இந்தியப்படைகளின் அட்டூழியத்தை
பிரியங்கா அறிவாரா?
ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் 19ம் தேதி வேலூர் சிறைக்குச் சென்று அங்கே ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியை நேரில் சந்தித்துப் பேசியிருக் கிறார். இந்தச் செய்திக்கு இந்திய ஊடகங்கள் கொடுத்த முக்கியத்து வத்தைப் பார்க்கும்போது, இந்திய ஊடகம் எப்போதுமே ஒரு செய்திப் பசியுடன் அலைந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.
ஒரு தேசியக் கட்சியின் தலைவரின் மகள், தன் தந்தையைக் கொன்ற குற்றவாளி நளினியுடன் சந்திப்பு என்பதாக பரபரபபான தலைப்புச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஆச்சரியத்துக்கோ பரபரப்புக்கோ என்ன இருக்கிறது என்று புரியவில்லை. ஊடகங்கள் அரசியல்வாதிகளையும், நீதிமன்றத்தையும், மற்றும் பல அரசு நிறுவனங்களையும் சமயத்தில் நாடாளு மன்றம், சட்டமன்றங்களையும் கூட விமர்சிக்கின்றன. ஆனால் இந்திய ஊடகம் எப்போதாவது தன்னைத்தானே விமர்சித்துக்கொள்ள முன் வந்திருக்கிறதா?
டில்லியில் ஒரு பள்ளி ஆசிரியை தன்னுடைய மாணவிகளை வைத்து நீலப்படம் எடுத்ததாக இந்தியா முழுவதும் எவ்வளவு பரபரப்பாக ஒரு செய்தி பரவியது! ஆனால், கடைசியில் அந்தச் செய்தியே ஒரு பொய் என்று அம்பலமானது. எந்தக் குற்றமும் செய்யாத அந்த பள்ளி ஆசிரியைக்கு ஊடகங்களிலேயே நடந்த ஒரு நீதி விசாரணையையும், அதனால் அந்தப் பெண் அடைந்திருக்கக்கூடிய துன்பங் களையும் யாரால் ஈடுகட்ட முடியும்?
இப்போதெல்லாம் ஊடகங்களின் பரபரப்பு ஆர்வம், கிட்டத்தட்ட ஒருவித ய்ங்cழ்ர்ல்ட்ண்ப்ண்c நிலையை அடைந்து கொண்டிருக்கிறதோ என்று சந்தேகப்பட வைக்கிறது. பிரியங்கா, நளினி இருவருமே வரலாற்றில் படிந்திருக்கும் வன்முறை என்ற ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்கள். பிரியங்கா இளம் வயதில் தன் தந்தையைப் பறி கொடுத்தவர். நளினி இளம் வயதிலேயே மரண தண்டனை பெற்று, பின்னர் அது ஆயுள் தண்டனையா மாற்றப்பட்டு 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர். இந்த இருவரும் சந்திப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? மேற்கு நாடுகளில் இதெல்லாம் சகஜமாக நடக்கக்கூடிய விடயங்கள். இந்தியாவில் தான் இன்னமும் பழிக்குப் பழி, கண்ணுக்குக் கண், கொலைக்குக் கொலை என்ற காட்டுமிராண்டித்தனமான மனோபாவத்தை சில அடிப்படை வாதிகள் (ச்ன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப்ண்ள்ற்ள்) தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதையே ஊடகங்களும் பின்பற்றுவது, ஜனநாயக மரபை நோக்கியது நமது பயணத்துக்காக எவ்விதத்தில் துணை செய்வதாக இருக்க முடியும்?
இந்த பரபரப்புச் செய்திகளில் அடிபடும் சொற்றொடர்களைப் பார்த்தால் அதிலும் தனிப்பட்ட மனிதர்கள் குறித்த மாண்புகள் எதுவும் காப்பாற்றப்படுவதாத் தெரியவில்லை. ராஜீவ் கொலை யாளியுடன் பிரியங்கா சந்திப்பு என் கின்றன. பத்திரிகைச் செய்திகள். அப்படியானால் நேரடியாகச் சம்பந்தப் பட்டிருக்கிறாரா?
