Friday, February 27, 2009

வன்னி மக்களுக்கு மனித நேயம் கிட்டுமா?

இலங்கை அரசாங்கம் அந்த நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தனக்குள்ள ஆர்வத்தை வெளியிடவில்லைஎன்று அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டிருக்கிறது. கவலையும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் தலைவரும் ஜனநாயகக் கட்சியை ஆளும் கட்சியை சேர்ந்தவருமான செனட்டர் பொப் கசே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகச் செய்திகள் வெளிவந் துள்ளன.

இலங்கையில் அரசியல் உடன்பாடு ஒன்று ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் போலத் தென்படவில்லை. அதே வேளை, விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடான சக்திகளைக் கண்டுபிடிப்பதற்கும் ஆர்வம் காட்டவில்லை; தமிழ் மக்களுக்கு நம்பகத் தன்மை மிகுந்த மாற்றீடு ஒன்று முன்ø வக்கப்படவும் இல்லை என்றவாறு செனட்டர் பொப் கசே கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கள் பூடகமாகவும், உள் ளார்ந்தம் பொதிந்ததாகவும் இருப்பதை அவதானிக் கலாம். அவரது கருத்திலிருந்து முக்கிய அம்சங்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

ஒன்று: இலங்கையின் இப்போதைய பிணக்கில் அரசாங்கம் தான் நினைத்ததையே செய்யப்போகிறது. எந்த வெளிநாட்டினதும் ஆலோசனையையோ அன்றி அழுத்தத்தையோ பொருட்படுத்தமாட்டாது. தான் வகுத்து வைத்திருக்கும் அரசியல் அட்டவணைப் பிரகாரமும் அதனை அடியொற்றிய இராணுவ அட்ட வணைப் பிரகாரமுமே, நாட்டுப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு முடிவு செய்துள்ளது. இது விடயத்தில் எவ ராலும் அமெரிக்கா போன்ற பலம் மிகுந்த நாட்டாலும் கூட தனது அட்டவணையில் திருத்தமோ அன்றி மாற் றமோ செய்ய இடம்கொடுக் கமாட்டாது என்பது தெளி வாக்கப்பட்டுள்ளது.

இரண்டு: இலங்கை தனக்கென இறையாண்மை கொண்டிருக்கும் நாடு என்பதனால் அதனைத் தட்டிக் கேட்கும் நிலையில் அமெரிக்காகூட இல்லை. ஆகவே சர்வதேசங்கள் வன்னியில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தவோ, அங்கு தமிழ்ப் பொதுமக்களுக்கு உண் டாகும் அழிவுகளையும் அவலங்களையும் நிறுத்தவோ வலிமை உள்ளனவா என்ற கேள்வியே மேலெழுந்து நிற்கிறது.

புலிகளின் வேண்டுகோளுக்கு இணங்கியோ அல்லது சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணிந்தோ அரசு ஒருபோதும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்ல மாட்டாது என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா இடித்துக் கூறியதை ‹ளுரைத்தமையை ஒருவகை யில் மெய்ப்பிப்பதாக அமெரிக்க ஆளுங்கட்சி செனட்டர் பொப் கசேயின் கூற்று கவலை ஒப்புவிக்கிறது எனக் கொள்ளலாம்.

இலங்கை நிலைவரத்தை இடர்கால அடிப்படையில் அணுகவேண்டும். தனது பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு என்று கொழும் பில் முன்னர் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த ஜெவ்ரி லன்செட் கூறியிருப்பது இந்நாட்டு அரசாங்கத் தின் காதில் விழுமா என்பதும் சந்தேகத்துக்கு உரியதே.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள், சிறுபான்மை சமூகத்தினரின் உரிமை களைப் பறிக்கும் விதத்தில் அமைந்து விடக்கூடாது என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறி யிருப் பதும் இந்தத் தருணத்தில் கவனத்தை ஈர்க்கிறது.

ஸ்ரீலங்காவின் மனிதாபிமான விவகாரங்களுக்கென பிரிட்டிஷ் பிரதமர் நியமித்த சிறப்புப் பிரதிநிதியையே நிராகரித்துவிட்டது இலங்கை அரசாங்கம். அவ்வாறி ருக்கையில் அந்த நாடோ அல்லது அந்த நாட்டின் அமைச்சரோ சுட்டிக்காட்டும் கருத்தை கொழும்பு அரசு காதில் போடுமா?

வன்னியில் முல்லைத்தீவில் நாளாந்தம் தமிழ்மக் கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்துகொண்டிருக் கிறார்கள். பெரும் சுகாதார நெருக்கடிகளை எதிர்நோக் குகின்றார்கள். மோதல் நடைபெறும் பகுதிகளில் சுகா தார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளது. இவை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இந்தப் பெரும் மனிதாபிமான அவலத்தையாவது அரசு கண்கொண்டு பார்க்குமா, அதனைத் தீர்ப்பதில் நாட்டம் கொள்ளுமா என்பதும் கேள்விக்குரியதே.
நாளாந்தம் நடைபெறும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களால் அவதியுறும் மக்களின் நிலை நினைத் துப் பார்க்கவே பயங்கரமானது, பரிதாபகரமானது என்று செய்தி ஏஜன்சிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

ஷெல்கள் விழும் பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒரேயொரு தறப்பாள் கூடாரத்தில் கடற்கரையிலோ அல்லது நெல் வயலிலோ தங்குகிறார் கள். அதனால் சுகாதாரக் கேடுகள் தொற்றுநோய்கள் ஏற் படும் போராபத்து உருவாகவுள்ளதாகவும் அவை சுட் டிக்காட்டுகின்றன.

இத்தகைய ஒரு ‹ழ்நிலையிலேனும் மனிதநேயம் பேணுமாறு இலங்கை அரசுக்கு வெளிநாடுகளாலும், சர்வதேச நிறுவனங்களாலும் இடித்துக்கூறுவதற்கு இயலாது என்ற நிலைமையே உருவாகியிருக்கிறது!

மனிதனின் ஆகக்கூடிய உச்ச மதிப்புள்ளது அவனின் உயிரே. அதனைப் பேணுவதற்கு அத்தியாவசிய வைத் திய, சுகாதாரத் தேவைகளைச் செய்வதில் நாட்டம் காட்டா மல் அரசு மேற்கொண்டிருக்கும் வன்னி மீதான "மனிதா பிமான நடவடிக்கை" எந்தவகையில் அர்த்த முடையது....?

Uthayan

0 Comments: