Monday, February 9, 2009

ஈழப்பிரச்சனை: முல்லைத்தீவு நோக்கி சென்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கைது

ஈழத்தமிழர்களை போரில் இருந்து காப்பாற்ற தமிழக வக்கீல்கள் 14 பேர் கள்ளத் தோணியில் தூத்துக்குடியில் இருந்து முல்லைத்தீவை நோக்கி சென்றனர்.

கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகையன் தலைமையில் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி, போராட்டம் நடத்தி வந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லையெனில் முல்லைத்தீவு சென்று பேராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் 6 பேரும், கரூர் வழக்கறிஞர்கள் 8 பேர் முருகையன் தலைமையில் முல்லைத்தீவு செல்ல முடிவு செய்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்றுக்கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார்.

வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.

ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி : நககீரன்

0 Comments: