நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "ஈழத்தமிழனின் தோலோடு தசைத்துண்டம் ஆடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்களால் கடியுண்டு.
உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்கள் "சோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "சோடிகள்" அழியுது ?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிசத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோப்பி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி க ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மகா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".
---வேதனையுடன்,
சதைத்துண்டங்களின் நடுவிலிருந்து ஒரு தமிழன்.
இமெயிலில் கிடைக்கப்பெற்றது.
Sunday, February 15, 2009
ஒரு ஈழத்தமிழனின் வேதனை....
Posted by tamil at 6:39 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment