Tuesday, June 2, 2009

வஞ்சிக்கும் போக்கில் பாரதம்

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் சுமார் இருபதாயிரம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கான சூத்திரதாரிகளின் பட்டியலில் முதலிடம் இந்தியாவுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது இந்த விடயத்தில் புதுடில்லிக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுக் கும் எதிரான குற்றச்சாட்டு விரல் உள்நாட்டில் இருந்தே நீண்டி ருக்கின்றது.

"இந்த விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அதிருப்தி தருவதாகவும் மனக்குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. " " என்று வெளிப்படையாகக் குற்றம் சுமத்துகின்றார் இந்திய இராணுவத்தின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா. இவர் இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னர் யுத்தம் புரிந்த இந்திய அமைதிப் படைக்குத் தளபதியாகக் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"களத்தில் என்ன நடக்கின்றது என்ற யதார்த்தம் பற்றி சிந்திக்காமலேயே இந்த யுத்தத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியமைதான் நிலைமை மோசமடைந்து இவ்வளவு பொதுமக்கள் படுகொலை சேய்யப்படு வதற்கு அடிப்படையும் காரணமுமாயிற்று " என்ற சாரப்பட அவர் தெரிவிக்கும் கருத்துகள் அர்த்தமும் ஆழமான உண்மையும் பொதிந்தவையாகும்.

பிராந்திய விடயங்களில் தனக்குப் போட்டியான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான யுத்த இணக்கப்பாட்டுச் சேயற்பாடுகளை முந்துவதற்காக இந்தியா வகை தொகையின்றி இந்தப் போரில் இலங்கைக்கு உதவியது. அதேசமயம், இந்தப் போர் தொடர்பில் தான் கையாள வேண்டிய இராஜதந்திர அழுத்தங்களை அது பிரயோகிக்கத் தவறிவிட்டது. இதுவே வன்னிக்களத்தில் அப்பாவிப் பொதுமக்கள் கேட்பாரின்றி அழிவதற்குக் காரணமாயிற்று என்று மேற்படி தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மக்கள் பேரழிவுக்கு உதவி, ஒத்துழைத்துக் குற்றமிழைத்த புதுடில்லி, அதன் பின்னரும் கூடத் திருந்தவில்லை. அந்த மக்கள் பேரழிவு தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டுத் தடுத்ததன் மூலம் அக் குற்றங்களுக்குத் தானும் உடந்தையாகியிருக்கின்றது பாரதம்.

கடந்த ஆண்டு இறுதியில் காஸாவில் பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குத லில் 926 பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்தக் கொடூரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணைக்கு கடந்த ஜனவரியில் ஆதரவாக வாக்களித்த இந்தியா, இப்போது தனது பக்கத்துத் தேசத்தில் தனது மாநிலமான தமிழகத்தோடு தொப்புள்கொடி உறவு கொண்ட சுமார் இருபதாயிரம் அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படும் கோரம் குறித்த விடயங் கள் அம்பலமாகாமல் தடுப்பதற்கு முன்நின்று முழு மூச்சுடன் சேயற்பட்டிருக்கின்றது. பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருக்கின்றது.

"விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துத் தோற்கடிப்பதற் காக எத்தனை அப்பாவிகளைக் கூட இலங்கைப் படைகள் கொன் றாலும் அதைப் பார்த்திருப்பது மட்டுமல்ல அதை ஆதரிக்கவும் சேய்வது என்ற விட்டேத்தியான நிலைப்பாட்டிலேயே இந்தியா இருந்து வந்திருக்கின்றது " " என்று மனித உரிமைகள் கண்காணிப் பகத்தின் ஆசிய இயக்குநர் பிரட் அடம்ஸ் கூறுவதும் கவனிக் கத்தக்கதாகும்.

இலங்கையில் கொழும்பு அரசுமேற்கொண்ட தீவிர யுத்தப் போக்குக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டி முழு ஆதரவு வழங் கியே வந்தது. யுத்தத்தின் வெற்றியால் ஏற்பட்ட களிப்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே உறுதிப்படுத்தினார்.

"இந்தியாவிடமிருந்து எமக்கு எந்த அழுத்தமும் எந்தச் சமயத்திலும் வரவேயில்லை. அவர்களின் (இந்தியர்களின்) யுத்தத்தையே நான் முன்னெடுக்கின்றேன் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் " " என்று சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ஜனா திபதியே தம் திருவாயால் கூறியிருக்கின்றமையும் கவனிக்கத்தக் கது.

ராஜீவ் காந்தி படுகொலைக்காகப் புலிகளைப் பழிவாங்கி அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் சேயற் பட்டது காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு. அதற் காக ஈழத் தமிழர்களுக்கு எந்த அழிவு வந்தாலும் எனக்கென்ன என்ற தடிப்புடனும் அது கருமமாற்றியது. தமிழர் தாயக மண் ணில் தீவிரமடையும் யுத்தத்தின் பேறாக இந்திய மண்ணுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வந்து சேரும் விவகாரம் ஒரு பிரச்சினை யாக இல்லாவிட்டால் சரி என்ற அளவோடு தனது இராஜதந்திர அழுத்தங்களை அது கட்டுப்படுத்திக்கொண்டது.

இவ்வாறு ஒரு புறம் கொழும்பு அரசுக்கு ஆயுத தளபாட உதவிகள், இராணுவப் பயிற்சி ஒத்தாசைகள் போன்றவற்றை வழங்கிக்கொண்டு, மறுபுறம் களத்தில் என்ன நடந்தாலும் கவ லையில்லை என்ற பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற் பட்டமையே இந்தப் பேரழிவு நிலைமைக்கு ஒரே காரணமாகும்.

சரி, போர் முடிந்து, இருபதாயிரம் அப்பாவிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள். மறுபுறம் தனது ஒரே எதிரியான புலிகளின் தலைமையும் அந்த இயக்கமும் அழிந்துவிட்ட திருப்தி இந்தியாவுக்கு. ஆனால் அதற்குப் பின்னரும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவிடும் நீதியான போக்கு புதுடில்லிக்கு இல்லை என்பது அதன் வெளிப்படையான சேயற்பாடுகள் மூலம் அம்பலமாகி வருகின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான கருத்து நிலை முரண்பாடு நீண்ட வரலாற்றுப் பின் னணி கொண்டது. பல தசாப்தகால நெடிய சரித்திரச் சம்பவங்கள் அதன் பின்னால் புதைந்து கிடக்கின்றன.

ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்களையும் பரந்து பட்டு உலகெங்கும் வியாபித்து நிற்கும் அவர்களின் வேரோடல் சந்ததிகளையும் நிரந்தர எதிரிகளாக்கி ஒதுக்கும் புதிய கொள்கைப் போக்கு ஒன்றைப் புதுடில்லி உருவாக்கி வருகின்றதோ என்ற எண்ணம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டு வருகின்றது.

ஈழத் தமிழர்கள் மத்தியிலும், வலிமை மிக்க புலம் பெயர் வாழ் அவர்களின் உறவுகள் மத்தியிலும் இந்தியா குறித்து ஏற்பட்டு வரும் வஞ்சிக்கப்பட்ட நினைவுகள் மற்றொரு யூத நாஜி முரணிலை எண்ணமாகப் பரிணமிக்கும் தோற்றப்பாட்டைக் காட்டுகின்றன. இந்தப் போக்கு சர்வதேசரீதியில் பாரதத்துக்கு கவலையளிக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் வழி கோலினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை முறியடிக்கும் விதத்தில் அவர்களை வஞ்சிக்கும் வகையில் பாரதம் தொடர்ந்து சேயற்பட்டால், சர்வதேச மட்டத்தில் பாரதத்தின் எதிர்ப்பு சக்திகளுக்கு வலுவூட்டும் பல அம்சங்களுக்கு அது ஊக்கமளிப்பதற்கு வழி சேய்துவிடும்.

தென்னிலங்கையைக் கட்டித் தழுவி, வடக்கு கிழக்குத் தமிழர்களை எட்டி உதைக்கும் சோனியா தலைமையின் போக்கு பாரதத்துக்கும் விபரீதமான விளைவுகளுக்கு வித்திடக்கூடும்.

நன்றி
உதயன்

0 Comments: