Wednesday, October 31, 2007

எல்லாளன் நடவடிக்கையும், புலம்பெயர் தமிழர்களும்

ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

தமிழீழ விடுதலைப் புலிகள், அநுராதபுர வான் படைத்தளத்தின் மீது நடத்திய துணிகரமான, வெற்றிகரமான தாக்குதல், சிறிலங்கா அரசிற்கு மட்டுமல்லாது, உலகத்திற்கும் பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவரால், துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்ட 'எல்லாளன் நடவடிக்கை" கொண்டு வந்துள்ள தாக்கத்தின் பரிமாணத்தை, வரலாற்று மற்றும் அரசியல் ரீதியாகத் தர்க்கித்துச் சில கருத்துக்களை முன்வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்வான இராணுவச் சாதனையைக் காணப் பொறுக்காத சிங்களத் தரப்பு, மிகக்கீழான, இழிவான, கீழ்த்தரமான, பண்பாடற்ற செயல்களில் இறங்கித் தன்னுடைய இயலாமையை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்தி, அசிங்கப்படுத்த முயன்ற சிங்களத்தின் செய்கையானது, சிங்கள அரசின் இயலாமையை மட்டுமல்லாது, அதன் காட்டுமிராண்டித்தனத்தையும் சேர்த்தே காட்டுகின்றது. சிங்களம் ஒரு புதிய உலகத்திற்கு, நவீன, பண்பாட்டு நாகரிகத்திற்கு இன்னமும் வரவில்லை என்பதையும், இன்னும் காட்டுமிராண்டித்தனத்திற்குள்ளேயே வாழ்ந்து வருகின்றது என்பதையும் இந்தச் செய்கை புலப்படு;த்தியுள்ளது.

இங்கே சிங்களம், இரண்டு அற்பத்தனங்களைச் செய்து காட்டியுள்ளது. மாவீரர்களின் வித்துடல்களை, நிர்வாணப்படுத்தி, உழவு இயந்திரங்களில் கொண்டு சென்று, சிங்கள மக்களுக்குக் காட்டிக்கொண்டு சென்ற சிங்கள இராணுவம் இன்னுமொரு அற்பத்தனத்தையும் செய்துள்ளது. போரில் இறந்த எதிர்த்தரப்பினர்களின் உடல்களை மீளக் கொடுப்பது உலக வழக்கம். அதைக்கூடச் செய்யாமல், மாவீரர்களின் வித்துடல்களை எரிக்கின்றோம், புதைக்கின்றோம் என்று சிங்களம் சொல்லிக் கொண்டு நின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள், இறந்து போன சிங்கள இராணுவத்தினரின் உடல்களை, எப்போதும் திருப்பிக் கொடுத்தே வந்துள்ளார்கள். சிங்கள அரசு தன்னுடைய படையினரின் உடல்களைப் பெற்றுக் கொள்ள மறுத்தபோதெல்லாம் விடுதலைப் புலிகள் இறந்த சிங்கள இராணுவத்தினரின் உடல்களைப் பூரண இராணுவ மரியாதையோடு புதைத்தும் உள்ளார்கள்.

சிங்களத்தின் இந்தக் காட்டுமிராண்டிச் செயல்கள் ஒன்றும் புதிதானவை அல்ல! பல ஆண்டுகளுக்கு முன்னர் வெலி-ஓயாவில் நடந்த சமரின்போது இறந்த, பெண் புலிப் போராளிகளின் வித்துடல்களையும் இவ்வாறுதான் சிங்களம் அசிங்கப்படுத்த முயன்றது. தன்னுடைய இன்னுமொரு அற்பத்தனத்தின் வெளிப்பாடாக, மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது அழிக்கின்ற செயல்களையும், சிங்களம் செய்து வருகின்றது. இன்றுகூட, இந்தியாவில், ஆங்கிலேயச் சிப்பாய்களின் கல்லறைகள் இருந்து வருகின்றன. அவற்றை இந்திய அரசு உடைக்கவில்லை. உழுது தள்ளவில்லை. ஏனென்றால் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகளை அழிக்கக்கூடாது என்பது பொதுவான உலக நியதி. அதைக் கூடச் சிங்களம் பொருட்படுத்துவதில்லை.

துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன், 72 வயது முதிர்ந்த எல்லாளன் என்ற தமிழ் அரசனைத் தனிச்சமர் ஊடாகத் தோற்கடித்துக் கொன்றதை மகாவம்சம் விரிவாக எடுத்துரைக்கின்றது. ஆனால் துட்டகைமுனு, எல்லாளன் வீழ்ந்திறந்த இடத்தில், எல்லாளனுக்கு ஒரு நினைவுத்தூபியை (தக்கிண விகாரை) அமைத்துக் கௌரவப்படுத்தினான். அத்தோடு மட்டுமல்லாது, 'எந்த மனிதனாயினும், அவன் இளவரசனாக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, இந்த வழியாகச் சிவிகையிலோ மூடு பல்லக்கிலோ வரநேர்ந்தால் வாத்திய ஒலி எழுப்பக்கூடாது" என்று கற்றூணில், துட்டகைமுனு பொறித்தும் வைத்துள்ளான்.

துட்டன் என்ற பெயரெடுத்த துட்டகைமுனுவுக்குக்கூட ஒரு வீரனை மதிக்க வேண்டிய பண்பு இருந்தது. ஆனால் இன்றைய சிங்களத் தலைமைக்கு அதுகூட இல்லை. அன்றைக்கு இருந்த சிறிய பண்புகூட இன்று இல்லாதபடியால்தான், சிங்களம் இன்று காட்டுமிராண்டித்தை நோக்கிப் போகின்ற ஒரே ஒரு இனமாக விளங்குகின்றது போலும். புத்தர் நிர்வாணம் அடைந்தார் என்பதால், இவர்கள் "நிர்வாணம்" குறித்து விளங்கி வைத்திருப்பது இப்படித்தானோ என்னவோ?

இப்படியான ஒரு காட்டுமிராண்டிச் சம்பவம், மேலை நாடுகளில் நடைபெற்றிருந்தால், அந்தத் தேசத்து மக்கள் தமது அரசுகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தமது கண்டனத்தைத் தெரிவித்துப் போராடியிருப்பார்கள். சி;ங்களத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்;படிப்பட்ட காட்டுமிராண்டிகளோடுதான் சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகத் தீர்வைப் பெறலாம் என்று சர்வதேசம் சொல்லி வருகின்றது.

சிங்களம் தனது இயலாமையைத் தனது அற்பத்தனங்கள் ஊடாகக் காட்ட முற்படுகின்ற அளவிற்கு, எல்லாளன் நடவடிக்கை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு இத்தாக்குதல் காத்திரமான பல செய்திகளையும் சொல்லியுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

- தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள், அவர்கள் பலமிழந்து, மனவுறுதி இழந்து விட்டார்கள் என்று சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட மாயை இன்று உடைந்து போய்விட்டது.

- தமிழீழ எல்லைப் பகுதிகளைக் கடந்து, சிங்களத்தின் இதயப் பகுதிகளுக்குள் சமர்கள் நடைபெற்று இருக்கின்றன. சிங்களத்தின் புராதானத் தலைநகரான அநுராதபுரத்திலும், மற்றைய கோட்டையான அம்பாந்தோட்டை - திஸ்ஸமகாராமவிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

- புலிகளை ஓரங்கட்டி விட்டு, பொருந்தாத ஒரு தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணித்து விடலாம் என்று நினைத்த சிங்களப் பேரினவாதத்திற்குப் பலத்த அடி விழுந்துள்ளது.

- சிங்கள அரசின் இத்தகைய திட்டத்திற்கு இணக்கமாகச் செயல்பட்ட மேற்குலகத்திற்கும், இன்று, யதார்த்த நிலைபுரிய வைக்கப்பட்டுள்ளது.

- தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போர் நடவடிக்கைகளினால் விளைந்த அழிவுகள் ஊடாக, மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் போன்றவை சாத்தியப்படாது என்பதையும் இத்தாக்குதல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

- அபிவிருத்தி என்ற பெயரில் போருக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பிரயோசனப்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

- 'இங்கே புலிகள் அழி;ந்து போய்விட்டார்கள். நாங்கள் இங்கே வந்து, இருப்பதைச் சுரண்டிக் கொண்டு போகலாம்" - என்று கனாக் காணுகின்ற 'சிலருக்கும்" ஒரு காத்திரமான செய்தி சொல்லப்பட்டுள்ளது.

'தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படையெடுப்பு ஒன்றை மேற்கொள்ளாமல் ஏன் அநுராதபுர வான் படைத்தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்?" என்று சிலர் வினவக் கூடும். இந்த வினா குறித்துச் சில கருத்துக்களை முன்வைக்;க விழைகின்றோம்.

இருபத்தியொரு கரும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்ட பயிற்சிகள், ஒத்திகைகள், உழைப்;புகள் போன்றவற்றிற்கு என்று ஒரு காலம் இருக்கிறதல்லவா? இந்தக் கரும்புலி மாவீரர்களின் செயல்நோக்கை ஒருமுகப்படுத்தி, ஓர் இராணுவ முகாமை அழிக்க வேண்டுமென்றால், அதனைச் சுலபமாகச் செய்திருக்கலாம். ஆனால் இவற்றிற்கு அப்பாற்பட்டு, இன்று அநுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் என்பது பாராதூரமானவை என்பது மட்டுமல்லாது, அதனால் ஏற்பட்ட, ஏற்படப் போகின்ற விளைவுகளும் சிறிலங்கா அரசிற்குப் பாரதூரமானவைதான்!

தமிழீழ எல்லைகளில் நடைபெறுகின்;ற சமர்களில் சிறிலங்கா இராணுவம் அடைகின்ற இழப்புக்கள் சிங்களத்தின் இதயத்தைப் பெரிதாகத் தாக்குவதில்லை. அதனைப் பெரிதாகவும் உலுக்காது. நாம் முன்னர் கூறியதுபோல், வேறு ஓர் இடத்தைத் தெரிவு செய்திருந்தாலும், பெரிய ஒரு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் தெரிவு செய்யப்பட்ட இடமும், செய்யப்பட்ட முறையும் பல்வேறு விதமான தாக்கங்களை ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளன.

இராணுவத்திற்கு ஏற்படுகின்ற இழப்புக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குச் சிங்கள அரசு மாற்றீடு செய்து கொண்டே இருப்பது வழமை. அதேபோல், இந்தப் பாரிய இழப்பையும் சிறிலங்கா அரசு மாற்றீடு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் 'எல்லாளன் நடவடிக்கையினால்" ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், விளைவுகளும் சிங்களத்தின் இதயத்தின் மீது பலத்த அடியைக் கொடுத்துள்ளன. மிகப் பெரிய அளவில், மிக முக்கியமான வானூர்திகள் அழிக்கப்பட்டது மட்டுமல்லாது, சிறிலங்கா அரசின் வரவு செலவுத் திட்டத்திலும் மிகப் பெரிய துண்டு விழுந்து விட்டது. இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகளின் பெறுமதி 400 கோடி ரூபாய்கள் என்று சொல்லப்பட்டு வந்தாலும், கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான அழிவுகள் ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது. தற்போதைய பணவீக்கம் மற்றும் நாணய மாற்று வீதம் கொண்டு வரக்கூடிய விளைவுகளும் இந்த இழப்பை மேலும் அதிகரிக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.

மன்னார் போன்ற இடங்களில் பாரிய பகுதியொன்றைப் புலிகள் வெல்வது இன்று ஒரு பிரச்சனையல்ல! ஆனால் மிகுந்த பாதுகாப்போடு விளங்குகின்ற தமது புராதானத் தலைநகருக்குள் - தமிழர்களை அடித்து விரட்டி, ஏறத்தாள தமிழனே இல்லாத பகுதிக்குள் - நடைபெற்ற இத்தாக்குதல், சி;ங்கள தேசத்திற்கு, யதார்த்தத்தைப் படிப்பித்திருக்கின்றது.

இவ்வளவு காலமும் வெற்;றிக்களிப்பில் இருந்த சிங்களத்திற்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சி அடியாக அமைந்து விட்டது. காரணம் இது ஓர் எல்லைப்புறச் சண்டையல்ல! சிங்களத்தின் இதய பூமிக்குள் நடந்த சண்டை!

பாரிய படையெடுப்பு ஒன்றினூடாக, இராணுவப் பாசறை ஒன்றை அழிக்கின்றபோது, எவ்வளவு குறைந்த இழப்போடு, அந்த இராணுவப் பாசறை அழிக்கப்படுகின்றது என்பது கருத்தில் கொள்ளப்படுகின்ற ஒரு விடயமாகும். ஆனால் அதனைக் கரும்புலிகளோடு செய்ய முற்பட்டால் அதற்குரிய பரிமாணமே வேறு! ஆகவே அப்படியான ஒரு தாக்குதலைக் கரும் புலிகளோடு செய்கின்றபோது, பெரிய வெற்றி சுலபமாக கிடைத்திருக்கும். ஆனால், இங்கே நோக்கம் அதுவல்ல!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கம், சிங்கள இராணுவத்திற்குப் பாரிய அழிவை ஏற்படுத்துவதும், சிங்களப் பேரினவாதத் திமிருக்கு ஒரு பலத்த அடியைக் கொடுப்பதுவும், அதேவேளை சர்வதேசத்தின் கண்களைத் திறக்க வைப்பதுவுமாகும். அத்தோடு 'சிங்களமும், சர்வதேசமும்; நினைக்கின்ற மாதிரி, பிழையான தீர்வு ஒன்றை எம் மக்கள் மீது திணிக்க முடியாது அல்லது உங்களுக்கு விருப்பமான, எமக்குப் பொருந்தாத தீர்வு ஒன்றை காணமுடியாது" என்ற செய்தியை, அவர்களுக்குப் புரியக் கூடிய விதத்தில் சொல்வதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. இவ்வளவற்றையும் ஓருங்கு சேர நிறைவேற்றியதுதான் எல்லாளன் நடவடிக்கையாகும்!

'சர்வதேசம் எல்லாப் போராட்டங்களையும் பயங்கரவாதம் என்ற கூடைக்குள் போட்டுப் பொதுமைப்படுத்துவதனால்தான், நியாயமான விடுதலைப் போராட்டங்களுக்கும் தேவையற்ற அழுத்தங்கள் போடப்படுகின்றன" என்ற எமது கருத்தை, நாம் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாகத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக் கொண்டே வந்துள்ளோம். "சர்வதேசம், குறிப்பாக அமெரிக்கா இந்தப் பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், 'இந்தப் பொதுமைப்படுத்தல் காரணமாகத்தான் மகிந்த ராஜபக்ச அரசு தமிழின அழிப்பையும், மனித உரிமை மீறல்களையும் புரிந்து வருகின்றது" என்றும், நாம் தொடர்ந்தும் குறிப்பிட்டே வந்துள்ளோம்.

இப்போது, அமெரிக்க முன்னாள் அரச தலைவர் கிளின்ரனின் துணைவியாரும், எதிர்வரும் அமெரிக்க அரச தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளருமான ஹிலரி கிளின்ரன் அவர்களும் 'பயங்கரவாதப் பொதுமைப்படுத்தலுக்கு" எதிரான தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 'அடிப்படையில் அனைத்துப் பயங்கரவாதிகளையும் ஒன்றாகக் கருத முடியாது. அவர்களின் நோக்கம் குறித்தும், அவர்கள் பயங்கரவாதிகளாகக் காட்டப்படுவதன் பின்புலம் குறித்தும், நாம் தெளிவடைய வேண்டிய தேவை உள்ளது. எடுத்துக்காட்டாக, இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்பெயின் பாஸ்கியூ பிரிவினைவாதிகளும், அல் - அன்பர் மாநிலக் கிளர்ச்சியாளர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் போராடுகின்றார்கள். இவர்களால் கையாளப்படும் யுக்திகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இவர்கள் ஒரே மாதிரியான சித்தாந்தத்தினை, கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் எல்லோருக்கும் ஒரே சாயத்தைப் பூச முடியாது" என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான திருமதி ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.

திருமதி ஹிலரி கிளின்ரனின் இந்தக் கருத்து வரவேற்கத்தக்கதுதான்! பாராட்டப்பட வேண்டியதுதான்! ஆனால் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், சர்வதேசம் இந்தப் பொதுமைப்படுத்தலின் மூலம் நியாயமான விடுதலைப் போராட்டங்களையும் அழிக்க முனைந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்துடன் நிமிர்ந்து நிற்பதன் மூலம் இந்தப் பொதுமைப்படுத்தல் பிழை என்பதை உலகிற்கு உணர்த்தியிருப்பதுதான்! அதாவது திருமதி ஹிலரி கிளின்ரனின் இந்தப் பேச்சுக்கு அடிப்படைக் காரணமே விடுதலைப் புலிகளும் அவர்களது பலமும்தான்! இல்லாவிட்டால் இத்தகைய கருத்து எளிதில் அங்கிருந்து வராது!

இன்று தமிழீழ மக்களின் போராட்டம் சர்வதேச சமூகத்தின் எண்ணத்தை, அதன் கொள்கையை மாற்றியமைக்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றது என்பதையும் இது சுட்டிக்காட்டுகின்றது. இதனைச் சர்வதேசம் உணரத் தலைப்பட்டிருக்கின்றது என்பதைத்தான், ஹிலரி கிளின்ரனின் பேச்சு, இன்று உணர்த்துகின்றது.

இங்கே சொல்லப்பட வேண்டிய இன்னமொரு விடயம் என்னவென்றால், பயங்கரவாதப் பொதுமைப்படுத்தல் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளை அடக்கி, அவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை மகிந்த ராஜபக்ச வைத்துக் கொண்டு நிற்கின்றபோது, இப்போது சர்வதேசம் மாற்றுவழியில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றது என்பதுதான்! 'மாற்றுவழிகளில்தான் இந்தப் பிரச்சனைகளை அணுக வேண்டும்! எல்லாப் போராட்டங்களையும் பயங்கரவாதத்திற்குள் பொதுமைப்படுத்த முடியாது!" என்பதை இப்போதுதான் உலகம் உணரத் தலைப்படுகின்றது.

இவ்வாறு சர்வதேசத்தின் பார்வையில் தகுந்த மாற்றம் வருகின்ற வேளையில், புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம், எம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொண்டு, எமது குறைகளை, சஞ்சலங்களைக் களைந்து கொண்டு, தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களை மேலும் பலப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். 'புலிகள் போராடவில்லை, புலிகள் போராடவில்லை" என்று புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாகிய நாம் சொல்லிக் கொண்டிருக்கையில்தான், இந்த எல்லாளன் நடவடிக்கைக்கான துல்லியமான திட்டமும், மிக நீண்ட பயிற்சிகளும், ஒத்திகைகளும் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் போராடிக் கொண்டுதான் வருகின்றார்கள். காலநேரம் சரியாக வருகின்றபோது புலிகள் தாக்குதல்களை நடாத்திக் கொண்டுதான் வருகின்றார்கள். இப்போதும் அப்படித்தான் செய்யப்பட்டுள்ளது.

இங்கே சில முக்கியமான விடயங்களை, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் எமக்கு வேண்டும். சிறிலங்கா அரசானது, மிகப் பாரிய ஆளணியையும், யுத்தக் கருவிகளையும் வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய்களைப் போருக்காகச் செலவழித்து வருகின்றது. அதில் நூறில் ஒரு விழுக்காடுக்கும் குறைவான நிதியோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் போராடி வருகின்றார்கள். இந்தப் 15 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு எதிராக, மிகப்பெரிய அளவில், தமது விலை மதிக்க முடியாத உயிர்களைத்தான் விடுதலைப் புலிகள் கொடுத்துப் போராடி வருகின்றார்கள். இந்த 21 மாவீரர்களின் உயிரின் விலை, சிறிலங்கா அரசின் 15 ஆயிரம் கோடி ரூபாய்களையும் விட மேலானது அல்லவா? இந்த உயிர்களுக்கு விலை மதிப்பு உண்டா? எமது மக்களுக்காக மரித்தவர்களின் வித்துடல்களுக்குச் சிங்களம் இழைக்க முயன்ற அவமானத்தைச் சொல்லி கண்டிக்க வார்த்தைகள்தான் உண்டா?

இதற்குள்ளே வந்து நாம் சஞ்சலப்பட்டுக் கொண்டு அது நடக்குமா, இது நடக்குமா என்று சொல்லிக்கொண்டு நிற்பதை விட்டுவிட்டு, எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். இதனூடு, தமிழர்கள் ஒன்றுபட்டால் எதனையும் சாதிக்க முடியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் திரு யோகரட்ணம் யோகி அவர்கள் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கக்கூடும்.

'இன்றைய வெற்றி தமிழர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. இங்கே மாவீரர்களின் பெற்றோருக்கும், குடும்பங்களுக்கும் நாம் ஆறுதல் சொல்கின்றோம். ஆனால் எங்களுக்கு யார் ஆறுதல் தருவது? ஏனென்றால் எங்களுடன் கூடிக் கலந்து பழகி வளர்ந்த நண்பர்களை நாம் இழந்து நிற்கின்றோம். எமக்கு யாரும் ஆறுதல் தர முடியாது."

புலம் பெயர் வாழ் தமிழர்கள் ஒன்று சேர்ந்து, மாவீரர்கள் எந்த நோக்கத்திற்காகப் போராடினார்களோ, அதனை - சுதந்திரத் தமிழீழத்தை -அடைவதற்காக ஒன்றுபட்டு நின்று வெல்வோமாக இருந்தால், நாம் மாவீரர்களுக்குத் துரோகம் செய்யாதவர்கள் என்ற மகிழ்வை அடையலாம்! புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களுடைய கடமையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடுதான் மாவீரர்கள் சாகின்றார்கள்.

வரலாற்றில் ஒரு சான்று உள்ளது. இராஜ இராஜ சோழப் பேரரசனின் மகன் இராஜேந்திரன் இலங்கை மன்னனான 5 ஆவது மகிந்தனைச் சிறைப்பிடித்துச் சோழ நாட்டிற்குக் கொண்டு போகின்றான். அங்கே 5 ஆவது மகிந்தன் பின்னர் இறந்து விடுகின்றான். கி.பி.1017 இல் இராஜேந்திர சோழன் நடாத்திய தாக்குதலில் அநுராதபுர நகரம் முற்றாக அழிக்கப்பட்டு, அரசதானி பொலநறுவைக்கு மாறியது.

சோழப் பேரரசு சிங்கள மன்னனைப் போரில் வென்று இலங்கையின் தலைநகரையும் மாற்றியது. இதற்கு மறுபக்கமும் ஒன்று உண்டு. சோழப் பேரரசையும் விடப் பெரிய வல்லரசான இந்தியாவையும் எதிர்த்து நின்று போரிட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதையும் இதே வரலாறுதான் பதிவு செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எதையும் எதிர் கொள்ளத் துணிந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு, மாவீரர்களின் நம்பிக்கையை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

Tuesday, October 30, 2007

பயங்கரவாதம் பற்றிய ஹிலாரியின் கருத்து

[30 - October - 2007]தினக்குரல்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி செனட்டர் ஹிலாரி கிளின்டன் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு கடந்த வாரம் அளித்திருந்த பேட்டியொன்றில் பயங்கரவாதம் குறித்து தெரிவித்திருந்த கருத்துகள் கவனத்தை பெரிதும் தூண்டுபவையாக இருந்தன. 2008 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான பிரசார இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் ஹிலாரியின் அக்கருத்துகள் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் முக்கியத்துவத்தை பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
`குறிப்பிட்ட இலக்குகளை அடைவதற்காக ஒரு கருவியாக பயங்கரவாதம் சரித்திரம் பூராவும் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கிறது. சில இலக்குகள் கோட்பாட்டு ரீதியானவையாகவும் வேறுசில இலக்குகள் நிலப்பரப்புடன் சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கின்றன. தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கான பயங்கரவாத இலக்குகளும் இருக்கின்றன. அடிப்படையில் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சகல பயங்கரவாதிகளையும் ஒன்றாக நோக்கமுடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்துகின்ற போராட்டமும் ஸ்பெயினில் பாஸ்க் பிரிவினைவாதிகளின் போராட்டமும் ஈராக்கில் அல் அன்பார் கிளர்ச்சியாளர்களின் போராட்டமும் தந்திரோபாயத்தில் மாத்திரமே தொடர்புபட்டவையாக இருக்கின்றன. கோட்பாட்டு அடிப்படையில் அவர்களிடையே பொதுநோக்கு பெரும்பாலும் இல்லை. ஒரு பரந்த தூரிகையைப் பயன்படுத்தி சகல இயக்கங்கள் மீதும் பயங்கரவாத வர்ணம் பூசியமை நாம் இழைத்திருக்கும் தவறுகளில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். தங்களது இலக்குகளை அடைவதற்கு பயங்கரவாதத்தை நாடுபவர்களைப் பொறுத்தவரை, நாம் எதற்கு எதிராக நிற்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கு இந்தப் பரந்த தூரிகை உதவி செய்வதாக இல்லை. பயங்கரவாதிகள் தோன்றியமைக்கான மூலகாரணங்கள் மற்றும் அவர்களின் செயல்நோக்கம் ஆகியவற்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய தேவையிருக்கிறது என்று நினைக்கிறேன்' என்று ஹிலாரி குறிப்பிட்டிக்கிறார்.

இன்று பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போருக்கு தலைமை தாங்குவதாக உரிமை கோரிக்கொள்ளும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவர வரவிரும்புகின்ற பெண்மணி பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறை குறித்து இத்தகைய ஒரு விளக்கத்தை எதற்காகத் தரவேண்டியிருந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. வன்முறைப் போராட்டத்தையே அவர் பயங்கரவாதம் என்று கூறுகிறார் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வன்முறைப் போராட்டம் தொடர்பில் அமெரிக்கர்கள் மத்தியில் இன்று இருக்கக்கூடிய சிந்தனையிலும் அணுகுமுறையிலும் அடிப்படையில் தவறு இருக்கிறது என்று செனட்டர் ஹிலாரி கருதியிருக்காவிட்டால் பேட்டியில் இத்தகைய விளக்கமொன்றை அவர் அளித்திருக்க வேண்டிய தேவையில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற வழிமுறைகள் பயன்தரத் தவறிவிட்டன என்று அவர் நினைத்திருக்காவிட்டால், வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடுகின்ற இயக்கங்கள் சகலதையும் ஒரேநோக்கில் பார்ப்பதில் உள்ள தவறை அவர் விளங்கிக் கொண்டிருக்காவிட்டால் `பரந்த தூரிகை' என்ற பதத்தை ஹிலாரி பயன்படுத்தியிருக்கமாட்டார்.

2001 செப்டெம்பர் 11 இல் நியூயோர்க்கிலும் வாஷிங்டனிலும் விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷும் அவரது மேற்குலக நேச அணிகளும் வகுத்திருக்கும் `புதிய உலக ஒழுங்கிலே' நீதியான இலட்சியத்துக்காக வன்முறைப் போராட்டத்தை நடத்துகின்ற எந்தவொரு கிளர்ச்சிக் குழுவுக்கும் அனுதாபத்தை அல்லது ஆதரவைப் பகிரங்கமாகத் தெரிவிக்கக்கூடிய ஒரு நாட்டைக் காண்பது முடியாத காரியமாக இருக்கிறது. உலகின் பல நாடுகளில் உள்ள அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு புஷ்ஷின் `பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' மிகவும் வசதியான கேடயமாக மாறியிருக்கிறது. வன்முறைப் போராட்டங்கள் தோன்றியமைக்கான அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து உலகின் கவனத்தைத் திசை திருப்பி, இன்றுள்ள பிரச்சினையே அந்த வன்முறைப் போராட்டம் தான் என்று கூறி அடக்குமுறையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலையை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர். இந்தப் போர்தான் இன்று உலகளாவிய ரீதியல் இடம்பெறுகின்ற படுமோசமான மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருக்கிறது. நியாயப்பூர்வமானவை என்று உலக சமுதாயத்தினால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விபரீதம் காரணமாக அவற்றின் நியாயத்தன்மையையோ அல்லது இலட்சியக் கூறுகளையோ இழந்துவிட்டதாகக் கருத முடியாது.

அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்த புஷ் `அமெரிக்கா பக்கம் நிற்காதவர்கள் பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கிறார்கள்' என்று விநோதமான வரைவிலக்கணத்தை வகுத்திருந்தார். அப்போது அந்தப் போரில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் கையாளத் தொடங்கிய அணுகுமுறை குறித்து கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த சரித்திர முக்கியத்துவமிக்க கருத்தொன்றை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாக இருக்கும்- `அமெரிக்காவும் மேற்குலகமும் உலக வரைபடத்தில் இருந்து முக்கியமான ஒரு வேறுபாட்டை ஒழித்துவிடுவதற்கு கங்கணம் கட்டி நிற்கின்றன. அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாடே அதுவாகும்'.

லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயமும் மனித உரிமைகள் விவகாரமும்

[30 - October - 2007] thinakkural

நவீன இலத்திரனியல் ஊடகங்கள் கொடிகட்டிப் பறக்கின்ற இந்த யுகத்தில் எஃகுத் திரைகளுக்குப் பின்னால் எந்தத் தகவல்களையும், மறைத்து வைக்க எடுக்கின்ற நடவடிக்கைகள் திரைப்படங்களில் வரும் கோமாளித்தனம் பண்ணும் பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு ஒப்பான நடவடிக்கையாகவே கணிப்பீடு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக நமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் வாழ்வு தொடர்பான அவலங்கள் என்றோ சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திலிருந்து மறைப்பதற்காக எடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைகளும் காலம் கடந்து போன ஒரு அணுகுமுறையாகவே அமையும்.

நாட்டின் ஆளும் வர்க்கம் வாக்காளர்களைப் பிழையான வழிகளில் நெறிப்படுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பிரசாரங்களும் ஆட்சியாளர்களின் இருப்புத் தொடர்பான பிரச்சினையே அன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வோ யதார்த்தமோ அல்ல.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஐ.நா. சபை விஜயம் நிகழ்ந்த சந்தர்ப்பம் மனித உரிமைகள் அமைப்பு ஏதேனும் இலங்கைக்கெதிரான தீர்மானங்களை நிறைவேற்றி விடுமோ என்றதொரு நிலை நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அப்படியெதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இன்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரே வந்து சென்றிருக்கின்றார். இவரை அரசாங்கம் ஒரு விருந்தாளியாக அழைத்து வந்திருக்கின்றது என்ற செய்திக்குப் பெரும் விளம்பரம் கொடுக்கப்பட்டது. எனவே, அவர் ஓர் அழைப்பாளி! உபசரிப்பு சந்திப்பு எல்லாம் அழைத்தவர்களுக்கு மட்டுமே ஏக உரிமை என்ற செய்தியை அந்தப் பிரசாரங்கள் வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருந்தன.

மொத்தத்தில் லூயிஸ் ஆர்பர் கைவிலங்கிடப்பட்ட ஓர் விருந்தாளியாகவே அவர் இங்கு நடத்தப்பட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.

தான் விரும்பிய பயணங்களை மேற்கொள்ளவோ விரும்பியவர்களைச் சந்திக்கவோ லூயிஸ் அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான சிரேஷ்ட நிர்வாகி இங்கு வருகை தந்தது அரசாங்கம் கொடுக்கின்ற விருந்தை உண்டு கழிப்பதற்கோ அல்லது இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிப்பதற்கோ அல்ல. விருந்தாளியாகவோ அல்லது விருந்தாளியாக முத்திரைப் பதிக்கப்பட்ட நிலையில் அவர் இங்கு கால் பதித்திருக்கலாம். ஆனால், அவர் வருகை இங்கு நடைபெறும் அவலங்கள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை நாடிபிடித்துப் பார்ப்பதற்குத்தான் என்பதே உண்மை.

அரசு மட்டத்தில் இவர் சந்திப்புக்களை மேற்கொண்ட போது இவருக்கு அரசின் மனோநிலை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்கவை இவ்விஜயத்தின்போது லூயிஸ் ஜே.வி.பி. செயலகத்தில் சந்தித்தார். அவர்களும் யுத்தத்தின் மூலமே நாம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவிரும்புகின்றோம். ஐ.நா. இங்கு கூடாரம் போட்டு எங்களை வழிநடத்த வேண்டிய தேவையுமில்லை என அடித்துக் கூறியதுடன் பாதுகாப்புப் படையினர் வட, கிழக்கில் மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடையே சுமுகமான உறவு காணப்படுகின்றது. எனவேதான், எமது பாதுகாப்புப் படையினர் வடகிழக்கில் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.

ஆனால், ஈராக், ஆப்கானிஸ்தானில் படைகளினால் அப்படி மக்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடமுடியுமா? என அவர் லூயிஸ் ஆர்பரிடம் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். இலங்கையின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் இது புரிந்துகொள்ள அவருக்குச் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கும். மாறாக ஐக்கிய தேசியக் கட்சி சில தினங்களுக்கு முன்பு எடுத்த தீர்மானங்களும் பெரும்பான்மையினம் இனப்பிரச்சினைக்குக் கொடுக்கப் போகும் தீர்வைக் கோடிட்டுக் காட்டியிருக்கும்.புதிதாக அவருக்கு இங்கு ஏதேனும் கண்டுகொள்வதற்கு வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்காது. இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைகள் தொடர்பாக லூயிஸ் ஆர்பர் முன்பின் தெரியாமல் இங்கு காலடி எடுத்து வைக்கவில்லை.

புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் மக்கள் படும் நெருக்கடிகளைக் கண்டு கொள்வதற்கோ அல்லது விடுவிக்கப்பட்ட கிழக்கைத் தரிசிப்பதற்கோ, அங்கு மக்கள் வாழ்வு தொடர்பாக பார்ப்பதற்கோ அவருக்கு ஏற்பாட்டில் வசதி செய்து கொடுக்கப்படவில்லை.

ஒருபக்க நியாயங்களைக் கேட்டு அவர் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இங்கு நிலவியது.

அவர் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் மிகவும் இக்கட்டான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். தேவாலய குருமார்களைச் சந்திப்பதற்கு மேலாக துயரங்களைக் கொட்டித்தீர்க்க வந்த ஆயிரக்கணக்கானவர்களின் அபாயக் குரலையும் முகங்களையும் மட்டுமே இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அவரால் பார்க்க முடிந்தது.

துயர் சொல்ல வந்த மக்களைச் சந்திப்பதற்கு அவருக்கு இராணுவம் இடம்கொடுக்கவில்லை. அவரால் அவர்கள் பக்கம் ஒரு அடிகூட நகரமுடியவில்லை. இச்செயல் என்ன செய்தியை உலகிற்குச் சொல்லுகின்றது? வெலிக்கடை - தென்னிலங்கையில் தலைநகரில் அமைந்துள்ள மிகப் பெரிய சிறைக்கூடம் அங்கு பலவருடங்களாக எதுவித விசாரணையுமின்றி கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள், இவர் இலங்கை வருகையை அறிந்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடக்கியதுடன் லூயிஸ் தம்மைச் சந்தித்து எமது துயரங்களைக் கேட்கும் வரை நாம் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவிப்புச் செய்தனர். இச்செயல் அரசை இக்கட்டில் மாட்டிவிட்டது. அச்சந்திப்பைத் தடுப்பதற்கு படையினரால் முடியாமல் போனது. லூயிஸ் அவர்களையாவது சந்திக்காதிருந்திருந்தால் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனம் பெரும் கேலிக்கூத்தாகப் போயிருக்க சந்தர்ப்பமிருந்தது. எனவே, இச் சந்திப்பின் அவசியத்தை லூயிஸ் தெளிவுபடுத்தி அனுமதியைப் பெற்றுக்கொண்டார்.

வெலிகடைச் சிறைக் கைதிகள் சார்பில் ஐவரே இவரைச் சந்திக்க சந்தர்ப்பம் பெற்றிருந்தார்கள். சந்திப்பின் பின்பு மனித உரிமைகள் ஆணையாளரிடம் இவர்கள் அவலங்களைக்கொட்டி வைத்திருக்கின்றார்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் உங்களுக்கு விமோசனம் கிட்டும் என அவர் உறுதிமொழி சொல்லியிருக்கின்றார். கைதிகள் அவர் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

எல்லாம் முடிந்த கையோடு மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவும் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு `விருந்தாளி, அழைப்பாளியின் கன்னத்தில் அறைந்த கதையாகவே' அது நிகழ்ந்திருக்கின்றது. இது அரச மட்டத்தில் பெரும் பின்னடைவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே, சூடு பறக்கும் விமர்சனங்கள் இப்போது துவங்கியிருக்கின்றது. இவரும் எல்.ரி.ரி.ஈ.யினரிடம் பணத்தை வாங்கிவிட்டுத்தான் இப்படிப் பேசியிருக்கின்றார் என இனவாதிகள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விருந்தாளி! சந்திப்பில் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

விசாரணைக் கமிஷன்கள் சம்பவத்தை விசாரணை செய்ய உதவுமே தவிர குற்றவாளிகளைத் தண்டிக்க அதில் இடமில்லை. அரசாங்கத் தரப்பில் புதிதாக நம்பிக்கை ஏற்படும் வகையில் எந்த செய்தியும் மனித உரிமைகள் தொடர்பில் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் முறைப்பாடு சொல்லியிருக்கின்றார்.

புலிகள், கருணா தரப்பால் மீறப்படும் மனித உரிமைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தாலும் தன்னால் அப்பகுதிக்கு விஜயம் செய்து அவற்றை கண்டுகொள்ள முடியாமல் இருப்பது வேதனை தருகின்றது எனவும் அவர் அங்கலாயித்திருக்கின்றார்.

கைவிலங்கிடப்பட்ட விருந்தாளி கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தின் உபயோகங்களைக் கண்டு கொள்ள சில காலங்கள் எடுக்கும்.

அரசாங்க மட்டத்தில் இவரை எப்படியும் சமாளித்து அனுப்பிவிடலாம், என எதிர்பார்த்தாலும், தலைக்கு மேல் வெள்ளத்தில் சிக்கிய நிலையிலேயே அரசாங்கம் சிக்கியிருக்கிறது.

அரசாங்க விருந்தாளியாகச் சொல்லப்பட்ட ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளருக்கு தடுப்புகளை விதித்து விருந்தாளியை அனுசரித்த ஒழுங்கு முறை அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றிக்கு மாறாக, சர்வதேச மட்டத்தில் பாரிய பின்னடைவுகளையும் அவமானத்தையுமே இச்சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. ஏன் அவர் இப்படி நடத்தப்பட்டார்? திட்டமிட்டு எல்.ரி.ரி.ஈ. யினருக்கு உதவும் நடவடிக்கையாக அல்லவா இது அமைந்திருக்கின்றது. அமைச்சர்களும் அரச அதிகாரிகளும் எல்.ரி.ரி.ஈ. யினரின் கையாட்களாக இந்த நாடகத்தை நடத்தியிருக்கின்றார்களா? என்று கேட்குமளவிற்கு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை நெறிப்படுத்துவது யார் என்ற தேசபக்தர்கள் கேட்க வேண்டியிருக்கின்றது. அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐ.நா.வின் விஷேட செயலகமொன்றை அமைக்க அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அடித்துக் கூறியிருக்கின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இப்படி ஒரு செயலகத்தின் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார். என்பதே இவ்விஜயத்தின் ஒட்டு மொத்த சுருக்கமாகும்.

'ஓக்ரோபர் மாதமும் வரலாற்றின் வழிகாட்டியும்"

ஓகஸ்ட் மாதம் - ஓகஸ்ட் மாதத்தின் இறுதி நாட்களில் நாம் இப்போ அடியெடுத்து வைத்திருக்கின்றோம்! வரலாற்றுப் பதிவுகளைத் தன்னுள் அடக்கி என்றும் நினைவு கூரவைக்கும் அற்புதம் உண்டு இந்த மாதத்திற்கு.

இன்று எங்கு பார்ப்பினும் வெடியோசை! திரும்பும் பக்கமெல்லாம் போர் முழக்கங்கள்! துப்பாக்கி வேட்டுக்கள்; கைக்குண்டு வீச்சுக்கள்; கண்ணிவெடிகள்; விமானக் குண்டுவீச்சுக்கள்; எங்கு பார்ப்பினும் அழிவின் கதாநாயகனாக வெடிபொருட்கள்! மனித உயிர்களைக் குடிப்பது, அங்கங்களைப் பறிப்பது, கட்டடங்களைத் தகர்ப்பது என எந்த அழிவிலும் வெடிமருந்துகளின் காட்டாட்சி! ஆம் காடையரின் சண்டித்தனத்திலிருந்து பெரும் பெரும் போர்கள் வரை எங்கும் வெடிமருந்து இன்று பயன்படு பொருளாகிவிட்டது.

இந்த வெடிமருந்தைக் கண்டு பிடித்தவர்கள் சீனர்கள்... ஆனால் போர்களிலும், மனித உயிர்குடிப்பிலும் பயன்படுத்தப்படுமளவுக்கு அவர்கள் இறங்கிவிடவில்லை.

ஆனால் வெடிமருந்துகளைக் காலனின் தோழனாக உற்பத்தி செய்து கோடி கோடியாகக் குவித்தவர் அல்பேட் நோபல்! வெடிமருந்து உற்பத்தியைப் பிரமாண்டமான அளவில் உற்பத்தி செய்தவர் இவர். பணம் ஏராளமாகக் குவிந்தது இவரிடம். ஒவ்வொரு உயிர் விழும்போதும் இவரின் வங்கிக் கணக்குப் பொங்கிப் பொலிந்தது. இவர் பணப்பெருக்கத்தைப் பெற்றார். ஆனால் மனநிம்மதியைப் பெறமுடியவில்லை. இவர் திருமணம் செய்யவில்லை. அது மட்டுமல்ல, இவரின் இறுதி நாட்களில் இவர் மனம் குழம்பியவராகவே காணப்பட்டார்!

எனினும் இவர் தன் செயலுக்குப் பாவ விமோசனம் தேட நினைத்தாரோ என்னவோ தனது செல்வத்தை வங்கியில் வைப்பிலிட்டு அதன் வட்டியிலிருந்து வருடா வருடம் சர்வதேசப் பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்தார்.

ஆம்! அவை தான் நோபல் பரிசுகள்!

கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், மருத்துவம் என வருடா வருடம் சர்வதேசப் பரிசுகள் நோபலின் பணத்தின் வட்டியிலிருந்து! அதேவேளை போர்களின் நாயகனான வெடிமருந்தால் கிடைக்கும் பணத்திலிருந்து சமாதானத்திற்கும் கூட நோபல் பரிசு.

ஆம்! அழிவின் பணம் வருடா வருடம் சமாதானத்திற்கான பரிசையும் வழங்குகிறது. வியப்பல்லவா? எப்படியிருந்தபோதிலும் இந்த அல்பிரட் நோபல் பிறந்ததும் இந்த ஒக்ரோபர் மாதத்தில் தான்! இப்படி அழிவுகளுக்கு கால்கோள் எடுத்துக்கொடுத்தவர் பிறந்த இந்த மாதம் ஆக்கிரமிப்பின் மாதமாகவும் இது தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆம் ஆதிக்கவாதிகளின் ஆக்கிரமிப்பு மாதமும் இதுதான்.

சோவியத் யூனியன், சீனா போன்ற பெரும் நாடுகள் அதாவது வல்லரசு என்ற நிலையை எட்டித் தொடும் நாடுகள் விடுதலை பெற்றது இந்த மாதத்தில்தான். பஞ்சத்திலும் பசியிலும் வாடும் உகண்டா விடுதலை பெற்றதும் இந்த மாதத்தில் தான். விடுதலையின் மாதமாக இருக்கும் இந்த மாதம் தான் ஆக்கிரமிப்பின் மாதமாகியது. கொலம்பஸ் அமெரிக்காவில் போயிறங்கியது ஒக்ரோபர் மாதத்தில் பரம்பரை பரம்பரையாக அமெரிக்க தேசத்தில் வாழ்ந்து வந்த இன்கா, மாயா இனங்கள் இந்தத் தரையிறக்கத்தால் தானே அழிக்கப்பட்டன. பொன்தேடும் வேட்டையில் இறங்கிய ஐரோப்பியர்கள் மண் பிடித்த கதை இது.

இப்படியான அநீதியான ஆக்கிரமிப்பு எமது மண்ணிலும் இடம் பெற்றது. 1987 ஒக்ரோபர் மாதத்தில்! ஆம் அந்த ஒக்ரோபர் 10 இல் தான் இந்திய அமைதிப்படை தமிழ்மக்கள் மீது போர்ப்பிரகடனம் செய்தது. மறக்க முடியாத ஒக்ரோபரல்லவா இது! இந்திய அமைதிப்படை யாழ். நகர வீதிகளில் எத்தனை பொதுமக்களைச் சுட்டுவிழுத்தியது.

யாழ். புகையிரத நிலையத்தில் பிரம்படியில், கொக்குவில் ரயில் நிலையத்தில், கொக்குவில் இந்துக்கல்லூரியில், சாவகச்சேரி சந்தையில் நாங்கள் இழந்த உயிர்கள் கொஞ்சமா நஞ்சமா? ஆம் 1987 ஒக்ரோபர் எங்களுக்கு குருதியால் எழுதப்பட்ட மாதம்! இந்திய அமைதிப் படையின் துரோகத்தால் எழுதப்பட்ட மாதம்! ஒக்ரோபர் விடுதலையின் மாதமாக அகிம்சையின் மாதமாக அழிவின் மாதமாக ஆக்கிரமிப்பின் மாதமாகவும் தன்னைப் பல்வேறு முகங்களில் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் இவையை நாம் அறிவதும் இவை காலம் காலமாக அறியப்படுவதும் வாசிப்பின் மூலமல்லவா? ஆம்! ஒக்ரோபர் வாசிப்பின் மாதமும் கூடத்தான். வாசிப்பு ஒரு மனிதனை முழுமை யாக்குகிறது. எவரோ ஒரு பெரியார் சொன்ன வார்த்தைதான் இது! ஆனால் இதற்குள் எவ்வளவு உண்மையிருக்கிறது. வானொலி, தொலைக்காட்சி என்பன பாவனைக்கு வந்தபோது பலருக்கும் ஒரு அச்சம் எழுந்தது. எங்கே வாசிப்பின் மகத்துவம் அற்றுப்போய் விடுமோ என்பதுதான் அது. ஆனால் அவர்களின் அச்சம் அர்த்தமற்றுப் போய்விட்டது.

வானொலி காதில் கேட்கும் பின் காற்றில் கலந்துவிடும். தொலைக்காட்சி காதிலும் கேட்கும் கண்ணிலும் தெரியும். பிறகு ஓடிப் போய்விடும் போனால் போனது தான். திரும்பி வரப்போவதில்லை. ஆனால் புத்தகங்கள் அப்படியல்லவே... புரிந்துகொள்ளாவிடில் திரும்பவும் படிக்கலாம். மறந்து போனால் கூட மீண்டும் எடுத்துப் புரட்டலாம்! அவை அசைக்க முடியாத ஆவணங்கள்! அதனால் தான் நூல்கள் தான் மனிதனின் உண்மையான நண்பர்கள் என்கிறார்கள். அதன் காரணமாகத் தான் வானொலியாலோ தொலைக்காட்சியாலோ வாசிப்புப் பழக்கத்தை அசைத்துவிட முடியவில்லை.

இப்போ இணையத்தளங்களின் காலம் இவை வந்ததும் வாசிப்புப் பழக்கம் இதற்குள் போய் கூடு கட்டிவிடுமோ என்ற பயம் எழுந்தது உண்மைதான். ஆனால் முடியவில்லை. இணையத்தளங்கள் என்பன சாதாரண மக்கள் எட்டித் தொடமுடியாத உயரத்தில் அல்லவா கோலோச்சுகின்றன. எப்படியிருப்;பினும் வாசிப்பு என்பது என்றும் நிரந்தரமாக நிலைத்து நிற்பது என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டியது.

வாசிப்பு இரு விதங்களில் இருப்பதாக எம்மால் நம்பப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு வாசிப்பு! மற்றது கற்றலுக்கான வாசிப்பு! இவை இரண்டும் வௌ;வேறானவை. எனவே எம்மில் பலரால் நம்பப்படுகிறது. இல்லை நிச்சயமாக இல்லை! இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப் பட்டவை. வௌ;வேறாகப் பிரிக்கப்பட முடியாதவை. நாம் பொழுது போக்காகக் கற்கும்போது எம்மை அறியாமலே நாங்கள் சில கருத்துக்களால் ஆட்கொள்ளப்படுகிறோம்.

நல்லதோ கெட்டதோ ஏதோ ஒன்றை நாம் கற்றுக்கொள்கிறோம் அல்லவா? இதேவேளை நாம் கற்றலுக்காக வாசிக்கும்போது இயல்பாகவே பொழுதுபோகிறது. இப்படி இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டபோதிலும் இவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் நிற்கின்றன! எப்படி? நாம் பொழுது போக்குக்காக வாசிக்கும்போது தெரிவு செய்பவை இலகுவான வாசிப்புக்குரியவையே.

அதாவது லையிற்றீடிங்ஸ் என இதைச் சொல்வதுண்டு. உதாரண மாகத் துப்பறியும் கதைகள், கொலை, கொள்ளை, பயங்கரச் சம்பவங்கள் அடங்கிய கதைகள் மேலோட்டமான காதல் கதைகள் மெல்லிய ஆபாசம் கலந்த படைப்புக்கள், சினிமா நடிகர் நடிகையர் சம்பந்தப்பட்ட சங்கதிகள் போன்றவை இந்த லையிற் றீடிங்ஸில் அடங்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் இவை பொழுதுபோக்கு என்ற விடயத்துடன் நின்று விடுவ தில்லை. எங்கள் மனங்களை மலினப்படுத்துகின்றன. வாழ்வின் யதார்த்தத்தைப் பார்க்க மறுத்து ஏதோ ஒரு கனவுலகில் மிதக்க வைக்கின்றன.

கோசங்களை நிஜமென நம்பவும் நாமே வேசங்களை நிஜமாகக் காட்டவும் என்றொரு நிலையை நோக்கி எம்மை இட்டுச் செல்கின்றன. அதாவது அடிப்படையில் இவை எம்மை ஒரு போலி மனிதர்களாக்கி விடுகின்றன. பட்டுச்சேலையின் போடர் பற்றி நீண்ட ஆய்வு நடத்தவும், சினிமாவில் வரும் கதாநாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கலங்குமளவுக்கும் எம்மை மலினப்படுத்தி விடுகின்றன.

இந்தப் பொழுதுபோக்கு வாசிப்பில் ஒரு முன்னேறிய பக்கமும் உண்டு. ஒரு காலத்தில் கருணாநிதி, அண்ணா போன்றவர்களின் கதைகள், கட்டுரைகளை வாசித்தவர்கள் அதனால் ஆகர்ஷிக்கப்பட்டு சில காலம் அவர்களின் பக்தர்களாக இருந்து பின் இடதுசாரிகளாக உருமாறிய அனுபவங்களும் உண்டு. இவ்வாறே கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன் , ஜெக சிற்பியன், ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புக்களைப் படித்தவர்கள் பிற்காலங்களில் எழுத்தாளர்களாக இலக்கிய கர்த்தாக்களாக பரிமணித்திருக்கிறார்கள். இங்கே பொழுதுபோக்குக்கான வாசிப்பு என்பது கூட ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி வாசகர்களை இட்டுச்சென்றிருக்கிறது. இது காலப்போக்கில் கற்றலுக்கான வாசிப்பாகப் பரிணாமம் பெறுவது முண்டு.

ஆனால் கற்றலுக்கான வாசிப்பு என்பது ஒரு தேவையை நோக்கிய வாசிப்பாகும். கல்வி சம்பந்தப்பட்ட வாசிப்புகளும் இதற்குள் அடங்கும். மேலோட்டமாக இத்தகைய வாசிப்பு அறிவைப் பெருக்குவதற்காக எனச் சொல்லிக்கொள்ளப் பட்டபோதிலும் இது ஒரு இலக்கு நோக்கியதாகவே இருக்கும். ஆன்மீகவாதிகள் ஆன்மீக விடயங் களைக் கற்கின்றனர்.

அரசியல்வாதிகளோ தங்கள் கற்றலை அரசியல் சம்பந்தப்பட்ட விடயங்களுக்குள் அடக்குகின்ற னர். இவ்வாறே இராணுவ வல்லுநர்கள் போர்பற்றிக் கற்கின்றனர். விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கூடத் தங்கள் துறைசார்ந்த கல்வி யிலேயே கவனம் செலுத்துகின்றனர். எப்படியிருந்த போதிலும் வாசிப்பு என்பது மனிதனை முழுமையாக்குகிறது என்பது மட்டும் உண்மை. அறிவு என்பது அனுபவத்திலிருந்து வருவது. ஒரு மனிதன் காலம் காலமாக உலகில் நிலவிய அனுபவங்களை நேரில் அனுபவிக்க முடியுமா?

எனவே யுகம் யுகமாக மனித குலம் பெற்ற அனுபவங்கள் அறிவாகிப் புத்தங்களை அரியாசனமாக்கிக் கொள்கின்றன. அவற்றை நாம் படிப்பதன் மூலம் அத்தனை அனுபவங்களையும் நாம் பெறுகிறோமல்லவா? வாசிப்பு அனைத்தையும் எமக்கு அள்ளி அள்ளியல்லவா தருகிறது.

எனினும் இங்கும் ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. வாசிப்பு எப்பிடி இருக்கவேண்டும்! வாசித்து விட்டு சில நிமிடங்களில் அல்லது சில மணித்தியாலங்களில் அல்லது சில நாட்களில் ஏன் சில மாதங்கள், வருடங்களில் கூட மறந்து விடுவோமானால் வாசிப்பின் அர்த்தம் தான் என்ன? அது பயனற்ற வாசிப்பாகவே போய்விடுகிறதல்லவா? வாசிக்கும் போது மனதை முழுமையாக வாசிப்பதில் ஈடுபடுத்தி வாசித்தால் நிச்சயமாக அதுமறக்கப் போவதில்லை. புலன்கள் வேறு விடயங்களில் பாதி, வாசிப்பதில் பாதி செலுத்தி வாசிக்கும்போது அது எப்படி மனதில் பதிய முடியும்.

சுவாமி விவேகானந்தர் ஒவ்வொரு நாளும் ஒரு நூலகத்திற்குப் போவாராம். அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் எடுத்துக்கொண்டு போய்விட்டு திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பாராம். நூலகருக்கோ ஒரு சந்தேகம். இவர் கொண்டுபோகும் நூல்களைப் படிக்கிறாரோ என்பது பற்றி அவர் இவரைப் பரிசோதிக்க விரும்பினார். ஒருநாள் விவேகானந்தரிடம் ஒரு புத்தகத்தில் உள்ள ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு நீங்கள் அதைப் படித்தீர்களா எனக் கேட்டாராம். விவேகானந்தரோ விடயத் தைக் கூறியது மட்டுமன்றி எந்தப் பக்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறது எனவும் குறிப்பிட்டாராம். இன்னொரு புத்தகத்தில் உள்ள விடயத்தைக் கேட்டபோதும் கூட அதேபோன்ற தெளிவான பதில் வந்ததாம்.

ஆம்! ஆழமான வாசிப்பு எம்மை அறிவுபூர்வமானவர்களாக்குகிறது. தெரிந்த இரண்டு விடயங்களிலிருந்து தெரியாத ஒரு விடயத்தைப் புரிய வைக்கிறது. இருப்பதைப் புரியவும் இருப் பதிலிருந்து வருவதைத் தெளிந்த றியவும் அறிவு தருகிறது.

ஆம்! வாசிப்பு மனித குல வரலாற்றின் வழிகாட்டி.

நன்றி: வெள்ளிநாதம் (26.10.07)

Monday, October 29, 2007

புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன்

ஆக்கம்: கொழும்பு நிருபர்
29. அக்டோபர் 2007 18:33
புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

"2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே தொடர்ந்து கூறிவருகிறார். சிங்கள அரசு வட்டாரங்களில் அடுத்தப் பிரதமராக வரக்கூடியவராக இவர் கருதப்படுகிறார். இப்போதே தான் பிரதமராகிவிட்டது போன்ற உணர்வுடன் அவர் புலிகளைத் தாக்கி அறிக்கைகள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

புலிகள் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிடப்போகிறார்களா இல்லையா? என்ற கேள்விக்கு யாராலும் விடையளிக்க முடியாது. இதற்கு பதில் கூறக்கூடிய அதிகாரமும் உரிமையும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் சிங்கள அமைச்சர் இவ்வாறு தொடர்ந்து கூறிவருவது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழீழத்தில் பெரும் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அங்கு அவர்கள் நீதி, நிர்வாகம், வரி வசூலித்தல் மக்களுக்கான கடமைகளைச் செய்தல் போன்ற எல்லாவற்றையும் மக்கள் சேமநல அரசு போல நடத்திவருகிறார்கள் என்பதை உலக நாடுகள் அறிந்துள்ளன. சிங்கள அரசாங்கத் தலைவர்களைச் சந்திப்ப தற்காக கொழும்புக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் கிளிநொச்சிக்கும் சென்று பிரபாகரனைச் சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். சர்வதேசப் பத்திரிகையாளர்களும் அவ்விதமே பிரபாகரனைச் சந்திக்காமல் செல்வதில்லை.

இலங்கைத் தீவில் இரு அரசுகள் இயங்கி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே இந்தச் சூழலில் சுதந்திரப் பிரகடனத்தை பிரபாகரன் அறிவிப்பாரானால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலக வரலாற்றின் பலவேறு நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் போது குறிப்பிட்ட காலக் கட்டம் வரும்போது அந்த நாடுகளின் தலைவர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒன்றும் புதிது அல்ல.

1944ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சுதந்திர இந்திய அரசை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அந்தச் சுதந்திர அரசை ஜெர்மனி ஜப்பான் இத்தாலி உட்பட பல நாடுகள் அங்கீகரித் தன. ஆனால் அமெரிக்கா அணுகுண்டை வீசியதின் விளைவாக ஜப்பான் சரணடைந்தது இரண்டாம் உலகப்போரின் போக்கு அடியோடு மாறிவிட்டது. நேதாஜியும் விமான விபத்தில் மாண்டதாகக் கூறப்பட்டது. இதன் விளைவாகத்தான் அவரின் சுதந்திர அரசு செயல்பட முடியாமல் போயிற்று. நேதாஜி தனது படையோடு இந்தியாவிற்குள் நுழைந்திருப் பாரேயானால் மக்கள் ஆர்த்தெழுந்து வெள்ளையர் ஆதிக்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நெதர்லாந்து நாட்டின் காலனி நாடாக அடிமைப்பட்டுக்கிடந்த இந்தோனேசியாவுக்குள் ஜப்பான் அத்துமீறி நுழைந்து கைப்பற்றியது. ஆனால் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது அந்தச் சூழ்நிலையை முற்றிலுமாக பயன்படுத்தி இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ சுதந்திரப் பிரகடனத்தை 1945ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்தியப் பிரதமர் நேரு அந்த அரசை வரவேற்று அங்கீகரித்தார். மற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவும் அங்கீகாரம் அளித்தன. மீண்டும் இந்தோனேசியாவை ஆக்கிரமிப்பதற்கு டச்சு அரசு முயற்சி செய்தபோது அதற்கு எதிராக சுகர்ணோ தலைமையில் பெரும் போராட்டம் நடத்தினார்கள். 1949ஆம் ஆண்டில் இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்தோனேசியா விடுதலை பெற்றது.

அதைப் போல பிரெஞ்சு காலனி நாடுகளாக இருந்த கம்போடியா லாவோஸ் வியட்நாம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரெஞ்சு இந்தோ சீனா என்ற பெயரில் பிரெஞ்சுக்காரர்கள் அடக்கி ஆண்டனர். 2ஆம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் நாள் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை அந்த மக்களின் மாபெரும் தலைவரான ஹோசிமின் வெளியிட்டார். ஆனால் பிரஞ் ஏகாதிபத்தியம் மீண்டும் வியட்நாமை கைப்பற்ற முயன்றது. இதன் விளைவாக பெரும் போர் மூண்டது. பிரெஞ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது. சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்திற்குபின் வியட்நாம் விடுதலை பெற்றது.

1988ஆம் ஆண்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் அவர்களின் தலைமை யில் பாலஸ்தீன தேசிய சபை கூடி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால் அந்த வேளையில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கீழ் பாலஸ்தீன பிரதேசத்தின் எந்தப் பகுதியும் இருக்கவில்லை. பாலஸ்தீன பகுதியில் எத்தகைய நடைமுறை அரசாங்கத்தை யும் அவர்கள் நடத்தவில்லை. ஆனாலும் அரபு நாடுகள் அனைத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன. இந்தியாவின் தலைமை யில் ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்தன.
சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டு சுதந்திர அரசை நிறுவியபோது அவரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இந்தியாவின் எந்தப் பகுதியும் இருக்கவில்லை. ஆனாலும் அந்த அரசை பல நாடுகள் அங்கீகரித்தன.

1945ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் சுகர்ணோ சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது நாட்டின் ஒருசிலப் பகுதிகள் மட்டுமே அவரது கட்டுப்பாட்டின்கீழ் இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பிற பகுதிகளை மீட்டு அவர் தனது நாட்டின் விடுதலையை நிறுவினார்.

வியட்நாமில் ஹோசிமின் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது தென் வியட்நாம் பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இயங்கிய ஒரு பொம்மை அரசின் கையில் இருந்தது. தன்னுடைய மக்களைத் திரட்டி ஹோசிமின் நடத்திய தீரமிக்க போராட்டத்தின் விளைவாக தென்வியட்நாமில் இருந்து பிரெஞ்சு-அமெரிக்க ஆதிக்கப்படைகளை விரட்டியடித்தார். வட-தென் வியாட்நாம்கள் இணைக்கப்பட்டு ஐக்கிய வியட்நாம் பிறந்தது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் சொந்த மண்ணில் நின்று போராட வழியில்லாமல் சுற்றிலுமிருந்த அரேபிய நாடுகளில் மாறி மாறி தங்கி தனதுப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. அவர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டபோது பாலஸ்தீனத்தின் ஒரு அடி மண் கூட அவரது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனாலும் அரேபிய நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவற்றின் அங்கீகாரத்தை அவர் பெற்றார்.

உலக வரலாற்றில் இதைப்போல பல்வேறு நாடுகளில் சுதந்திரப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. நேதாஜி போஸ், சுகர்ணோ, ஹோசிமின், யாசர் அராபத் போன்ற தலைவர்கள் சொந்த நாட்டிற்கு வெளியே இருந்து போராடினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மண்ணை மீட்டார்கள். சுதந்திர கொடியைப் பறக்க விட்டார்கள் என்பது வரலாறாகும்.

மேலே கண்ட மாபெரும் தலைவர்களுடன் ஒப்பிடும்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வயதாலும், அனுபவத்தாலும் மிகவும் இளையவர். நேதாஜி அவர்களுக்கு ஜெர்மானி, ஜப்பான், இத்தாலி ஆகிய வல்லரசுகள் எல்லாவகையான உதவிகளையும் செய்தன. சுகர்ணோ அவர்களுக்கு இந்தியா உட்பட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் உறுதுணையாக நின்றன. ஹோசிமின் அவர்களுக்கு சோவியத் ஒன்றியமும், சீனாவும் பெருந்துணை புரிந்தன. யாசர் அராபத் அவர்களுக்கு அரேபிய நாடுகள் மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம், இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகள் பேராதரவு அளித்தன. ஆனால் அருமைத் தம்பி பிரபாகரன் அவர்களுக்கு இந்தத் தலைவர்களுக்கு கிடைத்த உதவியில் கோடியில் ஒரு பங்கு உதவிகூட கிடைக்கவில்லை. இந்தியா உட்பட எந்த நாட்டின் ஆதரவும் இல்லை. ஆனாலும் அவர் தனது மக்களை நம்பிப் போராடி தனது மண்ணின் பெரும்பகுதியை மீட்டுத் தனியரசையே நடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ் புலிகள் அறிவிக்கப் படாத அரசை நடத்தி வருகிறார்கள் என்ற உண்மையை உலகம் அறியும்.

எனவே அவர் சுதந்திரப் பிரகடனம் வெளியிட்டால் வியப்படைவதற்கு இல்லை. அவ்வாறு நிகழுமானால் தமிழர் வரலாற்றில் மகத்தானதொரு நிகழ்ச்சியாக அது அமையும். உலகத் தமிழர்களைத் துடித்தெழ வைக்கும்.

சிங்கள அமைச்சர் வயிறெரிந்து புலம்புவது உண்மையானாலும் ஆகலாம். அது உண்மையாகும் நன்னாளை ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்துக் கொண்டாடக் காத்திருக்கிறான்.

நன்றிகளுடன். முரசம்

Sunday, October 28, 2007

இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல்

-அருஸ் (வேல்ஸ்)-

இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர்.

நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது படைத்துறை நிபுணர்களின் கருத்து. இதற்கு அண்மையில் நடைபெற்ற பல்க்கன் போர், ஈராக் போர், ஆப்கான் போர் என்பவற்றை உதாரணமாக கொள்ளலாம். இந்த உத்திகளைத்தான் இலங்கை அரசும் பின்பற்றி வருகின்றது.

அதாவது எதிர்கால போரில் விமானப்படையின் முக்கியத்துவத்தை அறிந்த அரசு இந்த மிலேனியத்தின் முதல் 3 வருட காலப்பகுதியில் 07 உலங்குவானூர்திகளையும் (எம்.ஐ 35P) 36 விமானங்களையும் (03 யுn 32, 02 130 மு ர்நஉரடநள ஊ-1, 06 மிக்-27 ஆ, 01 மிக் 23 ருடீஇ 06 மு-8ளஇ 10 Pவு-6ளு, 04 கிபீர் ஊ-2, 04 கிபீர் ஊ-7) கொள்வனவு செய்து விமானப்படையின் பலத்தை 30 விகிதத்தால் அதிகரித்திருந்தது.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் 03 கே-8 ரக நவீன பயிற்சி வானூர்திகள் அழிந்த போதும், உடனடியாகவே மேலதிகமாக 03 விமானங்களை அரசு கொள்வனவு செய்திருந்தது. கடந்த வருடம் மேலதிகமாக 04 மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள், 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டதுடன், இந்தியாவும் 02 எம்ஐ-17 ரக உலங்குவானூர்திகளை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருந்தது.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்ட 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியை விமானப்படை தனக்கு மூச்சுவிடும் காலப்பகுதியாக பயன்படுத்தியிருந்தது. இந்த அவகாசத்தில் தனது படையை மீள ஒழுங்குபடுத்தியிருந்ததுடன், புதிய விமானிகளுக்கு பயிற்சி அளித்ததுடன், பயிற்சி நடவடிக்கைகளையும் புதிய கொள்வனவுகளையும் முடுக்கி விட்டிருந்தது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக விமானிகள் அனுப்பப்பட்டதுடன், அமெரிக்காவின் வான்படை அதிகாரிகளுடன் இணைந்து பல கூட்டு பயிற்சிகளையும் அது மேற்கொண்டிருந்தது.

விமானப்படையின் கட்டளை மையங்களும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வடபகுதி கட்டளை மையம் இந்த கட்டளை மையத்தின் கீழ் வவுனியா, அனுராதபுரம், பலாலி விமானப் படைத்தளங்கள் உள்ளடக்கப்பட்டன.

எனினும் பலாலி மீது 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவி நடத்திய தாக்குதலில் பெல்-212 ரக உலங்கு வானூர்தி ஒன்று அழிக்கப்பட்டதனாலும், அதனை அண்டிய பகுதிகளில் அவ்ரோ விமானங்கள் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதனாலும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. வவுனியா தளத்தை பொறுத்தவரை அங்கு ஸ்குவாட்றன்-06 (6 ர்நடiஉழிவநசளுஙரயனசழn: ஆi-17இ ஆi-171) உலங்குவானூர்தி பிரிவும், ஸ்குவாட்றன் (11 ருயுஏ குடiபாவ: ஐயுஐ ளுஉழரவ) உளவு விமான பிரிவும் நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் கடந்த ஆண்டு வவுனியாவை அண்டிய பகுதிகளில் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து ஸ்குவாட்றன்-11 பிரிவு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு நகர்த்தப்பட்டது.

எனவே அனுராதபுரமே வடபகுதி போர்முனையின் பிரதான விமானப்படைத்தளமாக மாற்றம் பெற்றது. இது பயிற்சி விமானங்கள் ஸ்குவாட்றன்-1 (குடலiபெ வுசயiniபெ றுiபெ: Pவு-6ஃஊது-6இ ஊநளளயெ 150இ ளுகு.260வுP) விமானங்களின் தளமாக இருந்ததுடன், வட போர்முனையின் முக்கியத்துவம் கருதி தாக்குதல் உலங்குவானூர்திகளும், போக்குவரத்து வானூர்திகளும், விடுதலைப் புலிகளின் விமானங்களை தாக்குவதற்கு என கே-8 பயிற்சி விமானமும் அங்கு நிறுத்தி வைக்கப்படுவதுண்டு. மேலும் கனரக போக்குவரத்து விமானங்களான அன்ரனோவ்-32பி, அன்ரனோவ்-24பி என்பனவும் அங்கு தங்கிச் செல்வதுண்டு.

மேற்குப் பிராந்திய கட்டளை மையத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளமே பிரதான தளம். இது முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் உலங்குவானூர்திகளை கொண்ட ஸ்குவாட்றன்-04 (டீநடட 412இ டீநடட 212), அதிவேக தாக்குதல் விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-05 (துநவ ளுஙரயனசழn: கு-7டீளுஇ குவு-7இ குவு-5இ ஆiபு-23ருடீஇ ஆiபு-27) குவாட்றன்-10 (குiபாவநச ளுஙரயனசழn: முகசை வுஊ.2இ முகசை ஊ.7) ஜெற் பயிற்சி விமானங்களை கொண்ட ஸ்குவாட்றன்-14 (மு-8) என்பவற்றின் தளமாகும். இவை தவிர ஏக்கல விமானப்படைத் தளமும் மேற்குப் பகுதி கட்டளை மையத்தின் கீழ் அமைந்துள்ள போதும் அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுவதில்லை.

தென்பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் இரத்மலானை, கட்டுக்குருந்த, கேகாலை, வீரவில, தியத்தலாவை ஆகிய விமானப் படைத்தளங்கள் உள்ள போதும் இரத்மலானை பகுதியில்தான் விமானங்கள் தரித்து நிற்பதுண்டு. இது இலகுரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-8 (டுiபாவ வுசயnளிழசவ ளுஙரயனசழn: டீநநஉh 200இ லு-12) கனரக போக்குவரத்து விமானப்பிரிவான ஸ்குவாட்றன்-2 (ர்நயஎல வுசயnளிழசவ ளுஙரயனசழn: யுn-32இ ஊ-130முஇ டீயுந ர்ளு.748இ ஊநளளயெ 421) என்பவற்றின் தளமாகும்.

கிழக்குப் பிராந்திய கட்டளை மையத்தின் கீழ் ஹிங்குராங்கொட முக்கிய தளமாகும். அங்கு தாக்குதல் உலங்குவானூர்திகளின் ஸ்குவாட்றன் - 09 (யுவவயஉம ர்நடiஉழிவநச ளுஙரயனசழn: ஆi-24ஏஇ ஆi-35P) உலங்குவானூர்தி பிரிவான ஸ்குவாட்றன்-7 (டீநடட 206இ டீநடட 212) என்பன நிலைகொண்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு, அம்பாறை, சீனன்குடா விமானப்படைத்தளங்கள் இந்த பிரிவின் கீழ் உள்ளடக்கப்பட்ட போதும் அங்கு விமானங்கள் தரித்து நிற்பதில்லை. 1997 ஆம் ஆண்டு சீனன்குடாவில் குறுகிய நேரம் தரித்து நின்ற வை-12 இலகுரக போக்குவரத்து விமானத்தை விடுதலைப் புலிகளின் கொமோண்டோ அணி தாக்கி அழித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேற்கூறப்பட்ட நான்கு கட்டளைப்பீடங்களிலும் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளின் பிரதான கட்டளைப் பீடங்களான கட்டுநாயக்கா, அனுராதபுரம் விமானப்படை தளங்கள் மிகவும் முக்கியமானவை என்பதுடன், இலங்கையிலேயே மிகவும் பாதுகாப்பான தளங்களும் இவையே. நான்கு பிராந்தியங்களிலும் இந்த இரு பிராந்தியங்களின் முக்கியத்துவம் அதிகமானது.

எனினும் இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ கரும்புலிகள் அணி மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிந்திருந்தது.

இந்த வாரம் வான்படையின் வடபிராந்திய பிரதான கட்டளை மையம் மீது விடுதலைப் புலிகளின் அதிரடி இடியாக வீழ்ந்துள்ளது. அதிகாலை வேளை அநுராதபுரத்தின் காடு களினூடாக நகர்ந்த விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகளின் கொமாண்டோ பிரிவு மிகவும் நுட்பமாக முகாமின் முக்கிய பகுதிகளுக்குள் அதன் வடமுனையினூடாக ஊடுருவியுள்ளது.

அநுராதபுரத்தின் வான் படைத்தளத்தைப் பொறுத்தவரையில் அதற்கு அண்மையாக நுவரவெள குளம் உள்ளதுடன், அதனைச்சூழ மேலும் இரு சிறிய குளங்களும், இரண்டு அல்லது மூன்று இராணுவ முகாம்களும் உள்ளன. சாலியபுர மற்றும் கல்குளம படைமுகாம்கள் அவற்றில் அடங்கும். எனினும் விடுதலைப்புலிகளின் அணி நுவரவௌ காட்டுப்பகுதியின் ஊடாக விமானப்படைத்தளத்தை அடைந்ததுடன், படையினரின் கண்களில் படாமல் தளத்திற்குள் நகர்ந்து முக்கிய இடங்களில் நிலையெடுத்தும் இருந்துள்ளனர். தமது நிலையிடங்களை உறுதி செய்த அணி, முதலாவது தாக்குதலை இலகு ரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை தாக்குதலுடன் (டுiபாவ யுவெவையமெ றுநயிழn-டுயுறு) 3.15 மணியளவில் ஆரம்பித்தது.

படைத்தரப்பின் தகவல்களின் படி தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்னராகவே விடுதலைப் புலிகள் முகாமின் உட்பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியின் மீது நடத்தப்பட்டதுடன் மோதல் உக்கிரமடைந்தது.

உந்துகணையின் வெடிப்பதிர்வு, தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்களால் படையினர் அதிர்ச்சியடைந்த போது விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் தளத்தின் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதி, விமான எதிர்ப்பு துப்பாக்கி மையங்கள், ராடர் மையம் போன்றவற்றை கைப்பற்றிக்கொண்டனர்.

12.7 மி.மீ கனரக துப்பாக்கி நிலை ஒன்று மற்றும் இரண்டு 23 மி.மீ (ணுரு-23 யுவெயைசைஉசயகவ புரn) விமான எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனை கொண்டும் படையினரை தாக்கியதுடன், விமானங்களின் தரிப்பிடங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். விமான ஓடுபாதையில் நின்ற விமானங்கள் விடுதலைப் புலிகளின் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகியதுடன், விமானங்களின் தரிப்பிடத்தில் நின்ற விமானங்கள் விமான எதிர்ப்புத் தூப்பாக்கியின் எறிகணைகளினால் வெடித்து சிதறியுள்ளன.

விமானப் படைத்தளத்தின் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ராடர் மையம் என்பவற்றை கைப்பற்றிய அணியினர் தமது கட்டளைப் பீடத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் வான்புலிகளின் இரண்டு விமானங்கள் வவுனியா வான்பரப்பினூடாக உள்நுழைந்து 50 கிலோ நிறையுடைய மூன்று குண்டுகளை வீசிவீட்டு சென்றுள்ளன. இவற்றில் ஒரு குண்டு விமான ஓடுபாதையில் வீழ்ந்து அதனை சேதமாக்கியதுடன், மற்றையது எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் மீது வீழ்ந்த போது இரண்டு வானூர்திகள் அழிந்து போயின. இந்த குண்டு வீச்சில் இரண்டு அதிகாரிகள் உட்பட 4 விமானப்படையினர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் பாடுகாயமடைந்தனர்.

மூன்றாவது குண்டு முகாமிற்கு வெளியில் வீழ்ந்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் படையின் தாக்குதலை அடுத்து வவுனியா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தி அனுராதபுரம் தளத்தை நோக்கி தென்பகுதியினால் வந்துள்ளது. போக்குவரத்து வானூர்தியான இந்த உலங்குவானூர்தியை, 7.62 மி.மீ, 12.7 மி.மீ துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட தாக்குதல் உலங்குவானூர்தியாக இலங்கை விமானப் படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அநுராதபுர விமானத்தளத்தை தென்பகுதியினால் அண்மித்த இந்த வானூர்தி தரையில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தளத்தின் தென்திசையில் 12 கி.மீ தொலைவில் உள்ள மிகிந்தலைப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. உலங்குவானூர்தி மீதான இந்த தாக்குதல் அநுராதபுரம் படைத்தளத்தின் சுற்றாடலில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தளத்தை அண்மித்த உலங்குவானூர்தி மீது விடுதலைப் புலிகளே படையினரின் விமான எதிர்ப்பு துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் மற்றுமொரு கொமாண்டோ அணியினர் உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.

பலாலியில் இருந்து 36 படையினரை ஏற்றிச் சென்ற அன்ரனோவ்-24 ரக விமானம் 2000 ஆம் ஆண்டு மாசி மாதம் சாம்-16 ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி அநுராதபுரத்தில் வீழ்ந்து நொருங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அநுராதபுரம் காட்டுப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினர் இந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அநுராதபுரம் தளத்தில் ஏற்பட்ட சேதம் மிகவும் பாரியது. ஏறத்தாழ அங்கிருந்த பெரும்பாலான விமானங்களும், உலங்குவானூர்திகளும் அழிக்கப்பட்டு விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 விமானங்கள் முற்றாக அழிக்கப் பட்டுள்ளதுடன், 7 விமானங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பிரி-6 ரக பயிற்சி விமானம்-01 (யேnஉhயபெ Pவு-6), கே-8 ரக நவீன பயிற்சி விமானம்-01, எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-02, எம்ஐ-17 கனரக போக்குவரத்து உலங்கு வானுர்தி-01, பெல்-212 ரக தாக்குதல் உலங்குவானூர்தி-01, பீச்கிராப்-01, ஆளில்லாத உளவு விமானங்கள்-03, செஸ்னா ரக கண்காணிப்பு விமானம்-01 என்பன அடங்கும்.

அழிவடைந்த மற்றும் சேதமடைந்த விமானங்களின் மொத்த பெறுமதி 439 மில்லியன் டொலர்களாகும். இது அதிக எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அரசினால் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் 500 மில்லியன் கடன் தொகைக்கு சமனானது.
இவற்றில் முக்கியமானது அமெரிக்க அரசினால் வழங்கப்பட்ட 40 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீச்கிராப் கண்காணிப்பு விமானமாகும் (டீநநஉhஉசயகவ 200 ர்ஐளுயுசு). இலங்கை அரசிடம் உள்ள கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்களில் இதுவே நவீனமானது. இரு விமானங்களை இலங்கை அரசு கொள்வனவு செய்திருந்த போதும் அவற்றில் ஒன்றே தற்போது பாவனையில் இருந்து வந்தது. அதுவும் தற்போது அழிந்து போயுள்ளது.
இந்த விமானம் பாதகமான கால நிலையிலும், இரவிலும் பகலிலும் தொழிற்படும் ராடார்களையும் (ர்ரபாநள ளுலவொநவiஉ யுpநசவரசந சயனயச ளலளவநஅ) வெப்ப உணர்திறன் உள்ள கண்காணிப்பு மற்றும் ஒளிப்பட கருவிகளையும் கொண்டிருந்ததுடன், தாழ்வாக பறக்கும் விமானங்களை கண்டறியும் திறனும் கொண்டது. ஏறத்தாழ 8-9 மணிநேரம் தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபடக்கூடியதனால் இது ஆழ்கடல் கண்காணிப்பு பணிகளிலும் முக்கிய பங்காற்றி வந்தது.

மேலும் இந்த விமானத்துடன் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஆளில்லாத உளவு விமானங்களும், செஸ்னா விமானங்களும் அழிந்து போனது அரசின் புலனாய்வு மற்றும் உளவு நடவடிக்கைக்கு பலத்த பின்னடைவாகும். தற்போது இலங்கை விமானப்படையிடம் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லாத உளவு விமானங்களே உள்ளன.

தாக்குதல் உலங்குவானூர்திகளை பொறுத்த வரையில் வான்படையிடம் இயங்கு நிலையில் உள்ள 11 எம்ஐ-24 மற்றும் எம்ஐ-35 ரக வானூர்திகளில் இரண்டு இழக்கப்பட்டதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது டன், கே-8, பிரி-6 பயிற்சி விமானங்களின் இழப்பும் விமானப்படையின் பலத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இழக்கப்பட்ட விமானங்களை ஈடு செய்வது என்பது ஏற்கனவே 164.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ள பாதுகாப்பு செலவினத்தை 200 பில்லியனை விட அதிகமாக உயர்த்தலாம்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலும் தாக்குதல் அணியானது மிகவும் சிறந்த பயிற்சி பெற்ற கொமாண்டோக்களை உள்ளடக்கியது என்பது தெளிவானது.

பொதுநோக்கு கனரக இயந்திர துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், ஜிபிஎஸ் சாதனங்கள், செய்மதி தொலைத் தொடர்பு சாதனங்கள், டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள், வெடிமருந்துகள் என அதிக ஆயுதங்களை சுமந்து சென்ற இந்த அணி காட்டுப்புறச் சமருக்கும், நகர்ப்புறச் சமருக்கும் என சிறப்பாக பயிற்றப்பட்ட அணியாகும்.

விமானப் படைத்தளத்தின் முக்கிய பகுதிகளை அதிகாலை 3.20 இற்கு கைப்பற்றிய இந்த அணி அதனை காலை 11.00 மணி வரையிலும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், காலை 9.30 மணிவரையிலும் தமது கட்டளை பீடத்துடன் தொடர்புகளை பேணிவந்தது மிகப் பெரும் ஆச்சரியங்களை உலகின் போரியல் ஆய்வாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் தரைப்படை கொமாண்டோக்களையும், விமானப்படையையும் இணைத்து விடுதலைப் புலிகள் நடத்திய இணைந்த நடைவடிக்கையானது போரியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒப்பிரேசன் தவளை, 2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு தளம் மீதான தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் தமது தரைப்படை மற்றும் கடற்படைகளை ஒருங்கிணைத்ததுடன் அந்த தாக்குதல்களில் பெரும் வெற்றியும் ஈட்டியிருந்தனர்.

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 ரக முப்பரிமாண ராடர்கள் வவுனியாவில் இருந்து தென்னிந்தியா வரையிலும் விமானங்களை கண்காணிக்கும் எனவும், அரசினால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவான விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என்பவற்றின் தாக்குதல்களில் இருந்து விடுதலைப் புலிகளின் விமானங்கள் எதிர்காலத்தில் தப்ப முடியாது எனவும் படைத் தரப்பு தெரிவித்து வந்திருந்தது.

மேலும் விடுதலைப் புலிகளின் கடல் விநியோக மார்க்கங்கள் மூடப்பட்டதனால் விமானங்களுக்குரிய எரிபொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு பலத்த பற்றக்குறை நிலவுவதாகவும் தென்னிலங்கையில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

ஆனால் மற்றுமொரு வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாக நடத்தினால் அரசின் பிரச்சாரங்கள் அதற்கு எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும் என பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத௼br />. தற்போது அதுவே நிகழ்ந்துள்ளது.

இன்றைய போரியல் உத்திகளில் வான்படையும், சிறப்புப் படையணிகளும் முக்கியமானவை. உலகின் முன்னணி நாடுகள் இந்த இரு படையினரின் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளில் முக்கிய கவனம் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடாப் போரின் போது தரைப்படையினரை களத்தில் இறக்கும் முன்னர் வான்படையின் பலம் ஈராக்கிய நிலைகளின் வலிமையை குறைக்க போதும் என அமெரிக்கப் படைகளின் பிரதம தளபதி ஜெனரல் நோர்மன் ஸ்வார்ஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

ஆனால் வான்படையினரினதும், சிறப்பு படையினரினதும் இணைந்த நடவடிக்கையே மிகவும் சிறந்தது என பிரித்தானியாவின் தளபதி ஜெனரல் பீற்றர் டி ல பில்லியர் தெரிவித்திருந்தார்.

பின்னர் பிரித்தானியா தளபதியின் கருத்தே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் போரும் இலகுவில் வெற்றி கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் தற்போதைய பரிணாமமும் அதுவே. அதாவது 'எல்லாளன் நடைவடிக்கை" ஈழப்போரில் ஒரு புதிய பரிணாமத்தின் ஆரம்பம்.

ஆனால் அதன் தாக்கம் என்ன என்பது தான் இன்று எழுந்திருக்கும் முக்கிய கேள்வி. படைபலத்தில், பொருளாதாரத்தில், அரசியலில் என அதன் தாக்கம் பல காலம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனாலும் அதன் உடனடியான தாக்கமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரச்சினைக்கு இராணுவத்தீர்வை கண்டுவிடலாம் என்ற கனவை அது கலைத்திருக்கும் என்பதுடன் தமிழ்மக்களின் உளவுரனில் மிகப்பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (28.10.07)

Saturday, October 27, 2007

"உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்".... திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளிடம் தேசியத் தலைவர்

27.10.2007

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தளபதிகளை அழைத்த தமிழீழத் தேசியத் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று அறிமுகப்படுத்தியதாக தூயவன் அரசறிவியல் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான கலைக்கோன் தெரிவித்துள்ளார்.

21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: தாக்குதல் தொடங்குவதற்கு முதல் நாள் தலைவர் அனைத்துப் பொறுப்பாளர்களுடனுமான தனது வழமையான சந்திப்புக்களை நிறுத்தி அந்தப் போராளிகளைப் பற்றிய நினைவுகளில் முழுமையாக மூழ்கியிருந்தார். அன்று நள்ளிரவில் தளபதிகளை அழைத்திருந்தார். அவர்களிடம் தலைவர் "உங்களுக்கு நான் எல்லாளனைக் காட்டப் போகின்றேன்" என்று கூறினார். தலைவர் அவ்வாறு கூறிய ஒரு சிலமணி நேரத்தில் இளங்கோவிடமிருந்து "நாங்கள் இறுதி நகர்வை ஆரம்பிக்கப் போகின்றோம்" என்ற செய்தி வந்தது. தலைவர் பெரும் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அந்தப் பெரும் வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தார். சென்றிருந்த ஒவ்வொரு போராளிகளிடத்திலும் தலைவர் அதிக நம்பிக்கையுடனும் பற்றுடனும் இருந்தார். அந்த அணிக்குத் தளபதியாகச் சென்றவர் இளங்கோ, 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலை அமைப்பில் இணைந்து கொண்டார்.

ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றதோடு கைத்துப்பாக்கிப் பயிற்சி ஆசிரியராகவும் அடிப்படைப் பயிற்சி முகாம் பொறுப்பாளராகவும் இருந்தார். இவற்றுக்கு அப்பால் சிறப்புப் புலனாய்வுப் பணிகள், சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு போராளி. 14-க்கும் மேற்பட்ட களங்களைக்கண்ட ஒரு வீரன். இவரின் போரிடும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்ட களமாக இத்தாவில் சமர்க்களம் அமைந்திருந்தது. அவர் விக்டர் கவச எதிர்புப்படையணியின் அணியொன்றுக்குத் தலைமை தாங்கிச் சென்றிருந்தார். அங்கு எமது அணிகளின் காப்பரண்களுக்குள் எதிரியின் கவசப்படையணி உள்நுழைந்த போது அவரது அணியைச் சேர்ந்த போராளிகள் இரு டாங்கிகளைத் தகர்த்து அழிக்க இளங்கோ தனது கையிலிருந்த ஆர்.பி.ஜி. மூலம் ஒரு பவள் கவச வாகனத்தை நோக்கி மிக வேகமாக ஓடிச்சென்று அதன் மீது ஏறித் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த எதிரியைச் சுட்டுவீழ்த்தி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை எடுத்து அதனைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டார். இதன் மூலம் எமக்குப் பெரும் நெருக்கடியாகவிருந்த இத்தாவில் களமுனையை முற்றுமுழுதாக எமது பக்கம் திருப்பித்தந்த ஒரு பெரும் வீரன். அதற்குப்பின்னரும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின் குறித்த சில காலம் எமது தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் மிக முக்கியமான ஒரு பணியைப் பொறுப்பேற்று மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருந்தார். இளங்கோ தான் கரும்புலியாகச் செயற்படவேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவருக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் வரைந்து கொண்டே இருந்தார்.

ஆனாலும் அவரது கடமைகளின் முக்கியத்துவம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதில் சற்றும் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் 10 ஆண்டுகளாக இளங்கோ சுமந்து வந்த அந்த உணர்வைப் புரிந்து கொண்ட தலைவர் 2006 ஆம் ஆண்டு அவருக்குக் கரும்புலிகள் அணியில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். இளங்கோவின் தலைமையில் புறப்படுகின்ற அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவரின் செயற்பாடுகள் தொடர்பான பல விடயங்களை தற்போது வெளியிட முடியாதுள்ளது. திரியாயைப் பிறப்பிடமாகக்கொண்ட வீமன் அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்பில் வசித்து வந்த காலத்தில் விடுதலை புலிப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். மிகச்சிறிய வயதில் அன்று அவர் அமைப்பில் இணைந்ததனால் படையணிகளுக்கு இணைக்கப்படாமல் படைத்துறைப் பள்ளியில் சில காலம் கற்று வந்தார். அதன்பின் குறித்த வயதை எட்டியதும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றார். பின் அவரும் தலைவரின் மெய்பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கப்பட்டார். அதில் அதியுச்ச நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். அப்பணியில் மிக இரகசியமான பல்வேறுபட்ட கடமைகளை மிக நேர்த்தியாகச் செய்தார். அதேவேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்திற்குப் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் வீமனிடமே ஒப்படைத்திருந்தார். ஈழப்பிரியா மிகுந்த ஆளுமை மிக்க ஒரு போராளி. அவர் பயிற்சியின் போது மிக உற்சாகமாகச் செயற்பட்டார்.

அவர்கள் பெற்ற பயிற்சி என்பது சாதாரணமான பயிற்சி அல்ல. அவர்கள் தாக்குதலுக்குச் செல்லும் போது உதவி அணிகள் செல்லப்போவதில்லை. எனவே தாக்குதலுக்குத் தேவையான முழு வெடிபொருட்களையும் சுமந்து கொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும். அந்தளவு மிகக்கடினமான பயிற்சியைப் பெற்றவர்தான் ஈழப்பிரியா. இளம்புலி மிக உற்சாகமான போராளி எல்லோரையும் நகைச்சுவையாக வைத்திருக்கக்கூடிய ஒரு போராளி. அவர் இறுதியாகச் செல்லும் நேரத்தில் தலைவரிடம் எமது தேசியக்கொடியைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டிருந்தார். ஏனெனில் இத்தாக்குதல் ஒரு இரகசியமான தாக்குதலாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் முகாமை அழித்து விட்டுத் தொடர்புக் கோபுரத்தில் ஏறி எமது கொடியைப் பறக்கவிட வேண்டும் என்று அவர் அந்த அனுமதியைக் கேட்டிருந்தார். அதற்கு அமைவாக அவர் தேசியக் கொடியினையும் கொண்டு சென்றிருந்தார். பஞ்சீலன் மட்டக்களப்பிலிருந்து மிகச் சிரமங்களுக்கு மத்தியில் கால்நடையாக இங்கு வந்து மிகக் கடுமையாகப் பயிற்சிகளைப் பெற்றவர். சமாதான காலத்தில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்குள் எதிரியின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத் தீவிரமாகச் செயற்பட்ட வீரன். அதற்கான பெரும் அணியொன்றினைப் பொறுப்பெடுத்து செய்து வந்த வீரன். இவ்வாறு தான் ஒவ்வொரு வீரர்களும் ஒரு அணியாக நின்று மிகக்கடுமையான பயிற்சிகளைப் பெற்ற பெரும் வீரர்கள். ஒவ்வொரு போராளிகளும் தங்களது உணர்வுகளைத் தலைவரிடம் பல ஆண்டுகளாகத் தெரியப்படுத்தி வந்தனர்.

தலைவரும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அப்போராளிகளைக் கரும்புலிகள் அணியில் இணைத்திருந்தார். அன்று தொடக்கம் அவர்கள் உச்ச இலக்கொன்றைத் தாக்கி அழிப்பதற்கான முறையில் மிகக்கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அணிதான் அன்று அனுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் நுழைவதற்கான இறுதி நகர்வை தொடங்கிக் கொண்டிருந்தது. அன்று தலைவர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்தார். அதிகாலை 3:20 மணிக்கு இளங்கோ அறிவிக்கின்றார். "நான் சண்டையைத் தொடக்கப் போகின்றேன். சண்டை தொடங்கியதும் மிகுதி விடயங்களை அறிவிக்கின்றேன்" என்று கூறிச் சமரை ஆரம்பித்தார். அனுராதபுரம் வான் படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான் படைத்தளம் அல்ல. வடபகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவத் தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும் வடபகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்வதானால் அதற்கு இதயமாகச் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது. அது மட்டுமல்ல, வடபகுதியில் அனைத்து இராணுவச் செயற்பாடுகளுக்குமான ஒரு மையத்தளமாக அனுராதபுரம் வான் படைத்தளம் இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து தளங்களிலும் இத்தளம் மிக வித்தியாசமானது. ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்ட தளம் அனுராதபுரம் தளம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு பொதுமகனும், ஊடகவியலாளரும் கூட உள்நுழைய முடியாதளவுக்கு மிக இறுக்கமான பாதுகாப்பைப் பேணிவந்த தளம் தான் அத்தளம். 3 கிலோ மீற்றருக்கு மேலான நீளமும் 2 கிலோ மீற்றருக்கு மேலான அகலமும் கொண்ட ஒரு பெரும் தளம். அதற்குள் தான் இந்த வீரர்கள் உள்நுழைந்தார்கள். 3:20 மணிக்குத் தாக்குதல் தொடங்குகின்றது. மிக வேகமாகத் தாக்குதலை நடத்தி தமக்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானூர்திகளைத் தகர்த்து முடித்தார்கள். சிங்களம், அனுராதபுர வான் படைத்தளத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அத்தளம் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்ருக்கின்றது. மிகையொலி வானூர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வானூர்திகளையும் நிறுத்தி வைக்கப் பாதுகாப்பான தளம் எனவும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதேவேளை முற்று முழுதாக சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட பகுதி. அதற்குள் ஊடுருவுவது என்பது மிகக் கடினமான விடயம். சிங்களம் பெரும் மமதையுடன் இருந்த அக்கோட்டைக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் 20 நிமிடத் தாக்குதலுக்குள் அத்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அந்த நிலையில் இளங்கோ மீண்டும் தொடர்பு கொண்டு கதைத்தார். நான் காலில் காயமடைந்து விட்டேன் தொடை எலும்பு முறிந்துவிட்டது. எனவே இந்த இடத்தில் அமர்ந்து கொண்டே கட்டளைகளை வழங்குகின்றேன் எனக்கூறி அவர் கட்டளைகளை வழங்கினார். இதேவேளை வீமனின் கட்டளையும் கட்டளைப்பீடத்துடன் தொடர்புபட்டிருந்தது.

வீமன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். எம்ஐ-24 ரக உலங்குவானூர்தியையும், எம்ஐ-17 ரக உலங்குவானூர்தியையும் அழித்துவிட்டு கட்டளைப்பீடத்திற்கு அறிவித்தார். எனக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நான் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார். பல நூற்றுக்கணக்கான படையினரால் பாதுகாக்கப்பட்டிருந்த அம் முகாம் எதிரியால் கிட்ட நெருங்க முடியாத அளவுக்கு அதி உக்கிரமாகவும், வேகமாகவும் அந்த வீரர்கள் தாக்குதலை நடத்தி வந்தார்கள். தாக்குலில் உக்கிரமாக ஈழப்பிரியா செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் எதிரியின் பிரதானமான வானூர்திகளுக்கு அப்பால் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள் இருந்தன. அதனை எடுத்து இயக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார். தளத்திற்குள் நூறு மீற்றர் நீளமான ஒரு கட்டடத்திற்ள் பல வானூர்திகள் நின்றிருந்தன. அறிவுமலரும் இன்னுமொரு போராளியும் அதற்குள் நுழைந்து தாக்குதலை நடத்திக் கொண்டு அறிவித்தார்கள். இங்கு நிறைய வானூர்திகள் நிற்கின்றன. பல வானூர்திகள் எரிந்து கொண்டிருக்கின்றன. உள்ளே சென்று பார்க்க முடியாமல் உள்ளது. ஆனாலும் எல்லாவற்றையும் அடித்து அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று எரிந்து கொண்டிருக்கும் வானூர்திகளின் இலக்கத்தைக் கூடக் கூறிக் கொண்டு வானூர்திகள் எரியும் போது அவர்கள் மகிழ்ச்சியில் சிரித்து ஆரவாரித்தவாறு தாக்குதலில் ஈடுபட்டார்கள். தாக்குதல் தொடங்கி சில மணிநேரத்தில் தளத்தைக் கைப்பற்றுவதற்காகத் தளத்தின் வாசலில் படையினர் குவிக்கப்படுகின்றனர். அப்போது பல போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். பலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

ஒருவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையிலும் தனது ஆயுதத்தால் வந்த படையினர் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எமது வானூர்திகள், படையினர் மீது தாக்குதல் நடத்தின. அதனால் படையினர் சிதறி ஓட அதனையும் அவர் அங்கிருந்து கொண்டு அறிவித்துக்கொண்டிருந்தார். பின்னர், தீயணைப்புக் கருவிகளுடன் இராணுவத்தினர் வர அவர்கள் மீதும் அப்போராளிகள் தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த எல்லா வானூர்திகளும் அழித்து முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் வேவு வானூர்திகள் மட்டும் அவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். பின் மறைவான இடமொன்றில் அவை நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டு விட்டார்கள். அப்போது வீமனுக்கு இளங்கோ கட்டளையிட வீமன் படுகாயமடைந்த நிலையிலும் தனது டொங்கானால் அவற்றைத் தாக்கினார். தாக்கிவிட்டு அவை வெடித்துக் சிதறுகின்ற ஒலியை அனுப்பிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தார். அவ்வாறு அத்தளத்தில் ஒரு பொருளையும் மிஞ்சவிடாது தளத்தையே துவம்சம் செய்துவிட்டுத்தான் அந்த வீரர்கள் வீரச்சாவடைந்தார்கள்.

இன்று நாங்கள் பெரிய வெற்றியொன்றின் மிதப்பில் நிற்கின்றோம். மாபெரும் மனக்கோட்டை கட்டிவந்த சிங்களம் இந்த 21 வீரர்களின் வீரத்திலும் அர்ப்பணிப்பிலும் அனைத்தையும் போட்டு உடைத்துள்ளது. இருந்த போதும் எங்களுக்கு நிமிர்வைத் தந்த வீரர்களின் நினைவுகள் எம் ஒவ்வொருவரது இதயத்தையும் பாறாங்கல்லாக அழுத்தத்தான் செய்கிறது. அந்த வீரர்களைப் பொறுத்தவரை அவர்கள் 21 பேரும் எம்மிடம் ஒன்றைத்தான் எதிர்பார்த்தார்கள். தலைவர் கவனம், அவரது கரத்தைப் பலப்படுத்துங்கள். அதன்மூலம் எமது மக்களை அவலத்தில் இருந்து மீட்டு எடுங்கள். நீங்கள் அனைவரும் ஒன்றாக எழுந்தால் அது முடியும் என்றார் அவர். .

Friday, October 26, 2007

புலிகளை முற்றாக தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்துவிடக் கூடாது

கிழக்கு கைப்பற்றப்பட்டது போல், வடக்கையும் கைப்பற்றுவோம். கிழக்கு மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது போல, வடக்கிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், இவ்வாறாகவே அரச தரப்பு உயர் மட்டத்தினர் அண்மைக் காலமாக மார்தட்டி வந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் 3 ஆயுதக் கப்பல்களை தாக்கி அழித்து விட்டதாகப் பறைசாற்றி திருகோணமலை கடற்படைத்தளத்தில் கொண்டாட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆற்றிய தனதுரையில், விடுதலைப் புலிகளை 50% அல்ல 75% அல்ல 100% தோற்கடிக்க வேண்டும் என முழக்கம் செய்திருந்தார்.

சென்ற வாரம் `மக்கள் சந்திப்பு' எனப்படும் தொலைக்காட்சிப் பேட்டியில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடித்துக் கூறியிருந்தார். கிழக்கு கைப்பற்றப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் பல வீனமடைந்து விட்டனர் என தென்னிலங்கையில் பெரியளவில் பிரசாரம் செய்யப்பட்டது. அவர்கள் நொண்டி நொண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று கூட ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். சென்ற மாதம் கத்தோலிக்க ஆயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்து கலந்துரையாடிய பின் "ஏசியன் நியூஸ்" எனும் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில், விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டிருப்பதாகவோ, அச்சம் எதுவும் கொண்டிருப்பதாகவோ தனக்கு எண்ண முடியவில்லையெனக் கூறியிருந்தார்.

ஒரு வார கால இடைவெளியில் விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் இருவேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதாவது, முதலாவதாக சென்ற வாரம் (15 ஆம் திகதி) யால தேசிய பூங்காவில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அது குறிப்பாக உல்லாசப் பயணத்துறைக்கு குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது உருவாக்கியுள்ள தாக்கமானது, குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. இரண்டாவதாக சென்ற திங்கள் அதிகாலை அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட வான்வழி - தரைவழித் தாக்குதலானது, ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான மாநாடு

சென்ற வாரம் "பயங்கரவாதத்தை எதிர்கொள்வது" எனும் தொனிப் பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் பங்கு பற்றியவர்களில் ஒரு வராகிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் கலாநிதி ஜெரார்ட் சாலியான்ட், விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினரால் தோற்கடிக்க முடியாது எனவும் தமிழரின் நியாயபூர்வமான கோரிக்கையை அங்கீகரித்து பரந்தளவு சுயாட்சி வழங்குவதே சிறந்த வழி எனவும் கூறியுள்ளார். இலங்கை இராணுவம் சிறப்பாகச் செயற்படுவதாகவும் சாலியான்ட் தொலைவிலிருந்து கள நிலைவரம் தெரியாமல் பேசுகிறார் என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் சில இராஜதந்திரிகள் இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவ அணுகுமுறை அன்றி அரசியல் தீர்வொன்றே விரைந்து காணப்பட வேண்டியதாகும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக, அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் நம்பகத்தன்மையான அரசியல் தீர்வுத் திட்டம் இன்றி விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாதென கடந்த ஒரு வருட காலப்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கூறியுள்ளார். அது போலவே, அண்மையில் இடம்பெற்ற ஜேர்மன் தேசிய தின வைபவத்தின் போது, ஜேர்மன் தூதுவர் ஜோர்ஜன் வீர்த் இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வாகாது யார் எவ்வாறு தான் அர்த்தம் கற்பித்தாலும் யுத்தம் கொடியது. ஒருவரை ஒருவர் கொல்லாமல் சமாதானமாகச் சேர்ந்து வாழ நாம் கற்றுக் கொள்ள முடியாது எனவும் நாம் உலகப் பிரஜைகள் என்ற வகையில் இலங்கை எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை இலங்கை மக்களே காண்பதற்கு நாம் கைகொடுக்கவே விரும்புகிறோம் எனவும் வீர்த் கூறியுள்ளார். ஆனால், வீர்த் தனது கற்பனையில் 2011 இல் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நோபல் பரிசு கைக்கெட்டும் நாள் வரவேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி நாட்டைப் பிரித்து விடப்பார்க்கிறார் என ஜே.வி.பி.யினர் தமக்கே உரிய பாணியில் வீர்த் மீது எரிந்து விழுந்துள்ளனர்.

ஜனாதிபதியின் `இந்துஸ்தான் ரைம்ஸ் உரை'

ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் `இந்துஸ்தான் ரைம்ஸ்' தலைமை மாநாட்டில் ஆற்றிய உரையில் இன்றைய `ஏசியன் நூற்றாண்டு' என்ற காலகட்டத்தில் இந்தியா தனிச்சிறப்பு வாய்ந்த தலைமைத்துவமளிக்கும் வாசற்படியில் நின்று கொண்டிருப்பதாகவும் இந்தியா சுதந்திரமடைந்த காலம் முதல், ஆட்சி செய்யும் விடயத்தில் தனது சொந்தக் கைவண்ணத்தை பிரயோகித்துள்ளது எனவும் பாராட்டியுள்ளார். மாறாக, இலங்கை ஒரு ஜனநாயக நாடாக இருந்து வந்துள்ள போதும், எமது சுதந்திர இலட்சியங்கள் முதலியன கொண்டதொரு அரசியலமைப்பினை எமது மக்களால் சிருஷ்டிக்க முடியாமற் போனது ஒரு குறைபாடாக இருந்து வந்துள்ளது என ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால், 1972 ஆம், 1978 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலேயே இருவேறு குடியரசு யாப்புகள் தயாரிக்கப்பட்டன என்பதை ஜனாதிபதி ஏன் மறந்து விட்டாரோ? ஆனால், இரண்டு யாப்புகளிலுமே தமிழரின் சுயாட்சி அபிலாஷைகள் உள்வாங்கப்படாததால் அவை தமிழரால் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகும். தனது உரையில் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிந்தோ, தெரியாமலோ கூறிவைத்த இன்னொரு விடயத்தினை சென்னை வதியும் பிரபல இந்திய ஆய்வாளர் என்.சத்தியமூர்த்தி அதனை சற்று சுவாரஸ்யமாக வியாக்கியானம் செய்துள்ளார். `நான் ஒரு கிராமம்' தந்த பையனாகவே உதித்தேன். ஆனால், அந்தக் `கிராமம்' என்னுள்ளேயே இருந்துள்ளது.' என்றுதான் ராஜபக்ஷ கூறிவிட்டார். அதனை சத்திய மூர்த்தி பின்வருமாறு விமர்சித்துள்ளார். "தமிழர் தவிர, இலங்கையின் இன்றைய, புதிய தலைமுறையினரின் நிலையும் அதுதான். தமிழர் அந்தக் `கிராமம்' என்பதற்கு வெளியே வந்து நீண்ட காலமாகி விட்டது. ஆனால், நாட்டின் ஏனையோர் அவர்களோடு சேர்ந்துவரப்புறப்படவில்லை. மாறாக, சிங்கள சமுதாயமானது அந்த `கிராமத்திற்குள்ளேயே' தேங்கி விட்டது.... ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கைக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டு வர வேண்டுமாயின் , அந்தக் `கிராமம்' அந்தப் `பையனை' விட்டுவிட வேண்டும். அதேபோல், அந்தப் `பையன்' அந்தக் `கிராமத்தை' விட்டுவிலக வேண்டும். அதாவது, தென்னிலங்கை சிங்களவர்தான் தனக்கு வாக்களித்தவர்கள் என்று முன்னர் கூறியதற்கு மாறாக, தான் இலங்கை ஜனாதிபதி என அவர் எண்ணவேண்டும்", இதுதான் சத்தியமூர்த்தி கூறியுள்ளதன் சாராம்சம் ஆகும்.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்பதையே தனது அடிநாதமாகக் கொண்டு பயணித்து வந்துள்ளது. அவ்வப்போது வெவ்வேறு பிரச்சினைகள் தோன்றிவந்துள்ள போதும், அவற்றுக்கு அப்பால் இந்திய தேசம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து புதிய அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின், மூன்றாவது தடவையாக அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. காலத்திற்கேற்ப மாற்றங்களும் தேவைக்கேற்றவாறு கூடுதலான அதிகாரப் பகிர்வு முயற்சிகளும் (சில மாநிலங்களைப் பொறுத்தவரை சமச்சீரற்ற முறையிலும் கூட) மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பொருட்டு, "அரசியல் அமைப்பு செயற்பாடு மீளாய்வுக்கு ஆன தேசிய ஆணைக்குழு" என்னும் கட்டமைப்பு ஒன்று நிரந்தர அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

இந்திய நீதித்துறையும் இவற்றையெல்லாம் நன்கு கணக்கில் எடுத்துச் செயற்பட்டு வருகிறது. சட்டவாக்க மற்றும் நிறைவேற்றுத் துறைகள் தவறிழைக்கும் கட்டங்களில் நீதித்துறை அவற்றை சீர்திருத்தி செயற்பட்டு, வருகின்றது. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களை கலைத்துவிடும் அதிகாரத்தினை இந்திய உச்ச நீதிமன்றம் அகற்றிவிடத் தலைப்படவில்லையாயினும் அதனை இலகுவாக, அரசியல் மயப்படுத்தி நடைமுறைப்படுத்த முடியாதளவிற்கு உச்ச நீதிமன்றம் பாதுகாவலனாக விளங்குகின்றது.

இலங்கையில் வேற்றுமையை வளர்க்கும் பேரினவாதம் இலங்கையைப் பொறுத்தவரை வேற்றுமையில் ஒற்றுமை காண்பதை ஆட்சியாளர் முற்றாகப் புறந்தள்ளி விட்டு வேற்றுமைகளையே சிங்கள பேரினவாத உரமிட்டு வளர்த்து வருகின்றனர். தமிழர் மீது இடையறாது இனக்கொலைத் தாக்குதல்கள் நடத்தி அடிமைப்படுத்தி விடலாமென அவர்கள் எண்ணுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட அண்மையில் கூறிவைத்த கருத்துகளைப் பார்ப்போம். அதாவது இந்தியாவில் சமஷ்டி ஆட்சி முறை நிலவுவதாக மேலோட்டமாக எண்ணப்பட்டாலும் 1951 இல் நிறைவேற்றப்பட்ட அரசியல் அமைப்பானது, அப்படியானதல்ல. அது இலங்கையின் நிலையில் தான் அன்று இருந்தது.

பின்பு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் நாம் கிணற்றுத் தவளைகள் போல் ஒரு அங்குலமாவது நகர்வதற்கு அழுங்குப்பிடியாக மறுத்து தேங்கிவிட்டோம். மத்தியில் அரசாங்கம் பலமாய் இருக்க வேண்டுமென்று எண்ணப்பட்டதே தவிர, மாற்றமடையும் நிலைமைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்பட்ட போதும் நாம் அவற்றை உதாசீனம் செய்து விட்டோம். இந்தியாவிடம் குறுகிய அல்லது தறுதலை மனோபாவம் அற்றிருந்தமை அதன் சிறப்பம்சமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை காலம் காலமாக கட்டவிழ்த்து விடப்பட்டு வந்த பேரினவாத பித்தலாட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவிரிசலை நிச்சயமாக யுத்தத்தின் மூலம் தீர்த்து விட முடியாது.

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு கூடுதலான சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பாதுகாப்பதில் இந்திய உச்சநீதிமன்றம் குறியாய் உள்ளது. இந்திய நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்படாமல் இருப்பது பெருமைக்குரியதாகும். அதிகாரப்பகிர்வு விடயத்தில் இந்தியாவில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டு வருகின்றனர். சிறுபான்மையினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு பெரும்பான்மையினர் அச்சம் கொள்வதில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதானமானது என்றவாறாகவே ஜனநாயகமானது அங்கே புரிந்து கொள்ளப்படுகிறது. அதற்கு முற்றிலும் மாறாகவே இலங்கையில் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள், அதிகாரவாதிகள் , புத்திஜீவிகள் முதலியோர் சிறுபான்மையினர் மீது நம்பிக்கை வைப்பது கிடையாத நிலை காணப்படுகிறது. மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பேணுவது நாட்டின் ஐக்கியத்திற்கு தடையாய் உள்ளது என்ற கேவலமான சிந்தனையும் அவர்கள் மத்தியில் உண்டு. இவ்வாறாகவே பேராசிரியர் உயாங்கொட தனது உள்ளக்கிடக்கையினை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்தியாவைப் புகழ்ந்து பேசி இலங்கைக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவு தாராளமாயுண்டு என சூளுரைத்து வரும் ஜனாதிபதி ராஜபக்ஷ, ஏன் இந்தியாவின் செயற்பாட்டினை சற்று முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாது? இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாகவேனும் 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு- கிழக்கு சட்டரீதியாக நோக்கும் நிலையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாயினும், அதனை ஏன் அரசியல் ரீதியாக மீள இணைப்பதற்குத் தலைப்படவில்லை? பேரினவாதம் போட்டு வந்துள்ள தடைக்கற்களும் 3 தசாப்த கால யுத்தம் தந்த பேரழிவும் போதும். யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது என பல்வேறு வட்டாரங்களிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சியைத் தக்க வைப்பதற்காக விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்து விடக்கூடாதென்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

TK

Thursday, October 18, 2007

உலகின் கருத்தக்களை செவிமடுக்காத மகிந்த அரசு

குடும்பம் குடும்பமாக மக்கள் சரணடைவதால் தாங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இவர்களைத் தடுத்து வைக்கின்ற சிறைச்சாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுநோய்
கள் பரவியுள்ளதாகவும் தங்களால், யாழ்ப்பாணத்தில் உருவாகிவரும் நிலைமைகளைச் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இத்தகைய நிலைமை எங்கே போய் முடியப்போகிறது எனவும் இவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நிலைமை இவ்வாறு குடாநாட்டில் இருக்கையில், மூன்று மாதங்களிற்குள் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவோம் எனவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறீலங்கா அரசு ஐக்கியநாடுகள் சபையின் செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய மனித உரிமை மீறல் தொடர்பான கண்டனங்களை வெளியிட்டுவரும் அமைப்புக்களிடமும் தெரிவித்துள்ளது.

ஆனால் தொடர்ந்தும் அரசு மனித உரிமை மீறல்களை சாதாரணமாகவே மேற்கொண்டு வருகிறது. அரசு கூறுவதுபோல் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக இருந்தால் மகிந்தவின் சகோதரர்களான பசில் ராஜபக்சவையும், கோத்தபாய ராஜபக்சவையும் முதலில் சிறையில் தள்ள வேண்டும். இவர்களே பல படுகொலைகளின் சூத்திரதாரிகளாகச் செயற்பட்டுள்ளனர். ஆனால் இதைச் செய்ய மகிந்த அரசால் முடியாது. ஆனால் வரும் நாட்களில் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ மகிந்தரால் முடியும். ஆனால் மகிந்தர் தடுக்கவும் மாட்டார், கட்டுப்படுத்தவும் மாட்டார்.

ஏனெனில் காணாமற் போவதும் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் தமிழர்கள். தமிழினம் அழிவடைவதே மகிந்தரின் இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேற அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். இதற்கு நல்ல உதாரணம் மட்டக்களப்பில் கருணா குழுவினருக்கும் ஈ.பி.டி.பி குழுவினருக்குமிடையில் முறுகல் ஏற்பட்டு இரண்டு தரப்பும் மோதத் தொடங்கிய போது மகிந்தருக்கு டக்ளஸ் தொலைபேசியில் சொன்னாராம் “எங்கட ஆட்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

கருணா குழுவிடம் ஆயுதங்களைப் பறியுங்கள்” என்று, இதற்கு மகிந்தர் சொன்னாராம் “சரி பார்க்கிறேன்” என்று. தொலைபேசியில் சொல்லிவிட்டுத் தன்னுடன் கூட இருந்த லேக்கவுஸ் பத்திரிகை நண்பர்களிடம் மகிந்த கூறினாராம். “மட்டக்களப்பில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை கருணாவும் டக்ளசும் செய்வார்கள். அவர்களில் யார் செத்தாலும் எமக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் யாழ்ப்பாணத்தைத்தான் முறையாகப்பார்க்க வேண்டும்” என்று.

இவ்வாறு கூறிவிட்டு வாழைச்சேனையிலுள்ள படைப்புலனாய்வுத் துறை அதிகாரியான ‘இமேஸ்’ என்பவரிடம் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச, ‘அவர்களை முழுமையான மோதல்
களுக்குத் தள்ளாது, இருதரப்பு ஆதரவாளர்களையும் இவர்களைக் காட்டிக் கவனிக்குமாறு’ கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தாராம்.

உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களும் இனவாதிகளும் தமிழர்களை அழிப்பதிலே குறியாகவுள்ளனர். இதற்கு தேசவிரோதிகளைத் துணைக்குச் சேர்த்துக்கொள்கின்றனர். தம்மீது கண்டனங்கள் எழுந்தால் பழியைத் துணைக்குழுக்கள் மீது போட்டு
விட்டு தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே இவர்களது நோக்கம். இதனால் தமக்கெதிராக யாராவது வாய் திறந்தால் அவர்களைக் கண்டிப்பதையும் வழமைபோன்று கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறீலங்காவிற்கு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அதிகாரிகள் வருகை தரவுள்ளனர். ஐ.நாவின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட அலுவலர் ‘மன்பிறட்றொவாக்’ ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை தங்கிநிற்கப்போகின்றார். ஒக்டோபர் 8ம் திகதியிலிருந்து 13ம் திகதி வரையிலும் மனித உரிமைகக்கான உயர் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் சிறீலங்காவில் தங்கிநிற்கப் போகின்றார்.

இதேவேளை டிசம்பர் 13ம் திகதியில் இருந்து 21ம் திகதி வரையும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பன் கிமூனின் விசேட பிரதிநிதியும் உள்ளூரில் இடம்பெறும் மக்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அதிகாரியுமான ‘வால்ட்றர் கலன்’ ஆகியோரும் விஜயம் செய்ய உள்ளனர். இவர்களின் வருகையை சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களின் வருகையின் நிகழ்ச்சி நிரல் இதுவரை வெளியாகாத போதிலும் இவர்கள் தமிழர் தாயகப் பகுதிக்குச் செல்வதை சிறீலங்கா அரசு விரும்பாது எனறே கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்காவது வாருங்கள் எனவும் அங்கு வந்து தினமும் நடக்கின்ற அவலங்களை
யும், செம்மணியில் தொடங்கிய படுகொலை அரங்கேற்றம் தொடர்ச்சியாக தொடர்வதை
யும் மனித உரிமைகள் படையினரால் உச்சமாக மீறப்படுவதையும் பார்வையிட வேண்டும் எனவம் யாழ்மாவட்டப் பொது அமைப்புக்களின் ஒன்றியம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் சிறீலங்காவிற்கு வருகின்ற பிரதிநிதிகள் தங்கள் வருகையை சந்திப்புக்களோடும் கைகுலுக்கல்களோடும் மகிழ்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், மாறாக மனித உரிமை மீறல்களில் அரசு ஈடுபடுவதாகக் கூறினாலோ அல்லது அரசு மீது அழுத்தம் கொடுக்க எத்தனித்தாலோ உடனடியாக அவர்கள் இலங்கையில் பயங்கரவாதிகள் ஆக்கப்படுவார்கள்.

பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை உலகின் தலைவர்களிற்கு குறிப்பாக உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவதில் முன்னணியில் தற்போது இருப்பவர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே ஆவார். எனவே வருபவர்கள் பயங்கரவாதிகள் என்ற முத்திரையைக் குத்தாமல் போகின்ற வழியையே பார்க்கவேண்டும்.
சிறீலங்காவைப் பொறுத்தவரையில் அமைச்சர்களில் பலர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

அதாவது அரச பயங்கரவாதம். இந்நிலையில் சிறீலங்காவின் அமைச்சர்கள் ஏனையோருக்கு பயங்கரவாத முத்திரை குத்துவது வேடிக்கையாகவுள்ளது. அண்மையில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டோரை சிறீலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் எனக்கூறி எச்சரித்துள்ளார். சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களின் வரைவிலக்கணத்தின் படி படு
கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமற்போதல்கள் உட்பட அனைத்துக் கொடூரங்களையும் நாங்கள் மேற்கொள்வோம்.

இதை எதிர்ப்பதும், எதிர்த்துக் கருத்துக் கூறுவதும், அரசிற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் பயங்கரவாதம் ஆகும். ஒட்டு மொத்தத்தில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது பயங்கரவாதம்தான் என சிறீலங்கா ஆட்சியாளர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர். எனவே உலகத் தலைவர்களின் வருகையோ ஐ.நா பிரதிநதிகளின் வருகையோ சிறீலங்கா அரசின் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தாது.

அவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலும் உலகில் ஐ.நா உட்பட யாரிற்கும் கிடையாது என்றே சிறீலங்கா ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதனால் தான் மகிந்தரின் படைகள் தமது அரச பயங்கரவாதச் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனவே சிறீலங்கா அரசை வழிக்கு கொண்டுவரும் ஆற்றல் உள்ள ஒரே சக்தியாக விடுதலைப் புலிகள் மட்டுமே தற்போது இருந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வே.தவச்செல்வன்