Monday, January 21, 2008

ஆபிரிக்கப் பெண்களின் எழுச்சி

இருபதாம் நூற்றாண்டை அடையாளப்படுத்தும் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் பெண்கள் எழுச்சி முன்னணி இடம் வகிக்கிறது. பெண்கள் அரசியலில் தமக்குரிய இடத்தைப் பெறுவதற்காகப் போரிட வேண்டியிருந்தது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாட்டுப் பெண்கள் வாக்குரிமைக்காகக் கடும் போராட்டம் நடத்தி இறுதியில் வெற்றி பெற்றனர். அவர்கள் நடத்திய வாக்குரிமைப் போராட்டம் உலகப் பெண்களுக்கு இந்த அனு கூலத்தைப் பெற்றுக்கொடுத்தது.

வாக்குரிமைக்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களைச் சப்பிறஜெற்கள் (ளுரககசயபநவவந) என்று அழைத்தார்கள். இவர்களின் போராட்டம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் நடைபெற்றது. சப்பிறஜெற் பெண்களுக்கு எமிலைன் பான்க்கேர்ஸ்ற் (நுஅஅநடiநெ Pயமொரசளவ) (1857-1928) என்பவர் தலைமை தாங்கினார். இவர் 1905 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பெண்கள் சமூக அரசியல் ஒன்றியத்தைத் தொடக்கி வாக்கு ரிமைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

1918 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் முடிந்தபின் இங்கிலாந்துப் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதாவது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் வாக்குரிமை கிடைத்தது. 21 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை இங்கிலாந்துப் பெண்கள் 1929 ஆம் ஆண்டில்தான் பெற்றார்கள். பெண்கள் விவகாரம் தொடர்பான ஆங்கிலச் சொல் ஜென்டர் (புநனெநச) என்பதாகும். இது விசேட அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக ஜென்டர் இரு பாலாரையும் குறிப்பிடும் சொல்லாகத்தான் பயன்படுகிறது. ஆனால் இன்று உலக அரங்கில் ஜென்டர் விவகாரம் என்றால் பெண்கள் விவகாரம் மாத்திரமே குறிப்பிடப்படுகிறது. ஜென்டர் விவகாரத்தின் தாக்கம் மிக அதிகமாக அரசியலில் தான் தென்படுகிறது. சமத்துவத்தின் வெளிப்பாடாகப் பெண்கள் அரசியலில் சமபங்கையும், நிர்வாக சேவைகளில் ஆணுக்கு நிகரான வேலை வாய்ப்பையும் அதற்குரிய ஊதியத்தையும் கோருகிறார்கள்.

குடும்பத்திலும், சமூக அரசியல் வாழ்விலும் ஆண்கள் மேலாதிக்கம் செலுத்தும் நிலவரத்தைப் பற்றியாக்கி (Pயவசயைசஉhல) என்கிறார்கள். தீர்மானங்களை ஆண் எடுப்பதையும் அதற்கு அமைவாய்;ப் பெண்கள் ஒழுகுவதையும் பற்றியாக்கி உணர்த்துகிறது. மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய பகுதி நாடுகளில் பற்றியாக்கி நடைமுறையில் இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்; ஒன்றில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பற்றியாக்கியின் நேரடித் தமிழ்ச்சொல்லாக ஆணாதிக்கத்தைப் பயன்படுத்தலாம்.

பெண்ணுரிமைப் போராட்டம் பெமிநிசம் (குநஅinளைஅ) என்று குறிப்பிடப்படுகிறது. இதைப் பெண்ணியம் என்றும் குறிப்பிடலாம். பெண்ணியம் என்பது வெறும் இலக்கியத் துறைக்குரிய சொல் மாத்திரமல்ல. பெண்ணியத்திற்கும் தேசிய எழுச்சிக்கும் நெருக்கத் தொடர்பு உண்டு. இதை குநஅinளைஅ யுனெ யேவழையெடளைஅ என்ற சொற்கள் மூலம் கூட்டாக வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் பங்குபற்றாத தேசிய எழுச்சி பயனற்றது. ஆபிரிக்கப் பெண்கள் வரலாற்றில் முதன் முதலாக ஆயுதம் ஏந்திப் போராடும் சந்தர்ப்பம் மொசாம்பிக் நாட்டவர் விடுதலைப் போர் நடத்தியபோது கிடைத்தது. பூமியில் கால் பதித்தவாறு வானத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களில் பாதிப் பங்கினர் பெண்கள் என்று மாவோ சொன்னது மெய்யாகியது.

கிழக்கு ஆபிரிக்கக் கரையோர நாடான மொசாம்பிக் 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம் போத்துக்கல் நாட்டால் ஆட்சி செய்யப்பட்டது. 1962 இல் பிறெலிமோ (குசநடiஅழ) என்ற விடுதலை அமைப்பின் தலைமையில் போத்துக்கல் ஆட்சிக்கு எதிரான ஆயுதப்போர் ஆரம்பமானது. இதன் தலைவர்களாக சமோரா மச்சலும் அவர் மனைவி கிராசா மச்சலும் இருந்தனர். கெரில்லாப் போரில் வல்லரசான கிராசா மச்சல்; சுதந்திரம் பெற்ற மொசாம் பிக்கின் கல்வி அமைச்சராகவும் அதன்பின் ஐ.நா.வின் சிறுவர் மீதான போரின் தாக்கம் பற்றிய ஆய்வுக் குழுவின் மேற்பார்வையாளராகவும் பதவி வகித்தார்;. 1968-1969 காலப்பகுதியில் பிறெலிமோ மிகப் பெரியதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்தது. மொசாம்பிக் நாட்டின் பண்பாடு பெண்கள் ஆயுதம் ஏந்துவதை அனுமதிப் பதில்லை. இதைப் பொருட்படுத்தாமல் அது பெண்களைப் படையில் சேர்த்துக்களத்தில் நிறுத்தும் நடவடிக்கையைத் தொடங்கியது. பெண்கள் தமது விடுதலையைத் தாமாகவே போரிட்டுப் பெறவேண்டும் என்று பிறெலிமோ கருத்துத் தெரிவித்தது. 1975 இல் மொசாம்பிக் விடுதலையடைந்தது.

இரண்டாவது மிகப்பெரிய கண்டம் என்று அறியப்படும் ஆபிரிக்காவின் பெண்கள் வாழ்வு பரவலாக மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கும் இங்குமாகச் சில பெண்கள் தலைமைப் பதவிகளைத் தாம்பெற்ற கல்வி மற்றும் சுய ஆளுமை காரணமாக எட்டியுள்ளனர். ஆணாதிக்கம், வறுமை, பாலியல் கொடுமைகள், எயிட்ஸ், மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்கள் ஆபிரிக்கப் பெண்களைப் பாதிக்கின்றன. உலகில் வருட மொன்றுக்கு 30 இலட்சம் மக்கள் மலேரியா நோயின் தாக்கத்தால் உயிரிழக்கிறார்கள். இதில் 90 வீதமானோர் சகாராப் பாலை நிலத்திற்குத் தெற்காகவுள்ள ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். 1998 இல் இரண்டு மில்லியன் ஆபிரிக்க மக்கள் எயிட்ஸ்; நோய் காரணமாக உயிரிழந்தனர். ஆபிரிக்கக் கண்டத் தில் அந்த வருடம் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக் கையிலும் பார்க்க இது 10 மடங்கு கூடியதாகும்.

ஓரளவு முற்போக்கு நாடான தென்னாபிரிக்காவில் எயிட்ஸ் நோய் காரணமாக இறக்கும் ஆண்கள் எண்ணிக்கை விகிதம் 45, பெண்கள் எண்ணிக்கை விகிதம் 55, பெற்றோரை இழந்தும், எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ள 15 மில்லியன் சிறுவர்கள் ஆபிரிக்கக் கண்டத்தில் காணப்படுகிறார்கள்.

உள்நாட்டுப் போரினால் அல்லற்படும் லைபீரியா அண்மையில் வரலாறு படைத்துள்ளது. ஆபிரிக்கக் கண்ட நாடொன்றின் முதலாவது பெண் தலைவியாக எலன் ஜோன்சன்-சிர்லீப் (நுடடநn துழாளெழn-ளுசைடநயக) நவம்பர் 2005 இல் லைபீரிய சனாதிபதியாகியுள்ளார். 60 வீத மக்கள் இவருக்குச் சார்பாக வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பட்டதாரியான 69 வயதினரான இந்தப் பாட்டி எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். பாரதூரமான படுகொலைகளை நடத்திய பயங்கரவாதிகள் அவர் தலைமை வகிக்கும் செனெற் சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். லைபீரியா ஒரு விசித்திரமான நாடு. அமெரிக்காவின் விடுதலைபெற்ற அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு லைபீரியா.

1847 இல் சுதந்திரம் பெற்ற லைபீரியா ஆபிரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த குடியரசாகும். ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்காக இந்த நாடு 1822 இல் உருவாக்கப்பட்டது. விடுதலை பெற்ற அடிமைகளின் நாடு என்று லைபீரியா குறிப்பிடப்பட்டாலும், வெள்ளையர்களும் கறுப்பர்களும் கலந்த அமெரிக்கர்கள், அந்த மண்ணின் பூர்வகுடிகள் என்போரும் அங்கு வாழ்கிறார்கள். லைபீரியாவின் தலைநகர் மொன்றோவியா அமெரிக்க சனாதிபதி ஜேம்ஸ் மொன்றோவைக் கௌரவிப் பதற்காக இவ்வாறு பெயரிடப் பட்டது. அமெரிக்காவுக்கும் லைபீரியாவுக்கும் தொப்புள் கொடி உறவு இருப்பது கண்கூடு. 1990 இற்கும் 2003 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலைக்குழுக்கள் நடத்திய கொடிய உள் நாட்டுப் போரில் 150,000 உயிரிழப்புக்கள் நடந்தன. மூன்று மில்லியன் மக்கள் தொகையுள்ள இந்த நாட்டில் அரைவாசிக்கு மேற்பட்டோர் அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அகப்பட்டோரின் கை, கால் களை வெட்டும் நடவடிக்கையை கொலைக்குழுக்கள் காரணமின்றிச்செய்தன. பாலியல் வன்கொடுமைகள் மிகப்பரவலாக நடைபெற்றன. மிகச் சிறு வயது ஆண் சிறுவர்களுக்குப் போதைப் பொருட்களை ஊட்டிப் படுகொலைகளைச் செய்யத் தூண்டும் கொடுமையும் லைபீரியாவில் நடந்தேறியது.

மிக அமைதியான முறையில் ஆபிரிக்கப் பெண்கள் ஒரு சமூக மற்றும் அரசியல் புரட்சி நடத்துகிறார்கள். ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றின் சீரழிவுக்கு ஆண்கள் தான் காரணம் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. ஆணாதிக்கத்தை உடைக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்தை அவர்கள் எடுத்துள்ளனர். அரசியல், நிர்வாகம், நீதித்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் ஆபிரிக்கப் பெண்கள் கால் பதித்துள்ளனர். இதற்கான அத்தியாவசியத் தேவை இருக்கிறது. உதாரணத்திற்கு ருவாண்டாவில் ஜூலை 1994 இல் நடந்த இனப்படுகொலையில் பெரும் எண்ணிக்கையில் ஆண்கள் கொல்லப்பட்டனர். இன்று ருவாண்டாவை ஆளும் சிறுபான்மை ருட்சி இனத்தில் பெண்கள் எண்ணிக்கை ஆண்களிலும் பார்க்க இருமடங்காக இருக்கிறது. பெரும் பான்மை ஹ{ட்டு இனத்தவர்கள் நடத்திய இனப்படுகொலையில் பெருமளவு ருட்சி ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். இன்று ருவாண்டா ஆயுதப் படையில் பெண்கள் படையினர் இடம்பெற்றுள்ளனர். பெரும்பான்மை ஹ{ட்டு இனத்தவர்கள் மீது சிறுபான்மை ருட்சி இனத்தவர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதற்குப் பெண் படையினர் உதவுகிறார்கள். களம்பல கண்ட லெப். கேணல் றோஸ் கபுயே (சுழளந முயடிரலந) ருவாண்டா ஆயுதப் படையில் அதியுயர் பதவி வகிக்கிறார். அதிபர் போல்ககாமேயின் இராணுவ ஆலோசகராகவும் இவர் செயற்படுகிறார்.

ருவாண்டாவில் 1994 இல் நடந்த இனப்படுகொலை காரணமாகப் பெண்கள் எழுச்சி உச்சம் அடைந்துள்ளது. ஆண் அரசியல்வாதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கென சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவு மூலம் இன்று ருவாண்டா நாடாளுமன்ற உறுப்பினர்களில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். உலகின் வேறொரு நாட்டில் இதைக் காண முடியாது. பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் பாலியல் வல்லுறவு சட்டத்தின் மூலம் குற்றமாக்கப்படவில்லை. இது ஆணாதிக்க சமுதாயத்தின் விளைவுகளில் ஒன்றாகும்.

திட்டமிட்ட பாலியல் வல்லுறவுக்கு 1994 இனப்படுகொலையின் போது பெரும் பாதிப்புக்கு உட்பட்ட ருவாண்டாப் பெண்கள் 15 வருடச் சிறைத் தண்டனை விதிக்கும் பாலியல் வல்லுறவுக்கு எதிரான கடுஞ்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். லைபீரியா நாட்டிலும் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதை தனது முதற்பணியாக லைபீரியாத் தலைவில எலன் ஜோன்சன்-சிலீப் கொண்டுள்ளார். பெண்களுக்கு விமோசனம் அளிக்கும் இன்னும் பல சட்டங்கள் ருவாண்டா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின் மிகக் கடுமையாக அமுலாக்கப்படுகிறது. குடும்பப் பலாத்காரம் எனப்படும் மனைவியைக் கணவன் தாக்கும் குற்றம் தடைசெய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்படுகிறது. பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் தமது பெயரில் சொத்து வைத்திருக்கும் உரிமை வழங்கப்படவில்லை. இது ஆபிரிக்கப் பாரம்பரியம். ருவாண்டாவில் இது சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. லைபீரியாவிலும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அமுலாக்கம் திருப்திகரமாக இல்லை. அந்த நாட்டின் பெண்களில் 90 வீதமானோர் கல்வி அறிவும் விழிப்பும் இல்லாவர்களாக இருக்கிறதால் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து மூலம் பிரியும் கணவன் மனைவியருக்கிடையில் சொத்துக்களைச் சம பங்காகப்பிரிக்க வகை செய்யும் சட்டம் ருவாண்டாவில் அமுலுக்கு வந்துள்ளது. அதேபோல் இறந்த கணவனின் சொத்துக்கள் மனைவிக்குச் சேரும் சட்டமும் ருவாண்டா மற்றும் லைபீரியாவில் நிறைவேறியுள்ளது. மைக்ரோ பினான்ஸ் (ஆiஉசழ குiயெnஉந) எனப்படும் பெண்களின் சுயதொழில் வாய்ப்புக்காக பிணையின்றிச் சிறுதொகைக் கடன் வழங்கும் திட்டம் ருவாண்டாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆபிரிக்கக் கண்டத்திற்கு இது முன்மாதிரியாக விளங்குகிறது. தனிமரம் காடாக மாட்டாது. ஆபிரிக்க நாடுகளின் சாபக்கேடாகப் பரவலான நிர்வாக ஊழல், மோசடி, இனக்குழு மோதல், பெண்ணுரிமை மறுப்பு, ஆணாதிக்கம் என்பன உள்ளன. உதாரணத்திற்குக் கென்யாவில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தணிந்தபாடில்லை. பாலியல் வன்முறை கென்யாவில் தண்டனைக்குரிய குற்றம் அல்ல.

எண்ணை வளம்மிக்க நைஜீரியா நாட்டில் நிலவும் நிதி மோசடியும் ஊழலும் உலகறிந்த விடயம். பெண்ணுரிமை நைஜீரியாவில் முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு, தர நிர்ணயம் தொடர்பான தேசிய முகவரகத்தின் பொறுப்பதிகாரியாக ஒரு மிகவும் நேர்மையான பெண், டோரா அக்குநியி (னுழசய யுமரலெih) பதவி வகிக்கிறார். இந்தியா, சீனா அகிய நாடுகளிலிருந்து போலி மருந்துகளை இறக்குமதி செய்து நாட்டில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் மோசடிக்காரர்களின் எதிர்ப்பை இவர் பெற்றுள்ளார். ஆபிரிக்காவின் பொலிஸ் அதிகாரங்களைக் கொண்ட முதலாவது பெண் அரச நிர்வாகி என்ற பெருமை இவருக்கு உண்டு. ஆனால் நாட்டின் பொலிஸ் அதிகாரிகளும், நீதி அமுலாக்கத்திற்குப் பொறுப்பான அதிகாரிகளும் இவருடைய நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

போலி மருந்து இறக்குமதியாளனும் நைஜீரியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான என்னேக்வே (Nயெமறந) டோரா அக்குநியிடம் மாட்டிக்கொண்டான். நீதி விசாரணைக்கு உட்படுத்தும் டோராவின் முயற்சி கடும் தோல்வி அடைந்துவிட்டது. என்னேக்வேயின் அடி ஆட்கள் டோராவின் வீட்டையும் அலுவலகத்தையும் கொளுத்தினார்கள். அவர் சென்ற வாகனத்தின் மீது சூடு நடத்தப்பட்டது. தனது மூன்று பிள்ளைகளையும் பாதுகாப்பிற்காக டோரா வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டார். பதவி விலகும்படி போடப்படும் அழுத்தங்களை அவர் அலட்சியம் செய்கிறார். ஆபிரிக்கப் பெண்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை இதில் கூறப்பட்ட சில பெண்களின் முன்மாதிரி எடுத்துக்காட்டுகிறது.

நன்றி: ஈழநாதம் (18.01.08)

0 Comments: