Monday, October 15, 2007

பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல்

வெள்ளிக்கிழமை. 3 ஓகஸ்ட் 2007 14:53 ஈழம்

தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார்.

அக்கட்டுரையின் தமிழ் வடிவம்:

இலங்கையில் உள்ள முக்கிய பிரச்சினை ஒரு இனத்தின் அடையாளம் தான். தமிழ் மக்கள் தமது அடையாளத்தை தக்க வைக்க விரும்புகின்றனர். சிங்கள மக்கள் அதனை தடுக்க முயல்கின்றனர். 60 வருடங்களுக்கு முன்னர் சிறிலங்கா குடியரசாக தோற்றம் பெற்றதில் இருந்து எந்த ஒரு தீர்வை முன்வைத்ததாக தெரியவில்லை.

தமது அடையாளத்தை தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் நோக்கம் இன்று ஈழக் கோரிக்கையாக மாறியுள்ளது. இந்த முக்கியமான கட்டம் சிங்கள மக்களால் ஏற்பட்டது. பல காலமாக பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்த போதும்இ தமிழ் மக்களும் சம அந்தஸ்துள்ள மக்களாகவோ அல்லது சம உரிமைகளை உடைய சிறுபான்மை இனமாகவோ வாழ்வதற்குரிய அனுமதியை சிங்கள மக்கள் வழங்க தவறியிருந்தனர்.

தொடக்கத்தில் இருந்தே தமிழ் மக்களின் தலைமை மிதவாதிகளாகவே இருந்தனர். குறைந்தளவு அதிகாரங்களான தமிழ் மொழியை தேசிய மொழியாக அங்கீகரித்தல்இ வடக்கு - கிழக்கிற்கான சுயாட்சிஇ கல்விஇ தொழில் வாய்ப்புக்களில் சமத்துவம்இ தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் அல்லாதோரின் குடியேற்றங்களை நிறுத்துதல் போன்ற சமஷ்டி அதிகாரத்தில் பங்கு பற்றவே அவர்கள் தயாராக இருந்தனர்.

சிங்கள மக்களின் கடும்போக்கான கொள்கை மற்றும் நம்பிக்கையீனத்தை கடைப்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் தமிழ் மிதவாதிகளிடம் இருந்து தலைமைப்பீடத்தை கையகப்படுத்தும் நிலைக்கு ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களை தள்ளியிருந்தது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இன்று தமிழருக்கு உள்ள தலைமை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். சிங்கள மக்களால் அவருக்கு கிடைத்த படிப்பினையில் இருந்து அவர் பெற்ற அனுபவம் சிங்கள தலைமையை எந்த நிலையிலும் நம்பமுடியாது என்பது தான். எனவே அவருக்கு ஈழத்தை அடையமுடியும் என்ற நம்பிக்கை உருவாகியது. தனது மக்களை உரிய இலக்கு நோக்கி கொண்டு செல்லகூடிய ஒருவர் அவராகவே இருக்கிறார்.

அவர் தன்மீது கொண்ட தன்னம்பிக்கைஇ அவரது நடவடிக்கை என்பன சிறிலங்கா அரசு ஏற்றுக்கொண்டாலும் ஏற்கொள்ளாது விட்டாலும் அவரை இரு இனங்களுக்கு இடையில் தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராகவும் மாற்றியுள்ளது.

துரதிஸ்ட்டவசமாக இந்தியா இந்த உண்மையை மெதுவாக புரிந்துள்ளது. இந்த தவறானது கடந்த காலங்களில் கொள்கைகளை வகுக்கும் போது கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மையங்களை தொடர்பு கொள்ளாது மேற்கொள்ளப்பட்டதனால் ஏற்பட்டவை. நிலைமையை அறியாதுஇ அதன் குறுகிய கால மற்றும் நீண்டகால செயற்பாடுகளை ஆராயாதுஇ கொள்கை வகுப்பாளர்களின் தெரிவுக்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியாது.

நிலைமையின் தன்மையை படிப்பதுஇ வேறுபட்ட கருத்துக்களை உடையவர்களையும் அவர்களின் தீர்மானங்களையும் ஒரு கொள்கையை பரிந்துரை செய்வதற்கு முன்னர் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர உதவும் என்பது ஆதாரமிக்கது. இதன் பொருள் என்னவெனில் கடும்போக்கான குழுவினருக்கு இடையிலான கலந்துரையாடல்களில் எடுக்கப்பட்ட கொள்கைகளை குழுவினரின் சார்பாக கலந்து கொண்ட எந்த ஒரு பிரதிநிதிகளும் ஆவணப்படுத்தியது குறைவு.

இந்த குழுக்களின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரத் தரப்பினரின் எந்த செய்திகளும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் கலந்துரையாடல்களுக்கு பின்னர் சுற்றறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

1980 களின் தொடக்கத்தில் சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அதிக அக்கறை கொள்வில்லை. அதற்கு முன்னர் இந்தியாவின் கவனம் முழுவதும் மலையகத் தமிழ் மக்களின் மீதே இருந்தது. அவர்கள் தென் இந்தியாவில் இருந்து அங்கு சென்றவர்கள். சிறிலங்காவின் தோட்டத் தொழில்துறை பொருளாதாரத்தில் அவர்கள் 150 வருடங்களுக்கு மேலாக உழைப்பவர்கள்.

சுதந்திரத்திற்கு பின்னரும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர். தற்போது ஒரு மில்லியனை எட்டியுள்ள அவர்களில் பலர் ஒரு தலைமுறைக்கு மேலாக சிறிலங்காவில் வாழ்கின்ற போதும் அவர்கள் இந்திய குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர்.

சிறிலங்கா தமிழ் மக்கள் மலையக தமிழ் மக்களை வேறுபட்ட குழுவாகவே பார்க்கின்றனர். அவர்கள் தொடக்க காலத்தில் இந்தியாவின் பார்வையில் விழவில்லை.

தமிழ் மக்களின் பிராந்திய சுயாட்சிஇ சம அந்தஸ்த்தான குடியுரிமை போன்றவை தொடர்பாக தமிழ்த் தலைவர்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் சிங்கள தலைமைகள் அக்கறை காட்டவில்லை. இன முரண்பாடுகள் அதிகரித்தனஇ அது மோதல்களாக மாறியது.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரம் தொடங்கி அது விரைவாக பரவியதுஇ ஜூலை 23 ஆம் திகதி வடபகுதியில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் தாக்குதலில் பலியாகியதை தொடர்ந்து கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் இனக்கலவரம் உருவாகியது. இந்த கலவரங்களில் சிறையில் இருந்தவர்கள் உட்பட பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களில் அரசின் ஆதரவு இருந்தது என்பது உறுதியாக சந்தேகிக்கப்படுகின்றது.

இனக்கலவரத்தை அடுத்து தமிழ் மக்கள் தமிழ் நாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்றார்கள்இ இதுவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக முதல் முறை இந்தியாவினதும்இ தமிழ்நாட்டு மக்களினதும் கவனத்தை ஈர்த்தது.

இந்தியாவின் நடவடிக்கைகள் அதன் அரசியல் மற்றும் கேந்திர முக்கியத்துவத்தை மையப்படுத்தியே இருந்தது. அதாவது சிறிலங்காவின் ஒருமைப்பாடு மாற்றமடையக்கூடாது என்பது அதன் நோக்கம். உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் இராணுவத்தீர்வை நாடக்கூடாது என்ற ஆலேசனைகள் அதற்கு வழங்கப்பட்டன.

தமிழ் மக்கள் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு சென்றது அங்குள்ள தமிழ் மற்றும் திராவிடர் தேசியவாதங்களில் பெரும் தீப்பொறியை மூட்டியிருந்தது. எனவே வடக்கு - கிழக்கில் இராணுவத் தீர்வைக்காண சிறிலங்கா அரசு முயல்வதை தடுக்கவேண்டும் என்ற தெரிவு முன்நிறுத்தப்பட்டது. சிறிலங்கா அரசின் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிப்பதற்காக தமிழ் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

உண்மையாகவே இது தமிழ் நாட்டு மக்களை அல்லது திராவிட தேசியவாதத்தை தூண்டும் ஒரு ஆபத்தானதாக இருக்கவில்லை. திராவிட தேசியவாதம் பெரியார் ஈ.வே.இராமசாமியின் கொள்கைகளை கொண்டது. இது களத்தின் நிலைமைகளில் தங்கியிருக்கவில்லை. இத்தகைய கொள்கை வாதத்தில் இலங்கையின் தமிழ் மக்களை சேர்க்கப்படவில்லை. அதற்கு மேலாக 1962 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரிவினைவாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவுனரான அண்ணாத்துரையினால் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

தமிழ் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது நல்ல திட்டம் இல்லை. சிறிலங்காவில் உள்ள நிலைமை 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தானின் நிலைமையுடன் ஒப்பிட முடியாது. அது வருட முடிவில் பங்களாதேசமாக உருவாகியிருந்தது. ஆனால் உதவிகளை பெற்ற பின்னர் தமிழ் மக்கள் இந்தியாவின் பிடிக்குள் நிற்கவில்லை என்பதை பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் உறுதிப்படுத்தியிருந்தன.

சிறிலங்கா வெளிஉலகச் சக்திகளான அமெரிக்காஇ பிரித்தானியாஇ சீனாஇ பாக்கிஸ்த்தான் போன்ற நாடுகளிடம் இருந்து உதவிகளை பெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருந்தது. இதனை நிறுத்துவதற்கு இந்தியா தனது இராஜதந்திர வழிகளில் காய்களை நகர்த்தியது. அதாவது வடக்கு - கிழக்கிற்கு பிராந்திய சபைகளை உருவாக்கி மத்திய அரசில் இருந்து அதிக அதிகார பகிர்ந்தளிக்கும் திட்டத்தை அது கொண்டிருந்தது.

அதிகாரப் பரவலாக்கம் பிரிவினையை ஏற்படுத்தலாம் எனவும்இ திருகோணமலை ஈழத்தின் இயற்கைத் தலைநகரமாகலாம் எனவும் சிறிலங்கா அரசினால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் இந்தியாவின் நடவடிக்கைக்கு தடையாகியது.

சிறிலங்காவின் இந்த அச்சம் எவ்வளவு தூரம் இருந்தது என்பதற்கு இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர் எவ்வளவு விரைவாக வடக்கையும் கிழக்கையும் சிறிலங்கா அரசு பிரித்துள்ளது என்பதைக் கொண்டு அறிய முடியும்.

ஆனால் 1985 ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களில் திம்புவில் சிறிலங்கா அரசிற்கும்இ தமிழ் குழுக்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை இந்தியா கைவிடவில்லை. எல்லா தமிழ் குழுக்களும் ஒன்றாக பங்குபற்றி தமது இன அங்கீகாரம்இ தன்னாட்சி அதிகாரம்இ கௌரவம் போன்றவற்றிற்கான திட்டத்தை கூட்டாக முன்வைத்திருந்தது அதுவே முதற்தடவை. ஆனால் சிறிலங்கா அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லைஇ இதுவே தமிழ் அமைப்புக்களின் இளம் தலைவர்களுக்கு வேறுபட்ட வழிமுறைகளுக்கான தெரிவை வழங்கியிருந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுஇ சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் அபிலாசைகளில் எதையும் வழங்கவில்லை. இந்தியாவின் அழுத்தங்கள் சிறிலங்கா அரசின் மீதோ அல்லது தமிழ் குழுக்களின் மீதோ அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

பேச்சுவார்த்தை மூலமான நடைவடிக்கைகள் முறிந்து போனதை திம்பு பேச்சுவார்த்தை தோல்வி எடுத்துக் காட்டியிருந்தது.

தமிழ் மக்களை முறியடிப்பதற்கான இராணுவ நடைவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ளலாம் என சிறிலங்கா அரசு எண்ணியது. வான் தாக்குதல்கள்இ பொருளாதார தடைகளுடன் யாழ்ப்பாணம் மீதான முற்றுகை தொடங்கியது. இது தமிழ்நாட்டில் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. வான்படை வானூர்திகள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களை போடுவதை தவிர இந்தியாவிற்கு மாற்றுவழிகள் இருக்கவில்லை.

சிறிலங்காவில் நடைபெறும் இனப்போரை முடிவுக்கு கொண்டுவரும் முகமாக 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தமும் இந்தியா மேற்கொண்ட மற்றுமொரு தவறாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக சிறிலங்காவின் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை தமிழ் மக்களுடன் ஒரு அமைதி வழிக்கு இந்தியா கொண்டுவந்தது. ஆனால் தென்பகுதியில் உள்ள கடும்போக்கான புத்தமத துறவிகளின் நடைவடிக்கைகள் கருத்தில் எடுக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் மக்களுக்கு எந்விதமான அபிலாசைகளை வழங்குவதையும் எதிர்ப்பவர்கள்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களுக்கு இரு பெரும் சிறப்புரிமைகளை வழங்கப்பட்டிருந்தது. அவையாவன வடக்கு - கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வுகளை கொண்ட ஒரு நிர்வாகம்இ இணைந்த மாகாண சபை மற்றும் இந்த சபைக்கான தேர்தல் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படுதல் என்பனவாகும்.

எனினும் அந்த சமயத்தில் தமிழீழமே தமிழ் மக்களுக்கான தீர்வு என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அதற்கு குறைந்த தீர்வை அவர் ஏற்கொள்வார் என்ற இந்தியாவின் அனுமானம் கற்பனையானது. வடக்கு - கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற கற்பனைகளும் உண்மையானது அல்ல.

ஒப்பந்தம் தொடக்கத்திலேயே இறந்துவிட்டது. அதன் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் இந்திய புலனாய்வுத்துறைக்கு ஏற்பட்டுவிட்டது. ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய இராணுவத்தை சிறிலங்காவுக்கு அனுப்புவதற்கு எதிராக அது ஆலோசனைகளை வழங்கியிருந்தது. தமது கொள்கைகளில் மாறாத விடுதலைப் புலிகளினது தன்மை விரைவில் தெரிந்தது. ஒப்பந்தத்தின்படி எல்லா ஆயுதங்களையும் கையளிப்பதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கிற்கான மாகாணசபை தேர்தலில் போட்டியிடவும் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். தமிழ்ப் பகுதிகளை இராணுவப் பிரதேசமாக்கும் நடவடிக்கைக்காக இந்திய இராணுவம் (அமைதிப்படை) களமிறக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆதரவின்றி பலவந்தமாக இதனை மேற்கொள்ளும் அனுமதியை இந்திய இராணுவத்தினருக்கு இந்திய அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் திட்டம் இராணுவத்தின் கணிப்புக்களின் பிரகாரம் எடுக்கப்பட்டவை. விடுதலைப் புலிகளை அடிபணிய வைக்க ஒரு வாரத்திற்கு மேல் எடுக்காது என கருதப்பட்டது. இது எதிர்காலத்தில் எத்தகைய சூழ்நிலையை உருவாக்கப்போகின்றது என்பதும் இந்திய புலனாய்வுத் துறையினருக்கு தெரிந்திருக்கவில்லை.

இந்த கணிப்பீடுகள் நுட்பமமாக ஆரயப்படவில்லை. அது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கையை மட்டும் மையமாக கொண்டிருந்தது. எனினும் அது ஒரு கற்பனையானது என்பதை நடைபெற்ற சம்பவங்கள் பின்னர் நிரூபித்துள்ளன.

திருமலை துறைமுகத்தை போர் நடைவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடாதுஇ வொய்ஸ் ஒஃப் அமெரிக்காவை அதன் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது போன்ற பயன்தரும் விடயங்களும் அந்த உடன்பாட்டில் எட்டப்பட்டிருந்தது.

ஆனால் 1இ200-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும்இ 3இ000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இந்திய அமைதிப்படையினர் வெளியேறினர். இந்த புதிய திருப்பம் விடுதலைப் புலிகளாலும் பிரேமதாசா அரசினாலும் ஏற்பட்டது. அவர்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக இணைந்திருந்தனர்.

தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சஇ மாவட்ட சபைகளுக்கு கூடுதலாக எதனையும் வழங்கமாட்டார். அது 1985 ஆம் ஆண்டு திம்பு பேச்சுக்களின் போது தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள தலைமைகள் இன்று ஒன்றினைந்துள்ளனர்.

தற்போது இலங்கைக்கான இந்தியாவின் கொள்கைகள் ஒரு நிச்சயமற்றவையாக உள்ளன. ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் இந்தியா விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளது. அந்த குழுவுடன் இந்தியாவுக்கு தொடர்புகள் இல்லை. சிறிலங்கா அரசு பாகிஸ்தான்இ சீனா போன்ற நாடுகளின் பக்கம் திரும்பியுள்ள போதும் அதற்கு அனுதாபத்தை தவிர இந்தியாவினால் மேலதிகமாக எதனையும் வழங்க முடியவில்லை.

வடக்கு - கிழக்கை இணைப்பது நீண்டகாலத்திற்கு நடைமுறையில் சாத்தியப்படப் போவதில்லை. ஏனெனில் சிறிலங்கா அரசு கருணாவை பயன்படுத்தி தமிழ் மக்களை பிரித்துள்ளது. கிழக்கு தொடர்பாக முஸ்லிம் மக்களின் மனங்களையும் மாற்றியுள்ளது.

விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தை மகிந்த கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. ஆனால் அது இலகுவானதல்ல. எனவே வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் நீண்ட காலத்திற்கு உதவிகள் அற்ற நிலையில் துன்பத்தை சுமக்கப்போகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments: