Thursday, January 10, 2008

யுத்த நிறுத்தம் இன்றேல் அமைதிப் பேச்சும் இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப் பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை அரசு எடுத்ததை அடுத்து, இன்னும் ஆறு நாள்களில் யுத்த நிறுத்தம் பெயரள விலும் செத்துவிடும். இனி முழு யுத்தம்தான் என்பது உறுதி.

"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என் பது போல, பிரகடனப்படுத்தப்பட்ட நான்காவது ஈழ யுத்தம் எதிர்வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரமுன்னரே பேர ழிவு யுத்தத்துக்குக் கட்டியம் கூறும் போரழிவுகளும் வன் முறைகளும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன.

யுத்த நிறுத்தம் முறிக்கப்படுவது என்பது அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புகள் நிரந்தரமாக அடிபட்டுப் போகின்றன என்பதைத்தான் குறிக்கின்றது என இலங்கை இனப்பிரச் சினையின் போக்கை அவதானித்து வரும் எவரும் இலகு வாகக் கூறிவிடுவர்.

ஒருபுறம் கொடூர யுத்தம் நடத்திக்கொண்டு தமிழ் மக்களைப் பெரும் போரியல் அழிவுக்குள்ளும் மனிதப் பேரவலத்துக்குள்ளும் சிக்குண்டு அல்லற்பட விட்டபடி மறுபுறத் தில் எதிரியுடன் அமைதிப் பேச்சுகளையோ சமாதான முயற் சிகளையோ முன்னெடுப்பது என்பது சாத்தியமற்றதும் மிக வும் வேடிக்கையானதும் என விடுதலைப் புலிகள் அமைப் பின் தலைவர் வே. பிரபாகரன் முன்னரும் பல தடவைகள் தெளிவுபடுத்திவிட்டார்.

ஆனால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவோ, வேறு விதமாகக் கூறுகின் றார். புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை அரசு முறித்துக் கொள்வது குறித்து விளக்கமளிக்கும் உரை ஒன்றை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அவர் வெளியிட்டார். அந்த உரையின்போதே இதுபற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 26 ஆம் திகதி மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைதி முயற்சி நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் கலந்துகொள்வதற்கான கதவுகள் திறந்தே உள்ளன என்று கூறியமையை இந்த நாடாளுமன்றப் பேச்சில் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம நினைவுகூர்ந்தார்.

1985 திம்புப் பேச்சுகளும், 1987 இல் இலங்கை இந்திய உடன்பாடும், 1990இல் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளு டன் நடத்திய பேச்சுகளும், 1994 இல் சந்திரிகா குமாரதுங்க நிர்வாகம் புலிகளுடன் நடத்திய பேச்சுகளும் முன்னெடுக் கப்பட்ட சமயங்களில் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு நடை முறையில் இருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று அந்த நாடாளுமன்றப் பேச்சில் போகொல்லாகம குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது, யுத்தநிறுத்தம் இல்லாமலேயே முன்னர் அமைதி முயற்சிகளும், சமாதானப் பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இப்போது யுத்த நிறுத்தம் முறிக்கப் பட்டாலும் அமைதிப் பேச்சுகளை இடையில் தேவைப்படும் போது தொடங்குவதில் சிரமமில்லை என்ற கதையை நாசூக் காக அவிழ்க்கப்பார்க்கின்றார் அவர்.

ஆனால், தமது இந்தக் கருத்து வெளிப்பாட்டில் அவர் இரண்டு விடயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டார் அல் லது மறைத்துப் புறக்கணித்து விட்டார் என்பதுதான் அவ தானிக்கப்படவேண்டிய அம்சமாகும்.

முதலாவது அவர் குறிப்பிடும் இந்தச் சந்தர்ப்பங்கள் எல்லாமே அமைதித் தீர்வை எட்டுவதற்கான சமாதான முயற்சிகள் தாம். ஆனால் அவை அனைத்துமே கடைசியில் பயனற்றுத் தோல்வியில்தான் முடிவடைந்தன. ஒவ்வொன் றும் குறுகிய காலத்தில் குழம்பிப் போயின. அதற்குக் கார ணமே, இப்போது செயலிழந்து போகும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் போல காத்திரமான ஏற்பாடுகள், ஒழுங்குகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை அச்சமயங்களில் நடை முறையில் இருக்கவில்லை என்பதுதான்.

இப்போதைய இதுவரை காலமான அமைதி முயற்சி கள் சுமார் இரண்டரை, மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்புகள் இழுபட்டு இழுபட்டுத் தொடர்ந்து கிட்டி வந்தமைக்கும், அமைதி முயற்சிகளுக்கான இறுதி வாய்ப்பும் கதவுகளும் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் வரை திறந்திருந்தமைக்கும் ஓரளவு காத்திரமான அம்சங்களுடன் கூடிய யுத்த நிறுத்தம் ஒன்று சர்வதேச மேற்பார்வையுடன் பெயரளவிலேனும், காகிதத்திலேனும் தாக்குப்பிடித்து நின்று நிலைத்தமையே அடிப்படைக் கார ணமாகும்.
இரண்டாவது தாம் நாடாளுமன்றுக்குக் கூறிய தகவல்களில் சில அடிப்படை உண்மைகளை வெளிவிவகார அமைச்சர் கோட்டை விட்டிருக்கின்றமையும் கவனிக்கத்தக் கது. அவற்றை இங்கு கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

ஈழத் தமிழர் தரப்புக்கும் கொழும்பு அரசுக்கும் இடையி லான திம்புப் பேச்சுகள் 1985 ஜூலை 8 ஆம் திகதி தொடக் கம் ஆறு நாள்கள் இடம்பெற்றன. அதற்கு முன்னேற்பாடாக இந்திய அரசின் தலையீட்டுடன் 1985 ஜூன் நடுப்பகுதியில் இருந்து இலங்கை அரசுப்படைகளுக்கும் அப்போது செயற் பட்ட தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கும் இடையில் எழுத் தில் எழுதப்படாத ஒரு யுத்த நிறுத்த இணக்கம் ஒன்று நடை முறையில் கொண்டுவரப்பட்டது. அது, ஓகஸ்ட் 17 ஆம் திகதி திம்புப் பேச்சுகள் இடையில் நிறுத்தப்பட்டதை அடுத்து முறிந்துபோனது.
அடுத்தது, இலங்கை இந்திய ஒப்பந்தம். அதுவே, ஒரு யுத்த நிறுத்தத்தை உள்ளடக்கிய ஏற்பாடுதான் என்பது மறைக்கக்கூடிய விடயம் அல்ல.

தொடர்ந்து, 1990 இல் பிரேமதாஸ நிர்வாகமும், 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசும் புலிகள் தரப் புடன் நடத்திய பேச்சுகள் கூட அந்தந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்ட யுத்தநிறுத்த இணக்கங்களின் கீழேயே மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஆகவே, யுத்த நிறுத்த உடன்பாடு அல்லது மோதல் தவிர்ப்பு இணக்கம் இல்லாமல் அமைதிப் பேச்சுகளும், சமரச முயற்சிகளும் முன்னைய காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்ற மாதிரி நாடாளுமன்றுக்குப் படம் காட்ட முய லும் வெளிவிவகார அமைச்சரின் எத்தனம் முழு உண் மையை மூடி மறைக்கும் பித்தலாட்டமாகும்.

யுத்த நிறுத்தமின்றி அமைதிப் பேச்சுகளுக்கு சாத்தியமேயில்லை என்பதுதான் உண்மை. கடந்த கால அனுபவப் பாடம் அதைத்தான் நமக்குப் போதித்துமுள்ளது. அதை மறைக்க மறக்க முயல்வது பேதமை அன்றி வேறில்லை.

uthayan.com

0 Comments: