இலங்கையில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு சர்வதேச சமூகம் முயல வேண்டும். பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவுல்ஸ் இந்தக் கருத்தை (கோரிக்கையை என் றும் கொள்ளலாம்) பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கின்றார்.
நோர்வேயின் அனுசரணையின் கீழ் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னுக்கும் இடையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒப்பந்தம் அரசாங்கத்தினால் முறிக்கப் பட்டுவிட்டது.
அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதற்கு அரசு ஆலோசிக்கத் தொடங்கிய காலத்திலேயே, அத னைத் தொடர்ந்து வேகம் கொள்ளத்தக்க பெரும் போர் குறித்தும், அதனால் உண்டாகக் கூடிய மனிதப் பேரவ லங்கள் குறித்தும் சர்வதேசங்கள் உட்பட பல தரப்புக ளும் எச்சரித்திருந்தன.
ஆனால் அவை யாவும், செவிடன் காதில் ஊதிய சங்கொலியாயிற்று. தனது படைப்பலம் கொண்டு தமி ழர்களை ஒழித்து, அடக்கி ஒடுக்கி, உப்புச் சப்பற்ற கீழ் மட்ட அரசியல் தீர்வு ஒன்றை உயர்த்திக் காட்டி அவர் களைத் தன் காலடியில் விழச் செய்து அடிமைகளாக்க வேண்டும் என்ற பேரினவாதப் பேராண்மை வாத அத் திவாரத்திலேயே அரசு எழுந்து நிற்கின்றது.
அதனால், இந்தியா உட்பட சர்வதேசம் என்ன, எங் கிருந்து கோரிக்கை அல்லது வேண்டுதல் அழுத்தம் வந்தாலும் அதனைப் புறக்கணித்துத் தள்ளி, நினைத் ததைச் செய்யும் எவரையும் பொருட்படுத்தாத போக்கை அரசு கையில் எடுத்தது.
மொத்தத்தில் தான் நினைத்ததைச் செய்வதைத் தடுப்போரும் இல்லை, எவருக்கும் செவிசாய்க்கப் போவதுமில்லை என்ற ஆணவப் போக்குடனேயே அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.
அதுமட்டுமல்ல. போர் நிறுத்தத்தைத் தான் முறித் துக் கொண்ட பின்னர், இப்பத்தியில் நேற்றுக் குறிப் பிட்டதுபோல, சர்வதேச சமூகம் சற்று அடக்கி வாசித்ததை அவற்றின் மெத்தனப் போக்கை தனது செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் ஆதரவாகவும் அர்த்தப்ப டுத்திக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதாக ஒரு முதுமொழி. அந்த நிலையில் நின்று தன்னைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை என்ற அகங்காரத்தில் திளைத் திருக்கிறது மஹிந்த அரசு.
அதன் வெளிப்பாடே, நாம் இப்பத்தியில் நேற்று எடுத் துக் காட்டிய ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர் சன யாப்பாவின் விளங்காத் தன்மை கொண்ட கூற்று.
அமைச்சர் கொழும்பில் கருத்து வெளியிட்ட அதே நாளில், பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவுல்ஸ் தமது நாட்டு நாடாளுமன்றத்தில் அதற்கு நேர் மாறான கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.
அவர், புதிய போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்கு மாறு சர்வதேசத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, இலங்கை நடந்துகொண்ட செயற்பட்ட விதம் குறித்து சர்வதேசம் அதிருப்தி அடைந்துள்ளது என்பத னையே வெளிப்படுத்துகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்தை அவ்வாறு கொள்வது பொருத்தமானதே.
சிங்களப் பேரினவாத, இனவாதக் கடுங்கோட்பாட்டா ளர்களின் வலையில் சிக்கி, அவர்கள் சுழற்றும் நூலில் ஆடும் பொம்மையாகத் தவிக்கும் அரசின் கோலம் பரிதாபத்துக்குரியது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அதுவும் தமிழினத்தை ஒடுக்கவேண்டும் என்ற பேரின வாதம் என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டையே.
ஆகையால் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சரின் கருத்து மஹிந்த அரசின் சபையில் ஒரு போதும் ஏறாது என்பதில் எவரும் ஐயம் கொள்ள இடமில்லை.
எனினும்
பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்து சர்வதேசத்துக்குரிய அழைப்பு வெளி உலகின் கண்களைத் திறப்பதற்கு ஓர் எடுகோள் ஒரு சிறிய தொடுகை எனக் கொள்ளலாம். பிரிட்டிஷ் அமைச்சர் சொல்லில் கூறியதை அவரும் அவரது அரசும் முன்னெடுக்க மனதாரச் செயற்பட்டால், இலங்கை அரசுக்குச் சர்வதேச அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதனை நிராகரிக்கவும் முடியாது.
மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த முடியாத இலங்கை என்ற கறுப்பு முத்திரை மட்டுமன்றி மற்றும் பல துறைகளிலும் பல விதங்களிலும் சர்வதேச மட்டத்தில் தான் தாழ்ந்து போய்க் கிடப்பதை அரசு பூசி மெழுக முயற்சிக்கலாம். ஆனால் முந்திய நாள்கள் போன்று அது இலகுவானதன்று.
இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதப் பேர ழிவையும் போரழிவையும் தடுக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் அக்கறையுடன் செயற்படுமானால்
அரசாங்கத்துக்கு அரசாங்கம் நல்லுறவு ஒத்துழைப்பு என்ற ராஜீக விதிகளையும் தமது சொந்த வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நலன்களையும் முன்னிறுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இலங்கைத் தீவில் ஒரு உகந்த தீர்வைக் கொண்டு வரு வதற்கு சர்வதேச சமூகம் உதவமுடியும்.
ஆனால் அது நடைமுறைச் சாத்தியமானதா, இலகுவானதா, குறுகிய காலத்தில் கைக்கு வரக்கூடியதா என்பதே எழுந்து நிற்கும் முக்கிய மூன்று வினாக்கள்!
Uthayan.com
Sunday, January 20, 2008
"பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்து; எழுந்துள்ள மூன்று கேள்விகள்"
Posted by tamil at 7:30 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment