Tuesday, March 31, 2009

அரங்கேற ஆரம்பித்துவிட்ட தமிழக அரசியல் அசிங்கம்!

இந்தியாவின் நாடாளுமன்றத்துக்கு லோகசபைக்கு அடுத்த மாத மத்தியில் பொதுத்தேர்தல் ஆரம்பமாகி றது. அதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்கள் நிய மனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு நிர்ணயிக்கப் பட்ட நாள்கள் நெருங்கிவிட்டன. அதனால் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதற் கான ஆயுத்தங்களை ஆரம்பித்துள்ளன.

ஒரு கட்சி தேவைப்படும் கூடுதல் ஆசனங்களை ஒரு கட்சியே பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் காலம் இப்போது இந்தியாவிலும் இல்லாமற் போய்விட்டது. கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட மத்திய அரசே புது டில்லியில் ஆட்சி நடத்தும் காலம் பல வருடங்களுக்கு முன்னரே வழமையாகி விட்டது.
மேலும், இந்தியப் பொதுத் தேர்தலில் பலம் வாய்ந்த இரண்டு பிரதான அணிகள் மோதும்நிலை மாறி இப்போது மூன்றாவது அணி ஒன்றும் பிறப்பதற்கான வாய்ப்பிருப்பதாக அவதானிக்கப்படுகிறது.

வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் பணி நேற்றே சில மாநிலங்களில் ஆரம்பமாகிவிட்டது. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டதாக, வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் திகதி ஏப்ரல் 24 ஆம் திகதி வரை நீளுகிறது. தேர்தல் வாக்களிப்பும் ஏப்ரல் 16 ஆம் திகதி தொடங்கி மே 13 ஆம் திகதிவரை நடைபெறும். மே 16 ஆம் திகதி வாக்குகள் எண்ணப் பட்டு முடிவுகள் வெவ்வேறு நாள்களில் வெளியிடப்படும். இந்தியாவின் மத்திய அரசாங்கம் 15 ஆவது நாடாளு மன்றம் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் கூடும்.

ஆகையால், அகன்று பரந்த இந்தியாவின் நான்கு திக்குகளிலும் திசைகளிலும், சுமார் ஒன்றரை மாதங் களுக்குத் தேர்தல் சூட்டின் அனல் வீசப்போகிறது.
வேறெந்த இந்தியத் தேர்தல்களையும் விட, 15 ஆவது லோக சபைக்கான தேர்தல்களில் ஈழத்தமிழர் களின் பார்வை மே மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலிலேயே விழும் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.

முன்னர் எப்போதும் இல்லாதவாறு, ஈழத்தமிழர் விவகாரத்தை வாக்கு வங்கியாக்க வேண்டிய தேவை, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்பட் டுள்ளது. எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளராயினும் கொதித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர் விவகாரத்தில் அதிக அக்கறையும், ஈடுபாடும், ஆதரவும் காட்டுகிறாரோ அவரது வாக்குப்பலம் கனமாகி அவர் புதுடில்லி நாடாளு மன்றத்தில் ஆசனத்தைப் பிடித்துக்கொள்ள இயலுமென்ற தேர்தல் களநிலைமை தமிழகத்தில் உருவாகிவருகிறது.

அந்த அளவுக்கு,வன்னித் தமிழ் மக்களின் மனிதப் பேரவலம் குறித்து தொப்புள்கொடி உறவுகளின் (எம்.ஜி.ஆரின் வாசகத்தில் இரத்தத்தின் இரத்தங் களின்) இரக்கத்தின் பால், கவலை மேலீட்டினால் எழுந்துள்ள ஆதரவு உணர்வுகளைத் தமக்கு ஆதாய மாக்க, வாக்குப் பெருக்கத்துக்கான குடுகுடுப்பை யாக்க ஏற்கனவே தமிழக அரசியல் தலைவர்கள் முட்டி மோதுகின்றனர். அவர்களின் அரசியல் போட்டிப்போருக்கு, ஒருவரிடமிருந்து மற்றவர் தம்மைத் தற்காத்துக் கொள்ளகை யில் ஏந்த வேண்டிய கேடயமாகவும் வன்னி மக்களின் மனிதப் பேரவலம் வார்க்கப்பட்டு விட்டது.

வட இந்திய அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழர் களின் விவகாரத்தைத் தமது குப்பைத் தொட்டிகளுக் குள் போட்டு விட்டார்கள் என்று இங்குள்ளோரின் நெஞ் சங்கள் கனக்கிறது என்றால்
தமிழக அரசியல் தலைவர்கள் தமக்குள் கன்னை பிரித்துக் கொண்டு எதுவுமே சாதிக்க, ஈட்ட முடியாதவாறு சிதறுண்டு போகும் படலம் விரிவதை இப்போது தூரத்தே துயரத் துடன் பார்க்க முடிகிறது.

அணி மாறுதல், தொகுதிப் பங்கீடு என்ற தேர்தல் புலத்தின் "நாகரிகம்" வேறெந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் ஆரம்பத்திலேயே வீச்சுப் பெற்றிருக்கி றது. அந்தக் களத்தில், ஈழத்தமிழரைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் கையறு நிலைக்கு வந்து தமிழ்ச் சொற்களால் சிலம்படி காட்டும் கருணாநிதியும்
ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் எடுக்காதிருப் பின், நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உடைத்துவிட முடியாது என ஊகித்து, உணர்ந்து உண்ணா விரதம் இருந்த ஜெயலலிதாவும்
மத்திய அரசைக் கைப்பற்றப்போகும் ஏதோ ஒரு அணி யில் சேர மூச்சு வாங்க வாங்கக் குதித்திருக்கிறார்கள்!

இந்த இரண்டு அணிகளில் எந்த அணியோடு ஒட்டிக்கொள்ளலாம், பேரம் பேசலாம் என்று போட்டி போடுகின்றனர் ஏனைய தமிழகத் தலைவர்களும், கட்சியினரும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒட்டியிருந்து சலித்து, வெறுப்படைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இராமதாஸூம் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரே அணியில் நின்ற திருமாவளவனும், இராமதாஸூம் எதிரும் புதிருமாகப் முட்டி மோதும் நிலை ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்ற ஆசனங்களைப் பிடித்து விடவேண்டும் என்ற நப்பாசையில் இன்னும் எத்தனையோ முட்டி மோதல் களும், அணி மோதல்களும் அரங்கேறப் போகின்றன.
தமிழக மக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை மறந்துவிட மாட்டார்கள். ஆனால் தமிழக அரசியல் தலைவர் கள்...தங்கள் குத்துக்கரணங்களையும், குத்து வெட்டு களையுமே அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள். தமிழகத் தலைவர்களின் அரசியல் அசிங்கம் நாளாக ஆக நாறும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்....!

-உதயன்-

Sunday, March 29, 2009

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப் போது சர்வதேச ரீதியில் பேசப்படும் வலியுறுத் தப்படும் ஒரு விவகாரமாகி விட்டது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். இராணுவத்தீர்வு சாத்திய மில்லை என்று பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கட்டத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசாங்கத் துக்கா? விடுதலைப் புலிகளுக்கா? சர்வதேச சமூகத்துக்கா? அல் லது வேறு அரசியல் கட்சிகளுக்கா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு குறுக்கே நிற்பது யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடத்தில் பதில் கேட்டால் அரசாங்கத்தின் மீதே அவர் கள் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்.

அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் கேட்டால் அவர்கள் புலிகள் மீது குற்றச் சாட்டை முன்வைக்கக் கூடும். இந்தக் கேள்விக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன் றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ""தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்து ழைப்பு வழங்காததால்தான் இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப் பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவி னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கி றேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண் டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண் மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச் சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் öசய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார் கள்.

முதலில் புலி களை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின் னர் தான் அரசியல் தீர்வு பற் றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக் கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என் பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங் கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்த தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.
நன்றி
- வீரகேசரி -

ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சர்வதேச சமூகம்

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பாக உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவுக்கும் அதற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மனித பேரழிவுகளை நிறுத்தும் முயற்சிகளுக்கு தற்போது மேற்குலகம் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளது. இலங்கை விவகாரங்களுக்கு என பிரித்தானியா சிறப்பு பிரதிநிதியை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நியமித்ததை தொடர்ந்து இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை மெல்ல மெல்ல தீவிரம் பெற்று வருகின்றது.

ஆஸ்திரியா, மெக்சிக்கோ, கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகளின் ஊடாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என கொண்டுவர தீர்மானித்துள்ள விவாதத்தை சீனாவும், ரஷ்யாவும் எதிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு உள்வீட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. சீனாவினதும், ரஷ்யாவினதும் இந்த நகர்வுகளுக்கு அவர்கள் எதிர்கொண்டுவரும் திபத்திய மற்றும் செச்சென்யா பிரச்சினைகள் காரணம் என்பது தெளிவானது. இருந்த போதும் தாய்வானின் மீது சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாய்வானின் நலனுக்கு குந்தகமானது என ஏன் சீனா கருதவில்லை என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

இலங்கை தொடர்பான விவாதம் ஏனைய விவகாரங்கள் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட ஐ.நாவிற்கான பிரதிநிதி சூசன் ரைஸ் கடந்த வார இறுதிப்பகுதியில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை தொடர்ந்து சூசனின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூகோள அரசியல் நலன்கள் தொடர்பாக இந்தியாவுக்கு சார்பாக நிலையெடுத்து மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகள் தவறாகிப் போனதே தற்போதைய நிலமைக்கு காரணம் என மேற்குலகம் கருதத் தலைப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை தமது நட்பு நாடாக பேணுவதன் மூலம் இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற அமொக்காவின் கணிப்பு தவறாகி போயுள்ளது. இந்தியாவே தற்போது அமெரிக்காவினது பொருளாதார மற்றும் பூகோள நண்பனாக உருவெடுத்து வருகின்றது. ஆனால் அமெரிக்காவின் நகர்வுகள் தவறாகி போனதற்கு காரணம் இந்தியா தனது நாட்டு நலன்களை விட தனிநபர் நலன்களை முன்நிறுத்தியதே என பல மூத்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவினதும், இந்துசமுத்திர பிராந்தியத்தின் உறுதித்தன்மையை குலைத்துவிடலாம் என அமெரிக்கா அஞ்சுகின்றது. சீனாவின் வளர்ச்சியும் அமெரிக்காவையும், இந்தியாவையும் அச்சமடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் சீனா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு மேற்குலகத்திற்கு மேலும் அச்சங்களை ஏற்படுத்தலாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் விடயங்களில் மௌனமான இருந்த சீனா தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை தென்கிழக்கு ஆசியாவில் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் போரை இந்தியா வழிநடத்தி வருகின்ற போதும், சீனா படைத்துறை உதவிகளையும், நிதி உதவிகளையும் இலங்கையில் அரசிற்கு வழங்கிவருகின்றது. எவ்7 ரக தாக்குதல் விமானங்கள், ஜேவை11 ரக முப்பரிமாண ராடார்கள், பீரங்கிகள் உட்பட பெருமளவான படைத்துறை உபகரணங்களை சீனா வழங்கி வருவதுடன், இலங்கைக்கு அதிக நிதி உதவிகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனாவே தற்போது முன்னிலையில் உள்ளது. அது கடந்த ஆண்டு இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

கடந்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ சீனாவின் உதவிகளுக்கு இலங்øகயின் நன்றிகளை தெரிவித்ததுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் வலுப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து – இலங்கையின் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள சீனா ஐ.நா பாதுகாப்பு சபையில் இருந்து இலங்கையை காப்பாற்ற முன்வந்துள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் காப்பாற்ற முன்வந்துள்ளது.

சீனாவினதும் இலங்கையினதும் இந்த புதிய பிணைப்புக்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் சாவாலாக உருவெடுத்துள்ளது. "அமெரிக்கா தூங்கும் சமயம் பார்த்து சீனா ஆசிய பிராந்தியத்தில் தனக்கென பல நண்பர்களை உருவாக்கி வருகின்றது" என அமெரிக்காவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ரெய்லர் மார்ஷல் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தனது காலை உறுதியாக பதிக்கும் ஆரம்ப நடவடிக்கைகளை 2007 ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டிருந்தது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் டொலர்கள் முதலீட்டில் துறைமுகம், எண்ணை சுத்திகரிப்பு ஆலை, விமானநிலையம் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்கள் தரித்துச் செல்லும் பாரிய துறைமுகமாக மாற்றும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

சீனாவின் இந்த நகர்வின் நோக்கம் தெளிவானது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பிரதேசம் சீனாவின் வர்த்தகக்கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு மேற்கு இந்து சமுத்திர கடற்பாதையில் இருந்து ஆறு கடல்மைல் தொலைவில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து சீனா கொள்வனவு செய்யும் மசகு எண்ணைகளை கொண்டு செல்லும் கப்பல்களில் 70 விகிதமானவை இந்த பாதை வழியாகவே பயணிப்பதுண்டு.

ஈரானிடம் இருந்து சீனா தனக்கு தேவையான எரிபொருட்களில் 15 விகிதங்களை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் போர் ஒன்று ஏற்படுமாக இருந்தால் தனது கப்பல் பாதைகள் தாக்கப்படுவது இலகுவானதாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக தனது கடற்படையினை நவீனமயப்படுத்தி வரும் சீனா துறைமுகங்களின் வசதிகளையும் தனது கடற்பாதையில் அதிகரித்து வருகின்றது. பாகிஸ்தானில் உருவாக்கியுள்ள கெடார் (கணிணூt ணிஞூ எதீச்ஞீச்ணூ) துறைமுகத்தை போன்றதே அம்பாந்தோட்டை துறைமுகம்.

சீனாவின் இந்த நகர்வுகளுக்கு மாற்றீடாக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையில் கால்பதிக்க முற்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மருத்துவக்குழுவை புல்மோட்டைக்கு அனுப்பியுள்ள போது, அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்ற முயன்றிருந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகின் கையிருப்பு பணமாக தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க டொலர் மாற்றப்பட வேண்டும் என சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் சோவூ சியா ஒசூவான் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அறிக்கையானது இரு நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதுடன், தற்போது சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவை தோற்றுவித்துள்ளது. இது அமெரிக்க டொலரின் உறுதித்தன்மை தொடர்பாக மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர் மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா தனது காலத்தை செலவிட்ட போது சீனா 21 ஆவது நுõற்றாண்டின் புதிய சக்தியாக கிழக்கு ஆசியாவில் தன்னை கட்டியெழுப்பி வந்திருந்தது. அமெரிக்காவின் நீண்டகால நண்பர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

சீனா தனது ஆதிக்கத்தை கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசுபிக் பிராந்தியம் என விஸ்த்தரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் முக்கிய மாற்றமாகும். பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்திரேலியா வரை அதன் உறவுகள் வலுப்பெற்று வருவதாக சீனா தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரெய்லர் மார்ஷல் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்த நாடுகள். சீனாவுக்கும் பிலிபைன்ஸ் இற்கும் இடையில் உள்ள உறவுகள் மிகவும் விரைவாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை போல சீனா கிழக்கு ஆசிய நாடுகளுடன் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து வருவதுடன் தென்கிழக்கு ஆசியாவிலும் காலுõன்றி வருகின்றது.

ஈரானிடம் இருந்து தனது எரிபொருள் தேவையில் 15 விகிதங்களை பெற்றுவரும் சீனா அதற்கு ஆதரவாக குரல்கொடுத்தும் வருகின்றது. கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பிரசன்னம் ஜப்பான், தாய்வான் மற்றும் தென்கொரியாவை முதன்மைப்படுத்தியே அமைந்துள்ளது. சீனா அமெரிக்காவுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து வருகின்ற போதும், சூடான், மியான்மார் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தையும், இராஜதந்திர உறவுகளையும் சீனா வலுவாக பேணிவருவது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை தோற்றுவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் இந்த இரு நாடுகளும் மிகவும் மோசமான நிலையை கொண்டிருக்கின்றன என்பது அமெரிக்காவின் வாதம். தற்போது இந்த கூட்டணியில் இலங்கையும் இணைந்துள்ளது. ஆனால் சீனாவின் குறிக்கோள் தெளிவானது. அதாவது அமெரிக்காவின் சக்தியின் வலுவை இந்த பிராந்தியத்தில் குறைப்பதே அதன் பிரதான நோக்கம். அதனை உறுதியான வர்த்தக உடன்பாடுகள் மற்றும் மென்மையான இராஜதந்திர நகர்வுகள் மூலம் சீனா சாதிக்க முயன்று வருகின்றது.

சீனாவின் முக்கிய நகர்வுகள் மூன்று திசைகளில் உள்ளன. கிழக்காக ஜப்பான் வரையிலும், மேற்காக இந்திய உபகண்டம், தெற்காக வியட்னாம் வரையிலுமே இந்த நகர்வுகள் முனைப்பு பெற்று வருகின்றன. சீனாவின் இந்த நோக்கங்களை புரிந்து கொண்டதனால் தான் அமெரிக்கா வியட்னாமுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தற்போது முயன்று வருகின்றது. வியட்னாம் படையினருக்கு ஆங்கில கல்வி வசதிகளை அது ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்திலும் தனது உதவிகளை அமெரிக்கா ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்திருந்தது.

ஆனால் தற்போது தோன்றியுள்ள பொருளாதார வீழ்ச்சியும் பல வழிகளில் உளவியல் தாக்கங்களை இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்கா, சீனா தொடர்பான தமது பார்வைகளை மீள்பரிசீலினை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திர பிராந்தியத்தை பொறுத்தவரையிலும் தற்போது இலங்கை முற்றுமுழுதாக சீனாவின் ஆளுமைக்குள் வந்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர். மியன்மார் அரசுக்கு ஆதரவாக ஐ.நா சபையில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை அது தற்போது –இலங்கை அரசுக்கு சார்பாக எடுத்து வருகின்றது.

எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துலக மட்டத்தில் இரு கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் நிலையை அடைந்துள்ளது

குறிப்பிடத்தக்கதொரு திருப்பம். மறுவளமாக பார்த்தால் எல்லா நாடுகளுடனும் நழுவும் உறவைகொண்டிருந்த இலங்கை தற்போது ஏதாவது ஒரு தரப்பின் பக்கம் சாயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்குலகத்தை பொறுத்தவரையில் இலங்கை தொடர்பாக அவர்கள் கணிப்பிட்டிருந்த வெளிவிவகார கொள்கைகள் எதிர்மறையாகி போகும் நிலையை அடைந்துள்ளன.

அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் கொள்கைகளை அனுசரித்து போனதுதான். இந்தியா தனது நாட்டின் நலனைவிட தனிநபர்களின் நலன்களை முன்நிறுத்தியே இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கைகளை வகுத்திருந்தது. இந்த கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் அது தற்போது அவர்களை ஆபத்தான கட்டத்தில் நிறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் இலங்கை தொடர்பான விவாதங்கள் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுவதை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் எதிர்த்திருந்தன. ஆனால் தற்போது அவர்கள் அதனை ஆதரித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த நகர்வு இலங்கைக்கு நல்லதல்ல என பல அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை நிறுத்தும் வல்லமையை சீனாவும், ரஷ்யாவும் எதுவரை தாக்குபிடிக்கும் என்பதும் கேள்விக்குறியானதே.

தற்போதைய நிலையில் சீனாவும், ரஷ்யாவும், எனைய ஏழு நாடுகளுமே இலங்கையுடன் நேரடியாக கைகோர்த்துள்ளன. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பாக கருத்தில் எடுக்குமாறு விடுதலைப்புலிகள் சீனாவிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர். சீனாவுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தது இதுவே முதல்முறையாகும்.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனா அல்லது ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினாலும், அங்கத்துவ நாடுகளிடம் வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு (கணூணிஞிஞுஞீதணூச்டூ திணிtஞு) விவாதத்தை தொடர முடியும் என்ற ஒரு மாற்று வழியும் உண்டு. இவ்வாறான ஒரு நிலைமை ஸிம்பாப்வே தொடர்பான விவாதத்தில் ஏற்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பான விவாதத்தை முன்னர் ரஷ்யா எதிர்த்திருந்த போதும் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ÷ஹால்ம்ஸ் –இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையானது கடந்த முறை அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை விவாதிக்கப்பட்டதை ரஷ்யா எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (26) இலங்கை தொடர்பான விவாதம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டிருந்தது. எல்லா உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் (ஐணtஞுணூச்ஞிtடிதிஞு ஞீடிச்டூணிஞ்தஞு) என்ற ஒரு திட்டத்தின் அடிப்படையில் –இலங்கை தொடர்பான விவாதம் ஆராயப்பட்டிருந்தது.

பாதுகாப்பு சபை கூட்டமாக அது இருந்த போதும் பாதுகாப்பு சபை மண்டபத்தில் நடைபெறவில்லை என்பதுடன் பாதுகாப்பு சபையின் தலைவரும் அதற்கு தலைமை தாங்கவில்லை. இலங்கை விவகாரங்கள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படுவதை தீவிரமாக எதிர்த்து வந்த லிபியா வேறு வழியின்றி கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தது.

ஏறத்தாழ 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடித்திருந்தார்.

அவர் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முன்வரவில்லை.

இந்த கூட்டத்தின் முடிவில் கருத்து வெளியிட்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித்துõதுவர் றோஸ்மேரி டிகார்லோ இலங்கை அரசு கனரக பீரங்கிகளை வைத்தியசாலைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாககுற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பாக அனைத்துலகத்தின் நிலைமையை நோக்கும் போது சில கருத்துக்கள் தெளிவானவை. அதாவது மேற்குலகம் அரசுக்கு எதிராக அழுத்தமான கண்டனங்களை மேற்கொள்ள முன்வரவில்லை. மறுபுறம் இலங்கை ஆதரவான கூட்டணி நாடுகள் அரசுக்கு அழுத்தமான ஆதரவுகளையும் வழங்கவில்லை.

வேல்ஸிலிருந்து அருஷ்

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

Wednesday, March 25, 2009

நடுகற்களும் அவற்றினூடான விடுதலைக்கான யாத்திரையும்

தமது நாடுகளின் விடுதலைக்காகவும், தம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது அந்த ஆக்கிரமிப்பாளனை விரட்டி அடிப்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈந்தோரை அந்த நாடுகள் என்றும் மறப்பதில்லை. அவர்களின் நினைவாக தூண்கள், நடுகற்கள், மண்டபங்கள், பூங்காக்கள் என நிறுவி சந்ததி சந்ததியாக நினைவு கூர்வதை உலகெங்கும் காண்கின்றோம்.

ஆனால், உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே அந்தப் போரில் வீரமரணம் எய்திய தம் தோழர்களை அந்த மண்ணிலேயே விதைத்து அவர்களுக்கு நடுகற்கள் எழுப்பி, அந்த நடுகற்களுக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருப்போர் வாழும் இடங்ளை துயிலும் இல்லங்களாக்கி, அவர்களை மதங்கள் கடந்த வழிபாட்டுக்கு உரியவர்களாக்கி, அவர்கள் பணியை அந்தத் தோழர்கள் சுமப்பதை தமிழீழ உரிமைப் போரில் மட்டுமே காண்கின்றோம்.

தமிழ்த் தேசியத்தில் மொழியின் வீச்சுடன், பழம்பெரும் பண்பாட்டுச் செழுமைகளின் உயிர்ப்புடன், மறவர்களுக்கு உரித்தான போர்க்குணத்தையும் நித்தியமான, நிரந்தரமான பண்பாக்கியுள்ளதை, அடங்காத வன்னியில் ஆக்கிரப்பாளனின் கொடிய இன அழிப்பின் மத்தியிலும் காண்கின்றோம்.

இந்தப் போர்க்குணம் இன்று புலத்திலும் கட்டவிழ்வதை முத்துக்குமாரன்கள், முருகதாசன்கள் என்ற மானிடத்திலும், வணங்காமண் என்னும் கப்பலின் பின்னால் உள்ள சிந்தனைகளிலும் வெளிப்படுவதைக் காண்கின்றோம். போராட மறுப்பது என்பது தோல்வி, போராடுவது என்பது வெற்றி என முழங்கிய அயர்லாந்து வேங்கை பற்றிக்பியர்சனின் குரலை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் இன்று கேட்டுப் பரவசம் அடைகின்றோம்.

இந்தப் பரவசத்தின் பின்னால் நடுகற்களாகி உள்ள எம் இரத்தத்தின் இரத்தங்களும் அந்த நடுகற்களுக்கூடாக பயணித்து உரிமைப்போரை முன்னைடுத்துச் செல்லும் மறவர்களும், அவர்கள் பின்னே சாவின் மடியிலும் மண்ணை நேசிக்கும் அடங்காத வன்னி மக்களையும் தரிசிக்கின்றோம்.

இந்தப் போர்க்குணத்தை ஆயிரம் ஆயிரமாம் ஆண்டுகளாக இழந்திருந்தோம். அதனை இழந்தபோதே அடிமைகளுக்கு உரிய பண்புகளையும் வரித்துக்கொண்டோம். அடக்குமுறைக்கு எதிரான உரிமைப்போரில் வெற்றி பெறும்போது மறைவது அடிமைத்தனம் மட்டுமல்ல அடிமைப்பட்ட மனிதனும் அங்கு இருக்கக் கூடாது.

அப்போதுதான் பிறான்ஸஸ் பனன் Frantz Fanon at the Congress of Black African Writers, 1959 காணும் பண்பாட்டு மனிதனை அந்த மண்ணில் தரிசிக்க முடியும். அந்த மனிதனால்தான் தேசியத்தில் சர்வதேசியத்தையும் சர்வதேசியத்தில் தேசியத்தையும் இனம் காணவும் தன் தேசியத்திற்கூடாக மனித குலத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்குமான உன்னதங்களை உருவாக்க முடியும். அவனது படைப்புச் சக்திக்கு களம் அமைக்க முடியும்.

இதற்கான மாற்றங்கள் உரிமைப்போர் நிகழும் காலத்திலேயே இடம்பெற வேண்டும். நடுகற்களுக்குப் பின்னால் உள்ள தாற்பரியங்கள், பண்பாட்டுக் கோலங்கள், போர்க் குணங்கள் இவற்றில் சிலவாகும். இந்த வகையில் தமிழர் பண்பாட்டில் நடுகற்களுக்கும் வீரவணக்கத்திற்கும் பின்னால் உள்ள வரலாற்றை ஒரு முறை நோட்டமிடுவதும் அதன் பின்புலத்தில் தமிழீழ மண்ணெங்கும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நடுகற்கள் தமிழ் மக்களின் ஊனோடு உயிரோடு சங்கமமாவதன் மூலமே சுதந்திர தமிழீழத்தை கட்டி எழுப்பவும் அந்த மண்ணில் இருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அடிமை மனிதனை விரட்டி அடிக்கவும் முடியும்.

ஏனெனில் இன்று இந்தியா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பாளரை விரட்டி அடித்து சுதந்திரத்தைப் பெற்றபோதும் அங்கு உருவான அடிமை மனிதனை விரட்டி அடிப்பதில் தோல்வி கண்ட தேசங்களாக உள்ளதைக் காண்கின்றோம். அவர்களின் போர்க்கால கோசங்கள் வெறும் கோசங்களே. கோசங்கள் பண்பாட்டு மனிதனை உருவாக்குவதில்லை. கோசங்கள் செயல்களாகி வாழப்படவேண்டும். நடுகற்களும் வீரவணக்கமும் எமது புதிய தேசத்தின் வாழ்வின் அத்திவாரமாகவேண்டும்.

பண்டைத் தமிழர்களிடையே முதன் முதலாக அரசு என்ற தாபனம் தோற்றம் பெற்ற போர்களின் பின்புலத்தில் அந்தப் போர்களிலே விழுப்புண்பட்டு வீழ்ந்திறந்த வீரரைத் தெய்வமாகப் போற்றினர். அவர்களைக் கல்லில் அமைத்து வழிபட்டனர். எடுத்துக்காட்டாக, பகைவர் முன்னே அஞ்சாது நின்று தன் மன்னனைக் காத்து ,அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடாது நெல்லைப் படைத்து வழிபடும் தெய்வம் ஒன்றில்லை எனப் பாடுகின்றார் சங்கப் புலவர்களுள் ஒருவரான மாங்குடிகிழார்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு, வாகைத் திணை, 355)

"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற பண்டைய சமூக அமைப்பில் வீரயுகம் ஒன்றில் புலவர்கள் அரசர்களின் விசுவாசிகளாக அரச உருவாக்கத்திற்குத் துணைபோகிய காலம் அது என்பதை நாம் அறிவோம். அந்தக்காலப் பண்பாட்டை காய்தல் உவத்தல் இன்றி நேர்மையோடு தொல்காப்பியனார் தொகுத்துத் தந்துள்ளமை எமது பாக்கியம். அவர் தனது பொருளதிகாரத்தில் புறத்திணை இயலில் நடுகற்களினிதும் வீரவணக்கத்தினதும் முறைகளைக் கூறுகையில்:

"......வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க,
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும் ,
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்,
சீர்த்த மரபின் பெரும்படை, வாழ்த்தல், என்று
இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே

என அழகாகக் கூறுகிறார். யாவற்றிற்கும் வரம்பு கட்டி இலக்கணம் தந்த தொல்காப்பியனார் தமிழரிடையே பெருவழக்காயிருந்த இவ் வழிபாட்டு முறைக்கும் இலக்கணம் வகுத்ததில் வியப்பில்லை.

இதனை சற்று விளக்கமாக நோக்குவோம்.

(1) காட்சி : போரில் வீரமரணம் எய்திய வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லைத் தெரிவு செய்தல்.
(2) கால்கோள்: தெரிந்த கல்லை எடுத்து வரலும், நடுதற்கான நாள் பார்த்தலும்.
(3) நீர்ப்படை: அந்தக் கல்லிற்கு குளிப்பாட்டல்.
(4) நடுதல்: வீரன் விழுந்துபட்ட இடத்தில் அல்லது தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கல்லினை நடுதல்.
(5) பெரும்படை: கல்லிலே வீரனது புகழைப் பொறித்து மடை கொடுத்தல்..
(6) வாழ்த்துதல்: வீரவணக்கம் செய்தல்.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரித்துக் கொண்டோர் பாயும் புலியை சின்னமாக்கி, நடுகற்களுடனான வீரவணக்கத்திற்கும் புத்துயிர் அழித்ததன் மூலம் தேசியத்தில் மொழியின் வீச்சோடு பண்பாட்டு விழுமியங்களோடு போர்க் குணத்தையும் அதன் மூலமான மறப்பண்பாட்டையும் தேசியத்தின் வாழ்வியல் கோலங்களாக்கியுள்ளனர். இதன் பின்னால் உள்ள வீரமும், தியாகமும் இன்று கண்டங்கள் பலவற்றிலும் கடல்கள் பல கடந்து வாழும் அவர்களின் உடன்பிறப்புக்களிடையே உரிமைப் போரிற்கான புதிய உத்வேகத்தை அளித்துள்ளது எனலாம்.

தமிழரின் புராதன வீரயுகத்தில் ஒளவையின் தகடூர் யாத்திரை நடுகற்களுக்கு ஊடாக நடந்தது போல் நவீன யுகம் ஒன்றில் அடக்கப்பட்ட தேசம் ஒன்றின் அடுக்கு முறைக்கு எதிரான உரிமைப் போரும் நடுகற்களுக்கு ஊடாக நிகழ்கின்றது. இந்த நடுகற்களின் சக்தியை உணர்ந்த எதிரி அவற்றை நிர்மூலமாக்குவதில் வியப்பில்லை. தம் தோழர்களை விதைத்துவிட்டு அவர்கள் பணியைத் தொடரும் வீரர்களதும் அவர்தம் உறவுகளதும் மன உறுதியை எதிரிகளால் அழிக்கமுடியாது.

அவர்கள் நடுகற்களுக்கு ஊடாக உரிமைப்போரில் வென்று பகை கெடுக்கும் வேலோடு செல்வதைப் போற்றி வழிபடும் காலம் இது.

ம.தனபாலசிங்கம்
சிட்னி, அவுஸ்திரேலியா.

சிறீ அண்ணாவுடனான முற்றுப்பெறாத உரையாடல்...

காதோரம் வந்த செய்தி பொய்யாகிப் போகாதோ... என்ற தாயகப் பாடல் தற்போது எனக்கு மிகப் பொருத்தமாகவே அமைகிறது.

'செய்தி அறிஞ்சனிங்களோ? சிறீ அண்ணா வீரச்சாவடைந்திட்டார்." என மறுமுனையில் பேசிய குரல் ஓய்வதற்கிடையில், எனது இதயம் தகர்ந்து போவது போல் உணர்கிறேன்.

ஆம்! நான் மிக மிக ஆழமாக நேசித்த, எனது உடன்பிறாவாச் சகோதரன் அண்ணன் சிறீ, எம்மை விட்டு, எமது தேசத்தை விட்டு, விடுதலைத் தீயை நெஞ்சில் சுமந்தபடி வீரகாவியமாகி விட்டார்.

நினைவுக் குறிப்புக்கள் எழுதி சளைத்துப் போன என்னால், இவரது மரணத்தின் போது மட்டும் அமைதி காக்க முடியவில்லை. இழப்புக்கள் எனக்குப் புதியவையல்ல, சோகங்களும், வேதனைகளும் எனக்குப் தாங்க முடியாதவையல்ல.

ஆனால், சிறீ அண்ணனின் மரணம் என்பது என் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக, என் மனதை வாட்டி வதைக்கின்றது.

போரட்டமே வாழ்வாகி;ப் போன தமிழர்களின் வாழ்வில், இழப்புக்கள் நாம் விரும்பாவிட்டாலும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றாகவே எமது வாழ்வியலோடு கலந்து விட்ட இத்தருணத்தில், எனது மனோதிடத்துக்கே சவால் விடுகின்ற ஒரு வீரச்சாவாக சிறீ அண்ணாவின் மரணம் சம்பவித்து விட்டது.

சாவே மலிந்து போன என் தேசத்தில், இவனது வீரமரணம் மட்டும் ஏன் என்னை இப்படி உலுக்குகின்றது?

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஊடவியலாளர் மாநாட்டு செய்தி சேகரிப்புக்குச் சென்ற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக வன்னிக்குச் சென்றபோது, ஏப்ரல் 8, 2002 இல் எதிர்பாரதவிதமாக சிறீ அண்ணாவுடனான சந்திப்பு இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து அவற்றை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சிறீ அண்ணாவை பார்க்கும் எவரும், வியப்பை ஆழ்த்தும் ஒரு செயற்பாட்டாளனாகவே அவரை அடையாளப்படுத்துவார்கள்.

சுடுகலன்களை ஏந்திய போராளிகளை பார்த்தும், அறிந்தும் பழகிப் போன எனக்கு, சிறீ அண்ணனை ஒரு போராளியாக எண்ணிப் பார்க்க முடிந்திருக்கவில்லை.

ஊடகவியலாளர் சந்திப்பு ஏப்ரல் 10, 2002 நிறைவுபெற, நானும் வன்னி மண்ணிலிருந்து விடைபெற வேண்டிய நேரம்,

'ஹலோ பிறதர்" என்ற அழைப்பைக் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். புன்முறுவலுடன் சிறீ அண்ணா.

'நான் வெளிக்கிடப் போறன், சொல்லிப் போட்டு போவம் எண்டு வந்தனான்" எனக் கூறியவாறு பாக்கர் பேனா ஒன்றைத் அன்பளிப்பாக தந்தார்.

எழுத்துக்களால் எதனையும் சாதிக்க முடியும், 'இந்தப் பேனாவை உங்கட ஆயுதமாக பாவித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கோ" எனக் கூறியபின், ஆதரவுடன் 'கவனமாய் இருங்கோ" என கூறியபடி கைகுலுக்கி, கையசைத்து விடைபெற்றார்.

அதற்குப் பிற்பாடும் சில தடவைகள் தொடர்புகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. சந்திக்கும் பொழுதுகளி;ல் பிரதானமாக எழுத்து - ஊடகச் செயற்பாடு, தகவல் தொழில்நுட்ப அறிவியல், கிரிக்கட் இவை தொடர்பாகவே எமது கலந்துரையாடல் அமைந்திருந்தன.

பொதுவாகவே மென்மையான சுபாவமுடைய சிறீ அண்ணா எல்லோரிடத்திலும் நல்ல குணங்களையும் அவர்களிடமுள்ள திறமைகளையும் இனங்கண்டு அறிவதில் வல்லமை மிக்கவராக விளங்கினார்.

ஊடகப்பணி மீது அபரித பற்று வைத்திருந்த அண்ணன் சிறீ, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தன்னால் முடிந்தவரை கரிசனை செலுத்துவதை என்னால் அறியமுடிந்தது.

எனது பேச்சுக்களும், எழுத்தும் சிங்கள கொலை வெறியர்களினதும், நயவஞ்சகர்களினதும் முகமூடியை வெளிப்படுத்துவதால், எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எடுத்துக்கூறி ஆலோசனை வழங்குவதோடு ஆதரவுடன் கண்டிக்க தவறியதுமில்லை.

நீண்ட நாளைக்குப் பிற்பாடு 2007 இன் நடுப்பகுதியில் அவரிடமிருந்து வந்த மடலில், மிகையொலி விமானங்களின் இரைச்சலாலும், குண்டுவீச்சுக்களாலும் சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்டுவது பற்றி மிகுந்ந கவலையுடன் எழுதியிருந்தார்.

பிற்பாடு, கடந்த டிசம்பர் 2008 இல் தொடர்பு கொண்டபோது, தமிழ்த் தேசியப் போராட்டத்தை எவ்வாறு சர்வதேச அரசியலுக்கும், உருவாகி வரும் உலக ஒழுங்கிற்கும் ஏற்ப நகர்த்துவது என்பது தொடர்பாக உரையாடினார்.

நான் நெருக்கடி மிகுந்ததொரு காலகட்டத்தில் இருக்கிறேன் என அறிந்ததையடுத்து 2009, பெப்ரவரி 17 ஆம் திகதி மீண்டும் தொடர்புகொண்டார்.

எனது உளவுரணை வலுப்படுத்தக்கூடிய வகையில் தைரியமூட்டிய பேச்சில், தானும், தான் சார்ந்த பணியும் எதிர்நோக்குகின்ற நெருக்கடியான சூழல் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை.

வழக்கம் போல அவரது பேச்சில் ஒருவகை நகைச்சுவை கலந்திருந்ததோடு, உற்சாகமூட்டும் அவரது சிரிப்புக்கும் குறைவிருக்கவில்லை.

அதேவேளை, ஒரு ஊடகவியலாளன் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு சாதகமான முறையில் சர்வதேச ரீதியாக என்னால் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

எமது மக்கள் மீது சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படுகின்ற இனச்சுத்திகரிப்புப் போரை சர்வதேச சமூகம் தெளிவாக புரியக்கூடிய மொழியில் எடுத்துச்செல்லப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான தொடர்பை எனக்கு ஏற்படுத்தி தருவதாக கூறிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி தொடர்பறுந்து போனது.

தொடர்பு மீண்டும் வரும் என நான் எதிர்பார்த்திருந்த போது, என்னுடன் கதைத்து சரியாக ஒரு மாதத்தில் அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்திதான் எனக்கு வந்து சேர்ந்துள்ளது.

எப்படித் தாங்கும் என் மனது? அழுவதைத் தவிர எனக்கு எதுவும் இப்போது செய்ய முடியவில்லை. ஆனால், பெரும்பாலான எல்லாமே என்னைவிட்டு போய்க்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், கண்ணீர் மட்டும் என்னை விட்டகல மறுக்கிறது.

சிறீ அண்ணாவுடனான முற்றுப்பெறாத அந்த உரையாடல் நெஞ்சை நெருடுகிறது.

ஒரு தடவை நேரடியாகக் சந்தித்த போது சிறீ அண்ணா கூறினார், 'நாளைக்கு நான் மரணமடையலாம், எனது இடம் இன்னொருவரால் நிரப்பப்படும். ஆனால், உங்கள் பணியில் எத்தகைய வெற்றிடமும் ஏற்படக்கூடாது. நீங்கள் உங்களுடைய பணியை தொடர்ச்சியாக செய்துகொண்டிருங்கோ" என.

சிறீ அண்ணாவின் தொடர்பும் இடையில் நின்று போனது. தமிழீழ விடுதலை என்ற அவரது கனவு கைகூடும் முன்னர் எமது மக்களைவிட்டு அவர் உடல் ரீதியாகப் பிரிந்து விட்டார்.

சிறீ அண்ணாவின் கனவை எம்மால் முடிந்தவரை நனவாக்கக்கூடிய ஊடகப்பணியை ஊடகவியலாளர்களான நாம் தீவிரமாக முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் ப+ணுவோம்.

எமது மக்களின் சுதந்திரத்திற்காய், விடுதலைத் தீயை மூட்டி, தாயக்கனவை நெஞ்சில் சுமந்த சிறீ அண்ணாவின் கனவு மெய்ப்படும் வரை ஏந்திய என் பேனா எளிதில் விழாது.

நன்றி
சி.ரூபன்
- தமிழ்நாதம் -

Sunday, March 22, 2009

அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன?

இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது.

வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

"இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் இராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்தால் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுப்பார். கண்டனங்கள், கவலையோடு தான் ஐ.நா.வின் காலம் கழிகிறது.

பட்டினிச் சாவென்கிற சுவடு பதியாத தமிழர்களின் வரலாற்றினை இப்பெருமக்கள் தெரிந்து கொள்ளவில்லை.

ஆகவே உலகமே உதவி செய்ய முன்வராத போது, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் உறவுகள், நிவாரணக் கப்பலேறி முல்லைக்கடல் நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாத மனிதாபிமான வரலாற்றுக் கடமையாக மாறுகிறது.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோமென வரிந்து கட்டிக் கொண்டு செயற்படும், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மகா சக்திகள், வணங்கா மண்ணின் தாயகப் பயணத்தை தடுத்து நிறுத்த சகல சித்து விளையாடல்களையும் பிரயோகிக்கக்கூடும்.

குறிப்பாக நடைபெறும் போருக்குப் பக்க பலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் புகழாரம் சூடப்பட்ட காந்தி தேசத்திற்கு இக்கப்பல் விவகாரம் நிச்சயம் கசப்பானதொன்றாக இருக்கும்.

வல்லரசுகள் நிகழ்த்தும் ஆதிக்கப் போட்டியில், தான் வெற்றி பெறும் முக்தி நிலைக்கு வந்தடைந்திருப்பதாகக் கற்பனை கொள்ளும் இந்தியா, திருநெல்வேலி இராட்சத ராடர் நிலையத்திலிருந்து வணங்கா மண்ணின் பயணப் பாதையை உன்னிப்பாக அவதானிக்கும். கொச்சின் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் காலாவதி நாட்களை எட்டும் எறிகணைகளின் கையிருப்பு குறைவடைவதாலும் வன்னி மண் விழுங்கும் ஆட்பலத்தை ஈடு செய்ய ஊர்காவல் படை அனுப்பப்படுவதாலும் இந்தியாவிற்கு"வணங்கா மண்ணின்' விஜயம் புதிய அதிர்வுகளை உருவாக்குகிறது.

"நிவாரண உதவி' என்கிற வட்டத்திற்கு வெளியே, இப் பயணத்தின் வேறு பரிமாணங்கள், புதிய செய்திகளை சொல்லத்தான் போகின்றன.
1934 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக யூதர்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதாவது 1947 ஜூலையில் "இடப்பெயர்வு 1947' என்று நாமம் சூட்டப்பட்டு பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் உருவாக்கிய தாக்கமே புதிய நாடொன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.

நாசிகள் ஏறி மிதித்த யூதர்களை நடுக் கடலில் பிரித்தானியர்கள் நசித்தார்கள், யூதர்களை ஏற்றிச் சென்ற சில கப்பல்கள் மொறீசியசிற்கும், சைப்பிரஸிற்கும் திசை திருப்பி விடப்பட்டன.

ஆனாலும் "இடப்பெயர்வு 1947' கப்பல் ஏற்படுத்திய அதிர்வலைகள், ஐ.நா. சபையில் முட்டி மோதி இஸ்ரேல் என்ற யூத நாட்டின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது.
உணவை போராயுதமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அதே உணவைக் கொண்டு சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்கிற விடயத்தை இக்கப்பல் பயணம் உணர்த்தும்.

இதனைத் தடுத்து நிறுத்த முற்படுவோர், அதற்கான தகுந்த அரசியல் காரணிகளையும் வியாக்கியானங்களையும் முன்வைக்க முடியாமல் சீனா கூறுவது போன்று உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுக முற்படுவார்கள்.
அதேவேளை "இடப்பெயர்வு 1947' கப்பல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான திருப்பு முனை நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் "வணங்கா மண்' ணின் தாயகப் பயணமானது ஏற்கனவே பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஓர் இனத்தின் தாயகத்தை, அங்கீகரிக்க வேண்டிய தேவையை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.

ஆனாலும் சில தென்னாசியப் பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசாளர்களின் அழுத்தங்களை மீறி, வன்னி மக்களின் உடனடி வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. சபை இருப்பதாகவே தோன் றுகிறது.

இந்த இறுக்கமான முரண் நிலையை
"வணங்காமண்' உடை த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையின் இறையாண்மையை மறுதலித்து "பூமாலை'' நடவடிக்கை மூலம் உணவுப் பொட்டலங்க ளைப் போட்டு மனிதாபிமானம் பேசியவர்களும் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு விவகாரமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில், பேரினவாத இறைமைக்கு முண்டு கொடுத்தவர்களும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்கிற பொதுவான வரையறைக்குள் வைத்துப் பார்க்க முடியாதெனக் கூறிய அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் இந்த வணங்கா
மண்ணின், வேரிற்கு நீர் ஊற்றச் செல்லும் மனிதாபிமானப் பயணத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள்?

ஏற்கனவே இப்பயணத்திற்கு ஆதரவளிக்க பல மனித உரிமை ஆர்வலர்களும் இன்படுகொலைக்கு எதிரான மனிதாபிமானிகளும் முன் வந்துள்ளார்கள்.
இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு மற்றும் எறிகணைகள் நிகழ்த்தும் படுகொலைகளை தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை என்கிற கவலையோடு மட்டும் வாழ்வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் தன் கையே தனக்கு உதவியென "வணங்காமண்' புறப்படுகிறது.

உலகத் தமிழினத்தின் உணர்வுக் கொந்தளிப்பு, சுவிஸிலும் பெல்ஜியத்திலும் கனடாவிலும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தலைமைக்கும் தன்னாட்சிக்குமான அங்கீகாரம் கோரி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாறுதலடைந்து மிகவும் உணர்வு மயப்பட்ட கொதி நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அங்கீகாரத்தை தடுக்கும் அரணாக தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தொழிற்படுவதாகவே புலம்பெயர் தமிழர்களும் தமிழக உறவுகளும் திடமாக நம்புகிறார்கள்.

சீன வியூகத்தை உடைத்தெறிய ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலிக்கடாவாக்கலாமென்கிற இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தனது நலன் காக்கப்பட வேண்டுöமன ஒருவர் நினைப்பாராயின் அந்த அழிக்கப்படும் இனம், தன்னை தற்காத்துக் கொள்ள, அழிப்பவரை எதிர்ப்பதே நியாயமானதாகும்.உயிரினங்களின் உயிர் வாழும் தத்துவம் சொல்லும் இயற்கையோடு சார்ந்த செய்தி இதுதான்.

நன்றி -

சி.இதயச்சந்திரன்
வீரகேசரி வாரவெளியீடு

Saturday, March 21, 2009

போர்க் குற்றவாளி மகிந்தவை கூண்டில் ஏற்றப்போவது யார்?

சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீருக்கு எதிராக அண்மையில் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

சூடானில் நிகழ்ந்த கொலைகள், இனப்படுகொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக மக்களை இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருக்கின்றன.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சூடானிய அரசாங்கம் நிராகரித்திருப்பது வேறு விடயம். ஆனால் இனப்படுகொலைகளை, சித்திரவதைகளை, கட்டாய இடப்பெயர்வுகளுக்கு காரணமான போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்த விவகாரம் ஈழத்தமிழ் மக்கள் சர்வதேச ரீதியில் செய்யக் கூடிய சில விடயங்களை எடுத்துக் காட்டியிருக்கிறது.

சூடானிய ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மீது எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டனவோ- அதேபோன்ற அத்தனை குற்றச்சாட்டுகளுமே இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் பொருந்தும்.

2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் நடத்தும் கோர யுத்தத்தால் பலியான தமிழ்மக்களின் தொகை 5 ஆயிரத்தை விடவும் அதிகம்.

அண்மைய மோதல்களில் காயமுற்ற பொதுமக்கள் 4000 பேர் வரையில் தரைவழியாகவும் கப்பல்கள் மூலமாகவும் திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களை விட வன்னிக்குள் மேலும் ஆயிரக்கணக்கான காயமுற்ற பொதுமக்கள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் 2500இற்கும் அதிகமான பொதுமக்கள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

அதைவிட மக்களை தமது சொந்த இடங்களில் இருக்கவிடாமல் துரத்தித் துரத்தி படையினர் நடத்தும் எறிகணைத் தாக்குதல்கள்- அவர்களை ஒரு சிறு பிரதேசத்துக்குள் முடங்கிப் போக வைத்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான மக்களை இப்படி அலைய விட்டது போதாதென்று அரசாங்கம்- அவர்களை கப்பல் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து முகாம்களில் அடைத்து வைக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் இலங்கை அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு சர்வதேசமும் ஆதரவு கொடுப்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுவது தான்.

இனப்படுகொலைகள், கட்டாய இடப்பெயர்வு, சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்று சூடானிய ஜனாதிபதி எத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறாரோ- அதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு மகிந்த ராஜபக்ஸவும் தகுதியானவர் தான்.

இராணுவத்தினருடனான சண்டைளைப் புலிகள் பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் அவர்களே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் இன அழிப்பை சர்வதேசத்தின் முன்பாக அம்பலப்படுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இவை சர்வதேச ரீதியில் இலங்கையில் நடத்தப்படும் இன அழிப்புப் போர் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது உண்மை.
ஆனால் இது மட்டும், ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கோ விடிவுக்கோ போதாது.

சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்துக்குள் தலையிட விரும்பவில்லை என்பது வெளிப்படை.

ஆனாலும் வன்னி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது பற்றிய ஆலோசனைகளில் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பங்கேற்றிருந்தன.
இந்தநிலையில் புலம்பெயர் மக்கள் முன் புதிய பொறுப்புகள் வந்து நிற்கின்றன.

சூடானிய ஜனாதிபதியைப் போன்று மகிந்தவுக்கு எதிராக சட்ட ரீதியாக எதைச் செய்யலாம் என்று ஆராய வேண்டிய தருணம் வந்து விட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம்- தமிழினத்துக்கு எதிரான போரில் கையாளும் கீழ்;த்தரமான உத்தி;கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும்.

இப்போதைய நிலையில் இந்த இனப்படுகொலைகளுக்கும், கட்டாய இடப்பெயர்வுக்கும், மற்றும் போர்க் குற்றங்களுக்கும் நிறையவே சாட்சிகள் உள்ளன.

எனவே இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு இரக்க முடியாது.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது ஒன்றும் இலகுவான விடயம் அல்ல. அதற்கான தேடல்கள் , வசதிகள் நிறையத் தேவைப்படும்.

குறிப்பட்ட கால அவகாசம் தேவைப்படும். இதற்கு இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் சட்ட வல்லுனர்கள் கூடி ஆராய்ந்து இதுபற்றிய முடிவை எடுக்கலாம்.

இத்தகைய முயற்சிகளில் நாம் எப்போதோ இறங்கியிருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் போரை நம்பியே வாழ்ந்து பழக்கப்பட்டுப் போனதால் சட்டரீதியாக சாதிக்கக் கூடிய பல விடயங்களை சாதிக்காமல் இழந்திருக்கிறோம்.

இந்தநிலை தொடரக் கூடாது. அதேவேளை மேற்கு நாடுகளின் படைபல ஆதரவுடன் வன்னி மக்களை கட்டாயமாக கொண்டு சென்று முகாம்களில் அடைக்க எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

துரதிஷ்டவசமாக அப்படியானதொரு நிகழ்வு நிகழ்ந்து விட்டால்- அடுத்தது என்ன செய்யலாம் என்பது பற்றியும் இப்போதே ஆராய்ந்து சில தயார்படுத்தல்களைச் செய்யலாம்.

ஏனென்னறால் கட்டாய குடிபெயர்ப்பு நிகழ்;ந்தால் அதற்குப் பினனர் நிகழப் போகின்;ற இராணுவ அட்டூழியங்களுக்கு சர்வதேசமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

பாரம்பரியமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரு பிரதேசத்தில் இருந்து துரத்தியடிப்பது மிகமோசமான மனித உரமை மீறல்.

இதைச் சர்வதேச சமூகம் செய்தால் அதற்கெதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அந்த சர்வதேச தலையீட்டைப் பயன்படுத்தி தமிழ் தேசிய இனத்துக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்வது பற்றிய ஆலோசனைகளும் இப்போதே நடத்தபட வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் காலம் இருக்கிறது. நேரம் கனிந்து வரும் என்று இருந்து விடுவதும் சரி- இழுத்தடிப்பதும் சரி- வன்னியில் துயரமே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை மேலும் துயரங்களுக்குள் தள்ளி விடுவதாக அமைந்துவிடும்.

போர் ஒருபுறம் நடக்கட்டும். அதேவேளை இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தின் முன்னிலையில்- குற்றவாளியாகக் கூட்டில் ஏற்றுவதற்கான புதிய போர் ஒன்றை தொடுப்பதற்கான பொறுப்பு புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடமே உள்ளது. இந்தப் பொறுப்பை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிறைவேற்றுமா?.

நன்றி:
- தொல்காப்பியன் -
நிலவரம்

Thursday, March 19, 2009

சிறுவன், கோலியாத் 9 மி.மீ. பிஸ்ரல் மற்றும் புலனாய்வாளர்கள்...

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மை புரியும்.

அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும்.

ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களை கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு.

அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது.

உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம்.

இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது.

அதனால் தான் இன்று தமிழ்த் தேசியத்திற்கு எதிராக குறைந்தது மூன்று வல்லரசுகள் உட்பட உலகின் சக்திமிக்க ஆகக்குறைந்த ஒன்பது நாடுகள் சிறிலங்காவிற்கு பின்னால் அணிதிரண்டுள்ளன.

வெறுமனே அணி திரள்வு மட்டுமல்ல தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தீவிரமாகவும் செயற்பட்டு வருகின்றன.

இதில் அரசியல், பொருளாதாரம், இராணுவப் பயிற்சிகள், ஆயுதப் படைப்பலப் பெருக்கம் போன்றவை முக்கியமானவை.

இவற்றினைவிட மிக மிக முக்கியமானது புலனாய்வு நகர்வு. இங்கே நகர்வு என்பது புலனாய்வின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடுகிறது.

புலனாய்வு நகர்வு தான் எந்தத் தேசத்தின் இருப்பையும் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்துகிறது.

ஆதலால் தான் எந்த அரசும் புலனாய்வுப் பிரிவிற்கு அதிகளவிலான பணத்தை செலவிடுகின்றன. அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தாராளமாக புலனாய்வுப் பிரிவிற்கு அள்ளி வழங்குகின்றன.

இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் மீது எப்போதே ஆழமாகப் பாய ஆரம்பித்து விட்டன.

இவற்றிற் கெல்லாம் ஈடுகொடுத்து தமிழ்த் தேசத்தின் படையணி தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து வலுப்படுத்தி வருகிறது.

இதற்காக அவர்கள் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க இருக்கின்ற விலையை யார் அறிவார்?

தமிழ்த் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துகின்ற விடுதலைப் புலிகளோடு மோதுகின்ற ஏனைய நாடுகளின் புலனாய்வுப் பலம், வசதி வாய்ப்புக்களோடு ஒப்பிடும் இடத்து விடுதலைப் புலிகளின் தமிழ் தேசியத்தின் புலனாய்வுத்துறையின் பலம் கோலியாத்தோடு மோதிய சிறுவன் போன்றதே.

அதாவது முழங்கும் பல்குழல் பீரங்கிக்கு முன்னால் 9 மில்லி மீற்றர் பிஸ்ரலோடு நிற்பதற்கு ஒப்பானதே.

இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு பொது விடயத்தைக் கவனிக்கலாம். அதாவது, எதிரி எல்லா வகையிலும் மிக மிகப் பலம் பொருந்தியவனாக இருந்த போதும், அவனோடு போராடுகின்றவன் தன்னை தற்காத்தபடி அனைத்துப் பேரழிவுகளிற்கும் மூல காரணமாக இருந்து இயங்குகின்றவனை அழித்து - செயலிழக்கச் செய்து விடுவான்.

நேரடியாகக் கூறுவதானால் தன்னைப் பாதுகாத்தபடி பல்குழல் பீரங்கி இயக்குபவர்களை நெருங்கி அவர்களின் கதையை 9 மீ.மீ. பிஸ்ரலால் முடித்துவிட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உடனடியாகவே இயங்க ஆரம்பித்து விடுவான்.

சிறுவன் கோலியாத்தின் கண்களை நோக்கி கற்களை வீசியது போன்றதே.

இந்த சிறுவனிடம் உள்ள - 9 மீ.மீ. பிஸ்ரல் போன்றதே தமிழ்த் தேசியத்திற்கான படைப்பலம்.

எதிரிகள் கோலியாத் - பல்குழல் பீரங்கி போல் உள்ளனர்.

கவனிக்க: தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தும் தமிழரின் படைப்பலம் பல வழியிலும் மிகமிகப் பலப்படுத்தப்பட வேண்டும்.

இதற்கு தமிழ் மக்களின் உதவி பல்வேறு வழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இது தன்மானம் மிக்க மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனினதும் கடமை, பொறுப்பு, கட்டாயம்.

ஏனெனில், தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் தமிழ்த் தேசியத்தின்; பலத்தோடு ஒப்பிடுமிடத்து பன்மடங்கு பலமுள்ளவர்களாக திகழ்வதால் தமிழ்த் தேசியமும் நவீனமயமாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

வெறுமனே எதிரியின் பலம் வளர்ச்சிஇ எங்களின் நிலைஇ தேவை என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் எதிர்நோக்கியுள்ள - காத்திருக்கின்ற சவாலையும் அது கடந்த காலத்தில் எவ்வாறு விசத்தைக் கக்கியது என்பதையும் கவனிப்பது அவசியமானது.

அதனடிப்படையில் எமக்கு எதிராக யார் யார் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள்?

எந்தப் பகுதியை மையமாக வைத்துச் செயற்படுகிறார்கள்?

எதற்காக அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றையும், சில பொதுவான அம்சங்களையும் அலசலுக்கு உட்படுத்துவோம்.

இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது எமக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள பல நாடுகளில் சிற்சில நாடுகளுக்குள், தமது தேசிய நலன் மற்றும் வலுப்படுத்தல் தொடர்பாக கடுமையான புலனாய்வுப் போர் தொடர்கிறது.

இதனை ஓர் சிறிய உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். குடாநாடு புலிகளின் கைகளுக்குள் விழும்; நிலையில் இருந்தது.

அந்த வேளையில் அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைகளை எந்தவிதமான உயிர்ச்சேதமுமின்றி மீட்பதற்கான சகல ஆயத்தங்களையும் இந்தியா மேற்கொண்டிருந்தது.

அதே போன்று பாகிஸ்தானோ முதுகெலும்பு முறிந்தது போன்றிருந்த சிறிலங்காப்படையினருக்கு விரைவாக தேறுவதற்காக உன்னத சத்துணவாக பல்குழல் பீரங்கிகளை வழங்கியது.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கார்கில் போர் இடம்பெற்றதால் வழமையைவிட இரு நாடுகளுக்குமிடையில் கடுமையான கொந்தளிப்பு நிலை நீடித்திருந்தது.

ஆனால் தமிழ்த் தேசியத்தை நசுக்க முனைந்த போது பரம எதிரிகள் கூட ஓரணியில் இணைகின்றார்கள்.

அது மட்டுமன்றி, சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய நலனுக்கு எதிரான சக்திகள். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு சிறிலங்காவிற்குத் தேவையான ஆயுத உதவிகளை வழங்கின வழங்கி வருகின்றன.

குறிப்பிட்ட நாடுகள் தமது தேசிய நலனை கருத்தில் கொண்டு செயற்பட்டு வரினும், அது தமிழ்த் தேசியப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாகவே அமைகிறது. இது அவைக்கும் நன்று தெரியும்.

இவை எவற்றைப் புலப்படுத்துகின்றன?

எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று எண்ணமும் கூடாது கனவு காணக்கூடாது.

ஆனால், தமிழர்களின் அபிலாசையை சர்வதேச ரீதியில் உறுதி தளராது வெளிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் தொடர வேண்டும்.

அது, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்படுகின்ற நாடுகளுக்கு அழுத்தத்தை உண்டு பண்ணுவதாகவும் அமைய வேண்டும்.

பூகோள அரசியல் நிலமைக்கும், புதிய உலக ஒழுங்கிற்கும் அமைவாக தமிழ்த் தேசியப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் உருவாகியுள்ள, தற்காலிகமானதும், குறுகிய காலத்துக்குரியதுமான பின்நகர்வை வைத்து, எமது நீண்டகால அடைவிலக்குத் தொடர்பாக நம்பிகையீனம் உருவாகமல் தடுப்பதே எமக்கு முன்னுள்ள பிரதான செயற்பாடுகளில் ஒன்று.

நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை, வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும். தூரநோக்குள்ள வல்லமை மிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள்.

தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள். புலிகளால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற போரியல் நடவடிக்கை பல சேதிகளை சொல்லக் காத்திருக்கின்றது.

அந்த நடவடிக்கை இழுபடுவதோ, முடிவுகள் அற்றதோ அல்ல.

விரைவாக தீர்க்கமான தீர்வினைச் சொல்லும்.

23 ஆயிரத்துக்கும் அதிகமாக மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்கான மிகமிகச் சரியான பதிலை சொல்லும்.

எமது மக்கள் படும் அவலத்திற்கும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்ப்பலிக்கு உரிய பதில் குறியைக் காட்டும்.

விடுதலை வேண்டி போராடும் தேசங்களிற்கு பல படிப்பினைகளைச் சுட்டிக்காட்டும். தர்மத்தையும் நியாயத்தையும் வெளிப்படுத்தும்.

அந்நிய ஆதிக்க சக்திகளின் குள்ள நரித்தனங்களை புட்டு வைக்கும்.

இவை அனைத்திற்கும் உறுதுணையாக பல ஆண்டுகளாக அவலங்களையும் ஏக்கங்களையும் சுமந்த எமது மக்கள் இருந்தார்கள், இருக்கப்போகிறார்கள் என்ற செய்தி தெரிய வேண்டும்.

எமது மக்கள் எப்போதுமே போரியல், சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் கூட்டத்தைக்கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க சக்தியாலும் அசைக்க முடியாது.

02.

இதன் அடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழிப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

இன்று எமது தேசத்தினை நோக்கி பல நாடுகளின் புலனாய்வுக் கண்கள் தீவிரமாகத் திரும்பியுள்ளன.

சில நாடுகள் எமது தேசத்தினைக் கூறுபோடும் முயற்சியிலும், தமிழ்த் தேசியப் போராட்டத்தினை நசுக்கும் வகையிலும் நேரடியாகவே செயற்பட ஆரம்பித்துள்ளன.

அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகள் இதனைப் புலப்படுத்தி நிற்கின்றன. இந்தச் செய்திகளின் - மக்களின் கதைகளில் பிரதானமாக பேசப்படும் உளவு அமைப்பாக இந்தியாவின் ~றோ| (சுயுறு - சுநளநயசஉh யனெ யுயெடலளளை றுiபெ) அமைப்பே திகழ்கிறது.

இலங்கைத் தீவு தொடர்பான வெளியுறவுக்கொள்கையை, இந்திய மத்திய அரசுக்கு பதிலாக ~றோ| வின் அதிகார மட்டத்தில் உள்ளவர்களே வகுப்பதாக ஆதாரப+ர்வமான செய்திகள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

துரதிர்ஸ்டவசமாக, இலங்கைத் தீவு தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையையே சக்தி மிக்க பல நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

ஈழக்கடல் தொடக்கம் சர்வதேச கடற்பரப்பு வரை விரிந்துள்ள புலிகளின் செயற்பாடுகளை தடுத்தல்,

மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்புக்குள் இருந்து கொண்டு சிங்களப் படைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புலிகளை கட்டுப்படுத்தல்,

தமது உறவுகள் ஈழத்தில் படுகொலைசெய்யப்படுவதைக் கண்டித்து, எழுச்சியடைந்து வரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்குதல்,

போன்ற நடவடிக்கைகளுக்காக, தமிழ்த் தேசியப் போராட்டத்தை பலவீனப்படுத்த முனையும் நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இதற்காக, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிளுள்ள புலிகளின் எதிர்ப்பாளர்களை குறித்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.

சில தருணங்களில் குறித்த நாடுகள் தமது நலன்களுக்கு ஏற்ப சிறீலங்கா தூதரகங்களிலுள்ள புலனாய்வு பிரிவினரோடு இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

சில தருணங்களில் தனித்தும் செயற்பட்டு வருகின்றனர்.

இதனூடாக, தமது நலன்களுக்கு ஏற்ப சிறீலங்காவை பணிய வைப்பதற்கான நகர்வுகளையும் மேற்கொள்கின்றனர்.

இவை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு, பல்வேறு மட்டங்களிலும, பல்வேறு நாடுகளிலும் செயற்படும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளிலும், தமக்கு ஏற்படும் புதிய தொடர்புகளிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த வேளையில் இந்தியாவின் குறிப்பாக ~றோ|வின் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது பொருத்தமானதாக அல்லது பயனுள்ளதாக இருக்கும்.

இதில் முதலில் றோவின் சில முக்கிய பின்னணிகளை நோக்குவோம்.

பாகிஸ்தான் தனது நாட்டில் இந்தியாவிற்கு எதிராக போராடக்கூடிய கெரில்லாக்களுக்கு பயிற்சி வழங்கியதோடு, முகாம்களை அமைத்துக்கொடுத்தது. அத்துடன் சீக்கியர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது.

இதனையடுத்தே 1968 ஆம் ஆண்டு ~றோ| தோற்றம் பெற்றது.

~றோ| ஆனது இந்தியாவின் உள்நாட்டு - வெளிநாட்டு நலனைக் கருத்தில் கொண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அத்துடன் அயல் நாடுகளின் அரசியல், இராணுவ வலுப்படுத்தல்கள் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பில் செலுத்தும் தாக்கத்தினை கூர்மையாக கவனிக்கும்.

~றோ| இந்தியாவின் பிரதமரின் கீழே இயங்கும்.

250 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட ~றோ|வில் இன்று அண்ணளவாக 12,500 மேற்பட்ட முகவர்கள் அயல்நாடுகளில் மட்டும் உள்ளனர்.

ஆனால் பாகிஸ்தானின் குறிப்பின்படி 1983 - 1993 வரையான காலப்பகுதியில் 35,000 ~றோ| முகவர்கள் பாகிஸ்தானிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர்களில் 12,000 பேர் சிந்து என்ற பகுதியிலும், 10,000 பேர் பஞ்சாப் என்ற பகுதியிலும், 8,000 பேர் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலும், 5,000 பேர் பாகிஸ்தானின் எல்லைப் புறமாகவும் தொழில் புரிபவர்கள் போல் வேடம் தரித்து உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் செராக்கி என்னும் இயக்கத்திற்கு (ளுநசயமi ஆழஎநஅநவெ) நிதி உதவிகளை வழங்கியதோடு இந்த இயக்கத்தின் உள்ளக மாநாடொன்றை 1993 நவம்பர் - டிசம்பர் காலப்பகுதியில் டெல்லியில் நடத்தியதாக இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது.

பாகிஸ்தானிற்குள் தீவிரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே செராக்கி இயக்கத்திற்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேசாக மாற்றமடைவதற்கு இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட முக்தி பாகினி (ஆரமவi டீயாini) என்ற இயக்கமே மூலகாரணமென கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் ~றோ| தீவிரமாகச் செயற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மற்றும் கிழக்குப் பஞ்சாப்பில் ஆயுதப்பயிற்சி முகாமினை அமைத்து முஸ்லிம் அல்லாத பாகிஸ்தானியர்களுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான பயிற்சிகளை ~றோ| வழங்கியதாகத் அறிய முடிகிறது.

இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் ~றோ| போன்று 29 பிரிவுகள் உள்ளன.

உதாரணமாக ஊநவெசயட டீரசநயர ழக ஐnஎநளவபையவழைn - ஊடீஐஇ துழiவெ ஐவெநடடபைநnஉந ஊழஅஅவைவநந -துஐஊஇ ஐவெநடடபைநnஉந டீரசநயர -ஐடீ. என்பவற்றைக் குறிப்பிடலாம்.

20 மில்லியன் இந்திய ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த செலவீடு இன்று 16 ஆ ருளு னுழுடுடுயுசு - 145 ஆ ருளு னுழுடுடுயுசு வரை உயர்வடைந்துள்ளது.

இதிலிருந்து ~றோ|வின் பரிமாணத்தை, உள்ளீட்டை, இடையீட்டை, வெளியீட்டை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறான தன்மைகளைக்கொண்ட ~றோ| 1981 ஆம் ஆண்டில் இலங்கையில் காலூன்றியது.

டெல்லியில் உள்ள அதியுயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் சிலவற்றிலும், தமிழ்நாட்டிலுமாக 30 முகாம்கள் தனிநாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களிற்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டன.

ஆயுதப்பயிற்சிகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னிலை வகித்ததோடு கட்டுக்கோப்புடைய கட்டமைப்பினை ஏற்படுத்தினார்கள்.

1986 இற்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் வந்தது. உதவிகளை நிறுத்தி புலிகளையும் சில இயக்கங்களையும் கடுமையாக கண்காணிக்கத் தொடங்கியது.

ராஜீவ் காந்தியினுடைய காலப்பகுதியில் ~றோ| தமிழ்த் தேசத்திற்கு எதிராக தீவிரமாக செயற்பட ஆரம்பித்து மூக்குடைபட்ட வரலாறு யாவரும் அறிந்ததே.

ராஜீவ் காந்தியை வழிநடத்தியவர்களின் தவறே இதற்கான காரணம் என பின்னர் அறியமுடிந்தது. ~றோ|வின் நடவடிக்கைகளை இலங்கையில் டேவிட் வழிப்படுத்த, புதுடெல்லியில் சந்திரன் நெறிப்படுத்தினார்;.

1989 இல் றோவிடம் மூன்று விடயங்களை ராஜீவ்; கையளித்தார்.

- வடக்கு - கிழக்கில் சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்களை வெளிக்கொணர்தல்.

- சந்தர்ப்பங்களுக்கேற்ப விடுதலைப் புலிகள் தமிழ்மக்கள் பிரதேசங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது போன்ற தோற்றப்பாட்டையும் அதனை கட்டுப்படுத்த சிறீலங்கா அரசாங்கத்தால் முடியாததையும் வெளிப்படுத்தல்.

- மக்கள் தொண்டர் படையணி என்ற ஒரு படையமைப்பை நிறுவி, அதற்கான பயிற்சிகளை மேம்படுத்தி அவர்களை இராணுவத்திற்குரிய அரைவாசி கட்டமைப்புடன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கட்டளையிட்டார்.

அரைவாசி கட்டமைப்பு என்னும் போது, இலங்கையைப் பொறுத்தளவில் அது பலமிக்கது. இவ்வாறான 15,000 பேர் கொண்ட படையமைக்க ராஜீவ்; அனுமதியளித்திருந்தார்.

முழுமையான படைக்கட்டமைப்பெனின் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக இருக்குமென கருதியதனாலேயே அவ்வாறான முடிவை ராஜீவ்;; எடுத்திருக்கக்கூடும்.

முதலாவது விடயத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை உண்டு பண்ணி தமிழ் மக்களிற்காக வருந்துதல் என்ற போர்வையில் கால் பதித்தல்.

இரண்டாவது விடயத்தின் மூலம் விடுதலைப் புலிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தல்.

மூன்றாவது விடயத்தின் மூலம் இலங்கையை தாம் நினைத்தபடி செயற்படுத்தலாம் போன்றவையே ராஜீவ்; - ~றோ| திட்டமாக இருந்தது.

அதேவேளை தாம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற உணர்வு மக்கள் மனதிலும் சர்வதேச ரீதியிலும் பதியாமல் இருக்கும் வண்ணம் அவதானமாகச் செயற்பட்டனர்.

மக்கள் தொண்டர் படையணிக்கான ஆட்சேர்ப்பின் அங்கமாக ரெலோ, புளொட், நுPசுடுகுஇ நுNனுடுகு என்பன உள்வாங்கப்பட்டன.

இந்த இயக்கங்களைக் கொண்டு ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு என்பவற்றை ~றோ| மேற்கொண்டது.

இளைஞர்கள் அனைவருக்குமான ஆயுதப்பயிற்சிகள் ~றோ|வின் மேற்பார்வையிலே நடந்தது.

மக்கள் தொண்டர் படையணி தமிழ்த் தேசிய இராணுவம் என மாற்றமடைந்து 1989 ஆம் ஆண்டில் சிறிலங்காப் பொலிசார் மீது அம்பாறை மாவட்டத்தில் தாக்குதலை மேற்கொண்டது.

இதனை விடயம் தெரிந்த தமிழ் மக்கள் ~றோ|வின் கபடத்தனமான உள்நோக்கம் கொண்ட தாக்குதலென குறிப்பிட்டனர்.

இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயமோ இனந்தெரியாத சண்டையிடும் குழுக்களின் தாக்குதல் எனக்கூறி தமது கைங்கரியத்தை மறைக்க முற்பட்டது.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து அவமானகரமாகவும், தோல்வியுடனும் வெளியேற்றப்பட்டமையால் ஆத்திரமடைந்த ~றோ| உள்ளிட்ட தரப்புக்கள் இலங்கையில் பதற்றத்தை உருவாக்கவே அத்தாக்குதலுக்கு வழியமைத்துக் கொடுத்தனர்.

அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ன இந்தியப் படைகளினதும் ~றோ|வினதும் பின்னணியில் துணைப்படை (Pயசய ஆடைவையசல) உருவாக்கப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணிகளின் அடிப்படையோடு, கடந்த சில வருட காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற நாசகார நடவடிக்கைகளை ஒப்பீடு செய்யும் போது சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

இந்த சந்தேகத்தை வலுப்படுத்திய காரணிகளில் ஒன்றாக, தேசவிரோத கும்பல்கள் மீது போர் நிறுத்த காலப்பகுதியென கூறப்பட்ட காலப்பகுதியில் பொலநறுவை மாவட்டத்திலுள்ள சொருவில் (சிங்கள குடியேற்றத் திட்டத்தினாலேயே சொருவில் மட்டக்களப்பிலிருந்து பொலநறுவை மாவட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் சான்று பகர்கின்றன.

இந்த தாக்குதலின் போது வெளிப்பட்ட இரண்டு விடயங்கள் ~றோ| மீண்டும் இலங்கையில் தீவிரமாக செயற்படத் தொடங்கியதை வெளிப்படுத்தியது.

சொருவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இருவர் சொருவிலைச் சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு வேலை எடுத்துத்தருவதாகக் ஏமாற்றி பின்னர் கட்டாயமாக தேசவிரோத குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான கட்டாயமான ஆட்சேர்ப்புக்கள், அப்பாவி மக்கள் மீதான துன்புறுத்தல்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

சொருவில் தாக்குதலில் கொல்லப்பட்ட நுNனுடுகு விஜயனினதும் இன்னுமொருவரினதும் கடவுச்சீட்டுக்களும் தாக்குதலை மேற்கொண்டவர்களிடம் அகப்பட்டிருக்கக் கூடும். அல்லது வேறு வழிமுறைகள் மூலமோ குறித்த கடவுச்சீட்டுக்கள் இரண்டும் இந்தியா கடவுச்சீட்டுக்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், விஜயனின் குடும்பத்தினர் நீண்டகாலமாக இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார்கள்.

விஜயன் இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த போது தமிழ் மக்களிற்கு எதிராகச் செயற்பட்டவர்.

அதன் காரணமாகவே ஐPமுகு இங்கிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்களின் வாலில் தொங்கிக்கொண்டு போனார்.

தேசவிரோத கும்பல்களின் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக எழத்தொடங்கியதோடு இந்தியாவிலிருந்து இங்கு வந்தார்.

கிழக்கு மாகாணத்தில் நாசகார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுப்பப்பட்டவர்களில் அல்லது வரவழைக்கப்பட்டவர்களில் நுNனுடுகு விஜயன் முக்கியமானவர்.

இவை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான கும்பல்களோடு இந்தியா நெருக்கமான உறவை வைத்திருப்பது சந்தேகங்களை உறுதிப்படுத்துகிறது.

1989 காலப்பகுதியில் இந்தியாவோடு இணைந்து செயற்பட்ட இயக்கங்களான நுPசுடுகு(ஏ)இ Pடுழுவுநுஇ நுNனுடுகு போன்றவற்றின் முக்கியஸ்தர்களுக்கு இந்தியா ஏன் செயற்கைச் சுவாசத்தைக் கொடுத்திருக்கிறது.

நுPசுடுகு(ஏ) வரதராஜப் பெருமாள் இன்னும் ஒரிசாவிலேயே தங்கியுள்ளார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஈழத் தமிழர்களின் வாக்குகளை கூறு போடுவதற்காக கடுமையான பாதுகாப்போடு சிறிலங்காவிற்கு வரதராஜப்பெருமாள் வந்திருந்தார்.

ஆனால் மக்களோ அவரிற்கு நல்ல வாக்கு போட்டு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

இந்திய கடவுச் சீட்டுடைய, இந்தியாவிலேயே நீண்டகாலம் தங்கியிருந்த நுNனுடுகு விஜயன் தமிழ்த் தேசியத்தை சிதைக்க வந்து இறுதியில் சிதையிலே போய்விட்டார்.

தமிழ் மக்களிற்காக பேனா மனிதனாக விளங்கிய மாமனிதர் சிவராமின் கொலையோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படும் புளொட்டிற்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற உறவின் நெருக்கமான வடிவம் - என்னத்தை வெளிப்படுத்துகின்றது?

இவை ஓரிரு கடந்த கால உதாரணங்கள் மட்டுமே.

இவையெல்லாம் மக்களிற்கு பல்வேறு மாதிரியான வினாக்களை பல்வேறு கோணங்களில் எழுப்பியுள்ளது.

நன்றி
- நி.பாலதரணி -

Monday, March 16, 2009

அழிவும் ஆக்கமும்: தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வின் கனவை மறக்கலாமா

அன்னிய சிங்கள அடக்கு முறையில் இருந்து விடுபடுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப்போர் இன்று அழிவுகளின் மத்தியில் குரூரமான கொடிய காட்சிகளை எம்கண்முன் காட்டி நிற்கின்றது. சொந்தச் சகோதரர்கள் அங்கு கொத்துக் கொத்தாக மடிவதைத் தினமும் பார்த்து செய்வதறியாது துடிக்கும் புலத்தமிழர்கள் மனம் சோர்ந்து துன்பத்தில் சுழல்வதை காண்கின்றோம்.

இதே கொடுமைகள் ஆபிரிக்க மக்களுக்கோ, பாலஸ்தீனியர்களுக்கோ நிகழும்போதும் நாம் உருகியிருப்போம். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புக்களுக்கு துயர் துடைக்கும் பணத்தை அனுப்பி ஒருவகை மனச்சாந்தியும் பெற்றிருப்போம்.

ஆனால், எங்கள் உடன்பிறப்புக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுவதானால் எம்மால் உறங்க முடியவில்லை, சிரிக்கமுடியவில்லை, சாதாரண வாழ்வின் இன்பதுன்பங்களை அனுபவிக்க முடியவில்லை. இது இயற்கை. தானாடாவிட்டாலும் சதையாடும் இரத்த பாசம்.

உன்னதமான இலட்சியத்தின் பொருட்டு நிகழும் அழிவுகள் என்பதால் அது சிலுவை சுமப்பது போன்ற ஆன்மீக துயரத்தையும் அளிப்பதால் வலி எமது நெஞ்சைப் பிளக்கிறது. வலியின் ஆழமும் அகலமும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி என்னவோ செய்கிறது.

முத்துக்குமாரனைப்போல், முருகதாசனைப்போல் ஆகமுடியாத பலவீனங்களும், ஆற்றாமையும் ஒருபுறம் வாட்ட, அவரவர் நிலைக்கேற்ற சுயதர்மம் என்ற அறிவுசான்ற வினோதங்கள் ஒருபுறம். சேக்ஸ்பியர் படைத்த சிக்கலான ஹம்லட் பாத்திரத்தைப்போல் வீரமும், கோழைத்தனமும், வாழ்வும் சாவும் எம்மை ஆட்டிப் படைக்கின்றது.

இந்த நிலையில் தத்துவத்தின் ஒளியில், வரலாற்றின் இயக்கத்தில், அறிவின் வெளிச்சத்தில், தோன்றி மறையும், நாளுநாள் சாகின்ற வாழ்வின் இயக்கத்தில் இவற்றை ஒரு முறை தரிசிக்கும் முயற்சியே இக் கட்டுரை.

சிலுவையில் அறையப்பட்ட யேசுபிரானும் அவரின் உயிர்த்தெழலும், மரணதண்டனையில் இருந்து தப்பும் வாய்ப்பிருந்தும் அதனை விரும்பாத சோக்கிறட்டிசும், அனல் ஏந்தி ஆடும் சிவனாரின் தாண்டவமும் என் மனத்திரையில் ஏனோ அலை வீசுகிறது. அந்த அலையில் முத்துக்குமாரனின், முருகதாசனின் தரிசனத்தை காண்கின்றேன். அதில்தான் எத்தனை சுகம். அந்த அழிவில் எத்தனை ஆக்கம்.

கற்பூரம், ஊதுபத்தி, வாழைமரம் என்னும் காட்சிக்கோலங்கள். ஆயினும் இந்த எரியாத தீபங்கள் எம் ஊனினை உருக்கி உள் ஒழி பரப்புவதுபோன்ற பிரமை. இந்தத் தரிசனங்களில், பிரசவ வேதனையில் துடிக்கும் ஒரு தேசத்தின் குரல், புலிகளின் தாகமாக இருந்து தமிழரின் தாகமாக விரிவுபெற்று, விசாலம் பெற்று, விஸ்வரூப தரிசனமாகக் காட்சிதரும் கோலங்கள், நெஞ்சை நெருப்பாக்கி பாசத்தின் பரிமாணங்களை உள்வாங்கி நிற்கும் அற்புதம் என விபரிக்கமுடியாத காட்சிக்கோலங்கள் மனக்குகையில் இருந்து பிரசவிக்கிறது.

என்று மனிதன் எழுத்தைக் கண்டுபிடித்தானோ அன்று வரலாறு தொடங்குகிறது என்பர் வரலாற்று அறிஞர். அதன் முன்னுள்ள காலத்தை வரலாற்றுக்கு முற்பட்டகாலம் என அழைப்பர். அதேபோல் அரசு என்ற தாபனத்தின் தோற்றத்துடனேயே மனித சமுதாயம் நாகரிக உலகில் நுழைந்ததென்பர் மானிடவியலாளர். இந்த முதல் அரசின் தோற்றத்தின் பின்னால் ஓயாத போர்களும், அழிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதனையே மனிதனின் முதல் வீரயுகம் எனவும் கூறுவர். வீரயுகமும், நடுகற்களும், வீரவணக்கமும், இவற்றைப் போற்றிய கவிதைகளும், இன்ன பிறவும் அரசின் தோற்றத்திற்கான உடன்நிகழ்வுகள் என்பதை பண்டைய வரலாறுகள் குறித்து வைத்துள்ளன. இது புராதன பெருமை கொண்ட சுமேரியர், கிரேக்கர், எகிப்தியர், தமிழர், கெல்தியர் போன்ற இனங்களுக்குப் பொதுவானவை என்பது இவைபற்றி ஆய்வு செய்த பலரின் கணிப்பாகும் (எச்.எம்.சட்விக், நோறா சட்விக், மில்மன் பரி, கைலாசபதி உட்பட்ட).

பண்டைத் தமிழர்களின் வரலாற்றிலும் அரசு என்ற தாபனத்தின் பிறப்பின் பின்னால் ஓயாத போர்களையும் அழிவுகளையும் சங்க இலக்கியங்கள் மூலம் காண்கிறோம். பேராசிரியர் க.கைலாசபதி இவைபற்றிக் கூறுகையில்:

"சான்றோர் இலக்கியங் காட்டும் தமிழர் சமுதாயம், நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறித்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக் குழுக்கள் சிதறிக்கிடந்தன. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலைதூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது....."

இந்தப் பண்டைய அரசின் தோற்றத்தின் பின்னால் ஒரு வீரயுகப் பண்பாட்டையும், மாவீரர்களின் நடுகற்களையும், வீரவணக்கத்தையும், புலிச் சின்னம் பொறித்து புறம்போக்கிய ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தையும், அதன் வழியான கடல் ஆதிக்கத்தையும், மொழிவீச்சையும், கலை, பண்பாட்டு உன்னதங்களையும் திரிசிக்கின்றோம். இவற்றின் ஊற்றான பண்டைய அரசின் தோற்றத்தின் பின்னே எரியும் வயல்களை, வீடுகளை, விதவைகளை, சிறைபிடிக்கப்பட்டோரை காண்கின்றோம். அகதியாகிய பாரி மகளிரின் புலம்பல்களைக் கேட்கின்றோம்.

காலங்கள் உருள்கின்றன. போர்களின், அழிவுகளின், அகதி வாழ்வுகளின் மத்தியில்தான் நாடுகளின் எல்லைகள் மீண்டும் மீண்டும் மாறுவதையும் புதிய நாடுகள் உருவாவதையும் பார்க்கின்றோம். இவையாவும் கேட்டுப் பெற்றவை அல்ல அடித்துப் பெற்றவையே. பண்டைய அரசுகள் மாத்திரம் அல்ல இன்றைய நவீன தேசிய அரசுகளின் தோற்றத்தின் பின்னாலும் கதை ஒன்றுதான். விதிவிலக்காக ஆங்காங்கே சில உதாரணங்கள் இல்லாமலும் இல்லை. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1905 இல் சுவீடனில் இருந்து பிரிந்த நோர்வேயும் ,அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பளப்புரட்சி மூலம் பிரிந்த செக், சிலேவாக்கியா நாடுகள் சில உதாரணங்கள். ஏனைய நாடுகள் அழிவில் ஆக்கம் பெற்றவையே. இந்த வரலாறு சுமையாக இருக்க இன்றைய உலக நியதியில் தொடுபட்டு நிற்கும் தமிழீழமக்களின் விடுதலைப் போராட்டம் புதிய பரிமாணங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்து சமுத்திரம் ஏழு கடல்களுக்கான திறவுகோலை கொண்டுள்ளமை, அந்தச் சமுத்திரத்தின் கேந்திர அமைவிடத்தில் இலங்லைத்தீவு அமைந்துள்ளமை, இதனால் உலக வல்லரசுகள் இதில் தலையிடுபவை, அந்தத் தலையீடு அரசுக்கு அரசு என்ற நிலைப்பாட்டில் காணப்படும் அரசியல் யதார்த்தம் என்பவை தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை சகிக்க முடியாத வேதனைகளை தாங்கிச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளது.

இந்த சகிக்கமுடியாத வேதனையை நாம் எவ்வாறு கூட்டாக எதிர்கொள்கின்றோமோ அதில்தான் அழிவில் இருந்து ஆக்கம் பெறும் வலுமையைப் பெற்றவர்களாவோம்.

இந்த இடத்தில் யூத மக்களுக்காக ஒரு நாடு வேண்டும் என 1882 இல் அந்தக் கருத்தியலின் தந்தையான தியோடர் ஹேல் கூறியது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.

" நாங்கள் ஒரு மக்கள், எங்கள் எதிரிகள் எம்மை ஒரு மக்களாக ஆக்கியுள்ளனர். அவலநிலை எம்மை ஒன்றாக இணைக்கின்றது. அதனால் ஒன்றுபட்டு தீட~ராக நாம் எமது பலத்தை கண்டுகொண்டோம். ஆம் ஒரு அரசை அதுவும் ஒரு முன்மாதிரியான அரசை தாபிக்கும் பலம் எமக்குண்டு. அதற்கான எல்லா மனித வளங்களையும் மற்றும் மூலவளங்களையும் நாம் கொண்டுள்ளோம்"

தேசத்திற்கு, தேசியத்திற்கு விளக்கம் அளிக்கும் ஏனெஸ்ற் றெனன் என்னும் அறிஞன்:

" ..... கூட்டாக வேதனைப்படுவதும், நம்பிக்கை கொள்வதும், பொதுவான வரிகளையும், எல்லைகளையும் விட வலுவானது. ஒன்றுசேர்ந்து துன்பத்தை அனுபவிப்பது, கூட்டாக அனுபவிக்கும் மகிழ்ச்சியைவிட சக்திவாய்ந்தது. சொல்லப்போனால் தேசியமயமான வேதனை, வெற்றிகளைவிட மிக முக்கியமானது. ஏனெனில் அந்த வேதனைகள் கடமைகளை வலியுறுத்துகிறது, கூட்டான முயற்சியை வேண்டிநிற்கிறது. தியாகங்களைச் செய்தோரதும் அதனைச் செய்ய முன்னிற்போரதும் உணர்வுகளால் கட்டப்பட்ட ஒரு விழுமிய இணைப்பே ஒரு தேசமாகும். " என விளக்குகிறார்.

தேசிய விடுதலைக்காக சயினயிட் குழிசையை கழுத்தில் அணிந்திருக்கும் புலி வீரர்களின் ஓர்மம் "என் உயிரை இழந்தால் ஒழிய நான் என் சுதந்திரத்தை இழக்கமாட்டேன்" "நாம்யார்க்கும் குடியல்லோம், யமனை அஞ்சோம்" என்ற உறுதி, இதன் வழியான தியாகம். வேதனையை சுமக்கத் தயாராகிவிட்ட நிலை, இவையாவும் கண்டங்கள் பலவற்றிலும், கடல்கள் பல கடந்தும் வாழும் தமிழர்களிடையே பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணர்வலைகள் தமிழகத்தில் முத்துக்குமாரன்களையும் புலத்தில் முருகதாசன்களையும் எரிமலைகள் என வெடிக்கப்பண்ணி அழிவில் இருந்தான ஆக்கத்திற்கு புதிய ஓடுபாதைகளை திறந்துவிட்டுள்ளது. தமிழீழம் உலகத்தமிழர்களின் தாகமாகிவிட்டதைக் கண்ட சிங்களத்தின் அடிமனத்தில் உள்ள கிலியை தயான் ஜெயதிலகா போன்றவர்களின் எழுத்துக்களில் காணமுடிகின்றது.

தமிழ்நாட்டின் முத்துக்குமாரன் தனது மரணசாசனத்தில் பின்வருமாறு கூறியுள்ளதை நாம் மனங்கொள்ளல் வேண்டும்.
".....களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே, அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கு இல்லையே. ஆனால் நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலத்தில்தான் தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம்...."

கையறுகாலங்கள்தான் மனிதத்தின் பாச்சலுக்கான வாய்ப்புக்களை அளிக்கின்றது என்ற ஆழ்ந்த வரலாற்றுப் பிரக்ஞையுடன் உடன்பிறப்பு முத்துக்குமாரன் குறிப்பிடுவதை எதிர்மறை வல்லமை என (negative capability) பிரிவுத்துயரின் பிறவிக் கவிஞன் என ஆங்கில இலக்கிய உலகில் வாஞ்சையோடு அழைக்கப்படும் யோன் கீற்ஸ் என்னும் கவிஞன் குறிப்பிடுகின்றான் எனலாம். சாதனை புரியும் ஒரு மனிதனுக்கு அதற்கான வல்லமை எவ்வாறு வந்தது, எங்கிருந்து வந்தது எனக்கேட்ட இளம் கவிஞன், பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது ஏற்படும் வல்லமை அது எனவும், பிரச்சனைகளுக்குள் மூழ்கிப்போகாது நிற்போரால், அந்தப் பிரச்சனையில் இருந்து விலகி அதை அணுகும் வல்லமை கொண்டவர்களால் மட்டுமே இது முடியும் என்று தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகின்றான்.

முருகதாசனோ தன் மனஅழுத்தத்தின் மத்தியிலும் தெளிவான அரசியல் ஞானத்துடன் தன் சுதந்திரதாகத்தை வருமாறு குறிப்பிடுகின்றான்.

"...தமிழ் தேசம், சிங்கள தேசம் ஆகியவற்றின் வாழிடமே இலங்கைத் தீவு என்பது தமிழ் மக்களின் உறுதியான மாற்றமுறாத கருத்து நிலைப்பாடாகும். இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கும் அடிப்படையில்தான் இரு தேசங்களினதும் உண்மையான பிரதிநிதிகள் அதாவது இரண்டு தேசங்களினதும் எதிர்கால பாதுகாப்பு, பரஸ்பர நலன் போன்றவற்றிற்காக எவ்வாறு இரண்டு தேசங்களும் கூடிச் செயற்பட்டு தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு நீதியான நீடித்து நிற்கக்கூடிய தீர்வைக் காணலாம் என்பது குறித்து பேச்சுக்களில் ஈடுபடவேண்டும்.

இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள இனத்தவருக்கு உரித்தானது என்ற கொள்கை நிலைப்பாட்டினால்தான் சிங்களவர்களோடு சமத்துவமாக வாழும் ஒர் அரசியல் ஏற்பாட்டை பேச்சு மூலம் காண்பதற்கு தமிழினம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போயின. சமத்துவமான தமிழ் தேசம் உள்ளது என்ற இந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கு மறுத்த இந்த பௌத்த சிங்கள இன ரீதியிலான தேசியவாதமே இன அழிப்பு நோக்கிலான போர் வழித் தீர்விற்கு சிறிலங்கா அரசைத் தள்ளியுள்ளது."

முருகதாசனின் இந்தச் சொற்களுக்கு அழுத்தமும் வேண்டுமா? இவர் தேசத்தின் குரலுமல்ல. புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழ்த் தேசியத்திற்கு மாற்றுத் தலைமை தேடும் சர்வதேச பிரச்சனைகளுக்கான குழுவினருக்கு முருகதாசனின் மரண சாசனம் கசப்பினையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பாண்டிநாட்டு வீரர்களை பாடும்போது "துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர்" எனப் பாடுகின்றார். இன்று களத்திலும் புலத்திலும் நாம் துஞ்சாது அஞ்சாது செயல்பட வேண்டும். கொடியை என்றும் இல்லாத அளவில் தூக்கிப் பிடிக்கும் காலத்தின் தேவையும் இது. இரண்டு உலகமகா யுத்தங்களின் அழிவில் இருந்து ஆக்கம் பெற்ற தேசங்களே இன்று எமது போராட்ட சக்திக்கு தடைவிதித்துள்ளது. இதன் பின்னுள்ள அரசியலை விளங்கி செயல்படுவோம். தடைகள் உடைக்கப்படும். விடியலுக்கு இல்லைத் தூரம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி
ம.தனபாலசிங்கம்
சிட்னி, அவுஸ்திரேலியா

வியாக்கியானங்கள் உயிர்களைக் காப்பாற்றா!

வன்னியில் நடைபெறும் போர் எப்போது ஓயும் நிறுத்தப்படும் என்ற ஆதங்கமும் கேள்வியும் அங்கு அவலமுறும் தமிழ் மக்களின் மனங்களில் நிமிடத்துக்கு நிமிடம் எழுந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகப் போர் பெரும் பரிமாணத்தில் வேகம் கொண் டதால் தமது இன பந்துக்கள் மாண்டு போனது போன்ற கதி தங்களுக்கும் நேர்ந்திடுமோ என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் ஒவ்வொரு விநாடியையும் கழித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமா? அவர்களுக்குச் சற்றுத் தொலை வாக குடாநாட்டிலும், ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும், ஏன் தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்களும் தமது இரத்த உறவுகளுக்கு என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே பொழுதைக் கழிக்கின்றனர்.

இந்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து உலகத்தின் பல் வேறு நாடுகளிலும் வாழும் வன்னி மக்களின் புலம்பெயர் உறவுகளும் தங்கள் இரத்தத்தின் இரத்தங்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று ஏங்கித் தவித்தவாறே உள்ளனர்.

தமிழகத்தின் தொப்புள்க்கொடி உறவுகளும், போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு, ஈழத்தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலேயே ஈர்க்கப் பட்டுள்ளனர்.
இந்த அனைத்துத் தரப்பினரதும் விநாடி தவறாத பிரார்த்தனை, போர் நிறுத்தம் ஒன்று உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால் அதற்கு வழி செய்யக் கூடிய மனிதாபிமான அலகில் ஒரு துளியையேனும் இலங்கை அரச தரப்பில் காணமுடிய வில்லை.

ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளும் செல்வாக் குள்ள வெளிநாடுகளும் மனிதாபிமானத்தில் மனதூன்றி வன்னியில் மனிதப் பேரழிவை நிறுத்துமுகமாகப் போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டு வருகின்றன. ஆனால் அந்தக் கோரிக்கைகளைக் காதில் போட்டுக் கொள்ளாத போக் குடன், அரசு விட்டேத்தியாகச் செயற்பட்டுவருகிறது.
மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படு கின்றனவே என்று மனித நேயத்தின் பாற்பட்டு பல திக்குகளில் இருந்தும், பல வட்டகைகளில் இருந்தும் போர் நிறுத்தக் கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன; வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கோரிக் கைகளை விடுப்பவர்கள் "வேலையற்றவர்கள்" என்ற கணிப்போடு, அவற்றைக் கருத்தில் எடுக்காமல் அரசாங் கம் நாள்களைக் கழித்துக் கொண்டிருக்கிறது. காலத்தைப் போக்கி உயிரிழப்புகளை அதிகரிக்க வழிசமைத்துக் கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேரடியாகவும் வெளிப்ப டையாகவும் உத்தியோகபூர்வமாகவும் போர்நிறுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.
உத்தியோகப் பற்றற்ற முறையிலும் வெறும் வாய் மொழியாகவும், மறைபொருளாகவும் பெயருக்கு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவும் கேட்டுக் கொள்கிறது.
ஆனால், அரசாங்கம் அவற்றை உள்வாங்குவதாக இல்லை. தான் நினைத்த காரியத்தை ஒப்பேற்றும்வரை எவர் சொன்னாலும் மசியப் போவதில்லை என்ற போக்கி லேயே தொடர்ந்து செல்கிறது.

போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் காற்றில் வந்து கலந்ததும், அரசு சார்பில் ஒவ்வொருவராக நிலைப் பாட்டை நியாயப்படுத்தும் "சித்தாந்தங்களை" அவிழ்த்து விடுகிறார்கள்.

தமது நிலைப்பாடு சரியானதே என்றும், எந்தக் கோரிக்கையையும் தமது "இல்லை" என்ற கண்ணாடியை அணிந்து கொண்டே பார்க்க முடியும் என்ற வகையிலே அவர்கள் செயற்படுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கை எந்த விதத்திலும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. விடுதலைப் புலிகளைக் கருத்திற் கொண்டே அந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது என்று எதிர் மறையாக கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித @ஹாகன்ன.

முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களை அவர்களின் விருப்பப்படி வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றியம் புலிகளைக் கேட்டு வந்தது. அதன் வெளிப்பாடே இப்போதைய போர் நிறுத்தக் கோரிக்கை என்றும் அவர் அர்த்தம் பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மெதுவாக முன்னெடுத்து வருகிறது. இது கிட்டத்தட்ட போர் நிறுத்தம் ஒன்றுக்குச் சமமானதே என்று வாய்ப்பாட்டை சமன்ப டுத்துகிறார் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா.

மக்களைப் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதைகளை பிரகடனப்படுத்தி உள்ளோம். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். சிவிலியன்களைப் பாதுகாக்க ஏதாவது செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றியத்தின் கோரிக்கை இப்போது செயற்பாட்டில் உள்ளது. அதனைப் போர் நிறுத்தம் என்று கூறாவிட்டாலும் நாம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை அதற்குச் சமமானது என்று நீண்டு செல்கிறது ஊடக அமைச்சரின் வியாக்கியானம்.

அரசாங்கம் நினைத்தால் 48 சதுர கிலோ மீற்றர் பகுதியைக் கைப்பற்றிவிட முடியும். ஆனால் தற்போது இராணுவம் 100 அல்லது 200 மீற்றர் தூரத்தைக் கடப்பதற்கே சிந்திக்கிறது. காரணம் சிவிலியன்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை கொடுத்துள்ளமையே என்பது ஊடகத்துறை அமைச்சரின் வாதம்!

முல்லைத்தீவில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் நலன் கருதியே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நடை பெறுகின்றன என்று வெளி உலகத்தை நம்பவைக்கும் விவாத முயற்சிகள் தமிழ் மக்களின் மரணங்களைத் தவிர்க்க உதவப்போவதில்லை என்பதே உண்மை.
இந்தப் போக்கும் நிலைப்பாடும் மனித நேயத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் முரணானவை என்பதனை உணர்ந்து கொள்ளும் மனம் அரசாங்கத்திடம் பிறக்குமா?

நன்றி
-உதயன்-

Sunday, March 15, 2009

அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் ஊடகங்கள்

- அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?

சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன.

பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள்.

செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால்தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். இணைய தளங்களை பார்க்கும் வசதி சாதாரண மக்களுக்கு இல்லை.

டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?

சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன.

புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் பத்திரிக்கை / தொலைக்காட்சிகளை நடத்த முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழ் சங்கங்களும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

நடுநிலை தவறிய இந்த ஊடகங்களுக்கு தக்க பாடம் புகட்ட கீழ்க்கண்டவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து தமிழ் சங்கங்களையும், புலம் பெயர் வாழ் தமிழர்களையும் மிகவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இதன் பிறகும் இந்த ஊடகங்கள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அனைவரும் சேர்ந்து அவற்றை புறக்கணிக்க வேண்டுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Dinamalar :
dmrcni@dinamalar.com
Dinakaran :
dotcom@dinakaran.com,
Sun TV :
suntv@sunnetwork.in
Jaya TV :
program@jayanetwork.in
Kalaignar TV :
info@kalaignartv..co.in

நன்றி
-பதிவு-

Saturday, March 14, 2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் சொல் ஏறுமா,... என்ன?

இலங்கையின் வடக்கே அதாவது வன்னியில், முல்லைத்தீவில் மோதல் நடைபெறும் பகுதி களில் சிக்குண்டு பெரும் துயரங்களை எதிர்நோக் கிவரும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வசதியாக, உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படுத் தப்பட வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நிறைவேற்றிய தீர்மானம் இது. ஏற்கனவே பல தரப்புகளாலும் விடுக்கப்பட்ட கோரிக் கைகளுடன் இது பத்தோடு பதினொன்றாகிறது. அவ்வளவு தான்.

எந்தக் "கொம்பன்" கூறினாலும், வலியுறுத் தினாலும் அரசாங்கம் போர் நிறுத்தம் செய்யப் போவ தில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உட்படப் பல அமைச்சர்களும் ஏற்கனவே விட்டெறிந்து கூறிவிட்டார்கள்.

இறையாண்மை உள்ள எங்கள் நாட்டின் மீது போர் நிறுத்தம் செய்யுமாறு எந்த நாடும் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற திமிர்த்தனமான வார்த்தை கள் கூட அர சாங்கத் தலைவர்களின் வாய்களில் இருந்து பொறிப் பறந்தன.

அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தும் போருக்கு ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை மட்டு மன்றி, நிதி உதவியையும் வழங்கும் இந்தியா நேரடியாக அன்றி சாடை மாடை போட்டுப் போர் நிறுத்தம் குறித்துப் பிரஸ்தாபித்த சில மணி நேரத்தி லேயே அமைச்சர்களும், அதிகாரிகளும் அதனைத் தூக்கி எறிந்து பேசி அது குறித்து உத்தியோகப் பற்றற்ற முறையில் தானும் வாய் திறக்கவும் கூடாது என்ற தோரணையில், கடும் தொனிகளில் கர்ச்சித் தார்கள், அறிக்கை களைக் குவித்தார்கள்.

இதனை, தமிழகத்தைத் தாஜா பண்ணுவதற்காக இந்தியா விளையாடிய சடுகுடு என்று இப்பத்தியில் முன்னர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தோம்.

உலகப் பெருமன்றமான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனும் மக்கள் அழிவு களைத் தடுப்பதற்குப் போர் நிறுத்தம் செய்யுமாறு பெயருக்காக, நாமும் கேட்டோம் என்று முத்திரை பதிப்பதற்காகக் கேட்டிருந்தார். அதுவும் கூட இலங்கை அரசை அசைக்கவில்லை. கேட்டும் கேளாததும் போல முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டது அது.
போர்நிறுத்தம் குறித்து பிரஸ்தாபித்த ஏனைய தரப்புகளும் தாழ்ந்த குரலில் அனுங்கிவிட்டு அடங்கி விட்டன. அல்லது ஒப்புக்காகக் கேட்டுவிட்டோம், அத்தோடு முடிந்துவிட்டது எமது கடமை என்று சோர்ந்து ஓய்ந்து போயின!

ஆகக் கடைசியாகப் போர் நிறுத்தம் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை வந்திருக்கிறது. தாம் போர் நிறுத்தத்துக்கு ஆயத்தம் என்று விடுதலைப் புலிகள் அறிவித்து மாதங்கள் இரண்டாகின்றன.

ஆனால் அது அவர்களின் பலவீனத்தின் பால், தம்மை அழிவிலிருந்து பாதுகாக்கும் உத்தி என்று கூறி யும், மற்றும் வகை வகையான அர்த்தங்களைச் சோடித்துக் காட்டியும் அரசு அதனைச் "சட்டை" செய்யாமல் தனது இரும்புப் பிடியை ஒரு நூல் அள வேனும் நெகிழ்த் துவதாக இல்லை.

விடுதலைப் புலிகளோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்நிறுத்தம் இல்லை என்ற நிலையில், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற முடிவுடன் நிற்கிறது அரசு. அதனிடம் ஐரோப்பிய ஒன்றியத் தின் சொல் ஏறும் எனக் கருத முடியவில்லை.
இத்தனைக்கும் ஐரோப்பிய ஒன்றியம், சமீப காலத்தில் உருவான அமைப்பு. செல்வந்த மற்றும் அபி விருத்தி அடைந்த 27 நாடுகள் அதில் அங்கம் வகிக் கின்றன என்பதனைவிட, அதன் செல்வாக்குச் சக்தி ஒப் பீட்டளவில் அமெரிக்காவையும் விடக்குறைந் தது என்பதே யதார்த்தம்.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கையும் இலங்கை அரசினால் பொருட்படுத் தப்பட மாட்டாது என்பது மிக இலகுவான ஊகம்!

மனித உரிமை மீறல்கள் மற்றும் நல்லாட்சி இன்மை குறித்து இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச் சலுகையை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அதட்டிய கதை அடிபட்டுப் போனது இப்போது மீள் ஞாபகத்துக்கு வருகிறது. விட்டேனோ பார் என்று எகிறிக் குதித்த ஐரோப்பிய ஒன்றியம், வேகத்தைக் குறைத்து, இலங்கை அரசு திருத்து வதற்கு, திருந்தியதாகக் காட்டுவதற்கு அவ காசம் வழங்கிப் பின்வாங்கிக் கொண்டது!
அந்த அனுபவத்தின் அல்லது வெற்றியின் மீது அமர்ந்துள்ள இலங்கை அரசுக்கு, ஐரோப்பிய ஒன் றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கை சிரிப்புக்குரிய தாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

வன்னியில் தமிழ் மக்கள் அவலப்பட்டால் என்ன, அழிந்து ஒழிந்தால் என்ன, இலங்கை அரசாங் கத்தை எந்தச் சக்தியாலும் போர் நிறுத்தத்துக்கு உடன்பட வைக்க முடியாது; அதனை நாடிச் செல் வாக்குச் செலுத்தவோ அன்றி உதவவோ இயலாது என்பதே இன்றைய யதார்த்தம்!

நன்றி
-உதயன்-

Tuesday, March 10, 2009

கருத்துக் கணிப்புக் கோரும் தீர்மானமும் அதன் பால் எழும் 3 கேள்விகளும்

உலகப் பேரரசுகளில் முன்னணி வகிக்கும் நாடு களில் ஒன்றான அமெரிக்காவில் இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகக் கட்சி. அந்நாட்டின் ஆட்சித் தலைவனாக ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருப்பவர் அங்கு வாழும் சிறுபான்மை இனத் தைச் சேர்ந்த பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நீண்டகால அரசியல், பொருளாதார, சர்வதேச உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒபாமா திருப்புமுனையான நடவடிக்கைகளை மேற்கொள் வார் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய ரீதியில் நிலவுகிறது.
அமெரிக்கா ஏகாதிபத்திய நாடு. ஆகையால் ஒபாமா வும் அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றே என்று எதிர்மறையாகப் பார்ப்போரும் உளர். அதுவும் தப்பென்று இல்லை.

ஒபாமாவுக்கு உள்ள பதவிசார் அனுபவம் குறை வென்பதாலும், அவர் தமது செயற்பாடுகளைத் தொடங்கி இரண்டு மாதம் கூட நிறைவு பெறவில்லை என்பதா லும் ஒபாமாவின் அரசியல் மகத்துவமும் மாண்பும் சாணக்கியமும் எத்தகையன என்பதனை இப்போது எடைபோட முடியாது.

இருப்பினும், அவர் பல பிரச்சினைகளை அல்லது விவகாரங்களை புதிய சகாப்தத்திற்கு ஏற்றால் போன்று சாதுரியமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகவும் கையாண்டு நீதி செய்வார் என்ற எதிர்பார்ப்பு பரந் தளவில், உலகளாவிய ரீதியில் உண்டு என்பது மறத் தற்குரியது அன்று.

அந்த வகையில், கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக, தமது அடிப்படை அரசியல் உரிமைகளுடன், தங்களுக்குள்ள பிறப்புரிமைகளை அனுபவித்து சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாமல் அல்லற்படும் ஈழத்தமிழர்களும் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் தமக்குச் சாதகமாக ஏதாவது நடைபெறுமா என்று எதிர்பார்ப்பது இயல்பே.
அதன் குறியீடாக, அமெரிக்காவின் சாந்தா கிளாரா மாகாணத்தின் (இணிதணtதூ) ஜனநாயகக் கட்சி மத்திய குழு நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை நோக்குவதில் தப்பில்லை. குறிப்பிட்ட மத்திய குழுவில் அங்கம் வகிக் கும் ஈழத்தமிழ்ப் பிரமுகர்கள் இதன் பின்னணியில் நின்று உழைத்திருப்பர் என்பதும் நிச்சயம்.

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தமக்குரிய முழுமையான சுதந்திரத்தையா அல்லது சுயாட்சியையா விரும்புகிறார்கள் என்பதை அறியும் பொருட்டு தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் கருத்துக் கணிப்பொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறது அந்தத் தீர்மானம்.
ஆட்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கிய கொள்கைத் திட்டமாக இலங்கை இன விவகாரத்தை கையாளும் அடிப்படையாக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஏனைய மாகாணங் களில் உள்ள ஜனநாயகக் கட்சியின் மத்திய குழுக் களில் இந்தப் பிரேரணையை நிறைவேற்றினால், அதன் பலன் பெருகும்.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை, இந்தத் தீர்மானத்தை அடிப் படையாக, ஆரம்பப் புள்ளியாக, கருவாக வைத்து முன் னெடுத்துச் செல்ல உதவும்; இலகுவாகவும் அமையும். பூரண சுதந்திரத்தையா அல்லது சுயாட்சியையா ஈழத் தமிழர்கள் அவாவி நிற்கின்றனர் என்பதனை அறிவதற் குத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில், கருத்துக் கணிப்பு நடத்தப் படவேண்டும் என்ற கருப்பொருள் வரவேற்கத்தக்கது.
ஆயினும்...

1977 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் தமக்குத் தனியரசு வேண்டும் என்று பெரும்பான்மை வாக்குகளால் தமிழ் மக்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். தமிழ் மக்களின் அந்த ஆணையை மழுங்கடிக்க திட்டம் தீட்டி செயற்படுத்தியவர் ஜே.ஆர் ஜெய வர்த்தனா.

தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து அதனை செயலாக்கக்கூடாது என்ற பேரினவாதத்தின் சிந்தனைக் கருவே இன்றைய இன்னல்களுக்கும், இக்கட்டுகளுக்கும் அத்திபாரம். தமிழ்மக்களின் ஒப்புதல் இன்றி பங்களிப்பு இன்றி இயற்றப்பட் டதே பிரிவினைக்கு எதிரான அரசமைப்புச் சட்டம்.

அதன்பின்னர் 1983 இல் நடத்தப்பட்ட இன அழிப் போடு தமிழ்மக்களின் அரசியல் ஆணையை தூக்கி எறியும் அத்தியாயம் ஆரம்பமானது.

ஜே.ஆரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நிறை வேற்று அதிகாரம்கொண்ட எல்லா ஜனாதிபதிகளும் அதே பாதையில் செயலாற்றி வருகிறார்கள். தமிழ்மக்களின் ஆணை மறந்து போன கதையாகியும் விட்டது!

தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவர்கள் மத்தியில் சுயேச்சையான ஐ.நாவின் சபையின் கண் காணிப்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது முதலாவது கேள்வி.
அமெரிக்க அரசு, இப்போதைய ஆளும் கட்சி, தனது தீர்மானத்தைச் செயலாக்க முன்வருமா என்பது இரண்டா வது வினா.

அமெரிக்காவில் அரசியல் கட்சி மட்டத்தில் இயற்றப் பட்ட மேற்படி தீர்மானம் நடைமுறைச் சாத்தியமாகும் வாய்ப்புண்டா? என்பது மிகப் பென்னம் பெரிய மூன்றாவது கேள்வி.

-நன்றி-
உதயன்

Sunday, March 8, 2009

தளராது போராளிகளுக்கு ஊக்கம் கொடுப்போம் உறுதியுடன் மீண்டெழுவோம்

ஒருபுறம் இந்துப் பெருங்கடல் ஏனைய முப்புறமும் சிங்களப் படைகள். சிங்கத் தின் குகைக்குள் சிக்கியிருப்பதுபோன்ற நிலையிலேயே நாமிருப்பது உண்மையே. வெளிப்பார்வைக்குத் தெரிவனவும் இன வாத ஆய்வாளர்களின் ஆய்வுகளும் கோடாரிக்காம்புகளான ஒரு சில தமிழர் களின் கூற்றுக்களும் புலிகளைப் பலமிழந்தவர்களாகவே காட்டி நிற்கின்றன.


ஆனால் புலிகளின் பலம் தொடர்பில் வேறெந்த அமைப்பையும் விடவும் சிறப்பாக ஆய்வு செய்யும் இந்தியப் புலனாய்வுத்துறையும் இந்திய அதிகாரபீடமும் புலிகள் பலத்துடன் இருப்பதாக வெளிப் படையாக ஏற்றுக்கொண்டுள்ளன.


கடந்த 2009.02.18 அன்று இந்தியப் பாராளு மன்றத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சிங்களத்தின் காலில் விழவேண்டும் என்று தனது அரசின் நிலைப் பாட்டைக் கூறினார்.


அவரது கூற்று பலராலும் கண்டிக்கப்பட்டபோதிலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். சிங்களத்தின் பிடரியில் விழுந்தது அடி. 2009.02.21 இரவு சிங்கள வான்படைத் தலைமையகம் தாக்குதலுக்குள்ளானது.


வான்படைத் தலைமையகத்தைத் தாக்கியழித்த கரும்புலி கேணல் ரூபன் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.ஒரு கல்லில் இரு மாங்காய் போன்று சிங்களப் பொருண்மியத்தின் இரண்டா வது முதன்மை மையமான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலும் அழிவுகளை ஏற்படுத்தினார்.


லெப்.கேணல் சிரித் திரன் சிங்கள வான்படை செயற்பாட்டு மையமான கட்டுநாயக்கா படைத்தளத் தில் தாக்குதல் நடத்தியிருந்தார். வான் கரும்புலிகளின் தாக்குதல் வெற்றியென்பது மதிப்பீடுகளுக்கு அப் பாற்பட்டது.


ஒருபுறம் கடலும் மூன்று புற மும் சிங்களப் படைகளாலும் சூழப்பட்ட சிறு நிலப்பரப்பில் புலிகளை முடக்கி விட்டதாக சிங்களம் கூறிக்கொண்டிருக்க, அதனை முழு உலகும் நம்பியது. எம்மவர் பலர்கூட ஊக்கமிழந்து தோற்றுவிட்டோ மோ என்று துயரப்படும் நிலையிலிருந்த போதுதான் வான் கரும்புலிகள் தமது சாதனையை செய்து காட்டினார்கள்.


வானூர்தி மேலெழுந்தவுடன் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆயுதபலம் சிங்களப் படை களுக்கு இருந்தது. ஆனால் வானோடிகளின் துணிச்சல், திறமை காரணமாக அவர்கள் தமது இலக்கை அடையும்வரை பறந்தார்கள். ஆக வான் கரும்புலிகளின் இலக்கு முழுமையாக அடையப்பட்டது.


உண்மையான சேதவிபரங்களை அறிய முடியாதளவிற்கு மூடிமறைப்பதில் வெற்றிபெற்றது சிங்கள அரசு. ஆனாலும் சில அவதானிப்புக்கள் மூலம் சில மதிப் பீடுகளைச் செய்யமுடியும்.


கடந்தகால வான் தாக்குதல்கள் அனைத்தின்போதும் சிங்கள வான்படை விமானங்கள் பறந்து வந்து வன்னியில் ஓர் சுற்றுச்சுற்றி தாம் பலமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார் கள். அவ்வாறான பறப்புக்கள்மூலமாக சிங்கள மக்களின் உளவுரணை உறுதி செய்துகொள்வார்கள்.


ஆனால் வான் கரும்புலிகளின் தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்குப் பறப்புக்களையே மேற் கொள்ளமுடியாத பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டது சிங்கள வான்படை. சிங்கள வான்படை மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டதன்மூலம் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரது வினைதிறன்மிக்க தாக்குதலின் வெற்றியின் பரிமாணம் வெள்ளிடை மலையானது.


எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையிழந்து போயிருந்த தமிழர்கள் வெற்றிக்களிப்பிலிருந்த சிங்கள எதிரிகளும் தமிழ் துரோகிகளும் இந்திய அதிகாரபீடமும் பன்னாட்டுச் சமூகமும் ஆச்சரியப்படுமள விற்கு தாக்குதலை நடத்தியதன்மூலம் ஒருபோதும் வீழமாட்டோம் என்ற செய்தி இடித்துரைக்கப்பட்டது.


அதிலும் குறிப்பாக இலக்குத் தெரிவும் புலிகளின் பலத்தை எடுத்துக்காட்டியது. அண்மைக்கால தற்கொடை வான்தாக்குதல் அமெரிக்காவில் நடந்தது. அத்தாக்கு தலில் பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள். அத்தாக்குதல்மூலம் பின்லாடன் உலகப் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டார்.


ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் விடுதலைப் போராளிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் தமது தற்கொடைத் தாக்குதலில்கூட எதிர்த்தரப்பு பொதுமகன் ஒருவர்கூட பாதிப்படையக்கூடாது என்ற இலட்சிய உறுதிப்பாட்டைக் கண்டு வியந்துநிற்கிறது பன்னாட்டுச் சமூகம்.


தாக்குதல் உத்தரவை வழங்கும் தலைவர் தொடர்பான மதிப்பீட்டையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருக்கிறது. கொடூரமான போரைத் தொடுத்து அப்பாவிகளைப் பலியெடுத்துவரும் சிங்களத்தரப்பு தமது இனப்படுகொலையின் உச்சத்தில் நிற்கிறது.


பச்சிளம் பாலகர் முதல் முதியோர்வரை அகவை வேறு பாடின்றி தமிழர்களைக் கொன்றொழித்து வருகிறது சிங்களம். அப்படியான சூழ் நிலையில் சிங்களத்தின் கோட்டையில் நடத்தும் தாக்குதல் ஒன்றின்போது பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட எவருமே புலிகள் மீது குற்றம்சாட்டியிருக்கமுடியாது.


அப்படியான களச்சூழல் இருந்தும்கூட சிங் களப் பொதுமகன் எவரையும் பாதிக்காத வகையில் தாக்குதலை நடத்தியதன்மூலம் இலக்கைத் தீர்மானித்ததன்மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் உலக அளவில் உயர்வாகப் பார்க்கப்படுகின்றனர்.


அத்தாக்குதலில் வீர காவியமான கருவேங்கைகள் நினைத்திருந் தால் பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத் திருக்கலாம். பலநூறு கோடி பெறுமதியான சொத்தழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அதுதான் விடுதலைப் புலிகளின் உயர் மரபு.


ஒழுக்கம். உலகமே உற்று நோக்க வைத்த உறுதி.மூன்று நாட்களில் புலிகளின் பலம் தொடர்பான மதிப்பீட்டை மாற்றம் செய்யவேண்டியநிலை ஏற்பட்டது இந்தியாவிற்கு. ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அடைக்கலம் அடைய வேண்டுமென்று புலிகளுக்குப் போதித்த பிரணாப் முகர்ஜி, புலிகள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்குமளவுக்கு நிலைமாறி யது.


இந்திய நிலைப்பாட்டை மாற்றினார் கள் கேணல் ரூபனும், லெப்.கேணல் சிரித் திரனும். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு போதும் வீழமாட்டார்கள். உறுதியுடன் மீண் டெழுவார்கள் என்ற செய்தியைக்கூறி தனது இன்னுயிரை இருப்போர் வாழ்விற்காக ஈகம் செய்த உயர்ந்தமனிதர்கள்.களத்தில் எமைக்காக்கும் எமதருமைப் போராளிகள் போற்றுதலுக்குரியவர்கள்.


பல நாடுகளின் இராணுவ உதவிகள் போர்த் தளபாட நன்கொடைகள், ஆலோசனைகள், ஊக்குவிப்புக்களுடன் வெறிகொண்டு வரு கிறது சிங்களப்படை. பத்து நாட்களுக் கொரு வெடிபொருள் கப்பல் பாகிஸ்தானி லிருந்து வருவதாகக் கூறுகிறது சிங்களம். அப்படி வரும் பெருமளவு ஆயுதபலத்துடன் தமிழின அழிப்பில் ஈடுபடுகிறது சிங்களப் படை.


ஆனால் அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் எதிரடி கொடுத்துவருகின்றனர் களத்தில் நிற்கும் போராளிகள். அவர்களது காப்பில் நாம் வாழ்ந்துவருகிறோம். போதியளவு உணவின்றி, உறக்கமின்றி, ஓய்வின்றி எமைக்காக்கும் போராளிகளுக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?


உலகப்போர் நியதிகளை மீறி வேதியல் குண்டுகளையும், கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி மனிதாபிமானமற்ற போரைத் தொடர்கிறது சிங்களம்.2009.02.14 ஆம் நாள் மத்திய, வடமேல் மாகாண தேர்தல் நாள். அன்றைய நாளுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளை அடியோடு அழித்து அனைத்து வன்னிமக்களையும் வதைமுகாமிற்குக் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்தார் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.


கிரிசாந்தி குமாரசாமி படுகொலை விசாரணை, செம்மணி புதைகுழி விசாரணை போன்ற எந்தவொரு விசாரணைகளும் நடை பெறமாட்டாது என்றும் இராணுவத்தினர் விரும்பிய எதனையும் தமிழர்கள் தொடர்பில் மேற்கொள்ளலாம் என்றும் படையினருக்கு ஊக்கம் கொடுத்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச. வவுனியாவிலுள்ள வதைமுகாம்களிலுள்ள தமிழர்கள் சொர்க்கத்தில் இருப்பதுபோன்று சுகம் அனுபவிப்பதாகவும் தானே முன்னின்று அந்த மக்களை மூன்று ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்கப்போவதாகவும் ஐ.நா. அதிகாரியிடமே கூறியிருந்தார் அரச தலை வரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச.


மூன்று ராஜபக்சாக்களும் கண்ட கனவுகள் பலிக்கவில்லை.14ஆம் நாளுக்குள் புலிகளை வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்சவால் முடியவில்லை. தோற்கடித்தார்கள் போராளிகள். வன்னியிலுள்ள தமிழ்ப் பெண்கள் எல்லோரையும் கிருசாந்தியாகவும் கோணேஸ்வரியாகவும் நடத்தமுடியாமல் போனது கோத்தபாய ராஜபக்சவுக்கு. தடுத்துக்காத்தார்கள் களப் போராளிகள்.


வன்னி மக்கள் அனைவரை யும் வதைமுகாமுக்குக் கொண்டுசெல்லமுடிய வில்லை பசில் ராஜபக்சவால். காத்தனர் புலிகள். இங்கிருக்கும் தமிழர்கள் அனை வருமே சிங்களத்தின் எறிகணை வீச்செல் லையில் இருந்தபோதிலும் உயிரிழப்புக்களைக் குறைப்பதில் வெற்றிகண்டுள்ளனர் கரும்புலிகள். இப்போது எம்மைப் பாதுகாப்பது புலிகளின் வீரமும் விவேகமுமே என்பதனை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும்.


மதித்து நடக்க வேண்டும். இப்போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர் நடக்கிறது. விடுதலைப் புலிகள் தமது தாக்குதல்கள் தொடர்பாக எதனையும் சொல்லா விட்டால்கூட, அவ்வப்போது நீண்ட தூரத்திற்கு ஏவப்படும் எறிகணைகளும் சிங்கள ஏடுகளும், இந்திய ஊடகங்களும் கொழும்பில் சவச்சாலைகளும், மருத்துவ மனைகளும் பல செய்திகளைக் கூறிக் கொண்டே இருக்கின்றன.


அச்செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் புலிகளை அழிப்பதோ வீழ்த்துவதோ சிங்களத்தின் பகற் கனவே என்றுதான் கூறவேண்டியுள்ளது. ஏனைய ஊடகங்களின் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தால்கூட இன்றும் புலிகளே பலமாக இருப்பதாகத் தோன்றுகிறது.


பெப்ரவரி 14 அன்று மட்டும் உருக்குலையாத நிலையில் இருந்த 400 இராணுவ உடலங்கள் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டன. பெப்ரவரி 14 புதுக்குடியிருப்பு மேற்கில் 200 படையினர் கொல்லப்பட்டனர் என்று தென்னிலங்கை ஊடகம் கூறியது, பெப்ரவரி 25 விசுவமடுப் பகுதியில் கடும் சண்டை நடைபெறுவ தாக அரச ஊடகம் கூறியது.


28 ஆம் நாளுக்கு முந்திய வாரத்தில் புலிகளின் சிறப்பு கமாண் டோ அணிகள் பல பெரும் தாக்குதல்களை நடத்தியதாக லக்பிம பத்திரிகை கூறியது. மார்ச் 2 சாலைப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடத்தியதாக தென்னிலங்கை ஊடகம் கூறியது. கிபிர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இந்திய ஊடகமும் கண்ணால் கண்ட மக்களும் கூறினர்.


மார்ச் 3 அன்று வெற்றிலைக்கேணி, வண்ணாங் கேணிப் பகுதியில் கரும்புலித் தாக்குதல் நடந்ததாக தென்னிலங்கைச் செய்திகள் கூறியன. மற்றும் நாம் நாளாந்தம் கேட்கும் போரொலிகள் வெல்லாவெளி, கதிர்காமம் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் பலம்மிக்கவர்கள். மிக வலிமை மிக்கவர்கள் என்பதையே பறைசாற்றி நிற்கின்றன.


ஆக நாம் வீழமாட்டோம் என்பது உறுதி. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் படித்துப் பார்த்தவர்கள் கூறும் விடயமொன்று உள்ளது. அதாவது எந்தவொரு நாட்டிலும் நடந்திராத பல்திறன் மிக்க சொந்தக் காலில் நின்று போராடும் அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது.


பல்லாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஆரிய திராவிடப் போர் 1958 இல் சிங்கள வெறி யாட்டத்தின்மூலம் புதுப்பிக்கப்பட்டது. எமது தேசியத் தலைவருக்கு நான்கு வயதாக இருந்தபோது நடந்த இனப்படுகொலையில் இங்கினியாக்கல கரும்புத் தோட்டத்தில் பணிபுரிந்த 150 தமிழர்கள் சிங்களவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டனர்.


சிறு குழந்தைகள் சிங்களக் காடையர்களால் கொதிக்கும் தார் கொள்கலனில் அமிழ்த்திக் கொல் லப்பட்டனர். அன்றுதொட்டு 1983 வரை தமிழி னம் குட்டுவாங்கியபடியே இருந்தது. பல்லா யிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தட்டிக்கேட்க எவரும் இல்லை என்ற மமதை சிங்களத்திற்கு. மெல்ல மெல்ல வளர்ந்த புலிகள் திருப்பித் தாக்கும் வல்ல மைபெற்றபோது தமிழருக்கு என்று ஓர் மதிப் பும் மரியாதையும் கிட்டியது.


சிறு கைத்துப்பாக்கியுடன் தொடக்கப் பட்ட தமிழரின் வாழ்வுப் போரானது இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை யில் விவாதிக்கப்படுமளவுக்கு முனைப்புப் பெற்றுவிட்டது. இனி எவராலும் இந்த விடு தலைப்போரை முடக்கமுடியாது. இது எமக் கான காலம். அறுபடைக்காலம்.


ஆம். நாம் சந்தித்த துன்ப, துயரங்கள், சாவுகள், சதிகள், துரோகங்கள், அவலங் கள் அனைத்தையும் தாண்டி வந்துள்ளது எமது போராட்டம். எழுத்தில் வடிக்கமுடியாத ஈகங்கள், உயிர்கொடைகள்மூலம் வளர்க் கப்பட்ட செடி அறுவடையை நெருங்கிநிற்கும் காலம் இது. தற்போது நாங்கள் சிறுபகுதிக் குள் முடக்கப்பட்டிருப்பது உண்மையே. இருப் பினும் இதிலிருந்து மீண்டெழும் வல்லமையை எமது தலைவரும் அவருக்குத் தோள்கொடுக்கும் போராளிகளும் கொண்டுள்ளனர்.


இது உண்மையானது.இந்தப் போராட்டம் வெல்லும். தியாகி லெப்.கேணல் திலீபனும், கப்டன் மில்லரும், 2ஆம் லெப்.மாலதியும், கேணல்.ரூபனும் தோற்கடிக்கடிக்கப்பட முடியாதவர்கள். அவர்களது எண்ணம் ஈடேறும். இது உறுதி.


நாம் உறுதியுடன் மீண்டெழுவோம். அந்த எழுச்சி ஓர் நாட்டை உருவாக்கும். அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவடைக்குத் தயாராவோம். போராளிகளுக்குத் தோள்கொடுப்போம். துணைநிற்போம். வெல்லும்வரை செல்வோம். உறுதிதளராது ஊக்கம் கொடுப்போம். உறுதியுடன் மீண்டெழுவோம்.

சங்கதி