Thursday, April 3, 2008

பதவிமோகமும், அரசியல் குத்துகரணங்களும்

பசப்பு வார்த்தைகளுக்கு மதிமயங்காத கொள்கைபற்றாளர்களாக நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையே நம்மிடையே பார்க்கிறோம். அரசியல் தலைவர்களையும், அரசியல் தலைமைத்துவங்களையும் மக்களே உருவாக்குகிறார்கள்.இவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் அல்லர். இவர்கள் உடலில் ஓடுகின்ற குருதியும் செங்குருதிதான். மக்கள் இவர்களை தங்கள்சேவகர்களாகவே பார்க்கிறார்கள்.மக்கள் சேவை மகேசன் சேவை என்பர்.

இவற்றுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல நாட்டில் உள்ள பல அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அவ்வப்போது மாற்றங்களுக்குட்படுகின்றன. மக்கள் போடும் வாக்கு பிச்சையிலேயே இவர்களது அரசியல் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

மக்களுக்கு பொய் வாக்குறுதிதுகளை வழங்கி கையேந்தி வாக்குகளை பெற்று அந்த மக்களுக்கே வேட்டு வைக்கும் அரசியல் வாதிகளையும் கண்முன்னே பார்த்து வருகிறோம். அற்ப சொற்ப சலுகைகளுக்காக எத்தனை அரசியல் வாதிகள் இனமானத்தை அடவு வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.இதற்காக இவர்கள் போடும் அரசியல் குத்துக்கரணங்கள் தான் எத்தனை.

கிழக்கில் இலங்கை அரசு மாகாணசபைத் தேர்தல் என்ற வலையை அகல விரித்துள்ளது.

இந்த வலை விரிப்புக்குள் எத்தனை சுயேட்சைகள், எத்தனை கூட்டுக்கள், தமிழ்தேசிய கூட்டுக் குடும்பம் தேர்தல் வலையில் சிக்கி தன்னை அழித்து கொள்ள விரும்பவில்லை என்பதால் ஒதுங்கி கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தென் இலங்கை அரசு காட்டிவரும் முதலமைச்சர் என்ற ஆசை வார்த்தை சில முஸ்லீம் அரசியல்கட்சிகளின் ஒற்றுமைக்கு கேடு விளைவித்துள்ளமை வருத்தத்துக்குரியது,வேதனைக்குரியது .அரசியல் வாதிகளுக்கு அதிகாரத்தில் ஆசை இருக்கலாம்.அது தப்பில்லை.

ஆனால் இவற்றை எல்லாம் ஓர் இனத்தின் விடுதலைக்கு அடுத்த படியகவே பார்க்க வேண்டும் .

தென் இலங்கை அரசின் தேர்தல் துப்பாக்கி கிழக்கில் முஸ்லீம் மக்களின் சமாதானப் புறாக்களை கட்டு வீழ்த்தியுள்ளது.என்பதே உண்மை . முஸ்லீம் தலைமைத்துவங்களின் சிதறல் எனப்து முஸ்லீம்களின் பேரம் பேசும் சக்தியை நாளடைவில் அழித்து விடும் .

அரசியல் கட்சிகளுக்குள்ளும் அதன் தலைமைத்துவங்களுக்குள்ளும் கட்சியின் ஒற்றுமைப்பண்பு குலைக்கப்பட்டால் அங்கு சுயநலப் பிசாசு தலைவிரித்தாட தொடங்கிவிடும்.. சுயநலப் பிசாசு பீடித்துக் கொண்டவர்களின் நிலை அந்தோ பரிதாபம். வடக்கு முஸ்லிம்கள் பற்றி இவர்கள் சிந்திக்க தவறிவிட்டார்கள் போலும் .வடகிழக்கு தமிழ் முஸ்லீம்கள் உறவு என்பது இடியப்பம் போன்றது.எப்போதும் பிரிக்கமுடியாதது. . இணைந்த வடகிழக்கில் முஸ்லீம்களுக்கு விசேட அலகு என்ற தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளகூடியதாக உள்ளது.

முஸ்லீம்கள் தமிழர்களோடு சேர்ந்து வாழவே விரும்புகிறார்கள்.

முஸ்லீம் தலைமைகளின் செயற்பாடுகள் தான் முரண்பட்ட வித்த்தில் அமைந்துவருகிறது..கிழக்கு மாகாணத்தில் அண்மித்த நாட்களில் முஸ்லீம் மதத்தலைவர்கள், முஸ்லீம் அரசியல் பிரமுகர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்கள்,இதற்கு மாறாக செயற்பட அவர்கள் புறப்பட்டுள்ளமை அவர்கள் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதையே தெளிவுப்படுத்துகிறது.

இப்படிப்பட்டவர்களை முஸ்லீம் மக்கள் ,முஸ்லீம் அரசியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழ் முஸ்லீம் உறவை வலுப்படுத்தக் கூடிய புதிய தலைமைத்துவத்தை எதிர்காலத்தில் கிழக்கில் உருவாக்க வேண்டும் . இப்படிப்பட்ட கோமாளித்தனமான அரசியல் வாதிகளுக்கு முஸ்லீம் மக்க்ள் வருங்காலத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் . வரும் தேர்தலில் கூத்தடிக்க போகும் கூட்டணிகளால் மாகாணசபைத தேர்தல் பெறுபேறுகளும் நாற்றம் அடிப்பதாகவே இருக்கும்.

இதேவேளை ஐ.தே.க. யும் மு.கா..இன் ரவூப் ஹக்கீம் ,சேகுதாவூத், ஹசன் அலி , கூட்டணியை கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள். இந்த கூட்டணியின் வரவு தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்கு வலுச் சேர்ப்பதாக அமையும்.

அரசியல் வாதிகள் இனி சிந்திப்ப்பதில் பலனில்லை.இனி முடிவெடுக்க வேண்டியவர்களும் கிழக்கு மாகாண மக்களே.மக்கள்போடும் வாக்குகள் மூலம் தேர்தலை தந்திரரோபாயமாக நிராகரிக்க முடியும்.
ஆக்கம் வீரகேசரி இணையம்

0 Comments: