Thursday, January 31, 2008

மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி ஊடகத்துறை

இலங்கைத் தீவில் தமிழ்த் தேசியத்துக்காகவும் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பி வந்த ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தனது கொடூர அராஜகத்தை வெளிப்படுத்தி வந்த அதிகார வர்க்கத்தின் அரூபக் கரங்கள் இப்போது மொழி, இனம், தேசியம் கடந்து விரிந்து நீளத் தொடங்கியுள்ளன.

அதிகாரத்தின் அத்துமீறல்களை அராஜகங்களை துஷ்பிரயோகங்களை ஊழல், மோசடிகளை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி, நீதி, நியாயத்தை நிலைநாட்டக் குரல் எழுப்பும் ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் அரூபக் கரங்களினால் சட்ட விரோதமான அணுகுமுறைகளின்படி கையாளப்படும் கேவலம் இத்தீவில் இன்று அரங்கேறுகின்றது.
கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும் ஊடக உரிமைக்கும் காவலர்களாகச் செயற்படும் சர்வதேச அமைப்புகள் பலவும் கொழும்பு அரசின் ஊடகக் கையாள்கை நெறிமுறை குறித்துப் பெரும் விசனமும், அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்துத் தொடர்ந்து ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது தேசிய ஊடகப் பணி என்பது கடந்த இரண்டரை தசாப்த காலமாகவே மரணப் பொறி என்றாகி விட்டது. எந்நேரமும் சாவைச் சந்தித்தாக வேண்டும் என்ற புறமொதுக்கித் தள்ள முடியாத யதார்த்தப் பீதிக்குள்தான் அவர்களது அன்றாடப் பணிகள் தொடர்கின்றன.

ஆனால், தென்னிலங்கையில் சிங்கள, ஆங்கில ஊடகவிய லாளர்களின் நிலைமை முன்னர் சற்று மேம்பட்டிருந்தது. ஆனால் இன்றோ அவர்களின் நிலையும் அதுவேயென்றாகி இழிகடைக் கட்டத்தை எட்டி நிற்கின்றது.

எண்பதுகளின் கடைசியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் நிலவிய இருண்ட யுகத்தை நோக்கித் தென்னிலங்கை ஊடகத்துறையும் சென்றுகொண்டிருக்க, தமிழ்த் தேசிய ஊடகங்களும், "சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாக' மேலும் நெருக்குதல்களை எதிர்கொள்ளும் அதி உச்ச அச்சுறுத்தல் அவலத்தை எட்டியிருக்கின்றன.
எண்பதுகளின் கடைசியில் ரிச்சர்ட் டி சொய்சா போன்ற துணிச்சலான ஊடகவியலாளர்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் தென்னிலங்கை ஊடகத்துறை வரலாற்றில் மிக மோசமான நெருக்குவாரங்களை எதிர்கொண்டது.
அப்போது மனித உரிமைகளுக்காகவும், கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும், ஊடக உரிமைகளுக்காகவும் எழுந்த எதிர்ப் போராட்டங்களின்போது முன்னின்று மக்கள் சக்தியை வெளிப்படுத்திய தலைவர்களில் ஒருவர் அப்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தென்னிலங்கைப் பிரமுகர் மஹிந்த ராஜபக்ஷ.

தென்னிலங்கை ஊடகத்துறையைப் பொறுத்தவரை 1994 உடன் அன்றைய இருண்ட யுகம் விலகியது.
ஆனால் அன்று மனித உரிமைகளுக்காகவும், கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்காகவும் அயராது குரல் எழுப்பிய மனித உரிமைவாதி என்று மதிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இன்று இலங்கையின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகி, ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் தென்னிலங்கை ஊடகத்துறையும் மீண்டும் இருண்ட யுகத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.
ஊடகத்துறையினருக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் அடிக்கடி இடம்பெறும் தாக்குதல்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல் பாணியிலான அதிகாரிகளின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடுகள், ஊடகவியலாளரின் கருத்துகளைத் திரிவுபடுத்தி அவர்களைப் "பயங்கரவாதிகள்' ஆகவும் "இராஜதுரோகிகளாகவும்' சித்திரிக்க அரச அதிகாரம் எடுக்கும் எத்தனங்கள் என்பன இன்று சர்வதேசக் கவனிப்புக்கும் கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் எழுப்பும் பல அமைப்புகளின் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கின்றன.

அமைதி முயற்சிகளுக்கு சாவுமணி அடித்து முழு யுத்தத் தீவிர வெறியில் போர்ப் பிரகடனம் செய்திருக்கும் கொழும்பு நிர்வாகம் கள யுத்தத்தில் வெல்ல முன்னர், பிரசார யுத்தத்தில் வெற்றி கொள்ளத் துடிக்கின்றது. அதற்கு முட்டுக்கட்டையாக ஊடகங்கள் இருப்பதால் அவை மீண்டும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கி அதிகாரத்தின் அரூபக் கரங்களினால் நெட்டித்தள்ளப்படுகின்றன. அவற்றின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு, அசாதாரண நிசப்தத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அமைதி முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் செயற்பாடுகள் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே தமிழ் ஊடகத்துறையும் கொடூர அடக்குமுறை அராஜகத்துக்குள் வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது தென்னிலங்கை ஊடகத்துறையும் அந்தக் கொடூர அந்தகாரத்துக்குள் இழுத்து வீழ்த்தப்படுகின்றது.

அமைதிக்கான சமாதானத்துக்கான ஒளிக்கீற்று மீண்டும் தென்படும் போதுதான் இன்று இருள் யுகத்தில் சிக்கிக்கிடக்கும் ஊடகங்களும் வெளிப்பட்டு வெளிச்சத்துக்கு வரக்கூடியதாக இருக்கும்.

நன்றி -. உதயன்

"தன்மானமில்லா தமிழர்களின் புகலிடமான காங்கிரஸ்"

'இந்தியத் தேசிய காங்கிரசின் தோற்றம்'

அகில இந்தியம் பேசுவதில் முதன் வரிசையில் நிற்கும் காங்கிரஸ் கட்சி தன்மானமற்ற தமிழர்களின் புகலிடமாக மாறிப்போய்யுள்ளது வருந்தத்தக்கது. வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற பல்வேறு தேசிய இனங்கள் குழுக்குழுக்களாக போராடிய போது அதனை ஒருங்கிணைத்து அதன் மூலம் இந்திய தேசியத்தை எழுப்பி அரசியல் லாபம் பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி. வெள்ளையனை வெளியேற்றி விட்டோம் என்ற வெற்று முழுக்கத்தை எழுப்பிக் கொண்டு பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் தலைமையில் கட்சியைக் கட்டியெழுப்பி வெள்ளையரிடமிருந்த நிர்வாகத்தை கொள்ளையரிடம் கையளித்து 'சாதனை' படைத்ததும் இதே காங்கிரசு கட்சி தான்.

வடநாட்டு பார்ப்பன பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, இந்தி மொழியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை அதன் செயல் திட்டமாகவே செயல்படுத்தவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை அவர்களுக்கு பின் வளர்ந்த தேர்தல் கம்யூனிஸ்டுகள், பாரதீய சனதா போன்ற தேசியக் கட்சிகளும் நிரூபித்தன. அவை அவ்வப்போது அம்பலப்பட்டும் வருகின்றன.

தமிழக காங்கிரசின் கொள்கை

"ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என விடுதலைப்புலிகள் இயக்கத் தோழர் திலீபன் மற்றும் அன்னை பூபதி ஆகியோர் தொடங்கிய உண்ணாவிரதம் தேவையற்றது. தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் இறந்த விடுதலைப் புலிகளையும் மதிக்காமல் அவர்கள் மேடையிலேயே இறந்த போதும் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தி அதை உதாசீனப்படுத்தி ஈழத்திற்கு படைகளை அனுப்பியது சரியான நடவடிக்கை தான். அங்குள்ள தமிழ் பெண்களை இந்திய இராணுவம் கற்பழித்ததும் இளைஞர்களை கொன்று குவித்ததும் சரியே. ஈழத்தமிழர்கள் எங்கள் தலைவரை என்ன காரணத்துக்கு என தெரியாமலேயே கொன்று விட்டனர்.

அவர் ஒரு அப்பாவி. எனவே அம்மக்கள் இனி செத்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எமக்கு மூவாயிரம் ஆண்டு தமிழ் மொழியின் உறவை விட 50 ஆண்டு கால காங்கிரசும் அவாகளது பேரன் பேத்திகளின் உறவே போதும். அது தான் நாங்கள் இன்னும் வடநாட்டு பனியா சக்திகளுக்கும் அதன் மகள் மகன்களுக்கும் பல்லக்கு தூக்கி அடிமை சேவகம் புரிந்திட உதவுகிறது. இந்திய தேசியம் பேசுவோம். ஆனால் கட்சிக்குள் கூட எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மாட்டோம்". இது தான் தமிழக காங்கிரசின் எழுத்திலேறாமால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கொள்கை அறிக்கை.

.ஈழப்பிரச்சனையில் காங்கிரசின் நிலைப்பாடு

ஈழப்பிரச்சனைக்கு தற்பொழுது இருக்கும் ஒரே தீர்வு தனி ஈழமே. இதனை விடுதலைப்புலிகள் என்றோ உணர்ந்து விட்டனர். உலக நாடுகளும் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றனர். ஆனால் காங்கிரசின் தீர்வு என்ன? ஒன்று பட்ட இலங்கைக்குள் தமிழர்க்கு உரிமையாம். அக்கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட மாய வாதங்களை சொல்லி தமிழரின் தாயகமான தமிழ்நாட்டை ‘இந்தி'யனிடம் அடகு வைத்ததை போல, சிங்களவனிடம் ஈழத்தை அடகு வைக்க சொல்கிறார்கள். தன் மானமுள்ள தமிழர்கள் ஏற்காமாட்டார்கள் என்பதனை வரலாறு மெய்ப்பித்து வருகின்றது. அதனை காங்கிரசும் உணர்ந்திருக்கிறது.

அப்புறம் ஏன் தனி ஈழத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் தலைவரை கொன்று விட்டனராம். இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவர் தானே. அவா பிரதமராக இருந்த போது அவரை சுட்டுக் கொன்ற சீக்கியர்களை எதிர்த்து இதே காங்கிரஸ் தொண்டர்கள் தான் வன்முறையை ஏவீ அவர்களை கொன்று குவித்தனர். பின்னர், சுட்டுக் கொன்ற சீக்கியனின் மனைவியையே தேர்தலில் நிக்க வைத்து பாராளுமன்றத்திற்கும் அனுப்பினர். அது மட்டுமில்லாமல் சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் பதவியே கொடுத்தார்கள்.

ஆனால், ஈழப் போராளிகள் ராசீவ் காந்தியை கொன்றுவிட்டனர் என்று கூறி, நாளும் கொடுமை அனுபவித்து வரும் ஈழமக்களை மேலும் தன்பத்தில் ஆழ்த்துவதில் இவர்களுக்கு என்ன அக்கறை? இந்திரா காந்தியை சட்டுக் கொன்றவனின் மனைவிக்கு நாடாளுமன்ற பதவி கொடுத்த காங்கிரஸ் நண்பர்களே ஏன் தமிழர்களிடம் மட்டும் இந்த பாகுபாடு?

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி'யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது பயங்கரவாதம் என சொல்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், அக்கட்சி வட கிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமை கோரி போராடும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் இந்திய அரசே நடத்தும் பேச்சுவார்த்தைகள் பற்றி கண்டு கொள்ளவில்லை? கருத்து சொல்லவில்லை?

இந்த பாகுபாட்டைத் தான் 'இந்தி'ய தேசியம் என்கிறோம்.

ராசீவ்காந்தியின் சாதனைகள்

ராஜீவ் காந்தி என்கிற அரசியல் கோமாளியின் முட்டாள்தனமான முடிவுகளால் இந்திய அரசால் ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது பற்றி வாய் திறக்க எந்த தமிழகக் காங்கிரஸ்காரனாலும் முடியுமா? போபர்ஸ் ஊழல் வழக்கால் உள்நாட்டு அரசியலில் நாராடிக்கப்பட்டு காரி உமிழப்பட்ட ராசீவ்காந்திக்கு திடீரென பிறந்த அக்கறை தான் ஈழப்பிரச்னையில் அவரது தலையீடு. எந்த நாடு நாங்கள் அகிம்சையால் சுதந்திரம் பெற்றோம் என உலகநாடுகளிடம் பீற்றிக் கொண்டு போலி வேடமிட்டதோ அந்த நாட்டை எதிர்த்து அகிம்சை முறையில் உண்ணாவிரத அறப்போர் தொடங்கினார் விடுதலைப்புலி திலீபன்.

எதற்காக? ஈழத்திற்கு இந்திய இராணுவத்தை அனுப்பாதே என்று கோரிக்கையை வைத்து. அந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தி, திலீபன் அந்த உண்ணாவிரத மேடையிலேயே நீர் கூட அருந்தாமல் வீரமரணமெய்த வைத்தவர் தானே இந்த ராசீவ்காந்தி. அதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்த ஈழத்தாய் அன்னை பூபதியும் மரணமெய்திட செய்தவர் தானே இந்த ராசீவ் காந்தி.

கடந்த 07.11.2007 அன்று வெளிவந்த துக்ளக் வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ, விடுதலைப் புலிகளின் இயக்கம் தடைசெய்யப்படாமல் இயங்கியக் காலத்திலேயே அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லலாமா என ராசீவ்காந்தி ஆலோசனை நடத்தியது உண்மை தான் என வாக்குமூலமே அளித்துள்ளார். அது பற்றி சூடு, சொரணையுள்ள எந்த காங்கிரஸ்காரனாவது வாய்திறந்தானா? ஒர் இயக்கத்தின் தலைவரை அவ்வியக்கம் தடை செய்யப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அதன் தலைவரை சுட்டுக் கொல்ல ஆலோசனை நடத்தியவன் அரசியல் தலைவனா? அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் அப்பாவி காங்கிரஸ் தமிழர்கள் திருந்துவார்களா?

ராசீவ் காந்தியின் ஆணையால் ஈழத்திற்கு இந்திய இராணுவம் சென்றது. சிங்களன் மட்டுமல்ல 'இந்தி'யனும் தமிழனுக்கு எதிரிதான் என நிரூபித்தது. சிங்கள அரசும் செய்யத் துணியாத அட்டூழியங்களை அடுக்கடுக்காக செய்தது இந்திய இராணுவம். தமிழ் பெண்களை பாலியல் சித்தரவதைக்குள்ளாக்கி, அவர்களை கற்பழித்ததற்கான தடையங்கள் சிக்கிவிடக் கூடாதென, அவர்களது பிறப்புறுப்பிலும் துப்பாக்கியால் சிதைத்த கொடூரங்களையும் அரங்கேற்றினர் "இந்தி"ய இராணுவத்தினர்.

இந்திய இராணுவத்திலிருந்த ஒன்றிரண்டு தமிழர்கள் தன் மொழி மற்றும் இன உணர்வால் தமிழாகள் சிலரை தப்பியோடும்படி எச்சரித்ததை கண்டு பொறுக்காத மற்ற இராணுவத்தினர், தமிழ் இராணுவ வீரர்களையும் கொன்றனர். அதனால், அப்போரில் இறந்தவர்களின் பெயர்களைக் கூட இன்றுவரை வெளியிடாமல் வைத்திருக்கிறது 'இந்தி'ய அரசு. இந்த "சாதனை"களுக்கெல்லாம் சொந்தக் காரர் தானே இந்த ராசீவ் காந்தி.அவரது கொலை சம்பவம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு ஒர் இனத்தின் விடுதலைக்கே தடையாக நிற்பது தான் காந்தி உங்களுக்கு கற்றுத் தந்த அகிம்சையின் பயன்பாடா? இது தான் தங்கள் அகிம்சை வழியின் லட்சணமா?

அகிம்சை பற்றி பேசுவதற்கான தகுதி காங்கிரசுகாரர்களுக்கு என்றோ போய்விட்டது. மற்ற கட்சிகள் அதன் எதிர்கட்சிகளுடன் தான் சண்டை போடுவர். அடித்துக் கொள்வர். ஆனால், இதிலோ அனைத்திலும் வித்தியாசமாக அந்த கட்சிக்குள்ளேயே தினமும் ஒரு சண்டைக் கட்சி அரங்கேறுகிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வீரமரணத்திற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்தால் இரத்தக் கண்ணீர் வடித்ததாக அறிக்கை விட்ட காங்கிரஸ்காரர்களே... அது இரத்தக் கண்ணீர் அல்ல. தங்கள் கட்சிக்குள் சிலர் பதவிக்காக மண்டையை உடைத்துக் கொண்டதால் சத்தியமூர்த்திபவனில் வழிந்த இரத்தம்.

அம்மணமாகும் 'இந்தி'யத் தேசியம்
எழுச்சி பெறும் தமிழ்த் தேசியம்


வெறும் 50 வருடங்களாக காங்கிரஸ் உயிருடன் இருக்கும் காங்கிரசு அமைப்புக்குள் இருக்கும் தொண்டர்களுக்கு, மூவாயிரம் வருடங்களாக நாம் தமிழராக இருக்கிறோம் என்ற உணர்வு ஏன் இங்குள்ளவர்களுக்கு இல்லை? நம் தமிழர்களை தானே ஈழத்தில் தினம் தினம் சுட்டுக் கொல்லப்பட்டு மடிகின்றன சகோரதரனும், கற்பழித்து கொல்லப்படுகிற அக்கை தங்கைகளும் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள் தானே என்ற உணர்வு ஏன் இவர்களுக்கு இல்லை? வடநாட்டு பனியாக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள கொள்கைகளற்ற கொள்ளைக்கட்சியின் மீது இவர்களுக்கு அபிமானம் பிறந்தது எப்படி,? சுயலாபங்களுக்குகாக, தன் சொந்த தேசமான தமிழ்த் தேசத்தை மறந்து விட்டு வடநாட்டு பனியாக்களுக்குக பல்லக்குத் தூக்கும் துரோகிகளின் கூடாரமாக இக்கட்சி மாற்றமெடுத்தது எதனால்?

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழர்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் பொழுது இந்திய தேசியம் பேச வக்கற்ற காங்கிரசுக்கு, தமிழர்களின் உறவுகள் ஈழத்தில் செத்து மடிகின்ற போது மட்டும் வாய்திறப்பது எதனால்? கேரளத்தில் இருந்து கொண்டும், கர்நாடகத்தில் இருந்து கொண்டும், ஆந்திராவில் இருந்து கொண்டும் தமிழனுக்கு நீர் தரக் கூடாது என செயல்படும் கம்யூனிஸ்டு, பா.ச.க, காங்கிரசுவாதிகள் உள்ளிட்ட 'இந்தி'ய தேச ஏமாற்று சக்திகள் தமிழகத்திலும் அதையே சொல்ல வேண்டியது தானே? இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு? இது தான் 'இந்தி'யத் தேசியம்.

இந்த 'இந்தி'யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். 'இந்தி'யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. காங்கிரசில் உள்ள தமிழர்களே! நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர்.

நன்றி .- க.அருணபாரதி.

வன்னிப் பிரதேசக் கொடூரங்கள் மட்டும் கொழும்பின் கண்ணில் படுவதேயில்லை

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மடுப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவி மாணவர்கள் 20 பேர் உட்பட 18 சிவிலியன்கள் கோரப் பலியாகியிருக்கின்றார்கள். மூன்று ஆசிரியர்கள், பத்து மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இந்தக் கோர கொடூர சம்பவம் பற்றிய செய்திகளைத் தென்னிலங்கை ஊடகங்கள் கையாளும் முறையைப் பார்க்கும்போதே வன்னித் தமிழ் மக்களை எவ்வளவு ஓரவஞ்சகத்துடன் தென்னிலங்கைச் சமூகம் அணுகுகின்றது என்பது புலனாகிவிடும்.

வன்னிப்பிரதேசத்தில் கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவி மாணவர்கள் சிறார்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிடக்கூடத் தென்னிலங்கை ஊடகங்களின் "ஊடக மனச்சாட்சி' இடம் கொடுக்கவில்லைப் போலும்.
நேற்று முன்தினம் பிற்பகலில் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இடம்பெற்ற இந்த அராஜகத் தாக்குதலில் அப்பாவிகள் குறிப்பாக ஏதுமறியாப் பள்ளிச் சிறார்கள் கொல்லப்பட்ட செய்தியே நேற்று முற்பகல் வரை தென்னிலங்கைக்குச் சரியாகச் சென்றடையவில்லை. அப்படியிருக்க நேற்றுக்காலை வெளியான வார மத்தி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, குண்டு வெடிப்பின் கொடூரம் பற்றிய தகவல்களை அமுக்கிக் கொண்டு ""பாடசாலை பஸ் குண்டு வெடிப்புத் தொடர்பாகக் குழப்பம்'' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
மற்றொரு ஆங்கிலத் தினசரி ஒன்று "பாடசாலைப் பிள்ளைகளைப் படைகள் கொன்றன என்று புலிகள் கூறுகின்றார்கள், இராணுவம் மறுப்பு' என்ற சாரப்பட செய்தியை நசுக்கி, அமுக்கி வெளியிட்டிருந்தது.

இக்குண்டு வெடிப்பில் அப்பாவிச் சிறுவர்கள் கொல்லப்பட்ட கொடூரத்தை அம்பலப்படுத்துவதிலும் பார்க்க அப்படிக் கொல்லப்பட்ட சிறார்களும், பொதுமக்களும் தமிழர்கள் என்பதால் அந்த மக்களின் பாதிப்பைப் பகிரங்கப்படுத்துவதிலும் பார்க்க அக் கொடூரத்துக்கான குற்றச்சாட்டு அரசுப் படைத் தரப்பின் மீதோ, சிங்கள மேலாண்மைப் போக்குப் பேரினவாதத்தின் மீதோ விழுந்து விடாமல் உறுதி செய்து கொள்வதில்தான் தென்னிலங்கை ஊடகங்களின் கவனமும் சிரத்தையும் அதிகம் ஈடுபாடு காட்டின.
சிங்கள நாளிதழ்களின் போக்குக்கூட அப்படித்தான் அமைந்தது.
ஆக, தமிழ் ஊடகங்கள் மட்டும் நடந்த கொடூரத்தை, அதற்குரிய முக்கியத்துவத்துடன் வெளிப்படுத்தியிருந்தன.

"புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த முகாம் தகர்ப்பு', "பிரபாகரன் படுகாயம்', "அவசர வைத்திய சிகிச்சைக்காகத் தமிழ்நாட்டுக்குச் செல்வதற்குப் பிரபாகரன் முயற்சி' என்ற அளவில் வன்னிக்குள், குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்புக்குள், இடம்பெறக்கூடிய "இரகசியங்களை' எல்லாம் "துல்லியமாக' தேடிப்பிடித்து அம்பலப்படுத்தும் தென்னிலங்கை ஊடகங்களுக்கு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் கூட வன்னிக்குள் இப்படி பச்சிளம் சிறார்கள் கொன்றொழிக்கப்பட்ட கொடூரம் பற்றிய செய்தியை சுயாதீனமாகத் தேடிப் பெற்றுக்கொள்ளவே முடியவில்லை. விசேடமாக அவ்வாறு தேடிப்பெற்று உண்மையை வெளிப்படுத்தும் மனம் அவற்றுக்கு அடியோடு இருக்கவில்லை.

இந்தக் கிளைமோர்க் கொடூரத்தை அநியாயத்தை கூட புலிகள் வெளிப்படுத்திய தகவலாக அறிக்கையிட்டு, அதன்மூலம் அதனுள் புதைந்திருக்கும் உண்மைத்தன்மை குறித்துத் தென்னிலங்கைச் சமூகம் மத்தியில் ஒரு சந்தேகத்தை அவநம்பிக்கையை விதைத்து, அந்த அவநம்பிக்கைப் பின்புலத்திலேயே நாமும் அச்செய்தியை வெளியிட்டோம் என்று காட்டி, சமாளித்துக் கொள்ளவே அவை அனைத்தும் முயன்றன.

தென்னிலங்கை ஊடகங்களின் நிலைமைதான் இது என்று பார்த்தால் கொழும்பு அரசினதும், அதிகாரிகளினதும், படைகளினதும் அணுகுமுறை கூட அப்படித்தான் இருக்கின்றது.
தென்னிலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படும் ஒரு அனர்த்தம் குண்டு வெடிப்போ, தாக்குதலோ நடந்துவிட்டால், அது குறித்து விழுந்தடித்து விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி, அந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கும் உற்றாருக்கும் அனுதாபம் தெரிவித்து, இறந்தவரின் இரத்தம் காய்வதற்குள் நஷ்ட ஈட்டையும் அனுப்பி வைக்கும் அரசுத் தரப்புக்கு, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் இவ்வாறு கோரக் குண்டுவெடிப்பில் அப்பாவிப் பாடசாலைச் சிறுவர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டிக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ கூட மனம் வரவில்லை. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு அவர்களும் தனது நாட்டு மக்களே என்று உரிமை கொண்டாடும் அரசினால் அனுதாபம் தெரிவிக்கக்கூட முடியவில்லை.

இப்படி அப்பாவிச் சிறார்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டமை பற்றிய செய்திகளை வெளியிடும் திராணி அரசு சார்பு நாளிதழ்களுக்கும் இருக்கவில்லை. ஒரு வரிச் செய்திகூட இதுகுறித்து அவற்றில் பிரசுரமாகவில்லை.

இவ்வாறு இந்தக் கொடூரக் குண்டு வெடிப்புப் பற்றியும், அதன் கோரம் தொடர்பாகவும் வெளியான செய்திகளை அமுக்குவதில் தென்னிலங்கை காட்டும் சந்தேகத்துக்குரிய சிரத்தையே இதில் தென்னிலங்கையின் சம்பந்தத்தை வலுப்படுத்தும் ஓர் ஆதாரமாகக் கவனிக்கத்தக்கது என்பதும் கவனத்தில் கொள்ளக்கூடியதே.

தென்னிலங்கையில் இதுபோல இடம்பெறும் கொடூரங்களை விழுந்தடித்துக் கண்டித்து, புலிகள் மீது குற்றம் சுமத்தி, பாதிப்புற்றோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் ஆனந்தசங்கரி போன்ற குழுவினரும், வன்னியில் விமானக்குண்டு வீச்சுகளிலும், இத்தகைய கிளைமோர்களிலும் அநியாயமாகப் பலியாகும் அப்பாவிகள் குறித்து அதீத மௌனம் காக்கின்றார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனாலும் அது பிச்சைக்காரனின் நன்றிக்கு ஒப்பான விசுவாசம் என்று கருதி அந்த மௌனத்தை நியாயப்படுத்தி ஒதுக்கி விடுவதே பொருத்தமானது.

நன்றி .- உதயன்

Wednesday, January 30, 2008

கொழும்பிடம் மீண்டும் பாடம் படிக்கத் தயாராகும் இந்தியா

இருபது வருடத்துக்கு முந்திய அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தை மஹிந்தரின் அரசு இப்போது தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதன் பின்ன ணியில், நமது அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவின் நேரடி யான பங்களிப்பும், தலையீடும், செல்வாக்கும் காரணமாக உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ஸ அமரசிங்க, இது குறித்து புதுடில்லி தெளிவு படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
"இந்தோ ஆசிய செய்திச் சேவை' என்ற இந்திய ஊடகம் ஒன் றுக்கு அளித்த செவ்வியிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பி, பதிலைக் கோரியிருக்கின்றார்.

1987 இல் தனது அழுத்தம் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கொழும்பு அரசின் மீது பலவந்தமாகத் திணித்ததும் அதன் அடிப்படையில் அந்த அரசைக் கொண்டு 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வலோற்காரமாக ஏற்படுத்தியதும் இந்தியாவே என்று பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ள ஜே.வி.பி. தலைவர், அதே அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை ஜனாதிபதி மஹிந்தரின் தற்போதைய அரசும் மீண்டும் தூக்கிப் பிடித்துத் தலையில் வைத்துக் கொண்டாடுவதற்கும் திரும்பவும் இந்திய அழுத்தம் ஏற்பட்டுள்ளதுதான் காரணமா என்ற சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, அது தொடர்பான தனது பிரதிபலிப்புகளை இப்போது சர்வதேச சமூகம் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், சர்வதேச சமூகத்துக்கு "காதில் பூச்சுற்றும் வேலையாக' அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருகின்றது சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு. கொழும்பின் அந்த நாடகத்தை சர்வதேச சமூகம் கண்டும் காணாமலும் இருப்பது போல புறமொதுக்கி ஏளனம் செய்துள்ளது.

ஆனால் இந்தியா மட்டுமே விழுந்தடித்து, அந்த நாட கத்தை வரவேற்று, அது அதிகாரப் பகிர்வுக்கான முதல் நட வடிக்கை என்று சிலாகித்துப் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றது. இதைப் பார்க்கும்போது இந்த நாடகத்தின் பின் னணி இயக்கம் இந்தியாவாக இருக்கலாமா என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க போன்றோர் கேள்வி எழுப் புவதில் நியாயம் உள்ளது போலவே தெரிகிறது.

இப்பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஒரு விடயம் இங்கு கவனிக்கத்தக்கது.
அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் ஏற்கனவே அரசமைப்பில் சட்டரீதியாக இடம்பெற்று உள்ளது. யாருடைய ஆலோசனையும், சிபார்சும் இன்றி ஜனாதிபதியே தாம் நினைப்பாராயின் தம்பாட்டிலேயே அதனை நடைமுறைப்படுத்த முடியும்.
சரி. இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவது என்ற தீர்மானத்துக்கு வந் திருந்தால் கூட, அந்த அரசமைப்புத் திருத்தம் இருபது ஆண்டு களுக்கு முன்னர் உருவாகுவதற்குக் காரணமாக இருந்த நாடு என்ற முறையிலும், அயல் வல்லாதிக்க நாடு என்ற முறையி லும் அந்த நகர்வை இந்தியா வரவேற்றிருக்கலாம். அப்படியும் நடக்கவில்லையே........!

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகி யன இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமைப்பின் மேற்படி முடி விலோ, செயற்பாட்டிலோ சம்பந்தப்படவேயில்லை.

ஆக பதினான்கு கட்சிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று (மேலக மக்கள் முன்னணி) இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஒப்பமிடவில்லை. எஞ்சிய பதின் மூன்றில் பன்னிரண்டு கட்சிகள் ஜனாதிபதி மஹிந்தரின் அரசுக்குள்ளும் அமைச்சரவைக்குள்ளும் அங்கம் வகிப்பவை. அந்த மிச்சமான ஒரு கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட போன மாதம் வரை அரசுக்குள் இருந்ததுதான்.

ஆக, அரசுத் தரப்புக் கட்சிகள் கூடி சட்டத்தில் அரசமைப்பில் உள்ள சில விடயங்களை நடைமுறைப்படுத்தும்படி அரசை அரசுத் தலைவரை கோரியிருக்கின்றன.
அதாவது, இருபது வருடங்களுக்கு முந்திய அரசமைப்புத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை இப்போது நடைமுறைப்படுத்துவது என்ற இணக்கம் அரசுக்குள் வந்திருக் கிறது. கவனிக்கவும் அரசுக்குள்தான் வந்திருக்கிறது. அவ் வளவே. தேசிய ரீதியில் அந்த இணக்கப்பாடு வரவேயில்லை. பிரதான எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய விடயமாக அலட் டிக்கொள்ளக்கூட இல்லை.

அது மாத்திரமல்ல. அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத் தத்தில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வை, தமிழர் தாயகத்தை வடக்கு, கிழக்கு எனத் தான் பிரித்து உருவாக்கிய மாகாணங் களுக்கு முழு அளவில் வழங்கும் எண்ணமோ, எத்தனமோ ஜனாதிபதி மஹிந்தரின் அரசுக்கு இல்லவே இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரியும் அம்சம். சட்டம் ஒழுங்கு, உயர் கல்வி, பெருந்தெருக்கள், காணி போன்ற முக்கிய அதிகாரங் களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பதில்லை என்பதில் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தில் சிக்கிக் கிடக்கும் கொழும்பு அரசு உறுதியாக உள்ளது.

இவ்வளவும் இருக்க இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக் காமல் அரசுக் கட்சிகள், அரசுத் தலைமையிடம் விடுத்த ஒரு கோரிக்கையைப் பெரிய விடயமாக அர்த்தப்படுத்துவது போல "அது ஒரு முதல் நடவடிக்கை' என்று இந்தியா புகழாரம்சூட்டி விழுந்தடித்து வரவேற்றமை உண்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதுதான்.
ஜே.வி.பி. தலைவர் கேட்ட அதே சந்தேக வினா தமிழர்கள் மனதிலும் ஓடுகின்றது. இந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்த இந்தியா கடமைப்பட்டுள்ளது.

லட்சத்துக்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் இலங்கை மண்ணை ஆக்கிரமித்து அத்தகைய செயற்பாடுகள் மூலம் கொடுத்த அழுத்தத்தை அடுத்து அந்த வலோற்காரத்தைச் சமாளிப்பதற்காக அரசமைப்புக்குத் தான் கொண்டுவந்த 13 ஆவது திருத்தத்தைக் கூட, இதுவரை நடைமுறைப்படுத் தாமல் இந்தியாவுக்குக் கஞ்சி காட்டியுள்ளது இலங்கை.

அதுபோன்ற மற்றொரு இந்திய அழுத்தத்துக்குத் திரும் பவும் இப்போது கஞ்சி காட்ட முயல்கிறது கொழும்பு. அதற் கான நாடகம்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் பெயரால் இப்போது அரங்கேறுகிறது.

இதில் துன்பியல் நிகழ்வு என்னவென்றால், இந்த நாட கத்தின் கதை மற்றும் இயக்கத்துக்குக் காரணமான இந்தி யாவே, இந்த நாடக நடிப்பில் ஏமாறப் போவதுதான். அதைப் புரியாமல் அந்த நாடக "ஸீனை' வரவேற்கிறது இந்தியா!

நன்றி - உதயன்

Tuesday, January 29, 2008

சிறீலங்காவில் நடக்கப்போவது சுதந்திர தினமா சுடுகாட்டு தினமா ?சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு
எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா
அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா !

இந்தப் பாடல் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் கொழும்புத் துறைமுகத்தில் வைத்து ரஜினிகாந்த் நடித்த தீ படத்திற்காக எடுக்கப்பட்டது. பின் திபை;படத்தில் இடம் பெறுவதற்கு தடையும் விதிக்கப்பட்ட பாடல். 30 வருடங்களுக்கு முன் மட்டுமல்ல சிறீலங்காவின் சுதந்திரத்தின் மீது கேள்வி கேட்க இன்றும் இந்தப் பாடல் பொருத்தமாகவே இருக்கிறது.

சிறீலங்காவில் அடுத்த மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள 60 வது சுதந்திரதினம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஏதாவது சாதனை படைத்துவிட்டு செங்கம்பளத்தில் நடந்து வந்து சுதந்திரக் கொடியை ஏற்றுவதற்கு ராஜபக்ஷ சகோதரர்கள் படாதபாடு படுகிறார்கள். எண்ணங்கள் நிறைவேறாவிட்டால் புலிகள் மீது தடையை விதித்தாவது சுந்திரக் கொடியை ஏற்றிவிடத் துடிக்கிறார்கள் கோத்தபாய ராஜபக்ஷ. அவர் காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக பேசினாலும் பல முனைகளில் இருந்து இராணுவம் வன்னிக்குள் உட்புகவே முயல்கிறது. இருப்பினும் விடுதலைப்புலிகளின் பலமான எதிர்ப்புக்களை தாண்ட முடியாமல் தினசரி இழப்புக்களுடன் திரும்பிக்கொண்டிருக்கிறது. இதனால் போரின் வெற்றி அரசுக்கு கானல்நீராக மாறியிருக்கிறது.

ஆனையிறவில் கொடியேற்றலாம், அல்லது கிளிநொச்சி நோக்கி படையை நகர்த்தலாம் என்று மனப்பால் குடித்த அரசு அதையெல்லாம் நிறைவேற்ற முடியாது என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்துள்ளது. போரின் போக்கு சுதந்திர தினத்தை பலத்த இராணுவப் பின்னடைவுகளுடன் சந்திக்க நேர்ந்தாலும் ஆச்சரியப்பட இல்லை என்றளவிற்கு அரசுக்கு எதிராகவே உள்ளது. இந்தவிடயம் இன்று பலாலித் தளத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் இருந்தே தெரிகிறது.

மறுபுறம் வன்னி மண்ணில் சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்கள், குண்டு வீச்சுக்கள் யாவற்றையும் மூச்சுப் பிடித்து தாங்கிய வண்ணமிருக்கிறார்கள் புலிகள். சிங்கள அரசியல் கட்சியான ஐ.தே.கவே சுதந்திரத்தை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராபக்சவும் முனைகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கள மக்களும் இந்தப் போரின் காட்டுத்தர்பாரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் புலிகள் மீது பழி போட்டு செய்தி எழுதின. இப்போது நிலமை தலைகீழாக மாறுகிறது. இறந்தவர்கள் தமிழ் மக்களாக இருக்கலாம் என்று சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் உண்மையை எழுதமாட்டார்கள் என்பது தெரிந்ததே. மேலைநாடுகள் சிறீலங்கா பற்றிய செய்திகளை எழுதுவது போலவே அவர்களின் சுதந்திரமும் இருக்கும் என்பதையும் உணர முடிகிறது.

இது இவ்விதமிருக்க மன்மோகன்சிங் சிறீலங்கா வரமாட்டார் என்பது இதுவரை உறுதியாகிவிட்டது. பித்தம் தலைக்கேறியவன் போல இடைக்கால அரசு, மட்டக்களப்பு தேர்தல் என்று சம்மந்தா சம்மந்தமில்லாத முஸ்தீபுகளில் இறங்கி எதைச் செய்வதெனத் தெரியாது அலப்பாரிக்கிறது மகிந்த அரசு.

சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்கள் ஓடி விட்டன. அதில் 30 வருடங்கள் போரினால் இரத்தம் சிந்தியாகிவிட்டது. மிகுதி 30 வருடங்கள் இனக்கலவரத்தில் ஓடிவிட்டது. பிரித்தானிய அரசு இந்தியாவிற்கு சுதந்திர்தை வழங்கி பெருமையடைந்தது போல, இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கியதால் பெருமையடையவில்லை என்பதையும் அறிய முடிகிறது. சிறீலங்காவில் நடைபெறும் நிகழ்வுகளால் நாம் கண்ணீர் விடுவதாக சென்ற வாரம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் பேசப்பட்டது இதற்கு சிறந்த உதாரணம்.

மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக் கொண்டாடுவதே சுதந்திரதினம்.
சுதந்திரம் என்பது தமக்கு மட்டுமே என்று அதிகார வர்க்கங்கள் நினைத்தால் அது சுதந்திரமாகாது.
நாட்டை சுடுகாடாக்கி சுதந்திரக் கொடிக்கு பெருமை தேடக் கூடாது.
புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்களைப் பார்க்க மக்கள் அனுமதிக்கப்படாத அவலம் நாட்டில் நிலவுகிறது.
நடக்கப் போவது சுதந்திர தினமா அல்லது சுடுகாட்டுத் தினமா என்ற கேள்வியை அரைகுறையாக புதைக்கப்பட்ட அழுகிய சடலங்கள் எழுப்புகின்றன.

சுப்பண்ணா சொன்னாரண்ணா சுதந்திரம் வந்ததென்னு
எப்பண்ணா வந்ததென்னு எனக்கும் தெரியல்லண்ணா
அப்பண்ணா நாம இன்னும் அடிமைகள் தானா அண்ணா !

இந்தப்பாடலே சுதந்திரதின கீதமாகக் கேட்கிறது…

நன்றி - அலைகள்

பாதாள உலகக் கும்பல்களுக்கு உயிர், உரமூட்டும் எத்தனங்கள்

பட்டறிவிலிருந்து பாடங்களைப் பழுதறப் படித்துக் கொள்வதில் தென்னிலங்கை தொடர்ந்தும் தவறிழைத்தே வருகின்றது.

தென்னிலங்கையின் மொனறாகலைப் பகுதியில் ஊடுருவியுள்ளனர் என்று கருதப்படும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கு உள்ளூர் கிராமவாசிகளுக்கு ஆயிரக்கணக்கில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வழங்குவதற்கு கொழும்பு அதிகார வர்க்கம் எடுத்திருக்கும் தீர்மானம், பட்டறிவை சரிவரப் பிரயோகிக்கத் தவறியதால் எழுந்த தப்பு என்றே தோன்றுகின்றது.
வடக்கு கிழக்குத் தமிழர்களின் இன உரிமைக்கான யுத்தத்தை ஒரு முனையில் எதிர்கொள்ளும் கொழும்பு அரசு மறுமுனையில் பாதாள உலகம் என்ற மிகப் பயங்கர கொடூர வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு நிற்கின்றது.

நாட்டை இன யுத்தம் ஆட்டிப்படைப்பது போல தென்னிலங்கைச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் இந்தப் பாதாள உலகக் கும்பலும் ஆட்டிப்படைத்து வருகின்றது என்பது வெள்ளிடை மலையாக துலாம்பரமான விடயம்.

உண்மையில் இருபத்தியைந்துக்கும் குறையாத ஆயுத இயக்கங்கள் செயற்பட்டு, அவற்றில் இருபதுக்கும் குறையாத இயக்கங்கள் திடீரென முடக்கப்பட்ட தமிழர் சமூகத்தில்தான் பாதாள உலகக் கும்பல்களின் அராஜகம் தீவிரமாக வேரூன்றியிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு மாறாக, சட்டரீதியான அரச நிர்வாகம் தொடர்ந்து பேணப்பட்ட தென்னிலங்கையில்தான் பாதாள உலகக் கும்பல் வேர்விட்டு ஆழப் பதிந்து, சமூகத்தில் புரையோடித் தனது கோரப் பிடியை வலுவாக்கிக் கொண்டிருக்கின்றது.

அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் நோக்கில் தமது கல்வியை குடும்ப வாழ்வை துறந்து, பல்வேறு இயக்கங்களில் இணைந்த ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், அவர்கள் சார்ந்த சுமார் இருபது இயக்கங்கள் வரை திடீரென முடக்கப்பட்டபோது, அந்த இயக்கங்களுக்குரிய ஆயுதங்களுடன் நட்டாற்றில் விடப்பட்டனர். அத்தகைய சூழலில் தனித்தனியாக பல பாதாள உலகக் கும்பல்கள் தமிழர்கள் மத்தியிலிருந்து இலகுவாகத் தோற்றம் பெறக்கூடிய சூழலும், வாய்ப்பும், சந்தர்ப்பமும் ஏன் அதற்கான கட்டாயமும் கூட இருந்தன. ஆனால் தெய்வாதீனமாக அப்படி ஏதும் நேராமல் போயிற்று.

ஆனாலும், தென்னிலங்கையில் இன்று கொடூர அராஜகங்களைப் புரியும் பாதாள உலகக் கும்பல்கள் போல தமிழர்கள் மத்தியில் இன்று கொடூரமும், அராஜகமும், அட்டகாசமும் இழைக்கப்படாமல் இல்லை.

அவற்றுக்கு, சீருடைத்தரப்புகளுக்கு அப்பால் ஒட்டுக் குழுக்களும், துணைப்படைகளுமே பின்னணிச் சூத்திரதாரிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இவை தமிழர் மத்தியிலிருந்து தாமாக உருவெடுத்த பாதாள உலகக் கும்பல்கள் அல்ல. தமிழர் தாயகத்தில் சில அழிவு வேலைகளுக்கு எனத் தெற்கால் ஊட்டி வளர்க்கப்பட்ட கோடரிக் காம்புக் குழுக்களே அவை.

இதேசமயம், தெற்கில் தனது சட்ட ரீதியான ஆட்சி தொடர்வதாக இலங்கையை நிர்வகித்த கொழும்பு அரசுகள் தொடர்ந்து கூறிவந்தாலும், தூர நோக்கின்றி தீர்க்கதரிசனமின்றி அவை மேற்கொண்ட நடவடிக்கைகள் தென்னிலங்கையில் என்றும் அடக்க முடியா பெரும் பாதாள உலகக் கும்பல்களின் சாம்ராச்சியம் வித்தூன்றி விருட்சமாக விருத்தி காண்பதற்கு வழி செய்துவிட்டன.

தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பியினரின் கிளர்ச்சியை அடக்கவென தெற்கில் அரசியல்வாதிகள் உட்படப் பல தரப்பினருக்கு அரசு "சப்ளை' செய்த சுமார் பதினையாயிரம் ஆயுதங்களும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்களை அடக்கவென கண், மண் தெரியாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்து, விநியோகித்து, சிங்கள இளைஞர்கள் எல்லோரையும் தாரதம்மியம் பார்க்காமல் படைகளுக்குச் சேர்த்து, அவர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பிய நடவடிக்கைகளும் எல்லைப்புற சிங்கள மக்களுக்குத் தற்பாதுகாப்புக்கு என்ற பெயரில் விநியோகித்த பல்லாயிரம் ஆயுதங்களும் ஒன்று சேர்ந்து, தெற்கில் பெரும் பாதாள உலகக் கும்பல் என்ற தனித்தனி இராச்சியங்களை ஸ்தாபித்து, உயிரூட்டி, விஸ்வரூபமாக வளர்த்துவிட்டிருக்கின்றன.

முன்னரே எல்லைப்புறச் சிங்கள மக்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தமைபோல இப்போது தென்னிலங்கைக் காட்டுப்புற மக்களுக்கு ஆயுதங்களை வழங்கத் தீர்மானம் எடுத்துத் தன் தலையில் மேலும் மண் வாரிப் போடத் தயாராகிறது போலும் தென்னிலங்கை.
ஏற்கனவே முப்பத்தியையாயிரத்துக்கும் அதிகமான சட்ட விரோத ஆயுதங்கள் தென்னிலங்கையில் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளன என்று கணிப்பிடப்படுகின்றது. அந்தத் தொகையை மேலும் அதிகரித்து, அந்தப் பாதாள உலகை மேலும் விஸ்தரித்துப் பலப்படுத்த தெற்குத் தானாகவே முயலும்போது தன் தலையில் தானே மண் அள்ளிப் போடும்போது யார் அதைத் தடுக்க முடியும்?

Uthayan.com

Monday, January 28, 2008

கடற்பாதுகாப்பு பொறிமுறையால் ஆபத்தாகும் தென்னாசிய பகுதி

உலகில் ஏற்பட்டு வரும் பொருளாதார தளம்பல்கள் பல முக்கிய நாடுகளை திண்டாட வைத்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை ஆசியா, மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் சந்தித்த மிகப்பெரும் சரிவுகள் வியாழக்கிழமையே ஓரளவு சீரான நிலையை அடைய ஆரம்பித்துள்ளன. இருந்த போதும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் மிக மிக அதிகம்.

இந்த இழப்புக்களை ஈடுகட்டுவதற்கு தமது செலவீனங்களைக் குறைத்து, மக்கள் மீதான வரிப்பணத்தை அதிகரிப்பதே சிறந்த வழி என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எண்ணியுள்ளன. உலகின் செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் அதன் தயவில் தங்கியுள்ள மூன்றாம் உலக நாடுகளையும் கடுமையாகப் பாதிக்கவே செய்யும்.

இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் அதிக பாதுகாப்பு நிதியை ஒதுக்கி போரை தீவிரப்படுத்தி வருகையில் உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் விரும்பத்தக்கதாக காணப்படவில்லை. போருக்காக அதிக நிதி வாரி வழங்கப்பட்டு கொண்டிருக்கையில், அதனால் நாட்டின் வருமானத்துறையில் ஏற்பட்டு வரும் தாக்கங்கள் ஆண்டுக்கான போர் செலவீனங்களை விட பல மடங்கு அதிகமாகும்.

முற்றாக முடங்கும் நிலையை அடைந்து வரும் உல்லாசப்பயணத்துறை, வரண்டுபோன முதலீடுகள், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், அதிகரிக்கும் விலை உயர்வுகள் என அரசு கடும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கையில், எதிர்பார்க்காத பல களமுனைகள் புதிதாக திறக்கப்படுவதும் பெரும் நெருக்கடிகளை தென்னிலங்கையில் ஏற்படுத்தி வருகின்றது.

மொனராகல மாவட்டத்திலிருந்து அம்பாந்தோட்டை மாவட்டம் வரையிலும் கடந்த வாரம் தோன்றிய அச்சமான நிலமை தற்போது கண்டிக்கும் பரவியுள்ளது. கண்டி மாவட்டத்தில் உள்ள ரந்தெம்பை நீர் மின்நிலையத்தை அண்டிய அடர்ந்த காட்டுப்பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகள் நடமாடியதாக சிங்கள மக்கள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து அந்த பகுதியின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், படையினரும், பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கொரவப்பொத்தானை கிரிகெட்டுவாவ பகுதியில் இருந்து 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதானது, தென்னிலங்கையின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு குழியினுள் 10 சடலங்களும், மற்றைய குழியினுள் 6 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட தகவல்களின் படி 10 நாட்களுக்கு முன்னர் புதைக்கப்பட்டுள்ள அந்த சடலங்களில் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படைத்துறை வெற்றியை எதிர்பார்த்துள்ள அரசிற்கு இந்த நிகழ்வுகள் எதிர்மறையானவை.

எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது ஒரு படைத்துறை வெற்றிச் செய்தியை கொடுத்துவிட அரசு கடுமையாக முயற்சி செய்து வருவது யாவரும் அறிந்ததே.

அதன் வெளிப்பாடாகவே மன்னார், மணலாறு, வவுனியா தெற்கு, யாழ். குடாநாட்டின் தென்முனை என தினமும் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. படைத்தரப்பு தமது இழப்புக்கள் தொடர்பாக தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்ற போதும் விடுதலைப் புலிகள் மோதல் தொடர்பான படையினரின் இழப்புக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

மன்னாரின் வட முனையில் படையினர் தமது சிறப்பு மற்றும் கொமோண்டோ படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகையில், விடுதலைப் புலிகள் தமது குறிபார்த்து பதுங்கி சுடும் படையணியை அங்கு நகர்த்தி உள்ளனர். தமக்கு எதுவித சேதங்களும் இன்றி எதிரிக்கு அதிக சேதத்தையும் உளவியல் தாக்கத்தையும் கொடுக்கும் இந்த போரியல் உத்தி கடந்த வாரம் படையினருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பாலைக்குழி களமுனையில் கடந்த செவ்வாய்கிழமை முன்நகர முனைந்த 58 ஆவது படையணியின் கொமோண்டோ றெஜிமென்ட் படையினர் மீது விடுதலைப் புலிகளின் பதுங்கி குறிபார்த்து சுடும் படையணியினர் நடத்திய தாக்குதலில் 12 கொமோண்டோக்கள் கொல்லப்பட்டதுடன், 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதனை படைத்தரப்பு மறுத்துள்ளது.

பொதுவாக பெரும் சமர்க்களங்களில் குறிபார்த்து சுடும் படையணிகளின் பங்கு முக்கியமானது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தீச்சுவாலை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் தனி ஒரு போராளி 40-க்கும் மேற்பட்ட படையினரை குறிபார்த்து சுட்டு வீழ்த்தினார் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது சோவியத்தின் ஸ்ராலின்கிராட் பகுதியை ஆக்கிரமித்திருந்த ஜேர்மனின் சிறப்பு படையணி பற்றாலியன்களை வீழ்த்த சோவியத் இராணுவம் அதிகளவிலான குறிபார்த்துச் சுடும் வீரர்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சோவியத் படையினருக்கு குறிபார்த்து சுடும் பயிற்சியை வழங்கிய ஆசிரியர் களத்தில் தனி ஒருவராக 273 ஜேர்மன் சிறப்பு படையினரை குறிபார்த்து சுட்டு வீழ்த்தியது இன்றும் சோவியத்து மக்களின் நினைவுகளை விட்டு நீங்கவில்லை.

இப்படியாக வடபோர்முனை தினமும் பல நெருக்கடிகளை படையினருக்கு ஏற்படுத்தி வருகையில் தென்னிலங்கையில் தோன்றி வரும் அச்சுறுத்தல்கள் அரசிற்கு கடும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசு தனது முக்கிய கேந்திர மையங்களை பாதுகாப்பதற்காக தீவிரமாக முயன்று வருகின்றது. இலங்கை விமானப்படையினர் வன்னி மீது பெரும் எடுப்பிலான தாக்குதல்களை நடத்தி வருகையில் விமானப்படையினரின் மிகையொலி தாக்குதல் விமானங்களின் தரிப்பிடமான கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீண்டும் வான் அல்லது தரை வழித் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சமும் தொடர்ந்து வருகிறது.

இதனால் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் விமானங்களின் தரிப்பிடங்கள் 5 அடி கொங்கிறீட் சுவர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆறுக்கு மேற்பட்ட வலயங்களாக பாதுகாப்பு நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைகளில் 200 சிறப்பு இராணுவ கொமோண்டோக்களும், 100 விமானப்படை கொமோண்டோக்களும் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், குறிபார்த்து சுடும் படையினரையும் அங்கு அரசு நிறுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தரை வழியிலான விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலை தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை தடுக்கும் நோக்குடன் ஒத்திகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை விமானப்படையினர் எவ்வளவு விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதற்கான ஒத்திகைகள் கடந்த வாரம் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்காக வை-12 ரக சிறிய போக்குவரத்து விமானம் ஒன்று விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் பறக்கவிடப்பட்டு தரையில் இருந்து விமான எதிர்ப்பு படையினர் தேடுதல் வெளிச்சங்கள் (ளுநயசஉh டiபாவ) மூலம் அதன் பறக்கும் புள்ளியை கண்டறியும் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அதாவது இலங்கையின் 60 ஆவது சுதந்திரதின விழாவிற்கு முன்னர் அல்லது அதன் போது அரசு கொடுக்க நினைக்கும் இராணுவ வெற்றியை மறுதலையாக்கி விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டால் அரசிற்கு பெரும் நெருக்கடிகள் தென்னிலங்கையில் தோன்றிவிடலாம் என்ற அச்சம் தற்போது தலைதூக்கியுள்ளது.

எது எப்படியிருப்பினும் போர் இலங்கைத் தீவு முழுவதையும் மெல்ல மெல்ல சூழ்ந்து வருவதே யதார்த்தமானது. ஆனால் அதனை எதிர்கொள்ளத் தேவையான படை மற்றும் பொருளாதார வளங்கள் அரசிடம் உள்ளனவா என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரும் கேள்வி. தென்னிலங்கையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சராசரியாக 5 ஆயிரம் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை அங்கு உருவாகி வருகின்றது.

பொலிஸார், படையினர், கடற்படையினர், விமானப்படையினர், ஊர்காவல் படையினர் என அரசின் எல்லா படை வளங்களும் முழு இலங்கைக்கும் பரவலடைந்துள்ள நிலையில் வடபோர்முனையின் கடல் எல்லையினை பாதுகாப்பதற்காக புதிய பொறிமுறைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அதாவது கடந்த டிசம்பர் மாதம் நெடுந்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற கடற்சமரில் அதிவேக டோராப் படகு மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டின் மேற்கு கடற்பகுதி விநியோகமும், பாதுகாப்பும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்ற உண்மையை இலங்கைக் கடற்படையினர் உணர்ந்துள்ளனர்.

எனவே அதிவேகத் தாக்குதல் கலங்களினால் பாதுகாக்க முடியாத அந்த கடற்பகுதியை கடற் கண்ணிவெடிகள், கடல் அடி தேடு கருவிகள் (ளுழயெச) கொண்டு பாதுகாப்பதற்கு கடற்படையினர் முயன்றுள்ளனர். அதாவது தமிழகத்திற்கும் மன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் கடல் கண்ணிவெடிகள் அதிகளவில் விதைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் இந்திய கடற்படையினருக்கு தெரிவித்துள்ளனர்.

இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக பாக்குநீரிணையில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் உலகில் அதிகம் மிதிவெடிகள் புதைக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதன் கடற்பகுதிகளும் கண்ணிவெடிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பது இலங்கைத்தமிழ் மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மீனவர்களும் பெரும் அழிவுகளை எதிர்கொள்ளவே வழிவகுக்கும்.

கடற்கண்ணிவெடிகளைப் பொறுத்தவரையில் அவற்றில் பல வகைகள் உண்டு எனினும் 50 கிலோ நிறையுடைய மிதக்கும் கடற்கண்ணிவெடிகள் நங்கூரத்தின் அல்லது கடல் அடிப்பகுதிகளில் ஏற்படுத்தப்படும் இணைப்புக்கள் மூலம் நீர்மட்டத்தில் இருந்து சில அடிகள் கீழே விதைக்கப்பட முடியும்.

நேரடியான தொடுகைகள் (ஊழவெயஉவ ஆiநௌ) மூலம் வெடிக்கும் கடல் கண்ணிவெடிகள் அல்லாது தன்னிச்சையாக (ஐகெடரநnஉந ஆiநௌ) வெடிக்கும் கண்ணிவெடிகளையே கடற்படையினர் விதைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீவகப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தரையிறக்கத்தை தடுக்கும் உத்தியும் இதில் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழக மீனவர்களும், இடம்பெயர்ந்து தமிழகம் செல்லும் இலங்கைத் தமிழ் மக்களுமே இந்த கடற்பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதுண்டு.

கண்ணிவெடிகளை விதைக்கும் போது அவை மீள எடுக்கப்படுவதற்கான சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாது விட்டால் அவை நீண்ட காலத்திற்கு இந்த கடற்பிரதேசங்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்த வல்லவை. பெரும்பாலான கண்ணிவெடிகள் 10 வருடங்கள் கூட செயற்றிறன் மிக்கதாக இருக்கக் கூடியவை.

மேலும் நங்கூரம் அல்லது இணைப்பிகள் மூலம் இணைக்கப்படும் கண்ணிவெடிகள் கடல் அலையுடன், அல்லது கடல்விலங்குகளின் தாக்குதல்கள் மூலம் இடம்மாறி செல்லவும் வாய்ப்புக்கள் உள்ளதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 300 இற்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பழ. நெடுமாறன் அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தோன்றியுள்ள நிலை மிகவும் ஆபத்தானதாகவே நோக்கப்படுகின்றது.

தமிழக அரசு சேது சமுத்திர திட்டத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எண்ணி வருகையில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைகள் வர்த்தக கப்பல்களுக்கும் எதிர்காலத்தில் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவை.

இலங்கை மிகவும் ஆபத்தான நாடாக மாறி வருவதாக உலகின் முன்னணி நாடுகள் தமது மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகையில் அதன் கடற்பகுதிகளும் தற்போது ஆபத்தாக மாறி வருவது கப்பல் வர்த்தகத் துறையை கடுமையாக பாதிக்கலாம் என்ற கருத்து தோன்றியுள்ளது.

மொத்தத்தில் தென்னாசியாவின் முனைப்பகுதி மிகவும் ஆபத்தாக நாளுக்கு நாள் மாறி வருவது கவனிக்கத்தக்கது

-அருஸ் (வேல்ஸ்)-

குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா

1947, ஆகஸ்ட் 15 - இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த நன்னாள் ஆகும். அதன் பிறகு நாட்டின் ஆட்சிமுறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணயசபை கூட்டப்பட்டது.

1946 டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் திகதிவரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று அமுலுக்கு வந்தது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் பற்றி பிரதமர் ஜவஹர்லால் நேரு 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசியல் நிர்ணயசபையில் விளக்கம் தந்தபொழுது `இந்தியா ஒரு விடுதலை பெற்ற, இறையாண்மையுடைய குடியரசு' என்று கூறப்பட்டிருந்தது.

ஆயினும், பின்பு தரப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியா ஓர் `இறையாண்மையுடைய மக்களாட்சியின் குடியரசு' என்று கூறப்பட்டது.

ஆயினும், 1975 - 77 நெருக்கடிக் காலத்தில், இந்திரா காந்தி அரசாங்கம் செய்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் முகப்புரையில், இந்தியா ஓர் `இறையாண்மையுடைய, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி முறையின் குடியரசு' என்று கூறப்பட்டது.

ஒரு நாட்டுக்குப் பல்வேறு பண்பாடுகளை அடுக்கி வைப்பதால் மட்டுமே அந்த நாட்டை வளப்படுத்திவிட முடியாது.

`சமதர்ம நாடு' என்ற கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் வைக்கப்பட்டது. அதைக் குறிப்பிட்டு பிரதமர் நேரு பேசியதாவது;

"இந்தத் தீர்மானத்தில் சிலர் சமதர்ம நாடாக இந்தியா குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறினார்கள். நான் ஒரு சமதர்மவாதி. சரியான மக்களாட்சி முறையில் இயங்குகிற ஒரு நாடு சதமர்ம நாடாக ஆகிவிடும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்பதால், சமதர்மக் குறிக்கோளை இப்பொழுது வலியுறுத்த வேண்டாம்".

பெயர் வைக்காமல் நடைமுறையில் சமதர்ம முறையில் திட்டங்களைப் பிரதமர் நேரு நிறைவேற்றினார். 1948 இல் அரசாங்கத் தொழில் கொள்கையை வகுத்தபொழுது, "to be interpreted in terms of the socialistic objective' அதாவது, `சமதர்மக் குறிக்கோளை வலியுறுத்தும் வகையிலான திட்டம்' என்று அவர் அறிவித்தார்.

1955 ஜனவரி 21 ஆம் நாள் ஆவடியில் காங்கிரஸ் மாநாட்டில் " Socialistic Pattern of Society' அதாவது `சமுதாயத்துக்குச் சமதர்ம முன்மாதிரியான குறிக்கோள்' பற்றிய தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்து பேசினார். அதனைக் காமராஜர் வழிமொழிந்தார். தீர்மானம் முழுமனதாக மாநாட்டில் நிறைவேறியது.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமதர்மம் பற்றிய குறிப்பு இல்லை என்றாலும் அரசாங்கக் கொள்கையிலும், திட்டங்களிலும், சமதர்ம முறையை ஏற்று ஜவாஹர்லால் நேரு செயல்பட்டார். ஆனால், `சமதர்ம நாடு' என்று அழைக்கப்பட்டால் தான் இந்தியாவில் சமதர்மம் நிலைபெறும் என்று அவருக்கு அடுத்து வந்த தலைமுறையினர் நினைத்தார்கள் போலும்!

அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சமதர்மம் எனும் சொல் சேர்க்கப்பட்டதாலேயே, அதன்பிறகு சமதர்ம அடிப்படையில் இந்திய அரசாங்கம் செயல்பட்டதாகக் கூற முடியாது.

நேரு காலத்தில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களும் சமதர்ம முன்மாதிரியில் தீட்டப்பட்டன. ஆனால், நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1974-79) சந்தைப் பொருளாதாரத்தைப் பின்பற்றியதாக இருந்தது.

1980 இல் அறிவிக்கப்பட்ட தொழிற்றுறை கொள்கையின் கீழ், பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பல தொழில்கள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டதுடன், அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளும் உயர்த்தப்பட்டன.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதாக 1991 இல் நரசிம்மராவ் - மன்மோகன் சிங் அரசாங்கம் தனியார் துறைக்கும் வெளிநாட்டு மூலதனத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, சந்தைப் பொருளாதாரத்துக்கு முழு ஆதரவு தந்து உலகமயமான பொருளாதாரம் இந்தியாவுக்குள் ஏற்றம்பெற அடிகோலியது. சமதர்மக் குடியரசு என்பது வெறும் அர்த்தமற்ற சொல்லாகிவிட்டது.

உலகமயமானதில், சில துறைகளில் இந்தியாவில் வளர்ச்சி காணப்பட்டது. இந்தியாவின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 1950 - 51 இல் ரூ. 1,40,466 கோடி என இருந்தது.

2004 - 05 இல் ரூ. 22,22,591 கோடி என உயர்ந்தது. 2003 முதல் 2007 வரையுள்ள நான்காண்டுகளில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி, 7.5 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதம் என வளர்ந்தது.

இது 2007 -08 இல் 10 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2001 இல் 39 பில்லியன் டொலர் ஆக இருந்த வெளிநாட்டு மூலதன வரவு 2007 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டொலரைத் தாண்டிவிட்டது.

வெளிநாட்டுத் தொடர்பு கணினித்துறையில் இந்தியா முதலிடத்தைப் பெற்று 50 பில்லியன் டொலர் வருமானத்தைச் சென்ற ஆண்டு அடைந்தது.

உலக அளவில் செல்வம் மிக்க சீமான்கள் -பில்லியன் டொலர் (ரூபாய் மதிப்பில் 4000 கோடி) உடையவர்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள பில்லியனர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

2006 இல் 36 என்ற அவர்களின் எண்ணிக்கை 2007 இல் 40 ஆக உயர்ந்தது. ஜப்பான் (24) சீனா (17) பிரான்ஸ் (14) இத்தாலி (14) ஆகிய பல நாடுகளை இந்தியா முந்திவிட்டது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி வேகமாகப் பெருகி வந்தாலும், உலகச் செல்வந்தர்கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை வளர்ந்துவிட்டாலும், சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த நிலையில் மாறியது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு நாடு வளர்ந்திருக்கிறது என்றால், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றதாக, உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் உரிய அளவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

பொதுவான சுகாதார நிலைமையை எடுத்துக்கொண்டால் உலக அளவில் 16 கோடி குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் பிறக்கின்றன. அதில் ஐந்தரை கோடி (அதாவது மூன்றில் ஒரு பகுதி) இந்தியாவில் பிறக்கின்றன.

இன்னும் மோசமான நிலைமை, பிறந்த 20 நாட்களுக்குள் உலகெங்கும் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி இந்தியக் குழந்தைகளாகும்.

பிறக்கும் குழந்தைகள் இறக்கின்றன என்றால், இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே சாகடிக்கப்படுவது அடங்கும். அத்துடன், குழந்தைப் பேறில் தக்க பாதுகாப்பின்றித் தாய்மார்களும் இறந்து விடுகிறார்கள்.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் தொகையில் 1000 ஆண்களுடன் ஒப்பிடும்பொழுது, பெண்களின் எண்ணிக்கை, 1901 இல் 972, 1951 இல் 946, 2001 இல் 933 எனக் குறைந்துகொண்டே வருகிறது. மண்ணடிமை தீர்ந்த நாட்டில் பெண்ணடிமை தீரவில்லை.

குடியரசுமுறை திறம்பட நடைபெறுவதற்குக் குடிமக்களுக்குக் கல்வி வளர்ச்சி மிக முக்கியமானது. பத்து ஆண்டு காலத்திற்குள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கெல்லாம் கட்டாய இலவசக் கல்வியை அரசாங்கம் தர வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டது.

ஆனால், பல பத்தாண்டுகள் உருண்டோடியும் இந்தக் குறிக்கோள் நிறைவேறவில்லை. ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 6 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று 1965 இல் கோத்தாரி கல்விக்குழு பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை நாட்டு உற்பத்தி அளவில் 4 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் அரசாங்கத்தின் கல்விக்கான செலவு இருந்து வருகிறது.

மேலும், ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் 100 மாணவர்களில் ஐந்தாம் வகுப்புக்கு 40 மாணவர்களும், எட்டாம் வகுப்புக்கு 23 மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கு 14 மாணவர்களும் தற்பொழுது செல்கிறார்கள். 17 - 24 வயதினரில் 6 சதவிகிதம் மாணவர்களால் தான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடிகிறது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புறம், விவசாயம் ஆகியவை மிகவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து முறைக்குத் தக்க கவனம் அரசியல் நிர்ணயசபையால் தரப்படவில்லை என்று மகாத்மா காந்தி கருதினார்.

1946, ஜூன் 22 ஆம் திகதியிட்ட `ஹரிஜன்' பத்திரிகையில் காந்தி பின்வருமாறு எழுதினார். "இந்தியாவின் சுதந்திரம் அடிப்படையான கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும், ஒரு குடியரசாக விளங்க வேண்டும்".

1951 இல் விவசாயத்தை நம்பி 72 சதவிகிதம் மக்கள் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 59 சதவிகிதம் பங்கைப் பெற்றிருந்தனர். ஆனால், 2006 - 2007 நிலைமைப்படி மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதம் உள்ள விவசாயிகள் நாட்டின் மொத்த உற்பத்தியில் 22 சதவிகிதம் அளவைத் தான் பெறுகிறார்கள்.

உலகளாவிய பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவின் வருமானம் பெருமளவில் பெருகியிருக்கிறது என்றாலும், 1994 - 2004 காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு இலட்சம் விவசாயிகள் வருமானம் இல்லாமல் வறுமையில் தள்ளப்பட்டு, கடன் தொல்லை தாங்காமல் கடைசியாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டது. இறந்தவர்கள் மட்டுமல்ல. அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நாடாண்ட ஆளவந்தார்கள் எத்தகைய உதவியையும் செய்ததாகத் தெரியவில்லை.

உலகமயமான பொருளாதாரத்தில் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புறங்கள் வளர்க்கப்படுகின்றன. பெரிய நகரங்கள்கூட செம்மைப்பட வளரவில்லை.

மும்பை நகரத்தின் மக்கள் தொகை 1 கோடி 60 இலட்சத்துக்கும் மேல் வளர்ந்துவிட்ட நிலைமையிலும், அங்கு சாக்கடை ஓரத்தில், சேற்றில் முடங்கிக்கிடக்கும் ஏழைகளின் அளவு 54 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது.

1 கோடி 40 இலட்சம் மக்களையுடைய டில்லியில் 45 சதவிகிதம் மக்கள் சேரிகளில் அடங்கிக் கிடக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரும் அரசியல் தலைநகரும் சேரிகள் சூழ்ந்த நகரங்களாக விளங்குகின்றன.

1947 இல் இந்தியத் துணைக்கண்டம் இரண்டாகப் பிளவுபட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் விடுதலை பெற்றன. 1970 இல் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து கிழக்கில் வங்கதேசம் தனி நாடாக ஆனது.

இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தபோதிலும் நடைமுறையில் இந்தியாவிற்குள் இரண்டு இந்தியர்கள், ஏழை இந்தியா - பணக்கார இந்தியா, கிராம இந்தியா - நகர இந்தியா என பிளவுபட்டு இருக்கின்றன. இரண்டு பிரிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே போகின்றன.

இந்திய நாட்டில் மண்வளம் நிரம்ப இருக்கிறது. இந்தியக் குடியரசின் ஆட்சிவளமும் மக்களின் மனவளமும் இன்னமும் செம்மைப்படவில்லை!

குடியரசு நாளைக் கொண்டாடும் நேரத்தில், உலகம் பார்த்துப் பாராட்டக்கூடிய, நாம் பார்த்துப் பெருமைப்படத்தக்கவகையில் குடியரசு நாடாக இந்தியாவை மாற்றிட இந்தியக் குடிமக்கள் பாடுபட வேண்டும்.

-இரா. செழியன்-
தினமணி

Sunday, January 27, 2008

"புதுடில்லி நிர்வாகத்தை ஏமாற்றவும் மஹிந்தரின் அரசு திடசங்கற்பம்"

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்தும்படி சர்வகட்சி பிரதிநிதி கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிபார்சு செய்திருக்கின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இடைக்கால நடவ டிக்கையாக அதனைச் செய்யும்படி அது வேண்டியி ருக்கின்றது.

இத்தகைய வேண்டுகோளுக்கான காய்நகர்த்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்ட தந் திர வேலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இந்தக் காய் நகர்த்தலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இந்தியா கருத்து வெளியிட்டிருப்பது குறித்தும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையும் வருத்தமும் தெரிவித்திருக்கின்றது.
இருபது வருடங்களாக அரசமைப்பிலும் சட்டத்தி லும் இருக்கின்ற ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வேறு யாரும் சிபார்சு செய்யத் தேவையில்லை. நினைத்தால் தாமே தம்பாட்டில் அதனை அவர் நடைமுறைப்படுத்தலாம்.
ஆனால் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் அதிகாரப் பகிர்வுக்கு எ?80;ச் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அத்திசையில் நகர விடாமல் தடுத்து இடையில் இக்கட்டுத்தடை போட்டு பதின்மூன்றாவது திருத்தத்தோடு கட்டிப்போட்டுவிட்டார் ஜனாதிபதி மஹிந்தர்.

இப்போது இடைக்கால நடவடிக்கையாக அரச மைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை முழு அள வில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான திசையில் ஆரோக்கியமாக நகர முடியும் என்றும் அவர் கதை விடுகின்றார்.
ஆனால் இது காலத்தை இழுத்தடித்து சர்வ தேசத்தை ஏமாற்றும் சூழ்ச்சித் தந்திரோபாயம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

மஹிந்தர் அரசின் இந்த நகர்வுகளைப் பெயரளவிலே னும் வரவேற்றுள்ள இந்தியா கொழும்பின் இந்த நகர்த் தலுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பௌத்த சிங் களப் பேரினவாதச் சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது அல்லது புரிந்துகொள்ளாமல் இருப்பது போலக் காட்டிக் கொள்வது வேதனைக் குரியது.

ஒரு லட்சம் துருப்புகளை இலங்கையில் நிலை நிறுத்தி தன்னுடைய கண் அசைவில் இயங்கும் பொம்மை மாகாண அரசு ஒன்றை வடக்கு , கிழக்கில் நிறுவி, தானே முன்னின்று நெம்பு போட்டுத் தள்ளியும், இந்த அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் சட்டமாக் கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை இங்கு நடைமுறைப் படுத்துவதை இந்தியாவினால் சாத்தியப்படுத்தவே முடியவில்லை.

சுமார் ஒன்றரை வருட காலம் புதுடில்லி அரசின் பிற்புல ஆதரவுடன் கொழும்போடு இழுபறிப்பட்டு, இயலாமல் போகவே வேறு வழியின்றி ஆதங்கத்தில் விசனத்தில் "தனித் தமிழீழப் பிரகடனம்' செய்துவிட்டுத் தலைமறைவாக வேண்டிய நிலை புதுடில்லியின் பொம்மை மாகாண ஆட்சிக்கு ஏற்பட்டது.

அப்போது கொழும்பில் ஜெயவர்த்தனா அரசு நாடாளுமன்றில் மூன்றில் இரு பங்கு அறுதிப் பெரும் பான்மையுடன் மிக வலிமையாக இருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா முழுப் பலத்தோடும், வலுவோடும் இருந்தார். பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் சூழ்நிலைக் கைதியாக, அச்சக்திகளின் தாளத்துக்கு ஆடுபவராக அவர் இருக்கவில்லை. அந்த ஜெயவர்த் தனாவைக் கொண்டு, அரசமைப்பில் பதின்மூன்றா வது திருத்தத்தைச் செய்யப் பண்ணி அதைச் சட்ட மாக்க வைத்த இந்தியாவினால் அதை நடைமுறைப் படுத்த வைக்க முடியவில்லை.
அதுவும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான துருப் புகளைக் கொண்டு இலங்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்க வைத்து முழு அழுத்ததைப் பிரயோகித் தும் அதைச் செய்ய முடியவில்லை.

அப்படியிருக்க
சிறுபான்மையினருக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்வது என்றாலே சீறிப்பாய்கின்ற பௌத்த சிங்க ளப் பேரினவாத சக்திகளிடம் அரசியலில் சூழ்நிலைக் கைதியாகச் சிக்கி, அந்தச் சக்திகளை நம்பி தமது அரசின் ஆட்சியைக் கொண்டு இழுக்கும் ராஜபக்ஷ நிர்வாகம், இப்போது அந்தச் சட்ட ரீதியான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது என்று அறி வித்ததும் அதை இந்தியா நம்புவதும், நல்ல நட வடிக்கை என வரவேற்பதும் புரியவே முடியாத விட யங்களாக இருக்கின்றன.

அரசமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் மஹிந்த அரசு நடத்தப்போகின்ற நாடகத்தில் ஏமாறப் போகும் முதல் கதாபாத்திரம் இந்தியாதான் போலும்.

அத்தகைய ஏமாற்றுதலுக்கு தானே முதல் இலக்கு என்பதை அந்தக் காய்நகர்த்தலை பகிரங்கமாக வர வேற்று விழுந்தடித்த அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் பாரதமே உறுதிப்படுத்தியிருக்கிறது.
அதிகாரப் பகிர்வை விரைந்து மேற்கொள்ளும்படி சர்வதேச சமூகம் ஜனாதிபதி மகிந்தருக்குக் கடும் அழுத் தம் கொடுத்து வருகையில், அதனைத் திசை திருப்பி காலத்தை இழுத்தடித்தது. சர்வதேசத்தின் கவனத்தை வேறு பக்கம் தள்ளி விடுவதற்காகவே இந்தக் காய் நகர்த்தலை முன்னெடுக்கின்றார் மஹிந்தர். அது புது டில்லிக்குப் புரியாமல் இருப்பது இலங்கையின் சிறு பான்மை இன மக்களின் துரதிஷ்டமின்றி வேறில்லை

Uthayan.com

`படுகொலைகளுக்கு கருணாநிதி துணைபோகப்போகிறாரா?'

கச்சதீவு நெடுந்தீவு கடலில் வைக்கப்படும் கண்ணிவெடிகள் மனிதாபிமானத்துக்கு வைக்கப்படும் அணுகுண்டுகள் என்று கடுமையாக சாடியிருக்கும் தமிழக முன்னணி நாளேடான `தினமணி' நடக்க இருக்கும் படுகொலைகளுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி துணைபோகப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
`என்ன கொடுமை இது' என்று மகுடமிட்டு நேற்று சனிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் தினமணி, இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் எடுத்துக்கூறி கடல் கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் வரலாறு மன்னிக்காது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மாநில உளவுப் பிரிவு மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது, அவர்களுக்கு எதிராக இலங்கை அரசு போர் தொடுப்பது, விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் வருவதை முடக்குவது போன்றவை வேண்டுமானால், இலங்கை அரசின் உள்நாட்டு விவகாரமாக இருக்கலாம். ஆனால், இந்திய மீனவர்கள் தங்களது தொழிலைத் தொடர முடியாமல் செய்வதும், மரண பயத்துடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதும் எப்படி இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருக்க முடியும்?

கச்சதீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே உள்ள கடல் பகுதி மீன்வளம் நிறைந்த பகுதி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கச்சதீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது மிகப்பெரிய தவறு என்று அன்றுமுதல் இன்றுவரை அத்தனை மீனவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கச்சதீவில் வலைகளை உலர்த்தும் நியாயமான உரிமைகூட நமது மீனவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

பன்னாட்டுக் கடல் எல்லை எது என்பதை வேலியிட்டோ, சோதனைச் சாவடிகள் அமைத்தோ, எச்சரிக்கைப் பலகை அல்லது விளக்குகள் மூலமாகவோ தெளிவுபடுத்த முடியாத பரந்து விரிந்து கிடக்கும் கடல் நிலவொளி மட்டுமே துணையாக நடுக்கடலில் மீன் பிடிப்பவர்கள், எல்லையை அறியமாட்டார்கள் என்பது பச்சிளம் குழந்தைக்குக்கூடத் தெரியும். அவர்கள் தவறுதலாக நுழைந்தால், படகுகள் கண்ணிவெடியில் சிக்கி வெடித்துச் சிதறும் பேரபாயம். என்ன கொடுமை இது?

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிற நாகரிக சித்தாந்தத்தையே தகர்க்கும் வகையில், ஒரு விரோதிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மீனவர்களைப் பழிவாங்கும் திட்டம்தான் இந்தக் கண்ணிவெடிகள் அமைக்கும் முயற்சி. இந்தக் கொலைவெறி முயற்சியை எப்படி அனுமதிப்பது?

ஆயுதக் கடத்தல் மற்றும் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க இலங்கை அரசு எடுக்கும் முயற்சிகள், இந்திய மீனவர்களின் உயிரைப் பறிக்கும் விதத்திலும், இந்தியாவின் இறையாண்மையை அச்சுறுத்தும் விதத்திலும் அமையும்போது அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்குமேயானால், அந்த அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்ட அரசு என்று தான் கொள்ள வேண்டும்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்குக் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கருத்துத் தெரிவிக்கும் தமிழக முதல்வர், நடக்க இருக்கும் படுகொலைகளுக்குத் துணை போகப் போகிறாரா?

கடலுக்கடியில் வைக்கப்படும் கண்ணிவெடிகள், மனிதாபிமானத்துக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் வைக்கப்படும் அணுகுண்டுகள். இதை நமது முதல்வர் நமது பிரதமருக்கும் நமது பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கும் எடுத்துக்கூறி கண்ணிவெடிகளை அகற்றத் தவறினால் சரித்திரம் மன்னிக்காது.

www.thinakkural.com

ஈழத்தமிழர் பிரச்சினை: திறவுகோள் சென்னையில்

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960 களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்களின் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது. அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகளாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும் மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டிருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம். மன்னர்களிடமோ வம்சங்களிடமோ எதேச்சதிகாரிகளிடமோ இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960 களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது. திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான். "சாமானியர்களின் சகாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள். இலங்கைத் தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும் தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது, தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது, சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது, ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும். அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டபோது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவாத அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது. பனிப்போரின் பின், பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தியுள்ளது. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது.

அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும். இந்த அடிப்படையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையும் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ஷ அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்ஷவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடைபோட வேண்டும். அதாவது, உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால், ராஜபக்ஷ அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்ற அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகளாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பதற்கான ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான். முழு இந்தியாவுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர். இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும். இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு. சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இன படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர். அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும். புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும். இதுதான் எளிமையான சூத்திரம். முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞானபூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஒர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால், அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக்கொண்டோருக்குத் தெரியும். அது ஒரு புறமாக இருக்கட்டும். புதுடில்லி மேற்படி, தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 பாராளுமன்ற ஆசனங் களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட மக்கள் எழுச்சி கொண்டபோது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது, புதுடில்லியால் பணிவதைத் தவிர வேறு வழி இருக்க முடியாது. இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம், மத்தியில் 40 பாராளுமன்ற ஆசனங்கள். இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களில் இனிமேல் பதவிக்கு வரலாம். இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக் கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்கமாட்டாது. ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி. அதேவேளை, தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம்போகும் இயல்பைக் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கா காலத்திலிருந்து இற்றை வரை இதனைத் தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்குக் கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர் குழாம் இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாகக் கூட்டுச்சேரும். இதன்படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும். ஆதலால், தமிழீழ மக்கள் இப்பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால், இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால், தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடன் தலைசாய்க்கத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும். இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம். ஆதலால், தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில் தான் உள்ளது. அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட. தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களின் ஜனநாயக மீட்பும் உருவாகும்.

சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை. அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக்கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்குக் கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு.

பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும். மக்கள் அலை எழும்போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும் . ஆதலால், தமிழீழ தேசிய பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும். தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத் தொடங்கியுள்ளது. அதனைப் பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும். முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரிக் கட்சிகள் உள்ளடங்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தைக் கொண்டுள்ளது.

இதனைத் தக்கவகையில் பயன்படுத்த வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும். உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகளாவிய ஏகாதிபத்தியத்தின் மையப் பொருளாதார ஒழுங்குதான். உலகிலுள்ள அனைத்துப் பலம்வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாகப் பங்குபோடப்பட்டுள்ளது.

ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடு தான். உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்க போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக் கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடிதான். இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓரு ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன.

ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசு என்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக் கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை. கொடியின் நிறம் தான் வேறு. கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம். மேற்படி பெரிய அரசுகளின் உலகளாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும். உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும். தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது. அது இராணுவ, பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒரு புறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது .இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சினை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். ஆகையால் தமிழீழப் பிரச்சினையை சர்வதேசப் பரிமாணத்தால் மட்டுமே தீர்க்க முடியும் . தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை- புதுடில்லி, உலகம் என மட்டுமே அமைய முடியும்.

-மு.திருநாவுக்கரசு-

Saturday, January 26, 2008

சிங்கள தேசத்தின் யுத்தப் பிரகடனம் - பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட பிழையான முடிவு

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் பலத்த கண்டனங்கள், விமர்சனங்கள் என்பவற்றைச் சட்டை செய்யாமல் விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிடும் நோக்குடன், அதற்கூடாக தமிழ் மக்களின் எதிர்ப்பை நிர்மூலம் செய்து விடும் நோக்குடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தை இலக்காகக் கொண்டு போர் முடுக்கி விடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னான காலப்பகுதியில் ஒரு சில வருடங்கள் மென்னிலையாக நடந்து வந்த யுத்தம் 2005 நவம்பரில் தற்போதைய அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னால் உக்கிரமடையத் தொடங்கியது. தொடர்ந்த காலப் பகுதியில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசுத் தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ மீதான கிளைமோர்த் தாக்குதல், கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் கொலன்னாவ எண்ணைய்க் குதம் என்பவற்றின் மீது நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல், அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட அழித்தொழிப்புத் தாக்குதல் போன்றவை நிகழ்த்தப்பட்ட காலத்தில் பிரகடனம் செய்துவிடாத யுத்தத்தை சிங்கள தேசம், இன்று எதுவுமேல்லாத ஒரு சூழலில், அதுவும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்காக சிங்களப் படைகளும் ஒட்டுக் குழுக்களும் சர்வதேசத்தின் பலத்த கண்டனத்திற்கு இலக்காகியுள்ள சூழலில் எதற்காகப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் கண்டறிய சர்வதேச சமூகம் துடியாய்த் துடிக்கின்றது.

சிங்கள தேசம் யுத்தத்தைப் பிரகடனம் செய்த விதம் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவில்லை. ஒருவகையில் இந்த முடிவு அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. சிங்களக் கடும் போக்காளர்களான ராஜபக்ஷ சகோதரர்கள் இந்த முடிவை கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்பாக மேற்கொள்ளக் கூடும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. ~போர்நிறுத்த உடன்படிக்கை 5 வருடங்களைக் கடந்தும் நீடித்தால் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து விடும். எனவே அதற்கு முன்பாக ஒப்பந்தத்திலிருந்து சிங்கள தேசம் வெளியேறிவிட வேண்டும்| என சிங்களக் கடும்போக்கு வாதிகள் அப்போது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அப்போது கூட மகிந்த ராஐபக்ஷ இந்த முடிவை எடுக்கவில்லை. ஆனால் இப்போது அம்முடிவை எடுத்திருக்கின்றார் என்றால் யுத்தத்தில் வெல்ல முடியும் என்ற துணிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? சர்வதேச சமூகத்தைச் சமாளித்துவிட முடியும் என்ற துணிவு உருவாகியிருக்கின்றது என்பதுதானே அர்த்தம்? அதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?

முதலில், கடந்த டிசம்பரில் வெளியான செய்திகளைப் பார்த்தால் இதனை ஓரளவு ஊகிக்க முடியும். டிசம்பர் மாத ஆரம்பத்தில் மகிந்த யப்பானுக்குச் சென்றிருந்தார். அவரால் நிதியுதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 1.9 பில்லியன் யென் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களுக்காக சிங்கள தேசம் மீது கடுமையான கண்டனங்களைச் சர்வதேச சமூகம் முன்வைத்திருந்த வேளையிலேயே இந்த நிதியுதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதியுதவி ஊடாக யப்பான் சொல்ல விரும்பும் சேதி மனித உரிமைகளை சிறிலங்கா மீறுவதையிட்டுத் தான் கவலைப்படவில்லை என்பதே. யப்பானின் கடந்த கால வரலாற்றை அதுவும் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்திய காலகட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் யப்பானுக்கும் மனித உரிமைகளுக்கும் உள்ள சம்பந்தம் என்னவென்பது புரியும்.

மனித குல வரலாற்றில் ஹிட்லர் நடாத்திய வதைமுகாம் படுகொலைகளுக்கு நிகராக சீனாவின் நான்கிங் பிரதேசத்தில் யப்பானியப் படைகள் நடாத்திய படுகொலைகளும் அட்டூழியங்களும் மறக்கப்பட முடியாதவை. அதேவேளை, போரின் வலி, அதன் கொடூரம் என்ன என்பதை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் யப்பானியர்கள் நேரடியாக அனுபவித்திருந்தும் கூட இன்னொரு மக்கள் கூட்டம் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாதென அவர்கள் நினைக்கவில்லை.

யப்பான் உட்பட வெளிநாடுகள் வழங்கிய நிதியுதவியின் பலத்திலேயே 2008 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு இம்முறை கையாண்ட வழிமுறைகள் மிகவும் கீழ்த்தரமானவை வெட்கக் கேடானவை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு சிலர் அரசின் பக்கம் சேரவுள்ளதாக ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே அரசு பிரசாரத்தில் ஈடுபட்டது. அது சாத்தியமற்றுப் போன நிலையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக அல்லது எதிராக வாக்களிப்பதைத் தடுத்து விடுவதற்காக மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் சிலர் கடத்தப்பட்டு வாக்களிப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒரு தடவையல்ல இரு தடவை இந்தச் சம்பவம் அரங்கேறியது. எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்த போதிலும் அரச சார்புக கட்சிகளோ அரச பிரதிநிதிகளோ இதனைக் கண்டிக்கவில்லை. சர்வதேச சமூகத்தின் எதிர்வினையோ வெறும் வாய்ப்பேச்சு அளவிலேயே இருந்தது.

இதேவேளை, எமது கிட்டிய அயல்நாடான இந்தியாவும் உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவும் சமாதானம் மூலம் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என உதட்டளவில் கூறிக்கொண்டு மறைமுகமாக சிங்கள தேசத்திற்கு ஆயுத பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டமை தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஐp கருத்துக் கூறுவதற்கு மறுத்தமை, அமெரிக்க கப்பற்படையின் பசுபிக் பிராந்திய கமாண்டர் அண்மையில் சிறிலங்காவுக்கு விஐயம் மேற்கொண்டு கடற்படைக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை, கடற்பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து என்பவை மேற்கூறிய வாதத்தை மெய்ப்பிக்கச் சிறந்த உதாரணங்களாகும்.

சிங்கள தேசமானது தமிழ் மக்களின் எதிர்ப்பை முறியடிக்கத் தேதி குறிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. 1978 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை அறிமுகப்படுத்திய போது அப்போதைய ஐனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாகச் சூழுரைத்திருந்தார். அந்த எதிர்பார்ப்பு, அதனால் உருவான நம்பிக்கை என்பவையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தரமான சட்டமாக்காமல் தற்காலிக ஏற்பாடுகள் என்ற பதப்பிரயோகத்தோடு அறிமுகப்படுத்தும் துணிவை அவருக்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தனது மருமகனான பிரிகேடியர் புல் வீரதுங்காவை யாழ்ப்பாணம் அனுப்பினார். அப்போது அவருக்கு சிறிலங்கா படைகளால் சிறந்த புலனாய்வு அதிகாரிகளாக விளங்கிய தமிழர்கள் உதவிக்கு இருந்தார்கள். ஆனாலும அவர்களால் தமிழர் போராட்டத்தை நசுக்கி விட முடியவில்லை. மாறாக அவர்களால் போராட்டத்தை விசுவரூபம் கொள்ளச் செய்யவே முடிந்தது.

பின்னர் சந்திரிகா அம்மையார் காலத்தில் தமிழர் எதிர்ப்பை முறியடிக்க மற்றுமோர் கெடு விதிக்கப்பட்டது. இம் முறை அவரின் மாமன் அநுருத்த ரத்வத்த களமிறக்கப்பட்டார். பல ஒட்டுக் குழுக்களும் அனுசரனையாக இருந்தன. ஆனாலும் கூட தமிழர் போராட்டத்தை நசுக்கிவிட முடியவில்லை.

~எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்| என்பதைப் போல இப்போது 2008 இல் மீண்டுமொரு கெடு விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் தமிழர் எதிர்ப்பை முறியடிக்கப் போவதாக சூழுரைக்கப்பட்டுள்ளது. முன் அனுபவத்தை வைத்தும் தமிழர் தரப்பிலுள்ள பலத்தை வைத்துக் கொண்டும் பார்க்கும் போது முடிவு ஊகிக்கக்கூடியதாகவே உள்ளது.

ஆனால், இங்கு நாம் கவனத்தில் கொண்டுள்ள விடயம் இந்தக் காலவரை பற்றியது. 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னான காலப்பகுதியில் உலக அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது அதிகம் பேசப்படும் விடயமாக இருந்து வருகின்றது.

விடுதலைப் புலிகள் தரப்பில் விடப்பட்ட சில தவறுகள், புலம்பெயர் தமிழர் சமூகத்தின் அசமந்தப் போக்கு, சிறிலங்கா தரப்பில் லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற சிறந்த இராஐதந்திரிகளின் வெளியுலகப் பிரசாரம் ஆகியவை தமிழர் போராட்டத்தை பயங்கரவதாத போராட்டமாக சர்வதேச சமூகம் கருதுவதற்கு வழி சமைத்தது.

அமெரிக்கா தலைமையிலான ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் நடவடிக்கையின் கவர்ச்சி தற்போது உலக அரங்கில் மங்கத் தொடங்கியுள்ளது. பின்லாடனை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், சதாம் ஹாசைனை அகற்றி விட்டு ஐனநாயகத்தை நிலைநாட்டுவதாககு; கூறிக் கொண்டு ஈராக்கிலும் Nஐhர்ஐ; புஷ் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்களில் இணைந்து கொண்ட ஆரம்ப கட்டக் கூட்டாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் பதவி விலகியமை, அமெரிக்க மக்களிடையே உருவாகி வரும் யுத்தத்துக்கு எதிரான மனோபாவம், உலகெங்கும் அமெரிக்கப் பிரiஐகளுக்கு உருவாகியுள்ள ஆபத்துக்கு அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணம் என்ற புரிதல் ஆகியவை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அரசுத் தேர்தலில் ஐனநாயகக் கட்சி வேட்பாளர் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் சிறி லங்காவின் கண்களுக்கு ஆபத்தை முன்னறிவிக்கும் சகுனங்களாகத் தென்படுகின்றன. தனது ~பயங்கரவாதத்துக்கு எதிரான போர்| எனும் வெற்றுக்கோஷம் இனிமேல் கவனத்தில் எடுக்கப்படாது என்பது புரியத் தொடங்கியுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பதட்டமே சிங்கள தேசத்தை நிதானமாக யோசிக்க விடாமல் யுத்தத்தை ஜோர்ஜ் புஷ்சின் காலத்திலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் எனச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. ஏனைய காரணங்கள் யாதாவது இருக்குமானால் அவை நிச்சயம் துணைக் காரணங்களே.

ஆனால், தனது முடிவு பிழையான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிழையான முடிவு என்பதைச் சிங்கள தேசம் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை. போர்க் களத்திலும் இராஜதந்திரக் களத்திலும் தற்போது உள்ள நிலைமைகள், ஏற்பட்டுவரும் மாற்றங்கள் என்பவை இதையே குறித்து நிற்கின்றன.

-சண். தவராஜா-

போர்நிறுத்தல் உடன்பாட்டின் முறிவும் ஈழப்போரின் இன்றைய பரிமாணமும்

-எரிமலை-


நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகி விட்டது. வலுவாக்கப்பட்டு, குவிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் துணையுடன் போரின் மூலம் மட்டுமே தமிழீழ மக்களின் விடுதலை இலட்சியத்தினைத் தோற்கடித்து விடலாம் என்ற முடிவுடன் முரண்பாட்டின் மையத்திற்குப் போரினை சிறிலங்கா மீள அழைத்து வந்துள்ளது. மறுபுறம், இந்தப் போரினை எதிர்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத கால கட்டத்திற்குள் தமிழீழ தேசமும்- புலிகள் அமைப்பும் நுழைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் இந்தப் போரின் எதிர்காலப் பரிமாணம் என்ன, ஈழப்போரின் புதிய அத்தியாயம் வெறுமனே தமிழர் (புலிகளின்) படைகளுக்கும், சிங்களப் படைகளுக்குமிடையேயான போர் என்ற வரைபுக்குள் அடங்கிவிடுமா அல்லது இது உலக, ஆசிய மற்றும் தென்னாசிய வல்லரசுகளும் சம்பந்தப்பட்ட பரந்த தளத்தில் இடம்பெறுகின்றதா?

***

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் முக்கிய கடல் ஒழுங்கையில், அதிகம் அச்சுறுத்தப்பட்ட பகுதியாகக் கருதப்படும் (ஆப்கானிஸ்தான் போர், பாகிஸ்தான் அணுகுண்டு, அல்-ஹைய்தா பதுங்குமிடங்கள் போன்ற விடயங்களால்) தென்னாசியாவின் பாதுகாப்பான வெளியெல்லையில் அமைந்துள்ள இலங்கைத்தீவில் இடம்பெறும் போர் சர்வதேச நலன்களுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு சர்வதேச விவகாரம் என்பது இப்போது பரவலாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். நோர்வே மத்தியத்துவம், யப்பான் சிறப்புத்தூதுவர், இணைத் தலைமை நாடுகள் என்கின்ற வடிவில் மேற்குலகின் நிறுவனமயப்படுத்தப்பட்ட அணுகுமுறை இலங்கை இனச் சிக்கலுக்குள் செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்தியா என்ற உலக வல்லரசாகும் அபிலாசை கொண்ட பிராந்திய சக்தி தனது செல்வாக்கு எல்லைகளுக்குள் இலங்கை விவகாரத்தினை முடக்கிக் கையாள முற்படுகின்றது என்பது சுமார் போரின் முப்பது ஆண்டுகால வரலாறு கூறும் உண்மையாகும்.

இன்று, சீனாவின் முத்துச்சரம் எனும் கடல்சார் வியூகவிரிப்பில் இலங்கைத்தீவும் ஒரு முத்தாகக் கோர்க்கப்பட்டுள்ளது என்பதும் பொருளாதார-இராணுவ வலுவுடன் துரித வலு விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள சீனா இலங்கைத் தீவில் தனது செல்வாக்கினைப் பெருக்கி வருகின்றது என்பது பிறிதொரு உண்மையாகும். யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல தரப்பும் இலங்கைத்தீவின் புவிசார் அமைவிடம் காரணமாக இலங்கைத்தீவின் மீது ஆர்வத்தினைக் கொண்டவர்களாகவே செயற்படுகின்றனர்.

இத்தகைய சர்வதேச உண்மைகள் மத்தியில் சிறிய தேசிய இனமான தமிழீழ மக்கள் தமக்கான படைப்பலத்தினைக் கட்டியெழுப்பி- பிரபாகரன் எனும் வலுவான தேசியத் தலைவரின் தலைமையில்-தங்களின் விடுதலைக்கான போரினைச் சிங்கள அரச அதிகாரத்திற்கு எதிராக நடாத்துகின்றனர். சிங்களத் தரப்பிடம் அகப்பட்டுக்கிடக்கும் அரச அதிகாரத் தினை (State Power) வசப்படுத்தி தமக்கான சுயமான அரசினை கட்டியெழுப்புவதற்கான போரில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், இலங்கைத்தீவின் அரச அதிகாரங்களை வசப்படுத்தி வைத்துள்ள சிங்கள தேசம் சர்வதேச விரிப்பினுள் தன்னைப் பொருத்திக்கொண்டு விடுதலைக்கான தமிழ் மக்களின் போரினை நசுக்க முற்படுகின்றது.

இந்தப் பின்னணியில், தற்போது ஆரம்பமாகியுள்ள அடுத்தகட்ட ஈழப் போரில் சர்வதேச சக்திகள் தங்களை எவ்வாறு பொருத்திக் கொள்கின்றன என்று ஆராய்வது கற்றலுக்குச் சுவாரஷ்யமானதும், விவாதிக்கப்பட வேண்டியதுமான முக்கிய விடயமாகும்.

***

இன்றைய உலக இயக்கம் ஒழுங்கற்ற அச்சில் இயங்குகின்றது (Anar chic Order) என்று விபரிக்கப்படுகின்றது. அமெரிக்கா முன்னெடுக்கும் வெளியுறவுக்கொள்கையில் காணப்படும் தன்னிச்சையான தன்மையும், சீனா முன்னெடுக்கும் கொள்கைகளில் காணப்படும் ஈவிரக்கமற்ற வணிக வலுவிரிவாக்கமும், ஐரோப்பிய ஒன்றியம் தனது புதிய ஒருங்கிணைக்கப்பட்ட வடிவத்தில் உலக விவகாரங்களை அணுக முற்படுவதும், மீள வலுப்பெற்று வரும் ரஷ்யாவின் உலகப்பார்வையும் இந்தக் கடுமையான யதார்த்தவாத அணுகுமுறையைப் பலப்படுத்துகின்றது. மறுபுறம், எரிபொருள் சிக்கல், சுற்றுப்புறச் சூழல் விவகாரம், பயங்கரவாதம் பற்றிய தன்னிச்சையான பார்வைகள், மாற்றங் காணும் வணிக வலுவிரிவாக்கம் போன்றன இத்தகைய அணுமுறைகளின் பின்னே புதிய விசைகளைப் பிறப்பிக்கின்றது. இதனால் உலக உறவுகளில் இப்போது நடைமுறை வாத அணுகுமுறை (Realisme) வெளிப்படையானதாகவுள்ளது. இந்த நடைமுறைவாத இயக்கப்போக்கில் நாடுகளின் நலன்களே மையத்தில் முடிவுகளைத் தீர்மானிக்கும். இதனால் இன்று சர்வதேச சட்டங்கள் எனப்படு பவையும், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்களும் தங்களது செல்லுபடியாகும் தன்மையை இழந்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனால் உலகம் சட்டங்களாலும், மனித நேய விழுமியங்களாலும் ஆளப்படாது நலன்களாலும், பலத்தினாலும் வழி நடத்தப்படுகின்றது என்கின்ற யதார்த்தம் வெளிப்படையாக இன்றைய உறவுகளில் ஆளுமை செய்கின்றது.

மறுபுறம், இந்தச் சர்வதேச ஒழுங்குகளில் அரசுகளே (States) இன்றைய உலகின் அடிப்படைக் கூறுகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. சர்வதேச மன்றங்களும், செயற்பாடுகளும், சட்டங்களும் இந்த அரசு என்ற கூறுகளினால் ஆக்கப்பட்ட விவகாரங்களாகவே எழுந்துள்ளது.

இந்த நடைமுறைவாதக் கோட்பாட்டினுள் பொருத்திப் பார்த்தால் சிங்கள அரசு எவ்வாறு உலக விவகாரங்களைக் கையாளுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

***

இன்று சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களும் மற்றும் மனிதாபிமானச்சட்ட மீறல்களும் மேற்குலகாலும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும், ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்களாலும் முக்கிய உலக விவகாரங்களில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை கவுன்சில், பாதுகாப்புச் சபையின் சிறுவரும் போரும் தொடர்பான பணிக்குழு போன்ற முக்கிய மையங்களில் சிறிலங்கா தொடர்பான விவகாரங்கள் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. (கவனிக்க: இன்றுவரை) தாக்கமுள்ள கண்டனங்கள், தண்டனைகள் சிறிலங்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு தமிழர்களினால் முன்வைக்கப்படுகின்றது.

இந்தச் சூழலை எவ்வாறு சின்னஞ் சிறிய சிறிலங்கா எதிர்கொள்கிறது?

சிறிலங்கா தனது இராஜதந்திரக் காய்களை நடைமுறைவாத உறவுகள் ஊடு நகர்த்துகின்றது. இன்று சர்வதேச விவகாரங்களில் தாக்கம் செலுத்தும் ஆசிய வலுநிலை மற்றும் ஆசிய நாடுகளின் ஒற்றுமை என்பன மனித உரிமைகள் விவகாரங்களில் சிறிலங்காவிற்குச் சாதகமாக அமைகின்றது. இதனை நடைமுறையில் நோக்கினால், சிறிலங்கா பெரும் மனித வதைகளைப் புரிகின்றபோதும் பிராந்திய வல்லரசான இந்தியா இதில் கரிசனை கொள்ளவில்லை. சீன வல்லரசு உச்ச உலக அமைப்பான பாதுகாப்புச்சபை வரையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டைத் தாங்கிப் பிடிக்கும் வெளிப்படையான சூழலுள்ளது. மேலும், பாகிஸ்தான் தலைமை தாங்கும் இஸ்லாமிய நாடுகளின் அணி போன்றன சிறிலங்கா சார்பு நிலைப்பாட்டினை எடுக்கின்றது. இந்த நிலைப்பாடானது மேற்குலகின் மனித உரிமைகள், சனநாயகம் போன்ற போதனைகளுக்கு (அல்லது இராஜதந்திரக் கருவிகளுக்கு) எதிராகப் பொதுவாக ஆசிய அரசுகள் கட்டியுள்ள காப்பரண்களாகும். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் மத்தியில் மேற்குலகு இந்த விடயங்களைத் தனது கருவிகளாகப் பயன்படுத்தித் தங்கள் நாடுகளில் தலையிடுவதாக நம்புகின்றன. சிறிலங்கா இந்த எதிர்ப்புணர்வினுள் மறைப்பெடுத்துப் பதுங்கியுள்ளது.

மறுபுறம், இராணுவ மற்றும் வியூக ரீதியான சிறிலங்காவின் அணுகுமுறையானது தனது புவிசார் நிலைப்பாட்டினை (புநழ Pழடவைiஉள) பாவித்து நிகழ்த்தப்படுகின்றது. ஒருபுறம், தமிழர்களுக்கு எதிரான போரில் கட்டற்ற இராணுவ, வியூக உதவிகளை வழங்கக்கூடிய சீனாவினையும், பாகிஸ்தானையும் சிறிலங்கா தனது பிரதான இராணுவத் தளவாட விநியோகத்தர்களாக வைத்துள்ளது. இந்த நாடுகள் தங்கள் அணுகுமுறைகளில் அரச அதிகாரத்தினை மட்டுமே ஆதரிக்கும் வலுவான நிலைப்பாடுகளைக் கொண்டவை. ஆபிரிக்க விவகாரங்கள் பலவற்றில் சீனாவின் இத்தகைய போக்கு மேற்குலகிற்குக் கடும் யதார்த்தவாத அணுகுமுறையினைக் கற்பித்தது. சூடானின் டர்பூர் (னுயசகரச) இனச்சுத்திகரிப்புப் பற்றிய மேற்குலக மற்றும் ஐ.நா. குற்றச்சாட்டுக்களைச் சீனா உட்பட ஆசிய-ஆபிரிக்க-அரபு நாடுகளின் ஆதரவுகளுடன் வலுவாகவே எதிர்கொள்வதை ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளலாம். சூடானின் எண்ணெய்வளம் இந்த மாயஜாலத்தினைப் புரிகின்;றது.

சிறிலங்காவிற்குத் தான் வழங்கும் இந்த உறுதியான ஆதரவிற்குப் பிரதிபலனாகச் சீனா சிறிலங்காவில் தன் கால்களை ஆழமாகவே பதித்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்குள் நுழைவாயில்களைக் கொண்ட காலியில் உள்ள சீன ஆயுதக் களஞ்சியம், அம்பாந்தோட்டையில் உள்ள சீனத் துறைமுக வசதிகள் என்பன சீனாவின் இந்தப் புவிசார் ஆர்வத்தினை வெளிப்படுத்துகின்றன.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை எப்போதும் இந்தியாவைச்சுற்றித் தனது வியூக உறவுகளை வைத்திருக்கவே விரும்பும் என்பது வெளிப்படையானது. குறிப்பாக, இந்தியாவின் வியூக முக்கியத்துவமுள்ள தென்பிராந்தியத்தினை நோக்குவதற்குச் சிறிலங்காவில் கிடைக்கும் வசதிகள் பாகிஸ்தானிற்கு மிகுந்த பலனுள்ளவை. இந்தச் சீன மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களைச் சில பொதுவாதக் காரணிகளால் இந்தியாவும் மேற்குலகும் கூட்டாக எதிர்கொள்ள விரும்புகின்ற போதும் இருதரப்புக்கும் இடையே நிலவும் வேறுபல முரண்பாடுகள் (கவனிக்க: இந்தியா தன்னை உலக வல்லரசாக விரிவாக்கம் செய்யும் முனைப்பிலுள்ளது) தவிர்க்க முடியாத பரஸ்பர நலன்சார் முரண்பாடுகளை உருவாக்குகின்றது. தனது காலடியில் சீனா, பாகிஸ்தான் மட்டுமல்ல மேற்குலகும் தளமமைப்பை அடிப்படையில் விரும்பாது. இது இந்தியாவிற்கு நீண்டகால இராணுவ, வியூக முனைகளில் இடையூறாக அமையும் என்பதை இந்தியக் கடற்படையும், பிறதரப்புகளும் தெளிவாக அறிந்து வைத்துள்ளன.

எனினும், இலங்கைத்தீவின் இனச்சிக்கலைப் பாவித்து சீனாவும், மேற்குலகும் இலங்கைக்குள் கால்பதித்துவிட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. இந்தியா இந்த ஏற்பாட்டிற்குள் ஒரு நுட்பமான கோட்டை வரையப் பார்க்கின்றது. கடந்த 20 வருடங்களாகவே புலிகளுடனான முரண்பாடு என்கின்ற தோற்றத்தைப் பாவித்து சிறிலங்காவுடன் (சிங்கள அரச அதிகாரத்துடன்) தன் நிலையை வலுப்படுத்த இந்தியா முயல்கின்றது. மறுபுறம், தமிழர்களின் வலுவிரி வாக்கத்துடன் எப்போது தேவைப்பட்டாலும் சமரசத்தினை எட்டக்கூடிய விதத்தில் தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையேயுள்ள தீர்க்கமான பிணைப்பை இந்தியா பாதுகாத்து வருகின்றது.

இந்த இரு தோணிகளில் பயணம் செய்யும் வித்தைக்கு, மேற்குலகின் நிறுவனவடிவப்படுத்தப்பட்ட தலையீடு அசௌகரகத்தினை ஏற்படுத்துகின்றது. மேற்குலக ஏற்பாட்டிலான போர்நிறுத்தல் உடன்பாடும்-இனச்சிக்கல் தணிப்பு முயற்சிகளும் தளம்பலை ஏற்படுத்துகின்றது.

மேற்குலகினைப் பொறுத்தவரை சீனாவின் வியூகத்தில் சிறிலங்கா இணையாமல் தடுப்பதற்கும், தங்களது செல்வாக்கின் கீழ் திருமலை உட்பட்ட முக்கிய மையங்களை வைத்திருப்பதற்குமான அணுகுமுறையினை மேற்கொள்கின்றது. குறிப்பாக பாகிஸ்தானால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பம் இந்தத் தேவைக்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. போர்நிறுத்தல் உடன்பாடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள், இணைத்தலைமை நாடுகள் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்குலகம் மேற்கொண்டது. இவை வெளிப்படையாகச் சிறிலங்கா அரசினை மையப்படுத்திய நடவடிக்கைகளாகவே அமைந்தன. அல்லது, அத்தகைய மையப்படுத்தலுடனான தலையீட்டையே சிறிலங்கா ஏற்றுக்கொண்டது. இந்த மேற்குலக வரைபடத்தில் தமிழர்களின் ஆயுதம் தரித்த விடுதலைப் போர் இடைநிறுத்தப்பட்டு, தமது கண்காணிப்புக்குள்-தாராளவாத பொருளாதாரக் கொள்கை கொண்டதாக (டுiடிநசயட நுஉழழெஅiஉ Pழடiஉநைள) அரசு அதிகாரம் இயங்க வேண்டும். இங்கு முக்கிய விடயம் தமிழர்களின் ஆயுதம் தரித்த போரினை நிறுத்த வேண்டுமாயின் அதன் ஆதாரமான இனச்சிக்கல் தீர்க்கப்படல் வேண்டும். அல்லது தமிழர்களுக்கும் அரச அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்படல் வேண்டும். மறுபுறம், இனச்சிக்கல் தீர்வுக்கான வழிமுறைகளில் இரு அரசுகளை (சிங்கள- தமிழ் அரசுகள்) உருவாக்கினால் அதன் விளைவுகள் எவ்வாறு என்பது மேற்குலகிற்கு 'தெரியாத பூதம்' போன்றதாக இருக்கும். இந்த வரைபடத்தில் தமிழீழ கோரிக்கையைப் பற்றி நிற்கும் புலிகள் இயக்கம் குறுங்கால நோக்கில் பிரச்சினையானதாக உள்ளது. எனினும், இலங்கைத்தீவின் நடைமுறையில் புலிகளையும் உள்ளடக்கிய தீர்வுத்திட்டமே தேவைப்பட்டது என்பதுடன் புலிகளின் இராணுவ வலு முக்கியமானதொரு கூறாக இலங்கைத்தீவினுள் செல்வாக்குச் செலுத்துவது மறுக்க முடியாத பிராந்திய நடைமுறையாகும்;. இதனால் புலிகளையும் உள்வாங்கி- பகுதியாக அங்கீகரித்துச் செயற்பட மேற்கு முனைகின்றது.

சிறிலங்கா சர்வதேச சக்திகளின் இந்த வியூக நலன்கள் சார் அணுகுமுறைகளைப் புரிந்துகொண்டு காய்களை நகர்த்தி இராணுவ வழிப்பட்ட தனது நோக்கினைப் பலப்படுத்திக் கொண்டது. படைப்பல வலு அதிகரிக்கப்பட்டது. பலதரப்பு அணுகுமுறைகள் மூலம் உளவு மற்றும் தொழில்நுட்பத் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், குறுங்காலத்தில் பயன் தந்த இந்த அணுகுமுறைகள் சிறிலங்காவின் மத்திய காலம் அல்லது நீண்டகால நலன்களுக்குப் பயன் தருமா? சிறிலங்காவின் குறுங்கால நலன்களுக்கு உதவும் உலக சக்திகள் தங்களது நீண்டகால நலன்களைப் பிரதி பலனாகப் பெறும் என்பது வெளிப்படையான கணக்கு.

***

சிறிலங்கா தங்களின் முரண்பாடுகளைப் பயன்படுத்தித் தனது நலன்களுக்கான நகர்வுகளை முன்னெடுக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளும் மேற்குலகும், இந்தியாவும், சீனாவும் பிற தரப்புக்களும் அந்த நகர்வுகளின் விளைவுகளைத் தங்களது அளவுகோல்களில் அளவிடுகின்றன. தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான பலவித முயற்சிகளையும் மேற்கொள்கின்றன.

இந்தியாவும், மேற்குலகும் தனது நடவடிக்கைகளுக்கு இயல்பாகவே இடையூறு செய்ய முற்படும் என்பதையும் சீனா கணித்தே வைத்துள்ளது. எனினும், சிங்கள தேசியவாதத்தின் வளர்ச்சியும், அதற்கு எதிரான தமிழர் ஆயுத எதிர்ப்பு இயக்கமும் தனது வாய்ப்புக்களை எப்போதும் பிரகாசமாகவே வைக்கும் என்பதையும் சீனா அறியும். மேலும் நீண்டகாலம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய மின் உற்பத்தி, பிற உட்கட்டுமானத் துறைகளில் சீனா முதலீடு செய்து வருகின்றது. தற்போது மன்னார் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் சீனாவும் ஈடுபடும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. சீனா தமிழர் தரப்புக்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து வருகின்ற போதும் சிங்கள அதிகாரத்தின் பலதரப்புக்களுடனும் நேச உறவுகளைப் பேணி வருகின்றது.

இலங்கைத் தீவின் இன முரண்பாடு மிக முக்கியமானதொரு வியூக விடயம் என்பதை எப்போதும் இந்தியா வெளிப்படுத்தியே வந்துள்ளது. இலங்கை இனச்சிக்கலின் தரப்புக் களான சிறிலங்கா அரசு, அரசியல் கட்சிகள், இராணுவத் தளபதிகள், துணைப்படைக்குழுக்களின் தலைவர்கள், ஊடகங்கள் எனப்பல தரப்புடனும் உறவாடல்களைப் புரிகின்றது. சிறிலங்காவின் பொருளாதாரத் தினைத் தனது வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இழுத்துப் பிணணத்து வைத்துள்ளது. எரிபொருட் களஞ்சியங்கள் முதல் பல வியூக நலன்சார் விடயங்களில் முதலீடுகளைச் செய்துள்ளது. புலிகளின் தேசிய தலைமைப் பாத்திரமும்-புலிகளுடனான உறவுச் சிக்கலும் இந்தியாவிற்கு மிக முக்கிய சிக்கலான விடயமாகும். இதனால், இலங்கை விவகாரத்தில் இந்தியாவினால் முழுமையான செல்வாக்கினைச் செலுத்த முடியவில்லை.

மறுபுறம், மேற்குலகம் சிறிலங்காவின் அணுகுமுறையினையும், தனது சக போட்டிச் சக்திகளின் செல்வாக்குகளையும் சரியாகவே கணித்துக் காய்களை நகர்த்துகின்றது. போர்நிறுத்தல் உடன்பாடு மேற்குலகத்தரப்புக்கு நிறுவனமயப்பட்ட தலையீட்டு வடிவத்தினைத் தருகின்றது. புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட சூழல் நிலவினாலும் நோர்வே ஊடாகத் தமிழர்களின் பிரதான அரசியல், இராணுவ தலைமையின் தொடர்பாடல்கள் பேணப்படுகின்றன. கொழும்பின் மேட்டுக்குடிகளை பிரதிபலிக்கும் சிங்களத் தலைமைகள், இராணுவ-சமூக மற்றும் பொருளாதாரத் தலைமைகளின் மீது மேற்குலகிற்குச் செல்வாக்குள்ளது. எனினும், தேசியவாத முரண்பாடு முற்றியுள்ள இலங்கைத்தீவில் பிற சக்திகளின் செல்வாக்குகளை இல்லாதொழிப்பதற்கும் முக்கிய துறைமுகங்கள் மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் செல்வாக்கிற்குள் வைத்திருப்பதற்கும் தவிர்க்க முடியாத தலையீட்டினைச் செய்யும் எதிர்கால வாய்ப்புக்களை மேற்குலகு கட்டியெழுப்பி வருகின்றது என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மனித வதைகள் மற்றும் மனிதாபிமானச் சிக்கல்களை மையப்படுத்திய மனிதாபிமான தலையீட்டுக்கான சாத்தியங்கள் இங்கு முக்கியமானது. (கவனிக்க: சிறிலங்கா மீதும், புலிகள் மீதும் தொடர்ச்சியாக மேற்குலக ஊடகங்களும், நிறுவனங்களும் மனித உரிமை மீறல் பட்டியல்களை வெளியிடுகின்றன- ஐ.நா. தலையீடு கோரப்படுகின்றது. மறுபுறம்-சிங்களத்திடம் உள்ள அரச அதிகாரங்கள் தமிழ் மக்களினால் வலிந்து பெறப்பட்டு பிரயோகிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் இருதரப்புக்கும் இணக்கமுள்ள தரப்பாகத் தன்னை மேற்கு நிலை நிறுத்தும் வாய்ப்புக்களும் உள்ளன. (கவனிக்க: கிளிநொச்சிக்குப் போய் வருவதற்கு நிரந்தர உரிமை கோரும் இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை) ஒரு மோசமான சூழலில், நலன்கள் அச்சுறுத்தப்பட்டால், பிராந்திய சக்திகளுடன் இணைந்து இலங்கைத்தீவினுள் வலிந்த வழிகளில் செல்வாக்குச் செலுத்தவும் மேற்குத் தயங்காது என்கின்ற விவாதங்களும் நிலவுகின்றன.

இத்தகைய சிக்கலான சர்வதேச ஆர்வத்தின் மத்தியிலேயே தமிழர்களின் ஆயுதம் தரித்த விடுதலைப் போர் இடம்பெறுகின்றது. தமிழர்கள் எதிர்கொள்வது வெறுமனே சிறிலங்காவை மட்டுமல்ல என்பதும் புரியப்படுகின்றது. இந்தப் புரிதலுடனேயே தமிழர்களின் 'வாய்ப்புக்கள் எங்குள்ளது' என்ற கேள்வி ஆராயப்படல் வேண்டும்.

அடிப்படையில் எமக்கான பிரதான நுழைவாயில்கள் எப்போதும் இந்த நடைமுறைவாத உறவுப் புள்ளிகளில் நாங்களும் செல்வாக்குச் செலுத்துவதில் தங்கியுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியக் கடற்பாதைகளில் எமது கிழக்குப் பகுதிக் கடற்கரைகள் அமைந்துள்ளன. திருமலைத் துறைமுகம் புதிய உலக அமைவில் செல்வாக்குப் பெறும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. மன்னாரின் புதிய எண்ணெய்வளக் கண்டுபிடிப்புக்களும், அதனை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூறு போட்டு விற்பதற்குச் சிறிலங்கா எடுக்கும் முயற்சிகளும் முக்கியமானவையாகிவிட்டன. மேலும், மதவாத மற்றும் அடிப்படைவாதச் செல்வாக்கு அதிகரிக்கும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஈழத் தமிழர்களினதும், புலிகள் இயக்கத்தினதும் மத அடிப்படைகளற்ற, சமூக முன்னேற்றத்தினைப் பொருளாதாரக் கொள்கைகளாகக் கொண்ட சிந்தனைகள் செல்வாக்குச் செலுத்துவது முக்கியமானதொரு சமூக நிலவரமாகும்.

இத்தகைய பலவித வாய்ப்புக்களின் மையமாகத் தமிழர்களின் வலு விரிவாக்கம் காணப்படுகின்றது. முப்படைக் கட்டுமானங்களையும் கொண்டதும், தேவைப்படும் இடங்களில் அந்த வலுவினைப் பிரயோகிக்கக்கூடிய தலைமை தமிழர்களிடம் காணப்படுகின்றது. மறுபுறம், கட்டுப்பாட்டுப் பகுதியினையும், வடிவமைக்கப்பட்ட அரச கட்டுமானங்களையும் கொண்டதாக அங்கீகரிக்கப்படாத (னுந-குயஉவழ ளுவயவந) தமிழீழ அரசு எழுந்து நிற்கின்றது. சர்வதேசம் இந்தத் தமிழீழ அரசுடன் தொடர்பாடல்களைப் புரிகின்றது. இந்த ஒழுங்குமுறை பல்வேறு போட் யிடும் சர்வதேச சக்திகளுக்கு இலங்கைத் தீவு தொடர்பாக மாற்றுப்பாதையைக் கொடுக்கின்றது. இத்தகைய வாய்ப்புக்களினைத் தமிழர்களின் நலன்களுக்காகப் பாவிக்கும் முனைப்புத் தமிழீழ தேசியத் தலைமையிடம் காணப்படுவது மற்றுமொரு கோட்டிட்டுக் காட்டப்படும் கூறாகும்.

***

இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் போர் என்பது வெல்லப்படும் அடிப்படைகளைக் கொண்டதொரு போர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த வெற்றிபெறும் 'அடிப்படைகளைப் பாதுகாப்பதும்' 'வலுப்படுத்துவதுமே' இன்றுள்ள தமிழீழ மக்கள் திரளினதும், புலத்துத் தமிழ்மக்களினதும் செயற்பாடாக அமைகின்றன.

இந்தப் 'பாதுகாக்கும்-வலுப்படுத்தும்' செயற்பாடுகள் என்பது படைக் கட்டுமானங்களை வலுப்படுத்தல், கட்டுப்பாட்டுப்பகுதிகளைப் பாதுகாத்தல், விரிவடைய வைத்தல் என்பதுடன் நேரிடையாகத் தொடர்புபட்டது. மிக அதிகளவு அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன் சிறிலங்கா தற்போது முடுக்கிவிட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களின் இந்தக் கூறினை வலுவிழக்க வைக்கும் வியூக நோக்கலிலானதாகும். கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாதொழிப்பதும், புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமையை இல்லாதொழிப்பதும் இன்று சிறிலங்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பிற்கான இறுதியான வழியாகி விட்டது. இது இலங்கைத்தீவினை முழுமையாகவே ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காவிற்கு சாவா-வாழ்வா போர் என்று கூட விபரிக்கலாம். இங்கு சிறிலங்காவின் சாவு என்பது இலங்கைத்தீவின் வடகிழக்குப் பகுதிகளிற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச அதிகாரம் தமிழீழத்தின் கைகளுக்கு மாற்றப்படுதல் என்று புரிந்து கொள்ளலாம்.

சர்வதேச அரங்கில் புலிகள் தலைமை தாங்கும் தமிழர்களின் 'அரசு' நிகழ்த்தும் உறவாடல்கள் ~அடிப்படைகளைப் பாதுகாத்தல்-நிலைப்படுத்தல் நடவடிக்கையின் அடுத்த கூறாக அமைகின்றன. இந்த உறவாடல்கள் சர்வதேச வாய்ப்புக்களுடன் தமிழர் நலன்களைப் பிரதிபலிக்கும் உறவாடலில் ஈடுபடும். தமிழீழ நலன்களுடன் பலதரப்பு நலன்சார் அரசியலைப் பேசவைக்கும். தமிழர்களைத் தனது எல்லைகளுக்குள் கட்டிப்போட முயலும் இந்தியாவுக்கும், சிறிலங்கா அரச அதிகாரத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தனது நலன்களைக் காக்கலாம் என்று நினைக்கும் சீனாவுக்கும், சிங்கள அரச அதிகாரத்தினை மையத்தில் வைத்தவாறு (State Centric) தமிழர்களை கையாள முயலும் மேற்குலகும் தமிழர் அரச அதிகாரம் என்ற நடைமுறையை அங்கீகரிப்பதற்குத் தமிழர்களின் இராஜதந்திர வலு முயற்சிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறான, வெற்றிகளுக்கான அடிப்படைகள் மீது தமிழீழ தேசிய தலைமை கட்டியெழுப்பும் போரானது அடிப்படையில் ஒரு மக்கள் போராகும். மக்களின் கட்டற்ற ஆதரவுடனும், பங்குபற்றுதலுடனும் இந்தப் போர் முன்னெடுக்கப்படுவதால் வெற்றி பெறும் முக்கிய அடிப்படை அங்கு வலுவாக முரசறைகின்றது.

அரைகுறைப் பிரசவமாக வெளிப்பட்ட பரிந்துரை

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது இடைக்கால அறிக்கையைக் கையளித்துவிட்டது.
"பழைய குருடி கதவைத் திறவடி' என்றமாதிரி இருபது வருடங்களுக்கு முந்திய, அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதுதான் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு இப்போது முன்வைத்திருக்கும் இடைக்கால முன்மொழிவு ஆகும்.
இதற்கான ஆவணத்தைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட வள ஆளணியைச் சேர்ந்த நிபுணர் ஒருவர், இந்த ஆவணத் தயாரிப்பிலும் எத்தகைய கூத்துகள் நடந்தன என்பதைக் குறிப்பிட்டு விசனப்பட்டார்.

அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் முன்மொழிவை இடைக்கால சிபார்சாக முன்வைக்க வேண்டும் என்ற வழிகாட்டல் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பின்னர், அக்குழுவின் நிபுணர் அணி தயாரித்த ஐந்தாவது ஆவணமே இப்போது உத்தியோகபூர்வ முன்மொழிவாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
முதலில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அடங்கியிருந்த அம்சங்கள் எல்லாம் அடுத்தடுத்து வந்த ஆவணங்களில் ஒவ்வொன்றாக வெட்டிக் குறைக்கப்பட்டு, நீக்கப்பட்டு, நீர்த்துப் போகவைக்கப்பட்ட நிலையில் ஒன்றுமில்லாத வார்த்தை ஜாலத்தில் உக்கி, உழுத்துப் போன புஸ்வாண யோசனைத் திட்டம் ஒன்று பெரும் ஆரவார எடுப்புகளோடு இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார் சம்பந்தப்பட்ட ஆவணத் தயாரிப்புடன் தொடர்புபட்ட அந்த வள ஆளணி நிபுணர்.

முதலில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்குப் பகிரப்படவேண்டிய அதிகாரங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் வரையறை செய்து எழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் ஜனாதிபதி செயலகத்தின் விருப்பத்துக்கு அமைய ஒவ்வொரு தடவையும் அது வெட்டிக் குறைக்கப்பட்டமையால் சினந்துபோன அந்த நிபுணர், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடமே இவ்விவகாரம் "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல்' "உலக்கை தேய்ந்து உளிப்பிடியானது போல' குறுகிக் குடங்கிப் போய் விட்டது என்பதை நேரில் கூறி நொந்து கொண்டார்.
மேற்படி இடைக்கால யோசனைக்கான முன்மொழிவில் ஒப்பமிட்ட சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் ஆதங்கமும் விசனமும் கூட இதுதான்.

""அரசமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை மாகாணங்களுக்கு வழங்குங்கள் என்று கோரும் முன்மொழிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்புக்கு அமைவான யோசனைத் திட்டத்தை அவரது ஆசைப்படி அவரிடமே நாங்கள் முன்வைத்தோம். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரப் பகிர்வு விடயங்களை அழுத்திக் கூறிச் சுட்டிக்காட்டக் கூட எமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பெயருக்குத்தான் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர்கள் என்று செயற்பட்டோம். மற்றும்படி ஆட்சித் தலைவரின் "போடுதடி' போல அவர் விரும்பியவற்றை அவர் விரும்பிய வாசகத்தில் அது, அவரிடம் நாங்கள் விடுக்கும் கோரிக்கையாக அதனை நாம் வெளியில் காட்டிக்கொண்டு முன்வைக்க மட்டுமே நாங்கள் அனுமதிக்கப்பட்டோம். எமது மனச்சாட்சிப்படி சரி எனப் பட்டதை நாமாக முன்மொழிய அல்லது இந்த ஆவணத்தில் சேர்க்க நாங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. வெறும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து ஜனாதிபதி விரும்பியதை அவருக்காகச் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். அதுதான் எங்களால் செய்ய முடிந்தது.'' என்று தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் அங்கத்தவர்களும்.
இந்தத் தீர்வு யோசனைப்படி வடக்கில் மாகாணசபை நிர்வாகத்துக்கு ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைச் சபை ஒன்று நியமிக்கப்படும் என இந்தத் தீர்வு முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஆலோசனைச்சபைக்கு சட்டம், ஒழுங்குவிதிகள், பிரமாணக் குறிப்புகள் போன்றவற்றை வகுத்து வெளியிடக்கூட அதிகாரம் இருக்காது என்பது இப்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

வடக்கு மாகாணசபைக்கு உடனடியாகத் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என்று காரணம் காட்டி அங்கு ஜனாதிபதியின் கீழான ஆளுநரின் ஆட்சியைத் தொடரவைக்க எத்தனிக்கின்றது அரசுத் தரப்பு. அத்தகைய ஜனாதிபதி ஆட்சியின் கீழ் ஆளுநரின் நிர்வாகத்திற்கு அமைய மாகாண அதிகாரம் செயல்படும்போது கூட அந்த மாகாணசபை தனக்குரிய சட்ட விதிகளையோ அல்லது ஒழுங்குப் பிரமாணங்களையோ தயாரிக்கவோ, விதிக்கவோகூட அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை.

மூல ஆவணத்தில் இருந்த இதுபோன்ற அதிகாரப் பகிர்வைத் தெளிவாக உறுதிப்படுத்துகின்ற ஏற்பாடுகளை வெட்டிக்கழித்த பின்னர் அரைகுறைப் பிரசவமாக இந்த யோசனைத் திட்டம் முன்மொழியப்பட்டிருக்கின்றது. அவ்வளவே.Uthayan.com

Friday, January 25, 2008

புலிகளின் அசாதாரண பொறுமையும் சூழ்நிலை மாற்றமும்

யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த அசாத்தி யமான பொறுமை ஓரளவிற்கு நன்மையளித்துள்ளதென்றே கொள்ளமுடியும். அதாவது சிறிலங்கா அரசை சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இனம் காண்பதற்கு அது பெரிதும் உதவியுள்ளது என்றால் அது மிகையாகமாட்டாது.

சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியமையானது சர்வதேச சமூகத்திற்கு ஏமாற்றம் அளித்ததென்பது வெளிப்படையானது. இதனைப் பல நாடுகளும் - அதாவது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பிரதிபலிக்கவே செய்தன.

சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் இதற்கு முன்னர் யுத்த நிறுத்த உடன்பாடுகளைஃஇணக்கங்களை மேற்கொண்டிருந்ததாயினும் அவற்றில் இருந்து வெளியேறியதற்கான பழிகளைப் பெரும்பாலும் விடுதலைப் புலிகளே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் வகையிலான நிர்ப்பந்தம் புலிகள் மீது திணிக்கப்பட்டது. இதன் காரணமாக புலிகள் வெளியேறினர் ஆயினும் வெளியேறியதற்கான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகளே ஏற்க வேண்டியதாகியது.

ஆனால், இம்முறை விடுதலைப் புலிகள் பெரிதும் பொறுமை காத்தனர். சிறிலங்கா அரசாங்கம் பெரும் அழுத்தங்களைக் கொடுத்த போதும் புலிகள் உடன்பாட்டு விடயத்தில் நிலைப்பாட்டை மாற்றவில்லை. சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் வெளியேறி விடுவார்கள் என எண்ணிக் கொடுத்த அழுத்தங்களின் போதும் புலிகள் உடன்பாட்டு விடயத்தில் அக்கறையாகவே இருந்தனர்.

இதற்கு மூன்று காரணங்கள் அடிப்படையாக இருந்தன.

1) இது ஒரு சர்வதேச உடன்படிக்கையான படியால் ஒருதலைப்பட்சமாக இதனை முறித்துக்கொள்ள விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.

2) இனப்பிரச்சினைத் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாகக் கொள்ளத்தக்கதாகையால் இதில் அக்கறை காட்டினர்.

3) கடந்த காலத்தைப் போன்று யுத்த நிறுத்த உடன்பாட்டிலிருந்து வெளியேறியதற்கான குற்றச்சாட்டைத் தவிர்த்துக் கொள்ள விரும்பினர்.

விடுதலைப் புலிகளின் இத்தகைய நிலைப்பாடானது குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. அதுவே இன்று போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேறியது தொடர்பாக சர்வதேசம் வெளிப்படுத்திவரும் அதிருப்தியும் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேசம் வெளிப்படுத்தி வரும் உணர்வுகளும் ஆகும்.

யுத்த நிறுத்த காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்களும் தமிழர் தாயகத்தின் மீது மேற் கொண்டதான பாரிய படை நடவடிக்கைகளும் பெரும் மனித அழிவுகளும் சிறிலங்கா அரசு மனித உரிமை விடயத்தில் மட்டுமல்ல, இன ரீதியிலான வகையிலும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வந்ததனை உறுதி செய்வதாகியது.

யுத்த நிறுத்த உடன்பாட்டுக் காலத்தில் சில விடயங்கள் சர்வதேச அமைப்புக்களினாலும் பல நாடுகளினாலும் அறியப்பட்டவையாக இருந்தன. இது குறித்து தமது அக்கறையையும் அவை வெளிப்படுத்தியிருந்தன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கமோ அன்றி அதன் அதிகாரிகளோ இவற்றைப் பொருட்படுத்தவில்லை. ஒரு ~அங்கீகரிக்கப்பட்ட அரசிற்கு| தமது பிரதேசத்திற்குள் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான அதிகாரம் இருப்பதாகவே அது கூறிக்கொண்டது அவ்வாறே செயற்பட்டும் வந்தது.

குறிப்பாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா அரசின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியபோது அதனை ஏற்றுக்கொள்ளவோ, அவற்றைச் சீர்செய்யவோ அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. மாறாக, குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமைப்புக்களையும், உயர் அதிகாரிகளையும் சாடுவதிலும், குற்றம் சாட்டுவதிலுமே அது அக்கறை காட்டியது.

ஒரு வகையில் பார்க்கப்போனால், குற்றச் சாட்டுக்களை முன்வைத்தவர்களைத் தரக்குறைவாக விமர்சிக்கவும், தகுதியற்றவர்கள் எனக் கூறவும்கூட அது தயங்கவில்லை. இதனால், சிறிலங்கா அரசு மீது மனித உரிமை அமைப்புக்கள் சுமத்தி வந்த குற்றச்சாட்டுக்கள் படிப்படியாக மேற்கு நாடுகளினாலும் சுமத்தப்பட்டன.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் இவற்றைப் பொருட்படுத்தாதது மட்டுமல்ல, யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறும் தீர்மானத்தையும் மேற்கொண்டது. சிறிலங்கா அர சின் இத்தீர்மானத்திற்கு வலுவான அடிப்படையான காரணிகள் மூன்று இருந்தன.

1) விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை.

2) பௌத்த -சிங்களப் பேரினவாத சக்தி களின் ஆதரவு அரசிற்கு அவசிய மானதாக இருந்தமை.

3) சர்வதேச நாடுகள் தொடர்பான புரிதலும் சர்வதேச அமைப்புக்களின் பலவீனமும் ஆகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், கிழக்கில் கிடைக்கப்பெற்றதாகக் கருதும் இராணுவ வெற்றிகள் இராணுவத் தீர்விலும் வரவு-செலவுத் திட்டம் உட்பட பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவைப்பட்ட பௌத்த-சிங்கள அடிப்படைவாத சக்திகளின் ஆதரவும் அவசியமானதாக இருந்தன.

மற்றொரு புறத்தில், சர்வதேச நாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பேசி வரினும் தொடர்ந்து வழங்கி வந்த பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளால் மனித உரிமை விடயம் முக்கியம் வாய்ந்ததொன்றாக சிறிலங்கா அரசால் கொள்ளப்படவில்லை.

இதேசமயம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரினும் அவர்களின் தீர்மானங்கள் அரசுகளின் தீர்மானங்கள் போன்று அழுத்தங்களுடன் கூடி யவையாக இருக்கப்போவதில்லை என்பது சிறிலங்கா அரசின் அபிப்பிராயமாகவும் இருந்தது.

ஆகையினால், அமைப்புக்களின் தீர்மானங்கள் பற்றி கவலைப்படவோ, அது குறித்து அக்கறை கொள்ளவோ அது தயாராக இருக்கவில்லை. மேலும் இத்தீர்மானங்களை சில நாடுகளின் ஆதரவுடன் முறியடித்துவிடலாம் என்பதும் அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

சிறிலங்கா அரசின் இத்தகைய தீர்மானங் களே இறுதியில் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து அது வெளியேறுவதற்கும் அடிப்படையாகியது. இத்தகைய தீர்;மானமானது சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் சிறிதாயினும் தாக்கத்தையோ மாற்றத்தை ஏற்படுத்தும் என்றோ, இது ஒரு அதிருப்திக்குரிய விடயமாக மாறும் என்றோ சிறிலங்கா அரசு எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியமையானது சர்வதேச நாடுகளின் - குறிப்பாக, சிறிலங்காவிற்கு உதவிகளை வழங்கி வரும் இணைத் தலைமை நாடுகளுக்கு அதிருப்தியைத் தோற்றுவிப்பதாகவிருந்தது. சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான கதவுகளை அடைத்துவிட்டதாக அவை கருதின.

சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல் விடயத்தில் ஏற்கனவே, கவலை கொண்டிருந்த சர்வதேச நாடுகள், யுத்த நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேறியதோடு இராணுவத் தீர்வில் தீவிரத்தை வெளிக்காட்டத் தொடங்கியதும் தமது நிலைப்பாட்டையும் அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கின. அது மட்டுமன்றி, இதுவரை வெளிக்காட்டாதவாறு தமது செயற்பாட்டையும் வெளிக்காட்டின.

இதில் குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு படைக்கல உதவிகள் வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தன. இதில் பிரிட்டன் எத்தகைய படைத்துறை உதவிகளும் வழங்கப்பட மாட்டாது எனப் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. அமெரிக்க சனாதிபதி ஆயுதங்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் ஆவணத்தில் கையொப்பம் இட்டார்.

இதற்கு முன்னதாகவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜேர்மனி, சுவீடன் போன்றவை சிறிலங்காவிற்கான உதவிகளை மட்டுப்படுத்தி யிருந்ததோடு, மனித உரிமை விடயத்திலும் இனப்பிரச்சினை தொடர்பான அரசின் அணுகுமுறையிலும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.

இதேபோன்று சில இராசதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் வெளிக்காட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்திருந்தார்.

அதாவது, சிறிலங்காவுடன் - சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தன்னை இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரும்பாமையே இதற்குக் காரணமாகும்.

அத்தோடு, ஐ.நா. மனித உரிமை அமைப்புக்கள் போன்றவையும் சிறிலங்கா குறித்து பொறுமை இழக்கும் கட்டத்தை அடைந்துள்ளன எனக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறி யிருந்தது. அவ்வாறு இல்லாதுவிட்டால், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் குறித்து சிறிலங்காவின் பிரதி நிதியான தயான் ஜெயத்திலக கூறியவை கூற்று முட்டாள் தனமானது என ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இயக்குநர் சாடியிருக்க மாட்டார்.

இந்த வகையில் பார்க்கையில், சர்வதேச அமைப்புக்களும் பல சர்வதேச நாடுகளும் இரண்டு விடயங்களைப் புரிந்து கொண்டுள்ளன என்பது வெளிப்பட்டது. இதில் ஒன்று சிறி லங்கா அரசாங்கம் இன ரீதியிலான ஒடுக்கு முறையை மேற்கொண்டுள்ளது என்பது. இரண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இராணுவத் தீர்வையே அது முன்வைத்துள்ளது என்பது.

இந்நிலையிலும் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காதுவிடினும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் நியாயப்பாட்டை ஓரளவேனும் புரிந்து கொள்ள வும் ஏற்றுக்கொள்ளவும் தலைப்பட்டுள்ளன எனக் கூறலாம், நம்பலாம்.

இதேவேளை, சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் சிறிலங்கா அரசுடனான உறவையோ அன்றி நெருக்கத்தையோ கைவிட்டு விட்டதாகவோ, சிறிலங்காவைப் புறம்தள்ளி விட்டதாகவோ இங்கு கொள்வதற்கும் இல்லை.

பல நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினையை முற்றாகவே புறம்தள்ளிவிட்டு சிறிலங்காவிற்கு இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என்பதும், சில நாடுகள் இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமை விவகாரம் போன்ற விவகாரத்தில் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தும் போது தமது பூகோள, பிராந்திய நலன்களை முனைப்புப்படுத்தி சிறிலங்காவுடன் நெருக்கமாகவும் இருக்கவும் செய்கின்றன என்பதும் யதார்த்தமானதே.

தென்னாபிரிக்காவில் பெரும்பான்மை கறுப்பின மக்களின் ஆட்சி நிலை நிறுத்தப்படுவதற்கு முன்னர் சிறுபான்மை இன வெள்ளையர் அரசு பாரிய இன ஒடுக்குமுறையில் ஈடுபடுகின்றது என உலகால் அறியப்பட்டே இருந்தது. பல நாடுகள் கண்டிக்கவும் செய்தன. இருப்பினும் பல நாடுகள் அதனுடன் இராஜீக உறவுகளைக் கொண்டே இருந்தன. அதற்குச் சில உதவிகளையும் வழங்கவுமே செய்தன.

ஆனால், தென்னாபிரிக்கா கறுப்பின மக்களின் போராட்டம் நியாயப்பாடானதென்பதும் இன ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதும் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலை தவிர்க்கப்பட முடியாததொன்றாகியது. இதற்காக தென்னாபிரிக்கா கறுப்பின மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டியதாகவே இருந்தது.

இதனை ஒத்ததானதொரு வரலாறு உருவாகும் வகையிலான முனைப்புக்களை தமிழ் மக்கள் தற்பொழுது மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது சர்வதேச ரீதியில் தற்பொழுது உருவாகியுள்ள சாதகமான சூழ்நிலையை - அதாவது, எமக்குப் பூரண ஆதரவு என்ற நிலை இல்லாதுவிடிலும் மாறிவரும் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமான பாத்திரத்தை உலகின் பல பாகங்களிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முன்னெடுத்தல் வேண்டும். ஏனெனில், அவற்றை முன்னெடுப்பதில் அங்குள்ள மக்களுக்குத் தடைகள் எவையும் இருப்பதாக இல்லை. எமது நியாயப்பாட்டை எம்மீதான அடக்குமுறையை சனநாயக முறைக்குள் உட்பட்ட விதத்திலேயே அவர்களால் வெளிக் கொண்டுவர முடியும். அதற்கான வாய்ப்புக்கள் அங்கு மறுக்கப்படுவதாக இல்லை.

-ஜெயராஜ்-