தென்னிலங்கையில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது அரசு அண்மைக் காலத்தில் களமுனைகளில் இராணுவ ரீதியாகவும் சர்வதேச மட்டத்தில் இராஜதந்திர ரீதியாகவும் பெரு வெற்றிகளை ஈட்டி யிருப்பதாகத் தெரிவித்துப் பெருமிதம் கொண்டிருக்கின்றார்.
கிழக்கில் நிலப்பரப்புகளை விடுதலைப் புலிகள் வசம் இருந்து மீட்டமையையும், சர்வதேச மட்டத்தில் தமது யுத்த வரவு செலவுத்திட்டத்துக்கு பெருமளவு நிதியைப் பெற் றுக்கொண்டமையையும் இத்தகைய பெரும் சாதனையாக அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
முன்னைய அரசுகளால் ஒரு வருடத்துக்கு ஆகக் கூடி யது எண்பது கோடி அமெரிக்க டொலர்களையே நிதி உதவி யாகப் பெற முடிந்தது என்றும், ஆனால் தமது அரசு ஒரு வரு டத்தில் நூற்றியிருபது கோடி அமெரிக்க டொலரை (சுமார் பதின் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவை) உதவியாகப் பெற முடிந்திருக்கின்றது என்றும் அவர் பீற்றியிருக்கின்றார்.
வழமையாக இலங்கைக்கு உதவிவரும் ஜப்பானும் மற் றும் மஹிந்தரின் அரசின் புதிய நட்பு அணிகளான சீனாவும், பாகிஸ்தானும், ஈரானும் சேர்ந்து மஹிந்தர் அரசின் போர் வெறிப் போக்கையும் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகளையும் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியபடி கண்ணை மூடிக்கொண்டு உதவ முன்வந்தமையைத் தமது அரசுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்த பெரு வெற்றிகளா கக் கருதி நீட்டோலை படிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்தர்.
இவ்வாறு தமது போர் முனைப்புப் போக்குக்கு உந்துதல் அளிக்கும் வகையில் இந்த நாடுகளில் இருந்து தமது அர சுக்கு பெருவாரியாக உதவி கிடைப்பதை தனது அரசுக்கான சர்வதேச ஆதரவாகவும் அவர் அர்த்தப்படுத்துகிறார். இந்த நிதி உதவியை சான்றாக முன்னிறுத்தி, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு இல்லை என்போரை எள்ளி நகையாடவும் அவர் தவறவில்லை.
தமது அரசின் கொடூரப் போர்முனைப்புப் போக்குக்கும், அமைதி முயற்சிகளை சீரழித்து, நிரந்தர சமாதானத்துக்கான வாய்ப்புகளை நிர்மூலமாக்கி, இனச்சிக்கலை மேலும் மோசமாக்கும் எத்தனத்துக்கும், பாரதூரமான மனித உரிமை மீறல் அராஜகத்துக்கும் எதிராக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் ஒன்று திரண்டு வருகின்ற யதார்த்தத்தை மறந்து, தமது அரசுக்கு சர்வதேச ஆதரவு அதிகரித்திருப்ப தாக அவர் அர்த்தம் பண்ணுகின்றார். முன்னைய அரசு களுக்கு இல்லாத சர்வதேச ஒத்துழைப்பும் வரவேற்பும் தமது தற்போதைய அரசுக்குக் கிட்டியிருப்பதாக அவர் புளகாங் கிதம் அடைகிறார்.
ஜப்பான் மற்றும் சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்றவை இலங்கை அரசின் போரியல் தீவிரத்துக்கு எண்ணெய் வார்க்க முன்வந்திருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் மஹிந்தரின் அரசின் இந்தச் செயற்போக்குக்குஎதிராக மேற் குலகம் முறுகி வருகையில், அதை மூடி மறைத்து, அதன் விபரீத விளைவுகளைப் பற்றியே சிந்திக்காமல், சர்வதேச மட்டத்தில் தமது அரசு படைத்துள்ள சாதனைகள் ஒப்புயர்வற்றவை என்று அரசுத் தலைவர் தமது அரசுக்குத் தாமே முடி சூடிக்கொள்வது எள்ளளவும் பொருத்தமற்றது.
மேற்குலக நாடுகள் இதுவரை தமிழீழ விடுதலைப் புலி களின் செயற்பாடுகளை "பயங்கரவாதமாக'அர்த்தம் பண்ணி, பல தடைகளை விதித்து, நெருக்குவாரங்களைக் கொடுத்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, புலிகளை இறுக்கி வந்தன என்பதும் உண்மைதான். ஆனால் அந்த இறுக்கமான செயற் போக்கை அவை மஹிந்தரின் அரசுப் பக்கமும் மெல்லத் திருப்பத் தொடங்கிவிட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. இலங்கை ஓர் அங்கீகரிக்கப்பட்ட இறைமையுள்ள சக நாடு என்பதும், மஹிந்தரின் நிர்வாகம் அந்த நாட்டின் சட்டபூர்வ அரசு என்ற அந்தஸ்துடையது என்பதும் இலங்கை தொடர் பான மேற்கு நாடுகளின் செயற்பாடுகள் வெளிப்படையாக அமையாமல் இருப்பதற்கான காரணங்களாக இருக்கலாம். ஆனால் அதைத் தமக்குச் சாதகமாகக் கருதிக்கொண்டு சர்வதேச மட்டத்தில் தமது அரசுக்கு எதிராகத் திரண்டுவரும் அழுத்தமான கருத்தியல் நிலைப்பாட்டை மூடிமறைத்துக்கொண்டு தமது போரியல் போக்குக்கு ஒரு சில நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகளை மட்டும் முன்னிறுத்தி இராஜதந்திர சாதனைகளைப் படைத்து விட்டமைபோல அரசுத் தலைவர் மகிழ்வதில் அர்த்தமில்லை.
அவரது அரசின் யுத்த சந்நதம் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அதிருப்தியும், விசனமும், எரிச்சலும் இராஜ தந்திரத் தொடர்பாடல்களில் மென்மையான கண்டனங் களைத் தாண்டி, செயல் வடிவ நடவடிக்கைகளாக மாறும் போதுதான் அவற்றின் ஆழத்தை அரசுத் தலைவர் புரிந்து கொள்வார் போலும்.
அது போன்றதுதான் இராணுவ ரீதியான வெற்றிகளும். ""ஈழப்போர் இப்போது நான்காவது கட்டத்தை எட்டிவிட் டது.'' இவற்றுக்கு மத்தியில் இராணுவ வலுச் சமநிலை என்ற ஊஞ்சல் மாறி, மாறி அசைந்ததை யாரும் மறந்துவிட முடியாது.
புலிகளின் பலம் மிக்க யாழ். குடாநாட்டுக் கோட்டையை அவர்களிடமிருந்து கைப்பற்றி, அவர்களை வன்னிக்குத் துரத்தியடித்து, "ஜெயசிக்குறு' படை நடவடிக்கை மூலம் வன்னியையும் கிழக்கு, மேற்காக துண்டுபடுத்தும் பெரும் இராணுவ நகர்வை பெரும்பாலும் பூர்த்தியடையும் அள வுக்கு முன்னெடுத்த நிலையில்தான் ""புலிகளில் தொண் ணூற்று ஆறு வீதமானோரை அழித்துவிட்டோம். எஞ்சிய நான்கு வீதமானோரையும் விரைவில் பூண்டோடு அழிப் போம்!'' எனச் சூளுரைத்தார் அப்போதைய பிரதிப் பாது காப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை. ஆனால் அதன் பின் னர்தான் "ஜெயசிக்குறு' நிர்மூலமாகி, ஆனையிறவு கூட்டுப் படைத்தளம் தகர்ந்து, "அக்னிகோள' எத்தனம் புஸ்வாணமாகி, இராணுவ வலுச்சமநிலை ஊசல் புலிகள் பக்கம் சாய்ந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்போது தமது அரசின தும் படைகளினதும் இராணுவ வெற்றிகள் என மார்தட்டும் சாதனைகள் கூட இத்தகைய ரகத்துக்குள் அமைந்தவைதான். அரசுப் படைகள் இப்போது முழுமையாக விடுவித்த கிழக் கின் வெற்றிகூட, இப்படிப் பல தடவைகள் கைமாறியதும் உண்டு.
எனவே, சர்வதேச ரீதியிலும், களமுனை யுத்தத்திலும் தாம் ஈட்டியுள்ள சாதனைகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ பெருமிதம் கொள்ளும் பெறுபேறுகள் அவரது தரப் புக்கு சாசுவதமானவையாக என்பதும் அவரது பக்கத்திலேயே நின்று நிலைத்திருக்குமா என்பதும் கேள்விக்குறியே. அதற் குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.
Uthayan,com
Friday, December 28, 2007
மகிந்தரின் பெருமிதம்
Posted by tamil at 7:23 AM 0 comments
Thursday, December 27, 2007
'நாசூக்கான(?) செயற்திட்டங்கள்!"
மகிந்த ராஜபக்சவின் சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசு, ஒருபுறம் தமிழின அழிப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, மறுபுறம் 'சமாதானத் தீர்வ' என்றும் பேசிக்கொண்டு வருகின்றது. மகிந்தவின் முன்னோடிகளான முன்னைய சிங்களத் தலைவர்களும் இதே பாணியைத்தான் கடைப்பிடித்து வந்திருக்கின்றார்கள். சுதந்திரத் தமிழீழம் மலரும் வரைக்கும், சிங்கள-பௌத்தப் பேரினவாதம் தன்னுடைய இந்தப் ப(பா)ணியைக் கைவிடப் போவதில்லை என்பதே உண்மையுமாகும்!
'தமிழீழப் பிரதேசங்கள் யாவற்றையும், இராணுவ நடவடிக்கைகள் மூலம் முழுமையாகக் கைப்பற்றுவோம்' - என்று மகிந்தவின் அரசு, அண்மைக் காலமாகப் பெரிதாக முழங்கி வருகின்றது. அதேவேளை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஷஅரசியல் தீர்வு| ஒன்றைக் காணப் போகின்றோம் என்றும் மகிந்தவின் அரசு கதையளந்து வருகின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளும் ஷஅரசியல் தீர்வு| குறித்துப் பேசி வருகின்றன.
சிறிலங்காவின் எந்தச் சிங்கள அரசும், தமிழீழ மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை என்ற பட்டறிவு தமிழீழ மக்களுக்கு உண்டு. சரியாகச் சொல்லப்போனால், சர்வதேசமும் இதனை நன்குணர்ந்துதான் உள்ளது. ஆனாலும், சிறிலங்கா அரசிற்கு முறையான அழுத்தங்களைச் செயல்வடிவம் மூலம் பிரயோகிக்காமல், வெறுமனே வார்த்தைகளை மட்டும் சர்வதேசம் உதிர்த்து வருகின்றது. சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசிற்கு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்காத சர்வதேசம், தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தேவையற்ற அழுத்தங்களையும், தடைகளையும் பிரயோகித்து வருகின்றது.
இவை யாவற்றிற்கும் அப்பாற்பட்டு, தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்தை, 'நாசூக்காக' ஒடுக்குகின்ற முயற்சியிலும், இன்று சர்வதேசம் இறங்கியிருப்பதாக நாம் சந்தேகப்படுகின்றோம்.
இந்த மிக முக்கியமான விடயத்தைச் சற்று ஆழமாகக் கவனித்துச் சில கருத்துக்களை முன் வைக்க விழைகின்றோம்.
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையின்போது பல விடயங்களைச் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தியிருந்தார். கடந்த அறுபது ஆண்டுக் காலத்தில் சிங்களத் தலைமைகள், தமிழர் தரப்புடன் செய்து கொண்ட தீர்வு ஒப்பந்தங்கள் எதுவும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்;காத ஒப்பந்தங்கள் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்களைக்கூடச் சிங்கள அரசுகள் நிறைவேற்றவில்லை என்பதையும் தேசியத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு, இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்;க விரிவாக்கமாகத் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் தலையீடு செய்து, தமிழ் மக்களின் சம்மதமோ, ஒப்புதலோ இன்றிச் சிங்கள அரசுடன் செய்து கொண்ட அரைகுறைத் தீர்வைக் கூடச் செயற்படுத்துவதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்கவில்லை என்பதையும் தேசியத் தலைவர் விளக்கியிருந்தார். இவற்றோடு சேர்த்து இன்னுமொரு முக்கிய விடயத்தையும் தலைவர் சுட்டிக் காட்டித் தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது, அன்று இந்தியா இழைத்த தவறை, இன்று சர்வதேசமும் இழைத்து நிற்பதை விளக்கிய தேசியத் தலைவர், இதன் காரணமாகச் சர்வதேசத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிககையும் இன்று தகர்ந்து போயிருக்கின்றது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு 'சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகள் யாவும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கையில், இந்த இனவாதக் கட்சிகளிடமிருந்து எவரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று!' என்றும் தேசியத் தலைவர் தெரிவித்திருந்தார்.
அதாவது சிங்களப் பேரினவாத அரசுகளோடு, போடப்படுகின்ற ஒன்றுக்கும் உதவாத ஒப்பந்தங்களைக்கூட சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியும் என்பதையும், அந்த அரைகுறை ஒப்பந்தங்கள் தமிழர் தரப்போடு போடப்பட்டிருந்தாலும் சரி, இந்தியா போன்ற பிராந்திய வல்லரசோடு போடப்பட்டிருந்தாலும் சரி, அவற்றைச் சிங்களப் பேரினவாதம் தூக்கி எறியத் தயங்காது என்பதையும் தமிழீழத் தேசியத் தலைவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
இதன்மூலம், 'இதய சுத்தியாக, நேர்மையாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்குத் தமிழர் தரப்புத் தயார். ஆனால் இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம், தமிழின அழிப்புப் போரை நடாத்தி வருகின்ற மகிந்த ராஜபக்ச போன்ற அரசுகளுடன் பேசுவதனால் பலனில்லை' என்ற நிலைப்பாட்டைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்த அவரது மாவீரர் தின உரையை அடுத்து, சிங்கள தேசமும், சில உலக நாடுகளும் திரைமறைவில், சில 'நாசூக்கான செயற் திட்டங்களை' மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக நாம் அறிகின்றோம்.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைத் தூசு தட்டும் வேலையைச் செய்யச் சிலர் ஆரம்பித்துள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதானது, தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கக் கூடிய அரு மருந்து என்றும், அந்த அரிய வாய்ப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் தவறவிட்டு விட்டார்கள் என்றும் ஒரு சாரார் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்று கிடப்பில் போடப்பட்டு, வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, சட்ட விரோதமானது என்று சிறிலங்காவின் நீதித்துறை அறிவித்த பின்னரும் கூட, இவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தூக்கிப் பிடிப்பதன் காரணம் என்ன?
'தமிழீழ விடுதலைப் புலிகள், அமைதி வழியில், அரசியல் இலக்குகளை அடையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை' என்ற பொய்ப் பரப்புரையைப் பரப்பி, அதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெற்றி கொள்வதன் மூலமே, இலங்கைத் தீவில் சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்ற கருத்துருவாக்கத்தைத் திணிப்பதுதான், இவர்களுடைய உள் நோக்கமாக உள்ளது.
இந்தக் கருத்துருவாக்கத்தைப் பாரிய அளவில் பரப்புரை செய்து, அதனூடாக, தமிழ் மக்கள் மீதான போரை நியாயப்படுத்துவதற்காக, ஒன்றுக்கும் உதவாமல் போன ஒப்பந்தங்ளைச் சிலர் தூக்கித் திரிய ஆரம்பித்துள்ளார்கள்.
இது அவர்களுடைய முதல் கட்டத் திட்டமாகும்!
தமிழீழ விடுதலைப் புலிகளைப் போரில் வெல்கின்ற அதேவேளை, இந்தப் போரின் ஊடாகத் தமிழ் மக்களின் வாழ்வை அவல நிலைக்குத் தள்ளி, அவர்களைக் கையறு நிலைக்குக் கொண்டு வருவது, இந்தச் சிலரின் திட்டமாக இருக்கின்றது. தமிழர்களைக் கையறு நிலைக்கு கொண்டு வருவதன் மூலம், அவர்கள் மீது, ஓர் அரைகுறைத் தீர்வுத் திட்டத்தைத் திணிப்பதுதான் இவர்களது எண்ணமாகும்.
இது அவர்களுடைய இரண்டாவது கட்டத் திட்டமாகும்!
