Monday, February 23, 2009

தமிழகத்தில் சூடு பிடிக்கும் ஈழத் தமிழர்கள் விவகாரம்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் தமிழகத்தில் எழும்போதெல்லாம் வழமையாக ஒரு கருத்து அங்குள்ள ஆட்சித் தரப்புகளால் முன்வைக்கப்படுவதுண்டு.
அது டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, நெடுமாறனின் உலகத் தமிழர் இயக்கம் என்பன போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு சொற்ப தரப்பினரே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சிப் போக்கைக் காட்டுகின்றனர். இத்தரப்பினரின் அரசியல் வலு அப்படி ஒன்றும் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தனித்து நிர்ணயிக்கத்தக்கதல்ல. அது புறக்கணிக்கப் படக்கூடியதே. அதனால் அத்தரப்பினர் கிளப்பும் ஆரவா ரங்களுக்கு ஊடகங்கள் இடம்கொடுத்து, அவற்றைப் பிரசாரப்படுத்தினாலும் கூட, அத்தரப்பினர் தமிழகத்திலும், மத்தியிலும் அரசியல் விடயங்களில் ஏற்படுத் தக்கூடிய தாக்கம் அப்படி ஒன்றும் பெரிதுபட்டதல்ல என்றே விளக்கம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போதும் கூட தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் சக்திகள் மேற்படி கட்சிகள் தாம். இவற்றோடு தேசிய முற்போக்குத் திரா விடர் கழகத்தின் விஜயகாந்தும் மற்றும் சினிமாத்துறை யினர் சிலரும் தற்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோர் அணியில் சேர்ந்துள்ளார்கள். அவ்வளவே.
தமிழகத்தின் பிரதான இரு அரசியல் கட்சிகளான ஆளும் தி.மு.கவும் அதற்கு மாற்றான அ.தி.மு.கவும் அப்படி ஒன் றும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி நிலைப் பாட்டைக் கைக்கொள்ளவே இல்லை.
ஆனால், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இன்று தமிழகத் தில் கொப்பளிக்கும் உணர்வலைகளை முன்னைய காலம் போல் சிறிய கட்சிகளின் செயற்பாடு என்று புறம் தள்ளி ஒதுக்கி உதாசீனப் படுத்தி விடவே முடியாது. அந்த அளவுக்கு அந்த உணர்வலைகள் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி, அனைவரினதும் சிந் தனையைச் சுட்டெரிக்கும் சூடான விவகாரமாகிவிட்டது.
தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் தங்களது சுய நன்மை கருதிய நிலைப்பாடு காரணமாக, ஈழத் தமிழரின் அவல நிலை குறித்துப் பாராமுகமாக நடப்பதால், தமிழகத்தின் சமூகக் கட்டமைப்புகள் சில அரசியல் கட்சி பேதத்துக்கு அப்பால் சென்று, இப்பிரச் சினையைத் தாமாகவே கையாண்டு, தங்கள் கருத்தைப் பிரதிபலித்து, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன் னெடுக்க முன்வந்திருக்கின்றன.
தமிழகம் உட்பட்ட இந்தியா போன்ற சமூகக் கட்ட மைப்பில் சட்டத்தரணிகள் என்ற தரப்பினர் முக்கிய நிலைக்களனான மட்டத்தினராவர். ஒரு சமுதாயக் கட்ட மைப்பில் சட்டம் ஒழுங்கைச் சரிவரப் பேணச்செய்து நீதியை நிலைநாட்ட வைப்பதில் இத்தரப்பினருக்குப் பிரதான பொறுப்பு உண்டு.
சட்டத்துக்கும், நீதிக்குமாக உழைக்கும் சட்டத்தரணி களான இத்தரப்பினர் பொதுவாக சட்டம் அசட்டை செய் யப்படும்போதும் நீதி புறமொதுக்கப்படும்போதும் தாமாகவே கொதித்தெழுந்து அதற்காகக் குரல் கொடுப் பது வழமை. அது அவர்களின் இரத்தத்தில் ஊறிய விடயமுமாகும்.
அதையே தமிழக சட்டத்தரணிகளும் இப்போது செய்ய முயன்றிருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர் விவகாரத்தை இலங்கையின் உள்நாட் டுப் பிரச்சினைபோலக் காட்டி, அதைப் புறமொதுக்கி விட்டு, அங்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான கொடூரம் எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதை அனுமதித்துப் பார்த்திருப்போம் என்ற மமதையில் புதுடில்லியும், தமிழக மாநில அரசுத் தரப்பும் செயற்படும்போது மிகக் கொடூ ரப் பேரவலத்துக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக் காக நாமே குரல் எழுப்பி, வழி காண்போம் எனப் பிரகடனப் படுத்தும் வகையில் தமிழக சட்டத்தரணிகள் ஒன்றுபட்டு போராடப் புறப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தச் செயற்பாடும், அவற்றை ஒட்டி அம்பலமாகும் வெளிப்பாடுகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ கம் கொதிக்கத் தொடங்கிவிட்டது என்பதைப் பறைசாற் றும் அம்சங்களாகும்.
இலங்கை மீது அனுமான் இட்ட தீ போல, ஈழத் தமிழ ருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் கிளம்பியிருக்கும் சூடு தமிழகத்தை ஓர் ஆட்டு ஆட்டுவித்து, தமிழக அரசியலை சூறாவளியாக்கி, பல அரசியல் தலைமைத்துவங்களை ரணகளப்படுத்திப் பலரை பதவிக் கதிரைகளில் இருந்து விரட்டியடிப்பதோடு, ஈழத் தமிழரின் நலனில் அக்கறையில்லாமல் விட்டேத்தியாக நடப்பவர்களையும் அரசியலில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவிடும் வகையில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
ஈழத் தமிழர்களுக்காக இதுவரை தமிழகத்தில் நான்கு அப்பாவிப் பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே தீ மூட்டித் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியிருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழக சட்டத்தரணி களின் எழுச்சியைச் சமாளித்து, அடக்குவதற்காக, தமிழக மற்றும் அருகில் புதுவை மாநில அரசுகள், தமது பிரதேசங் களில் நீதிமன்றச் செயற்பாடுகளை இன்றும் நாளையும் முற்றாக இடைநிறுத்தி விட்டிருக்கின்றன.
அதே சமயத்தில், ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக் காகப் போராடும் ஏனைய தமிழகத்தின் பல கட்டமைப்பு களும் இவ்விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, வீதிக்கு இறங்கத் தயாராகிவிட்டன.
தமிழகத்தின் பட்டி, தொட்டியெல்லாம் எட்டி, அங்கு ஒரு கலக்குக் கலக்கி வரும் இப்பிரச்சினை, தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களுக்கும், புதிய பல அரசியல் நிகழ்வு களுக்கும் வழி செய்யலாம் என எதிர்பார்க்கப்படு கின்றது. அவை விரைவில் கட்டவிழும் என நம்பலாம்.

Uthayan

0 Comments: