Monday, February 9, 2009

தமிழ் மக்களின் உரிமைகளுக்கு சர்வேதேசம் உத்தரவாதம் அளிக்குமா?

வன்னியின் ஒரு மூலைக்குள் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் முடக் கப்பட்டிருக்கின்றனர். இங்கு நாளுக்கு நாள் பீரங்கித் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களின் மூலம் பெருமளவு மக்கள் படுகொலை செய்யப்படுவதும், உணவு, மருத்துவ வசதிகள் இன்றி பேர வலத்தைச் சந்திப்பதும், கிடைக்கின்ற உணவைக் கூட சமைக்கவோ, உண்ணவோ முடியாதளவுக்கு தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதும், பதுங்குகுழி வாழ்வும், இடப்பெயர்வும், அவலச் சாவுகளும், மரண ஓலங்களுமே அன்றாட வாழ்வாக மாறியிருக்கிறது.

புதுக்குடியிருப்பு அடங்கலான சிறு பிரதே சத்துக்குள் போருக்குள் வாழுகின்ற மக்க ளைக் காப்பாற்றக் கோரி, போரைநிறுத்தக் கோரி உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். வீதியில் இறங்கி ஆயிரக்கணக்கைத் தாண்டி இலட்சக்கணக்கில் கூட அணி திரண்டிருக்கிறார்கள்.

வன்னியில் நடத்தப்பட்டு வந்த "மனிதா பிமானப் போரை' கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டிருந்தது சர்வதேசம். இப்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது நாடுகளிலும் இந்தியாவிலும் தமிழ்மக்க ளின் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியதும் சர்வதேச நாடுகள் பலவும் சற்று விழித்துக் கொள்ள ஆரம்பித் திருப்பதாகத் தெரிகிறது.

இப்போது, போரை நிறுத்தக்கோரி பாது காப்பு வலயம் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவிக்கு மாறு கோரி புலிகளை ஆயுதங்களைக் கைவிடக் கோரி பல்வேறு நாடுகளும் தமது பார்வைக்கும் கொள்கைக்கும் ஏற்றவகையில் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியிருக்கின்றன.

முல்லைத்தீவின் ஒரு மூலைக் குள் நடக்கின்ற போர் தமது நாட்டு வீதிகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்தே இந்த நாடுகள் தமது மௌனத்தை கலைக்க முற்பட் டிருக்கின்றன. அல்லது தமது நாடுகளில் உள்ள மக்களை அமைதிப்படுத்த இவ்வாறு கூறத் தொடங்கியிருக்கின்றன.

இணைத் தலைமை நாடு களின் சார்பிலும் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் போரை நிறுத்தி, பேச்சுக்களை தொடங்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டிருந்ததோடு புலிகள் ஆயுதங்களைக் கைவிடு வது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேவேளை இந்தியாவோ ஒரு படி மேலே போய் அரசாங்கம் போரை நிறுத்துவதும் புலிகள் ஆயுதங்களைக் கைவிடு வதும் சமநேரத்தில் நடக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.

புலிகள் பலவீனமடைந்து போயிருக்கிறார் கள் என்று தெரிந்தவுடன், பல்வேறு நாடுகளும் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்ற தொனியில் ஆலோசனை கூற முற்பட் டிருப்பதைக் காணமுடிகிறது.

ஆனால் இதே நாடுகள் முன்னர் புலிகளை இலங்கை அரசுக்குச் சமமான பலம் மிக்க அமைப்பாக கருதிக் கொண்டிருந்தன. படைப் பலம் பற்றிய பார்வையைப் பொறுத்தே வெளியுலகம் ஒரு தரப்பின் கோரிக்கைகளை கருத்தில் எடுக்கிறதென்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

புலிகளை ஆயுதங்களைக் கீழே போடுமாறு ஆலோசனை கூறியுள்ள நாடுகளும் சரி புலி கள் ஆயுதங்களைக் கீழே போடுவது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ள இணைத்தலைமை நாடுகளும் சரி ஒரு விட யத்தை ஏற்றுக்கொள்கின்றன என்பது தெளிவு.

புலிகளிடம் இருந்து நிலங்கள் முழுவதை யும் அரசபடைகள் கைப்பற்றினாலும் கூட போருக்கு முடிவு வரப்போவதில்லை என்பதே அது. ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் படித்திருக்கின்ற பாடம் அது.

புலிகள் தாமாக ஆயுதங்களைக் கைவிடும் வரை போருக்கு முடிவு வராது என்பதைக் கரு த்தில் கொண்டே இணைத்தலைமை நாடுகளும் சரி இந்தியா போன்ற நாடுகளும் சரி, இவ்வாறான வேண்டுகோளை விடுத்திருக்கின்றன.

ஆனால், இந்த நாடுகள் எல்லாமே புலிகளை ஆயுதங்களைக் கீழேபோட வேண்டும் என்று ஆலோசனை கூறியதோடு மட்டும் நின்றிருக் கின்றனவே தவிர, தமிழ்மக்களின் உரிமைகள், அரசியல் தீர்வு பற்றிய உத்தரவாதத்தை பெற் றுத் தருவது பற்றிக் கருத்தில் கொண்டதாகவோ, கரிசனைப்பட்டதாகவோ தெரிய வில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாய மான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கான அடிப்படை அம்சங்களைக்கூட உருவாக்கு கின்ற முயற்சியில் வெளியுலகம் ஈடுபட வில்லை.

போரை நிறுத்தி பேச்சுக்களை நடத்தி அதன்மூலம் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்தி புலிகளின் ஆயுதங்களைக்களைகின்ற முயற் சியில் சர்வதேசம் இறங்கியிருக்க வேண்டும்.

அது ஒட்டுமொத்த தமிழ்மக்களாலும் வரவேற் கப்படுகின்ற விடயமாகவும் இருக்கும். ஆனால், போரை நிறுத்துவதற்கு, காகித அறிக்கைக்கு மேலாக, குறைந்தபட்ச அழுத்தத் தையாவது பிரயோகிக்காமல் தமிழ்மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துகின்ற ஒரு தீர்வுக்கு இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள மக்களையும் இணங்க வைக்காமல், புலிகளின் ஆயுதக் களைவிலேயே குறியாக இருப்பது இணைத்தலைமை நாடுகளின் பக்கச்சார்பான தொரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை இணைத்தலைமை நாடுகள் ஏற் றுக்கொள்ளுமாக இருந்தால் அமைதிவழியில் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவோம் என்ற உறுதிமொழியை தமிழ்மக்களுக்கு வழங்க அமெரிக்காவோ பிரிட்டனோ இந்தியாவோ முன்வருமானால் ஆயுதங்களைக் கீழே போடுமாறு தமிழ்மக்களே புலிகளை வலியுறுத்துகின்ற நிலை வந்து விடும்.

ஆனால் இலங்கை அரசாங்கமே தமிழ்மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற தீர்வுத்திட்டம் ஒன்றைக் கூட முன்வைக்க முடியாத நிலையில் இருக்கின்ற போது பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடன் தமிழ்மக்களுக்கு நீதியான, நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாதென்பதே யதார்த்தம்.

சிங்கள மக்கள் அனைவரும் இணங்கி வந் தால் கூட அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்குமா என்ற சந்தேகமும் இருக்கிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகாரங்களைப் பரவலாக்க முடியாதென்றும் அது அரசியலமைப்புக்கு முரணான தென்றும் அண்மையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருந்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தான் மாகாணசபைகளை உருவாக்கியது. அப்படியானால் போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் அரசாங்கம் கொடுக்கப் போகின்ற அரசியல் தீர்வு, 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபைகளாகவே இருக்கப் போகிறது.

மாகாணசபை மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு நியாயமானதாக இருந்தால் அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தால் அதற்குப் பின்னர் 50ஆயிரத்துக் கும் அதிகமான உயிர்களை தமிழ்மக்கள் பலி கொடுத்திருக்கமாட்டார்கள்.

நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்கான உத்தரவாதத்தை குறிக்கப்பட்ட காலத்துக்குள் அதை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதி மொழியை தென்னிலங்கையிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதை நாடாளுமன்ற அங்கீகாரம் பெறுவதற்கான வழிகளை உறுதிப் படுத்திக் கொண்டு புலிகளை நோக்கி ஆயு தங்களைக் கீழே போடுமாறு சர்வதேசம் கேட்க முடியும்.

ஆனால், சர்வதேசம் விடுக்கின்ற சாதாரண போர்நிறுத்தக் கோரிக்கைகளையே தூக்கியெ றிந்து விடும் அரசாங்கம் சர்வதேசத்தின் இத் தகைய முயற்சிகளுக்கு ஆதரவு தருமா? அப் படியான உறுதிமொழியைக் கொடுக்க முன் வருமா என்பதெல்லாம் சந்தேகமே.

போர்மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று அரசாங்கம் உறுதியாக நம்புவதற்கு அதன் அண்மைக்கால இராணுவ வெற்றிகளே காரணம்.

இதைப் புரிந்து கொண்டு சரியான வழி முறைகளின் ஊடாக சர்வதேசம் முயற்சிக்கு மேயானால் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இதுவே சிறந்த தருணமாக இருக்கும்.

அதற்கு மாறாக சமச்சீரற்ற படைப்பல நிலையை அடிப்படையாகக் கொண்டு விடுக் கப்படுகின்ற வெறும் காகித அறிக்கைகளின் மூலம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி விட முடியாதென்று சர்வதேசம் உணரும் நிலை வருமா? இதற்குக் காலம் தான் பதில் கூற வேண்டும்.

நன்றி:-
சுவிஸ் முரசம்

0 Comments: