தவகையில் கலைஞருக்கு நன்கு பரிச்சயமானவரான நடேசன் இக்கோரிக்கையை முன் வைத்திருக்கின்றமை ஒரு முக்கிய விடயமாகும்.

தமிழுணர்வுமிக்க கருணாநிதி ஈழத்தமிழர் மீது கரிசனை உடையவர் என்று குறிப்பிடும் நடேசன், அத்தகையவர் இந்தியத் தேசிய அரசியல், மாநில அரசியல் என்ற எல்லைகளைக் கடந்து வந்து ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு உதவ வேண்டியது அத்தி யாவசியம், அந்த யதார்த்தத்துக்குக் கலைஞர் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகின்றார். இந்த உண்மையை உணராமல் மாநில, மத்திய அரசி யல் சகதிக்குள் சிக்கிக்கொண்டு உலகத் தமிழினத்தின் பால் உங்களுக்கு உள்ள கடமையையும் பொறுப்பை யும் தட்டிக் கழித்து விடாதீர்கள் என்று மென்மையான வார்த்தைகளில் இடித்துரைக்கின்றார் புலிகளின் அரசி யல் பொறுப்பாளர்.

சுமார் ஆயிரம் பிறை கண்டு, தமது வாழ்வின் முதிர்ச் சியில் நிற்கின்றார் கலைஞர். எண்பத்தி ஐந்தாவது அகவையைப் பூர்த்தி செய்து, எழுபது ஆண்டு காலப் பொதுவாழ்வைத் தாண்டிய கலைஞரின் காவியப் பயணத்தில் அவர் இன்னும் ஈழத்தமிழருக்கு நியாயம் செய்யாதமை ஈழத்தமிழர்களுக்காக மனவுறுதி யோடும் உத்வேகத்துடனும் குரல் எழுப்பிப் போராடி நீதி பெற்றுக் கொடுக்காமை என்ற பெருங் குறைபாடு நீடிக்கின்றது. அந்தக் குறைவை நிறைவு செய்யக் கூடிய அரசியல் சூழ்நிலைகளும், அதிகார வரம்புகளும், சூழ் நிலை வரப்பிரசாதங்களும் இன்று கலைஞருக்கு வாய்த்திருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த வரலாற்றுக் கடமையை நிறைவு செய்து முயற்சிக்காமல் உரிய எத்தனம் எடுக் காமல் மாநில, மத்திய அரசியல் சகதிக்குள்ளிருந்து வெளியே வரமுடியாத சராசரி அரசியல்வாதியாக அவர் இயங்குவாராயின் சரித்திரம் அவரைப் போற்றத்தவறும்; உலகத் தமிழினத் தலைவராக உயர்வதற்குக் கிட்டிய வரலாற்றுச் சந்தர்ப்பங்களைக் குறுகிய அரசியல் இலக்கு களுக்காகக் கோட்டைவிட்ட அரசியல் சந்தர்ப்பவாதி யாக அவரை அடையாளம் கண்டு தூற்றும்.

இலங்கை விவகாரத்தில் உண்மையான நண்பன் யார், கெட்ட எதிரி யார் என்ற யதார்த்தத்தைப் புரியாமல் இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் தவறிழைத்துக் கொண் டிருக்கின்றது என்பதே ஈழத் தமிழர்களின் பெரும் ஆதங்கம்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசை தெளி வான பாதையில் இடித்துரைத்து, வழி நடத்தும் அதி காரமும், செல்வாக்கும், அரசியல் அந்தஸ்தும் இருந்தும் கூட, வளாவிருக்கும் கலைஞரின் போக்கும் ஈழத்தமிழர் களுக்கு விசனம் தருகின்றது.

அரசியல் பயன் எதிர்பாராமல் ஈழத்தமிழர்களுக்காக வும், பொங்கி எழுவாரா இந்தக் காவிய நாயகர் கலை ஞர்? அதன்மூலம் உலகத்தமிழினத்தின் தலைவர் தாமே என்பதை நிரூபிப்பாரா அவர்?

அதனைச் செய்ய அவருக்குள்ள காலம் குறுகியது. அது போனால் மீளாது.

thanks - uthayan

Thursday, July 3, 2008

சவால் விடும் சமர் சீமான்களின் சரித்திர பொத்தல்கள்

வடபோர் அரங்கில் தாம் சரித்திர புகழ்பெற்ற சாதனைகளை நிகழ்த்தி வருவதாக சிறிலங்கா அரசு போர்முரசறைந்து வரும் வேளையில் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியான தெளிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இக்கால கட்டத்தில் அவசியமாகிறது.

விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் ஈட்டிய பாரிய வெற்றிகளுக்கெல்லாம் பட்டாசு கொளுத்திப் பூரித்த தமிழினம், அவர்கள் தாக்குதல்களையே ஆரம்பிக்காத இக்காலப்பகுதியில் புலிகளின் மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது.

கிழக்கு போய்விட்டதாம், மன்னார் போய்விட்டதாம். பால்ராஜ் இல்லாததால் மணலாறும் போகப்போகிறதாம் என்றெல்லாம் அரசியல் அரட்டை பேசும் மக்கள், சிறிலங்கா அரச ஊடகங்களின் போர் தொடர்பான செய்திகளின் அடிப்படையிலேயே தமது முடிவுகளை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்தது, இன்று மன்னாரிலும் வவுனியாவிலும் குடாநாட்டிலும் மணலாறிலும் சாதனைகளைப் புரிந்து வருவதாகக்கூறும் அரசு, அப்பகுதிகளி;லிருந்து இராணுவ ரீதியான செய்திகளை சேகரிக்க சுயாதீன செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளதா என்பதை அடுத்தததாகப் பார்க்கவேண்டும்

இராணுவச் செய்திகளை கொழும்பில் தமக்குச் சார்பாக வெளியிடாத சிங்கள ஊடகவியலாளர்களையே கடத்திச்சென்று தாக்குவதிலும் அரச தலைவரின் சகோதரர் தொலைபேசியில் மிரட்டுவதுமான சம்பவங்கள் இடம்பெறும்போது, மன்னாரிலோ வவுனியாவிலோ இருந்துகொண்டு நடுநிலையான செய்திகளை வெளியிடுவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று.

அப்படி மீறி அங்கிருந்து பணியாற்றிய ஓரிரு தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான மிரட்டல்களினால், தாம் அடுத்த நடேசனாகவோ இல்லை அடுத்த நிமலாராஜனாகவோ மாறிவிடலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், இராணுவம் தற்போது களத்தில் ஒரு போரையும் களத்துக்கு வெளியே ஊடகங்களுக்கு எதிரான போரையும் நடத்தி தாம் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே கண்டு வருவதாக சிங்கள தேசத்துக்கும் அனைத்துலகத்துக்கும் பறைசாற்றி வருகிறது.

இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்புக்கூட வெளிநாட்டு நிருபர்களுக்கு உரியதாகவிருந்தது.

உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ விவகாரங்கள் தொடர்பாக பூசிமெழுகும் இராணுவத் தலைமை, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் தானே நேரில் வந்து பதிலளித்திருப்பதிலிருந்து அவர் யாரைக் குறிவைத்து நாட்டில் போரை நடத்துகிறார் என்ற விடயத்தைச் சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கி தமது இறுதிப் போரை தொடங்கிவிட்டதாகவும் இன்னும் ஒரு வருடகாலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார் என்றும் அவர் கூறிய விடயங்களின் பின்னணியில் தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய பல வரலாறுகள் உள்ளன.

கடந்த 20 வருடங்களாக இவ்வாறு புலியை அழிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு கொழும்பிலிருந்து புறப்பட்ட பல இராணுவத் தளபதிகளின் வெற்றுக்கோசங்கள், களத்தில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தன என்பதை நோக்குவது, தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்குத் தக்க ஆதாரங்களாக அமையும்.

1996 ஆம் ஆண்டில் முல்லைத்தீவுப் படைத்தள வீழ்ச்சியால் மூக்குடைபட்ட இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றி அங்கே தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரசன்னத்தை நிலைநாட்டுவதற்கு, மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை 'சத்ஜெய" எனப்படுகிறது.

இதன் முதல் பாகத்தில் ஆனையிறவிலிருந்து பரந்தன் சந்தி வரை வந்த இராணுவம், இரண்டாம் மூன்றாம் பாகங்களை மேற்கொண்டு சுமார் ஒரு மாத காலம் புலிகளுக்கு எதிராக கடும் சமராடியது.

இறுதியில் தனது முயற்சியில் வெற்றி கண்டது.

கிளிநொச்சி சிறிலங்காப் படைகளின் வசம் வீழ்ந்தது. ஆட்களே இல்லாத வெறும் பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவம் அங்கு தனது இருப்பை உறுதியாக்கிக்கொண்டது. ஆனால் இதற்காக பூநகரியிலிருந்து தனது படையினரை முழுமையாகப் பின்வாங்கிக் கொண்டது.

இந்தகாலப் பகுதியில், ஏ-9 வீதியில் - கிளிநொச்சியில் - நிலைகொண்டிருந்த தமது படையினருடன் கைகோர்ப்பதற்காக - ஏ-9 பாதையை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக - வவுனியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படை நடவடிக்கை யாருமே மறக்கமுடியாத 'ஜெயசிக்குறு" எனப்படும் வெற்றி நிச்சயம்.

புலிகளின் பல்வேறு எதிர்த்தாக்குதல்களைச் சமாளித்தவாறே ஏ-9 வீதியிலுள்ள மாங்குளம் வரை வந்த இராணுவத்தை அதற்கு அப்பால் வரவிடாமல் கடுமையான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர் புலிகள்.

கிளிநொச்சி சந்தியில் நிற்கும் இராணுவத்துக்கும் மாங்குளத்தின் வாயிலில் நின்ற இராணுவத்துக்கும் இடையிலான தூரம் வெறும் 25 கிலோ மீற்றர்கள் தான். இந்த இடைப்பட்ட தூரத்தை கைப்பற்றுவதற்கு இராணுவம் படாதபாடுபட்டது.

அப்போது பிரதி பாதுகாப்பு அமைச்சராகவிருந்த - முன்னாள் அரச தலைவர் சந்திரிகா அம்மையாரின் மாமனார் ரத்வத்த - தற்போது சரத் பொன்சேகா விடும் அறிக்கை போலவே - சிங்கள தேசத்தின் காதில் பூச்சுற்றும் அறிக்கை ஒன்றை விடுத்தார்.

அதாவது, 1998 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தன்று - பெப்ரவரி நான்காம் நாள் - கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடப்போவதாக அவர் கூறினார்.

ஆனால் நடந்தது என்ன?

கடும் சமராடி எத்தனையோ தந்திரோபாயங்களை எல்லாம் பயன்படுத்தி, இயலாத கட்டத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கையையே கைவிடும் நிலைமைக்கு இராணுவம் தள்ளப்பட்டது.

தமது ஓர்மமான முறியடிப்புச் சமரில் வெற்றிகண்ட புலிகள், வன்னிக்குள் கால்பதித்த படைகளுக்கு பாரிய அடி ஒன்றைக் கொடுக்க அப்போது ஆயத்தமாகினர்.

அந்தத் திட்டத்தின்படி 1998 செப்ரெம்பரில் - தியாகி லெப். கேணல் தீலீபன் வீரச்சாவடைந்த நாளில் - தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் இரண்டின் மூலம் படையினரின் கிளிநொச்சி படைமுகாமுக்கு விழுந்தது அடி. முடிவு, கிளிநொச்சி நகர் புலிகளின் வசம் வீழ்ந்தது.

கிளிநொச்சியை இனிமேல் விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற நோக்குடன் அதை மேலும் பலப்படுத்தும் வகையில், மாங்குளத்திலிருந்து பின்வாங்கிய புலிகள் கிளிநொச்சியை மையமாக வைத்து வன்னிக்குள் கால்வைத்த படையினருக்கு அடுத்த பாடத்தைப் புகட்ட ஆயத்தமாகினர்.

தற்போது, மன்னாரின் வீழ்ச்சியைப் பார்த்து புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று கூக்குரலிடுபவர்கள்; இந்த இடத்தில்தான் புலிகளின் சமச்சீரற்ற இராணுவ உத்தியை நோக்க வேண்டும்.

வவுனியாவிலிருந்து ஜெயசிக்குறு நடவடிக்கையைத் தொடங்க முன்னரும் ரத்வத்த தலைமையிலான இராணுவத் தளபதிகளின் திட்டப்படி - தற்போது நடைபெற்றதைப் போன்று - வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிய வீதி வழியாக புலிகளுக்கு எதிரான - பெருமெடுப்பிலான - 'எடிபல" என்ற நடவடிக்கை நடத்தப்பட்டது.

ஆனால், படையினரின் அந்த நடவடிக்கைக்கு எதிராக புலிகளின் ஒரு துப்பாக்கி ரவை கூட பயன்படுத்தப்படவில்லை. இப்போது என்ன நடந்ததோ அதனையே புலிகள் அன்றும் மேற்கொண்டிருந்தனர். இது ஒன்று.

அடுத்தது, கிளிநொச்சியை தாம் கைப்பற்றியவுடன் எவ்வளவோ விலை கொடுத்து காத்த மாங்குளத்திலிருந்தே புலிகள்; பின்வாங்கினர்.

ஏனெனில், 1998 பெப்ரவரியில் ஒரு முயற்சி செய்து புலிகளால் முழுமையாக வெற்றிகொள்ளப்படாததாலும் கண்ணிவெடி வயல்கள் மூலம் அதியுச்சப் பாதுகாப்பு வேலியைக் கொண்டிருந்ததாலும் கிளிநொச்சி முகாம் என்று எமக்கான கோட்டையாகவே இருக்கும் என இராணுவம் இறுமாப்புடன் இருந்தது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தத்தளத்தின் வீழ்ச்சி படையினருக்குப் பாரிய அடியாக இருந்தது. அந்த அடியிலிருந்து மீள எழும்ப எத்தனிக்கும் படையினரால் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியும் ஒன்றும் செய்ய முடியாது என்று புலிகள் நம்பினர்.

அத்துடன், கிளிநொச்சி படையினரின் வசமிருக்கும் வரைதான் மாங்குளம் தமக்கு கட்டாயம் தக்கவைக்க வேண்டிய பிரதேசம் என்பதையும் கிளிநொச்சி தம்மிடம் விழுந்த பின்னர் மாங்குளத்தைப் படையினர் கைப்பற்றினாலும் அது தம்மை முற்றுகையிடும் அவர்களது திட்டத்துக்கு பலனளிக்காது என்ற களநிலையையும் புலிகள் புரிந்திருந்தனர்.

வாங்கிய அடியில் இனிமேல், கண்டி வீதி சரிவராது என்ற முடிவுடன் புதிய திட்டத்துடன் இன்னோர் நடவடிக்கைக்கு ஆயத்தமானது இராணுவம்.

அதன்படி, 'ரிவிபல" என்ற படை நடவடிக்கையை ஆரம்பித்து எவ்வித எதிர்ப்புமின்றி நெடுங்கேணியிலிருந்து ஒட்டுசுட்டான் வரை - புலிகள் கோட்டையான புதுக்குடியிருப்பிலிருந்து பத்து பதினைந்து கிலோ மீற்றர் தூரம் வரை - வந்து நின்ற படைகள் புலிகளின் இருப்பையே கேள்விக்குறியாக்கின.

கிளிநொச்சி வெற்றியால் மெல்லிதாய் மூச்சுவிட்ட புலிகளுக்கு அடுத்த சவால் விடுக்கப்பட்டது.

அதன்பின்னர், மன்னார் - பூநகரி தரைப்பாதையைத் திறப்பதற்கான பாரிய படை நடவடிக்கையையும் இராணுவம் மேற்கொண்டது.

'ரணகோச" எனப்பெயரிட்டு முதலாம் பாகத்தில் தொடங்கி நான்கு பாகங்களை நடத்தி வன்னியின் மேற்குப் பகுதியிலும் புலிகளுக்குப் பாரிய சிக்கலை ஏற்படுத்தி மன்னார் பள்ளமடு வரை இராணுவம் முன்னேறியது.

பள்ளமடுவிலிருந்து முன்னேற எடுத்த எந்த முயற்சியும் வெற்றியளிக்காத நிலையில் சில மாத கடும் எத்தனங்களின் பின்னர் 'ரணகோச" படை நடவடிக்கையையும் சிறிலங்கா அரசால் கிடப்பில் போடப்பட்டது.

இதன் பின்னர், 'ரிவிபல" நடவடிக்கையின் மூலம் ஏற்கனவே கண்டி வீதிக்கு கிழக்காக வந்து நின்ற இராணுவம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.

ஒட்டுசுட்டான் - அம்பகாமம் பகுதிகளில் இராணுவத் தளபதி வசந்த பெரேரா தலைமையில் மேற்கொண்ட 'வோட்டர் செட்" (நீர் சிந்து) எனும் பேரிலான இருவேறு நடவடிக்கைகள் புலிகளுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தின.

படையினருக்குப் பெருவெற்றியாக அமைந்த இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளின் பல உடலங்களையும் இராணுவம் கைப்பற்றியது.

இந்த இடத்தில் புலிகள் போட்ட திட்டம்தான் வன்னி நமதே என்று மார்தட்டிய அரச படைகளுக்கு மரண அடியானது. 'வோட்டர் செட் - 2" நடவடிக்கை நடந்து நான்கைந்து நாட்களிலேயே புலிகளின் பாய்ச்சல் தொடங்கியது.

புதுக்குடியிருப்பின் வாசலில் நின்று படையினர் போட்ட சதிராட்டத்துக்குக் கொடுக்கும் அடியாகவும் ஒட்டுமொத்த வன்னிப் படைகளுக்கு கொடுக்க மேற்கொண்ட பதிலடியாகவும் புலிகளின் 'ஓயாத அலைகள் - 3" நடத்தப்பட்டது.

அதுவரை வன்னிக்குள் ஆழ அகல வைத்த படையினரின் கால்கள் புலிகள் கொடுத்த 'ஓயாத அலைகள் - 3" பதிலடியால் எங்கெங்கோ ஓடின.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அணியொன்றைத் தலைமை தாங்கி அப்படையணியின் சிறப்புத்தளபதி லெப். கேணல் இராகவன் ஒட்டுசுட்டானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ஓயாத அலைகள் - 3" படை நடவடிக்கையைத் தொடங்கினார்.

அந்தத் தொடர் நடவடிக்கையின் முதல் வித்தாக லெப். கேணல் இராகவனே வீழ்ந்தார். மிகச் சிறப்பான தளபதியை முதற்களப்பலியாக் கொடுத்துத் தொடங்கப்பட்ட அந்த நடவடிக்கை தமிழர் சேனைக்குத் தொடர் வெற்றிகளைப் பெற்றுத்தந்தது.

'ஜெயசிக்குறு", 'ரிவிபல", 'வோட்டர் செட்" நடவடிக்கைகள் மூலம் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் வெறும் ஐந்தே நாட்களில் புலிகளால் மீளக் கைப்பற்றப்பட்டதோடு பல்லாண்டுகளின் முன்னர் - ஆயுதப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் சிங்களவரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழரின் பூர்வீக வாழ்விடங்களான மணலாறு சிலோன் தியேட்டர், கென்ற் பாம், டொலர் பாம் போன்ற பகுதிகளும் மீட்கப்பட்டன. (இந்த இடங்களில்தான் தற்போது புலிகளின் மணலாறு முன்னணி அரண்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.)

அதேபோல, 'ரணகோச" படை நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றப்பட்ட அனைத்துப் பகுதிகளும் மூன்று நாட்களில் மீளக் கைப்பற்றப்பட்டன. (மன்னார் பள்ளமடு வரை வந்த இராணுவத்தையே வெறும் மூன்று நாட்களில் புலிகள் துரத்தியடித்தனர். ஆனால், தற்போது சரியான களத்தகவலின்படி இராணுவம் பள்ளமடு வரை கூட முன்னேறவில்லை என்பது இந்த வேளையில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அடுத்த விடயம்)

வன்னி மையத்துக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு யாழ். குடநாட்டை நோக்கிப் புலிகள் தமது பார்வையைத் திருப்பினர். 'ஓயாத அலைகள் - 3" யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியது.

இதில் நடைபெற்ற சம்பவம் ஒன்றும் தற்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அறிக்கைகளுடன் ஒப்பிடக்கூடியதொன்றே.

கிளிநோச்சியிலிருந்து முன்னேறி குடாநாட்டு இராணுவத்தைப் பின்தள்ளும் 'ஓயாத அலைகள் - 3" நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சமயம், அதன் ஓர் அங்கமாக கேணல் தீபன் தலைமையிலான படைகள் பரந்தன் இராணுவத்தளம் மீது பாரிய தாக்குதலொன்றை நடத்தினர்.

ஒருநாள் முற்பகல் தாக்குதல் தொடங்குவதற்குச் சற்று முன்பாக கேணல் தீபன் அவர்கள் பரந்தன் இராணுவத்தள தளபதியுடன் தொலைத்தொடர்பு சாதனத்தில் தொடர்புகொண்டு,

'என்ன அடிபடப்போறியளா. அல்லது இப்பவே, ஓடப்போறியளா" - என்று கேட்டதற்கு -

'எங்களை என்ன ஒட்டுசுட்டான் இராணுவம் என்றா நினைத்தீர்கள். வந்து பாருங்கள நடக்கிறதை" - என்று பதிலுக்கு வீரவசனம் பேசினார்.

நண்பகல் சண்டையைத் தொடங்கிய புலிகள் அன்றே பரந்தன் தளத்தைத் கைப்பற்றினர்.

வன்னிக்குள் அகலக்கால் வைத்த அரச படைகளுக்கு புலிகள் வைத்தியம் பார்த்த வரலாறு இதுதான்.

எடிபல என்றும் 'ஜெயசிக்குறு" என்றும் 'ரணகோச" என்றும் 'சத்ஜெய" என்றும் 'ரிவிபல" என்றும் 'வோட்டர் செட்" என்றும் பத்துக்கும் மேற்பட்ட பாகங்களாக பல நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர், 'ஓயாத அலைகள் - 3" என்ற ஒரே பதிலடியில் திரும்பிப்பாராமல் ஓடினர்.

வன்னிச்சமரில் அன்று புலிகள் பயன்படுத்திய களநிலை சமன்பாட்டைத்தான் இன்றும் வன்னிக்குள் ஆழக்கால் பதிக்கும் இராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், இம்முறை படையினருக்கு எங்கு பொறிவைக்கப்பட்டிருக்கிறது என்பது காற்றுக்கும் கடவுளுக்கும் தெரியாத விடயம்.

ஆகவே, இராணுவச் சீமான்களின் கடந்த கால வரலாற்று ஒப்புமைகளை நோக்கினால், தற்போதைய தளபதி சரத் பொன்சேகாவும் எதிர்காலச் சந்ததிக்கு இன்னுமொரு ரத்வத்த என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

நன்றி:- -ப.தெய்வீகன்-

கூரை ஏறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை

இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் ர்வதே மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
மீண்டும் முழு இலங்கைத் தீவையுமே இருண்ட யுகத்துக்குள் தள்ளும் ர்வாதிகாரம் - எதேச்ாதிகாரம் - ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்பட்டு வருவதையே ஜனநாயக தந்திரங்களுக்கும், ஊடக உரிமைகளுக்கும் எதிரான அராஜகங்கள் கட்டியம் கூறி உறுதிப்படுத்தி வருகின்றன.
எண்பதுகளின் கடைசியிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இத்தகைய ஒரு கொடூரத்துக்குள் - அந்தகாரத்துக்குள் - தேம் மூழ்கடிக்கப்பட்டபோது, நாட்டையும் மக்களையும் அந்த அடக்குமுறை அராஜகத்திலிருந்து மீட்பதற்குக் குரல் எழுப்பியவர்களுள் முக்கியமான ஒருவரின் கைகளில் நாட்டின் நிறைவேற்றதிகாரம் இப்போது வீழ்ந்துள்ள காலகட்டத்திலேயே, மீண்டும் அதே இருட்டுப் பாதையை நோக்கி முழுத் தீவுமே நகர்த்தப்படும் பேரவலம் நேர்ந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல. அன்று அந்த அராஜகங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி, அதனடிப்படையில் அத்தரப்பிடமிருந்து நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் கைப்பற்றி, பதினொரு ஆண்டு காலம் ஆட்சியிலிருந்து விட்டு, பதவியிலிருந்து இறங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ந்திரிகா குமாரதுங்கவும் கூட, இன்றைய அவல நிலைமை குறித்துக் கைவிரித்துவிட்டார். தமது உயிருக்கே - விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்லாத வேறு தரப்புகளினால் - ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இப்போது அச்ம் தெரிவிக்கும் நிலைக்கு அவரும் தள்ளப்பட்டு விட்டார்.

ஆக, அன்று ஊடக உரிமை உட்பட ஜனநாயக தந்திரத்தை மீட்பதற்காகப் போராடிய இரு முக்கிய தலைவர்களில் ஒருவர் அதிகாரத்தைக் கைப்பற்ற மீண்டும் அச்தந்திரங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளன. மற்றைய தலைவர் அதிகாரத்தில் இருந்து இறங்க அவரது தந்திரமே கேள்விக்குள்ளாகிவிட்டது. இதுதான் இன்றைய விபரீத நிலைமை.
இதற்கிடையில் கடைசியாக ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக வெளியிட்டிருக்கும் கருத்து பலரையும் பேராச்ரியத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு தித் திட்டங்களில் ஒன்று எனக் கூறித் தம்மை மீறி நடக்கும் யேல்கள் இவை என்ற ஒரு படத்தைக் காட்ட அவர் முயல்கின்றார்.

அறுகம் குடா பாலத் திறப்புவிழாவில் உரையாற்றிய அவர், "பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் பெரும் போராட்டத்தில் அர ஈடுபட்டுக்கொண்டே நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அத்தகைய அரசின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் பல தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இவ்வாறான ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதல் விவகாரம். கள முனைகளில் கிடைக்கும் வெற்றிகளை முறியடிக்கும் விதத்தில் நாட்டின் நற்பெயரை வரலாற்று முக்கியத்துவம் வாந்த இத்தகைய மயத்தில் கெடுப்பதற்காக எடுக்கப்படும் தித்திட்டமே இது" - என்று ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை அவர் விமர்சித்திருக்கின்றார்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் தமது அரக்கு விருப்பமில்லாத - அரசின் போக்குக்கு விரோதமான - அரத் தலைமையின் எத்தரப்பினதும் ஆசி, அங்கீகாரமின்றி - நடக்கின்ற - விடயங்கள் என்பது போல ஜனாதிபதியின் பேச் அமைந்திருக்கின்றது.

அது உண்மையானால் -
ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கும் இத்தகைய ட்டவிரோத - அராஜக - வன்முறைச் யேற்பாடுகளை - ஜனாதிபதியும் அவரது அரம் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய போக்கை அவர்களது தரப்பு கிக்காது என்பது நிஜமானால் -
ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் - ம்பந்தப்பட்டோரைப் பிடித்து ட்டத்தின் முன் நிறுத்தாமல் - அவரது அர பார்த்துக்கொண்டு வாளாவிருப்பது ஏன்?

கொழும்பிலும் பிற இடங்களிலும் பேனா தாங்கிய ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகள் நீளுவதைத் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ துப்பில்லாத - துணிவில்லாத - ஓர் அரத் தலைமை, ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தும் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்குக் காலக்கெடு விதித்து, அறிவிப்புகளை வெளியிடுவது அபத்தத்திலும் அபத்தம் அல்லவா?

"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்." - என்பது போல இருக்கின்றது ஊடக அடக்குமுறைக்குக் காரணமானவர்களைத் தேடிப் பிடிக்கத் திராணியற்ற இந்த அர, புலிகளைக் கூண்டோடு அழிக்கப் போவதாக ஜம்பம் அடிப்பது.


நன்றி - உதயன்

Tuesday, July 1, 2008

இராணுவ வலுச் சமநிலையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்

ஈழத்தமிழ் விடுதலைப் போராட்ட வரலாற்றை உற்று நோக்கினால் அது ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதை காணலாம்.

ஆரம்பத்தில் கோரிக்கை அரசியலாகவும் (Appeal politics) வேண்டுகோள் (Request politics)அரசியலாகவும் இருந்த நமது அரசியலானது, பின்னர் ஒரு ஆயுத வழி விடுதலைப் போராட்ட அரசியலாகத் தோற்றம் பெற்றது.

நமது அரசியல் வெறும் கோரிக்கைகளாகவும், வேண்டுகோள்களாவும் இருந்த காலத்தில் தமிழர் தேசம் என்ற கருத்துநிலை பெருமளவிற்கு வலுவடைந்திருக்கவில்லை.

இதனை இன்னும் சற்று விளக்கமாகப் பார்த்தால், தமிழ் மக்கள் இலங்கைத் தேசியம் என்ற பொதுநிலைக்குள் ஒரு உப தேசியமாக வாழ முடியுமென்ற நம்பிக்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டமாக இதனைச் சொல்ல முடியும்.

இரண்டாவது காலகட்டம் மேற்படி நம்பிக்கையில் ஏற்பட்ட தோல்வியிலிருந்தும், சந்தர்ப்பவாத தமிழ்த் தலைமைகளின் தடுமாற்றங்களிலிருந்தும் உருவாகியது.

இந்த இரண்டாவது கட்டம்தான் தமிழர்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களுக்கான பாரம்பரிய தாயக நிலம் உண்டு என்ற கருத்துநிலையை நோக்கி தமிழர் அரசியலை நகர்த்தியது.

அதனை அடைவதற்கான வழிமுறையாகவே, எதிரியை எதிரியின் வழியில் சந்தித்தல் என்னும் ஆயுத வழி புரட்சிகர அரசியல் உருப்பெற்றது.

இந்தக் காலத்தில் தோன்றிய பல்வேறு ஆயுதவழி இயக்கங்களுக்கும் இதில் பெருமளவிற்கு உடன்பாடிருந்ததனால் தமிழர் தேசியம், தமிழர் தேசம் என்ற கருத்துநிலைகள் மக்கள் மயப்படுவதற்கு ஏற்றவகையான சூழலும் உருவாகியது.

ஆனால், இந்தியத் தலையீட்டைத் தொடர்ந்து இந்த கருத்து நிலையிலும் பிரிவுகள் ஏற்பட்டன. இது நமது விடுதலை அரசியல் வரலாற்றில் நான்காவது காலகட்டமாகும்.

உண்மையில் இந்தக் காலகட்டத்தில்தான் அரசியல் அர்த்தத்திலும் போராட்ட அர்த்தத்திலும் தமிழர் தேசம் என்ற கருத்து நிலை முதிர்ச்சிப் பருவத்தை எய்தியது எனலாம்.

இந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகள், ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அதன் சரியான அர்த்தத்தில் சுமக்கும் ஒரேயொரு தமிழ்த் தேசிய தலைமையாகப் பரிணமித்தனர்.

ஆரம்பத்திலிருந்தே எதிரியை இராணுவ ரீதியாக முடக்குவதிலும், புலனாய்வு நடவடிக்கைகளில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வதிலும் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டிவந்த விடுதலைப் புலிகள், எதிரிக்கு இணையான மரபு வழி இராணுவக் கட்மைப்பொன்றில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

அதாவது, எதிரியை அச்சுறுத்தக்கூடிய பலமான படைக் கட்டமைப்புக்களை உருவாக்கினர்.

ஏலவே புலிகள் மிகவும் இறுக்கமானதும், கடுமையான கட்டுக்கோப்பையும் கொண்ட இயக்கமாக வளர்ச்சியடைந்திருந்ததும்; அவர்கள் ஒரு மரபுவழி இராணுவ கட்டமைப்பை நோக்கி செல்வதை இலகுபடுத்தியது எனலாம்.

விடுதலைப் புலிகள் ஒரு பலமான மரபுவழி விடுதலை இராணுவமாக பரிணமித்ததைத் தொடர்ந்துதான் சிங்களம் முதல்முதலாக ஆட்டம் காணத் தொடங்கியது என்பதை இந்த இடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீ எந்த வழிகளிலெல்லாம் வருகிறாயோ அந்த வழிகளிலெல்லாம் நாங்களும் வருவோம் என்பதுதான் சிங்களத்தை எதிர்கொள்வதில் புலிகள் பின்பற்றும் இராணுவக் கோட்பாடாக இருக்கிறது. வரலாற்று அடிப்படையில் இது நியாயமானதே.

இன்று விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பானது ஒரு தேசத்திற்கான முழுமையான படைக்கட்டமைப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது.

காலாட் படைகள், தாக்குதல் படையணிகள், கடற்படை, விமானப்படை என எதிரியின் சகலவிதமான தாக்குதிறனையும் எதிர்கொள்ளக் கூடிய படையணிகளை தமிழர் தேசம் கொண்டுள்ளது. இதற்கும் மேலாக உலக தரத்திற்கான புலனாய்வு கட்டமைப்பொன்றையும் புலிகள் வைத்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலிருந்து பிறக்கும் கருத்து நிலைதான் இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடாகும்.

அதாவது, ஒருவரை ஒருவர் வீழ்த்த முடியாத இராணுவ வலிமையைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இந்தக் கருத்துநிலையின் சாரம்.

ஆனையிறவு வெற்றியைத் தொடர்ந்து இந்த கருத்துநிலை இராணுவ ஆய்வாளார்கள் மற்றும் சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் ஒரு மௌனமான அங்கிகாரத்தைப் பெற்றது. ஆனால், அது முதல்முதலாக ஒரு சர்வதேச கவனத்தைப் பெற்றது நோர்வேயின் தலைமையில் இடம்;;பெற்ற பேச்சுவார்த்தையின் போதாகும்.

பேச்சுவார்தையின் போது இரு தரப்பினரையும் சமமாகக் கருதுதல் என்ற நடைமுறை பேச்சுவார்தையின் முக்கிய உள்ளடக்கமாக இருந்தது. அதன் வெளிப்பாடு அரசியல் அர்த்தத்திலும் மற்றும் இராணுவ வலிமையின் அர்த்தத்திலும் புலிகள் அரசிற்கு இணையானவர்கள் என்பதை நோர்வேயும், நோர்வேயின் பின்னால் இருந்த மேற்கு அரசுகளும் ஏற்றுக்கொண்டிருந்தன என்பதாகும்.

இந்த சமதரப்பு அந்தஸ்து அமெரிக்காவில் நடைபெற்ற உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின்போது நிராகரிக்கப்படதைத் தொடர்ந்தே புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலகினர்.

ஆனால், மகிந்த அரசு ஆட்சிப்பீடமேறிய காலத்திலிருந்து அவர்களது யுத்த நிகழ்சி நிரலில் மேற்படி இராணுவ வலுச் சமநிலைக் கோட்பாடே முக்கிய இடத்தைப் பிடித்தது. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் தாம் புலிகளிடம் - அதாவது தமிழர்களிடம் - தோல்வியடைந்து விட்டோம் என்பதை எந்தவகையிலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், புலிகளின் இராணுவச் சமவலுவைச் சிதைக்க வேண்டுமென்பதில் கருத்து பேதமற்ற ஒற்றுமை அவர்கள் மத்தியில், நிலவியது. அவ்வறானவர்கள் அனைவரும் மகிந்தவின் யுத்த அரசியலின் பின்னால் அணிதிரண்டனர்.

இன்று சிங்களம் தமது எதிர்பார்ப்பில் சில தற்காலிக வெற்றிகளைக் பெற்றிருக்கிறது. குறிப்பாக கிழக்கில் ஏற்பட்ட கருணா விடயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்களம் புலிகளுக்கு எதிரான சில இராணுவ முன்னெடுப்புக்களில் வெற்றியீட்டியிருக்கிறது.

கிழக்கில் கிடைத்த வாய்புக்களைப் பயன்படுத்தி பெற்ற வெற்றிகளைப் போன்று, வன்னிக் களமுனைகளிலும் வெற்றிகளை பெற்றுவிடலாம் என்ற பேராவிவிலேயே தனது படையிணியின் முக்கால்வாசி பலத்தை வன்னி நோக்கி திருப்பி இருக்கின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இன்றைய சூழலில் இராணுவ ரீதியில் அவர்களுக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன.

முதலாவது, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற இராணுவ வலுச் சமநிலையை மீளவும் உறுதிப்படுத்துவது. அடுத்தது, முன்னரைக் காட்டிலும் சிங்களத்தை இராணுவ ரீதியாக வலுவிழக்கச் செய்வது. இந்த இரண்டு இலக்கினையும் வெற்றி கொள்வதுதான் இனி வரப்போகும் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றது.

இன்று சிங்களத்தின் இறுமாப்பான வார்தைகளின் பின்னால் இருப்பது பேச்சுவார்த்தையின் அடித்தளமாக இருந்த இராணுவ வலுச்சமநிலையை தாங்கள் சிதைத்து விட்டோம் என்ற மகிழச்;சிதான். இதனால்தான் தற்போது சிங்களம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கிழே வைத்தால் பேசலாம் என்று ஏளனமாக கூறிவருகிறது.

எனவே, நாம் எங்கு சுற்றி வந்தாலும், எந்த சர்வதேச அரசுகளிடம் கோரிக்கை வைத்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் தீர்மானிக்கப் போவதென்னவோ நமது பலம்தான் என்பதை நாங்கள் மறக்காமல் இருந்தால் சரி.

1973 ஆம் ஆண்டு, சிலியின் அரசுத்; தலைவர் சல்வடோர் அலண்டே சதிகாரர்களால் கொலை செய்யப்பட்ட போது, அது பற்றி கருத்துத் தெரிவித்த பிடல் காஸ்ரோவின் வார்த்தைகள் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது. 'அலண்டேயை அவர்களால் இலகுவாக விழ்த்த முடிந்ததற்கு காரணம் அலண்டேயிடம் ஆயுதங்கள் இல்லாமலிருந்ததுதான். புரட்சிக்கு அயுதங்கள் தேவை. ஆயுதங்கள் மட்டும் போதாது கூடவே மக்களும் தேவை".

இந்த இரண்டு அம்சங்களும் விடுதலைப் புலிகளின் வசம் இருக்கும் வரை அவர்களை முறியடிப்பது இலகுவான விடயமல்ல. எனவே, விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தைப் பேணுவது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.

நன்றி: நிலவரம்