இந்த ஒன்றுக்கும் உதவாத அரைகுறைத் திட்டத்தைத் தமிழர்கள் சார்பில் ஏற்றுக் கொள்வதற்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி வைக்க வேண்டும். அதற்காக 'மிதவாதத் தமிழர்கள்' என்ற பெயரில் தமிழ்த் துரோகிகளை ஒன்றிணைத்து, அவர்களிடம் இந்தத் தீர்வுத் திட்டத்தைக் கொடுத்து, அவர்களது ஒப்புதலைப் பெற்று, தமிழர்களின் தேசியப் பிரச்சனை தீர்க்கப்பட்டது என்று அறிவிப்பதாகும்.
இது அவர்களுடைய மூன்றாவது கட்டத் திட்டமாகும்!
இதனடிப்படையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் மூலம் ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சியானது, மீண்டும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒற்றையாட்சி, சமஷ்டி ஆட்சி, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்ற எத்தனையோ சொல்லாடல்களுக்கு 'அப்பால்', 'மிதவாதியான' டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தீர்வுத் திட்டத்தின் மூலம், தான் வட-கிழக்குப் பகுதிகளின் முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று தன் ஆசையையும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட 55 தடவைகள் கூடி ஆலோசனைகளை நடாத்தியிருக்கின்ற இந்த அனைத்துக் கட்சிக்குழு, இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்த நாடுகளின் அரசியல் யாப்புக்களையும் ஆராயப் போவதாக அறியப்படுகின்றது. இவையெல்லாம் வெறும் கண்துடைப்புக்களேயாகும்!
சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் மேலாண்மையை நிலைநிறுத்தி, தமிழ் மக்களை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம் கட்ட வேண்டும். இந்த இரண்டு விடயங்களில் ஒன்றையாவது செய்து விடவேண்டும் என்ற துடிப்பில் சிங்கள தேசம் முனைப்பாக நிற்கின்றது. அதற்குச் சர்வதேசம் தொடர்ந்தும் உதவி வருகின்றது.
இன்று உலகில், எத்தனையோ நாடுகள் விடுதலையடைந்து வருகின்றன. இன்று விடுதலையாகும் நாடுகளுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பல நாடுகள் செயற்பட்டிருக்க்pன்றன. ஆனால் உலக நாடுகளின் இந்த எதிர்வினைகளுக்கு அப்பால், இன்று இந்த நாடுகள் சுதந்திரம் அடைந்து வருவதைப் பார்க்கின்றோம். ஒப்பீட்டளவில் தமிழினம், இந்த நாட்டு மக்களையும் விடத் தொன்மையான இனமாகும். ஓப்பீட்டளவில், விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் சாதனைகளைப் படைத்து, புதிய பரிமாணங்களைக் கண்ட இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். காலத்தின் கொடையாகத் தமிழீழ மக்களுக்குக் கிடைத்திட்ட தலைவன்தான் எங்களுடைய தலைவனாவான்! நாளைய வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி, புதிய பாடமாக வைக்கப்;படும் என்பதில் சந்தேகமில்லை.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்தக் காலகட்டத்தில் வாழுகின்ற புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய எம்மிடம், மலையையும் புரட்டக்கூடிய மகத்தான சக்தி உண்டு. எமது தேசியத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, புலம்பெயர் வாழ் தமிழர்களாகிய நாம் உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்தால், தமிழீழ விடுதலைப் போராட்டம் விரைவிலேயே வெற்றி பெறும். சர்வதேசமும், சிங்களமும் ஷநாசூக்காகவும், வெளிப்படையாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குகின்ற செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்ற இவ்வேளையில் நாம் மனம் வைத்தால், எமது மக்களின் விடுதலைப் போராட்டம், புதிய பரிமாணங்களை அடைந்து விரைவில் வெற்றி பெறுவது உறுதியாகும். நமக்குள்ளேயே இந்த உலகம் இருப்பதையும் நாம் உணர்வோமாக! தமிழீழ விடுதலைப் பேராட்டத்திற்கு எதிராகத் தீட்டப்படும் பரப்புரைகளையும் திட்டங்களையும் முறியடிப்பதற்குரிய பலமும், அறிவும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு. அவற்றிற்குச் செயலுருவம் கொடுப்பதற்காக, நாம் யாவரும் முழுமையாக ஒருங்கிணைவோம்! செயல்படுவோம்!!.
-சபேசன் (அவுஸ்திரேலியா)-
Posted by tamil at 11:03 AM 0 comments
ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரணத்திலும் பாகுபாடு
தெற்காசிய நாடுகளை ஊழிக்கூத்தாய்ப் போட்டுப் புரட்டி எடுத்து, பெருநாசம் விளைவித்து, பல்லாயிரக் கணக்கானோ ரின் உயிர்களைக் குடித்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின் மூன் றாவது ஆண்டு நிறைவை நேற்று அனுஷ்டித்தோம்.
இலங்கைத் தீவில் சுமார் நாற்பதாயிரம் பேரின் உயிரைக் காவுகொண்ட இந்தக் கொடூரத்தின் குரூர விளைவுகளிலிருந் தும் நினைவுகளிலிருந்தும் இலங்கை மக்கள் இன்னும் மீளவே யில்லை.
அந்தப் பேரனர்த்தத்தின் நினைவழியா இந்நாள்களில்தான் வெள்ளப் பேரனர்த்தமும் பல்வேறு இடங்களில் தாக்கியிருக்கி ன்றது.
ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழிவும், நாசமும், கோரமும், அவலமும் ஒருபுறம் என்றால் மறுபுறம் அப் பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு, மீள் கட்டமைப்பு என்ற பெயரில் அரங்கேறிய அட்டூழியங்களும் அவலட்சணங்களும் ஏற்படுத் தியிருக்கும் அதிருப்தியும், அவலமும் சொல்லில் அடங்காதவை.
வாழ்வாதார உரிமைகளை வழங்குவதிலாகட்டும் அபிவிருத்தி, புனரமைப்புப் பணிகளிலாகட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் தாயகப் பிரதேசத்தைப் புறக்கணித்துப் பாகுபாடு காட்டி, ஒதுக்கும் கொழும்பு அரச நிர்வாகம், ஆழிப்பேரலைப் பாதிப்பு நிவாரண வேலைகளிலும் அந்தக் கைங்கரியத்தைக் கைவிடவேயில்லை என்பதே கவலைக் குரிய விடயமாகும்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கும், கிழக்கும்தான். இலங்கையில் சுமார் எழுபத்தியைந்து வீதமான பாதிப்பு தமிழ் பேசும் மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்கும்தான். ஆனால் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள்கட்ட மைப்புப் பணிகளில் பெரும்பகுதி தென்னிலங்கைச் சிங்களப் பிரதேசங்களுக்குத்தான் கிடைத்திருக்கின்றன.
வடக்கிலும், கிழக்கிலும் ஆழிப்பேரலையால் பாதிக்கப் பட்ட பல்லாயிரம் குடும்பங்கள் இன்னும் மரங்களின் கீழும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், நலன்புரி மையங்கள் என்ற பெயரில் அமைந்த அகதி முகாம் களிலும் தங்கியிருந்து அல்லல்படுகின்றன. தற்போதைய மழை வெள்ளம் அவர்களது வாழ்க்கையை மேலும் பேர வலத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.
ஆனால் தென்னிலங்கையிலோ குறிப்பாக இலங்கைத் தீவின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை மற்றும் காலி, களுத்துறை போன்ற மாவட் டங்களிலோ ஆழிப்பேரலை அனர்த்தத்தால் அழிந்து போன வீடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரக்கணக்கில் அதிகமான வீடுகள் ஆழிப்பேரலைப் பாதிப்பு மீள் கட்டமைப்பு என்ற பெயரில் கட்டப்பட்டிருக்கின்றன. தேவைக்கும் அதிக மான வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங் களில் பாதிப்புற்று அழிந்த வீடுகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவிற்காவது புதிய வீடுகள் கட்டப்படவில்லை.
ஆக, மொத்தத்தில் ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டமைப்புப் பணிகளில் கூட நிவாரணச் செயற்பாடுகளில் கூட வடக்கும், கிழக்கும் தென்னிலங்கை அரசால் பாகுபாடு காட்டப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
மக்களின் சகல வாழ்வியல் அம்சங்களிலும் சிறுபான் மையினருக்கு எதிரான இத்தகைய இனப்பாகுபாட்டுப் புறக்க ணிப்பையும் ஒடுக்குமுறையையும் பேரினவாதிகள் காட்டிவரு கின்றமையினாலேயே ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளையாவது சமச்சீராக முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு சகல தரப்புகளையும் உள்ளடக்கிய ஒரு பொதுக்கட் டமைப்பு ஊடாக அப்பணிகளை மேற்கொள்ளச் செய்வதற் கான முயற்சிகள் அப்போது மேற்பொள்ளப்பட்டன. நீண்ட ஆறுமாத கால இழுபறிக்குப்பின் அதற்கான உடன்பாடு எட்டப் பட்டு, ஒப்பந்தமும் கைச்சாத்தானது.
ஆனால் நிஜங்களின் யதார்த்தங்களை உள்வாங்கி, அதற்கேற்ப வளைந்து கொடுக்கும் திராணி அற்ற வகையில், இரும் புச் சட்டமாக வார்த்தெடுக்கப்பட்டிருக்கும் இலங்கையின் நீதித்துறையும், அதன் முன் இந்த விவகாரத்தை இழுத்துச் சென்ற மேலாண்மைவாத பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளும் சேர்ந்து அந்தப் பொதுக்கட்டமைப்பு முயற்சியை ஆழிப்பேரலைக்குள் அமுக்கி அடியோடு அடக்கிவிட்டன.
அதன் விளைவாகவும்
ஆழிப்பேரலை மீள் கட்டுமானத்துக்காகத் தான் வழங்கி வரும் பெருமளவு நிதி உரிய வழிகளில், உரிய நியாயத்துடன் பகிர்ந்தளித்து செலவிடப்படுகின்றதா என்பதை உற்று நோக்கி அவதானிப்பதில் சர்வதேச சமூகம் தவறியதாலும்
இவ்வாறு பிரதேச முரண்பாட்டு நோக்கில் மீள் கட்ட மைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன; தொடர்ந் தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்ட மைப்புப் பணிகளில் பெரும் குளறுபடிகளும், ஊழல்களும், மோசடிகளும் இடம்பெற்றிருக்கின்றமை பற்றிய தகவல்களும் கசிந்து வருகின்றன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்துக்காக வந்த பணம் "ஹெல்பிங் அம்பாந்தோட்டை' திட்டம் என்ற பெயரில் தனியாரின் கணக்குக்கு மாறிய விவகாரம் நீதிமன்றத் தீர்ப்பினால் அமுங்கிப் போனாலும் அதில் உள்ள சூக்குமங்கள் மக்கள் மனங்களில் அடங்கிப்போய் விடவில்லை.
அவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சக்திகளின் கைகளில் தான் இன்று நாட்டின் அதிகாரம். அந்த அதிகார ஆட்சியின் கீழ் இடம் பெறும் ஊழல், மோசடி அவலங்கள் குறித்து சந்தி சிரிக்கின்றது.
ஆழிப்பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளில் என்றில்லை, நாட்டின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஊழலும், மோசடியும்,லஞ்சமும் தலைவிரித்தாடுவதால் அது ஆழிப் பேரலை நிவாரண, மீள்கட்டுமானப் பணிகளையும் பற்றிப் பீடித்து ஓர் உலுக்கு உலுக்கி வருகின்றது.
ஆழிப்பேரலையால் பாதிப்புற்றோருக்கு வழங்க சுமார் 98 ஆயிரம் வீடுகள் வரை தேவை என்றும் அதில் சுமார் 97 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன என்றும் சில தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசு வெளியிட்ட புள்ளி விவரம் அப்பட்டமான பொய் என்று "டிரான்ஸ் பரன்ஸி இன்ரநஷனல்' எனப்படும் வெளிப்படையான செயற்பாட்டுக்கான சர்வதேச மையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ஐயாயிரம் கோடி ரூபாவரை மாயமாக மறைந்துவிட்டது அல்லது சுளையாக விழுங்கப்பட்டுவிட்டது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகள் இன, பிரதேச பாகுபாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கும், அப்பணிகளில் பெருமளவு ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றமைக்கும் இவ்விவகாரத்தை ஊன்றிக் கவ னித்துக் கண்காணிக்கும் தனது தலையாய பொறுப்பில் சர்வ தேசம் அசிரத்தையாக விட்டேத்தியாக கடமை தவறி செயற்பட்டமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.
Uthayan.com
Posted by tamil at 4:58 AM 0 comments