பிரியாங்கா நளினியைச் சந்தித்த போது அவரிடம் அடிக்கடி "ராஜீவ் காந்தியைக் கொலை செய்யத் திட்டமிட்டது யார்?" என்று கேட்டிருக்கிறார். "கொலைத்திட்டம் குறித்துக் கடைசி நிமிடம் வரை எனக்கு எதுவும் தெரியாது. சிவராசன், சுபா, தணு ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். தந்தையின் ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நான், அவர்கள் காட்டிய அன்புக்கு அடிமையாகிவிட்டேன். சிறீபெரும்புதூர் கூட்டத்துக்குச் சென்ற போது, வெகுதூரத்தில் இருந்துதான் என்னால் ராஜீவ் காந்தியைக் காண முடிந்தது. கொலைக்குத் திட்டமிட்டது யார் என்பது, மனித வெடிகுண்டாக செயல்பட்ட தணுவுக்கும், சிவராசனுக்கும் தெரிந் திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பிரச்சனையில் நளினி கொலைகாரர் என்பதற்கோ, கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்கோ நமக்கு சாட்சியங்கள் இல்லை. சிவ ராசனும், தணுவும், நளினிக்கு நண்பர்கள் என்ற ஒரே விடயம்தான் நளினி கொலைகாரர் என்ற தண்டனை யளிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். ஆனால் நளினிக்கு அளிக்கப்பட்ட தண்டனையோ மரண தண்டனை, சோனியாவின் குறுக்கீட்டால் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது.
ஆனால், பொதுவாக ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டு கள்? 14 ஆண்டுகள் என்பதே வழக் கத்தில் உள்ள நடைமுறை. நளினியோ 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
பொதுவாக, சரியான ஆதாரம் இல்லாவிட்டால் தரப்படும் 'இங்ய்ங்ச்ண்ற் ர்ச் க்ர்ன்bற்' என்ற சலுகை கூட நளினிக்கு அளிக்கப்படவில்லை. ஒரு நிமிடம் இப்படி யோசிப்போம். நளினி கூறுவது உண்மையாக இருந்தால், இந்தப் பதினேழு ஆண்டுகளும் அவர் சிறை யில் இருப்பதற்கு யார் பொறுப்பேற் பார்கள்? அவர்களால் நளினி தனது வாழ்க்கையில் இழந்து போன இந்தப் பதினேழு ஆண்டுகளையும் அவருக்குத் திருப்பித் தர முடியுமா?
இந்த கொலை வழக்கில் நடந்த வேறொரு பிரச்சினையைப் பார்ப்போம்
1991-இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றத்தில் (பழ்ண்ஹப் ஈர்ன்ழ்ற்) 1998இல் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது. இந்தத் தீர்ப்பு குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோரின் வாக்கு மூலங் களை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டது? ஆனால் இந்த வாக்கு மூலங்கள் பெரும்பாலும் போலிசாரின் அச்சுறுத்தலினால் அவர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இதை நான் சொல்லவில்லை "அம்னெஸ்டி இன்டர் நேசனல்' அமைப்பு சொல்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்குரைஞர்கள் இதை "நீதியின் படுகொலை' என்று வர்ணித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒரு பூதம் பயமுறுத்திக் கொண்டிருப்ப தினாலேயே இந்தியாவில் யாரும் நீதிமன்றத் தீர்ப்புக்களைப் பற்றிக் கருத்துச் சொல்வதில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். 1999இல் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட "பென்ஞ்' இந்த வழக்கில் தீர்ப்பளித்து நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற நால்வாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதிலும்கூட ஒரு நீதிபதி (நீதிபதி தாமஸ்) நளினிக்கு மரண தண்டனை அளிப்ப தற்குச் சம்மதிக்கவில்லை. இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கு இணங்கவே நளினிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை இது போக மீதி 19 பேர் அவர்கள் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்றும், விசாரணை நீதி மன்றத்தில் அவர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இவ்விடயத்தில் பின்பற்றப்பட வேண்டிய சில அடிப் படையான நியதிகள் பின்பற்றப்பட வில்லை என்றும் கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
இங்கே நாம் கவனிக்க ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டும். கீழ் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மேல் நீதிமன்றில் முறையீடு செய்யும்போது அங்கே அந்தத் தண்டனை இரத்து செய்யப் படுவது அல்லது சில ஆண்டுகள் குறைக்கப்படுவது என்பது வேறு, கீழ் நீதிமன்றத்தில் ஒரே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் வெறும் 4 பேருக்கு மட்டுமே அந்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, மீதி 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 19 பேர் ஒரேடியாக விடுதலையே செய்யப்படுவதும் நம்முடைய நீதி முறையையே கேள்விக்குறியாக்குகிறது. இதுபற்றி நம்முடைய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் போன்றவர்கள் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
இந்தியாவில் இதுபோன்ற மக்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெருந்தலைவர்களின் கொலை வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும் போது அத்தீர்ப்பை டன்bப்ண்c நங்ய்ற்ண்ம்ங்ய்ற் என்பதே பெரும்பாலும் தீர்மானிப்பதாக இருந்து வருகிறது. இது இந்திய நீதித் துறையின் மீதான நம்பிக்கைக்குப் பாதகமாகவே முடியும். உதாரணமாக, ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்ட சாந்தி, செல்வலட்சுமி என்ற இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நிதிபதி தாமஸ் தனது தீர்ப்பில் இவ்வாறு கூறுகிறார். சாந்தி ஜெயகுமாரின் மனைவி 1990 செப்டம்பர் மாதம் சிறீலங்காவிலிருந்து சாந்தி தன் கணவருடன் இந்தியா வந்து அவருடன் வாழ்ந்ததைத் தவிர ராஜீவ் காந்தி கொலையில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ப தற்கு ஆதாரம் இல்லை. இவ்விடயத்தில் அவர் கணவருக்கு இருந்த தொடர்பினால் மட்டுமே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது."
மேலே கூறப்பட்டுள்ள தீர்ப்பு வாசகங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன். இப்படி கற்பனை செய்து பார்ப்போம். நான் ஒரு எழுத்தாளன். என்னைப் பார்க்க இலங்கையிலிருந்து இரண்டு வாசகர்கள் வந்து, என் எழுத்து பற்றி சிலாகித்துப் பேசி என்னுடன் ஓரிருநாள் தங்கிவிட்டுச் செல்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒரு அரசியல் தலைவரைக் கொலை செய்து விடுகிறார்கள் என்பதற்காக என்னையும் அவர்களோடு சேர்த்துத் தூக்கில் போட முடியுமா, சொல்லுங்கள்? நளினி விடயத்தில் நடந்திருப்பது அதுதான். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மீதி 19 பேர் விடயத்தில் நடந்ததும் அதுதான்.
மேலும் போலிஸ் அதிகாரிகளிடம் தரப்படும் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிரான ஆதார மாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்கிறது ஒய்க்ண்ஹய் ஊஸ்ண்க்ங்ய்cங் ஆcற் 1872 காரணம், இது போன்ற வாக்கு மூலங்கள் பெரும்பாலும் சித்திரவதை செய்வதன் மூலம் வாங்கப்படுபவை. ஆனால் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டவை இவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள்தான்.
"இந்த வாக்குமூலங்களில் சொல்லப்பட்டவை எதையும் நாங்கள் சொல்லவில்லை. வெறும் வெள்ளைக் காகிதங்களில் எங்கள் கையொப்பம் மட்டுமே வாங்கப்பட்டன" என்று நீதி மன்றத்தில் சொன்னார்கள் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள்.
"நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைக்க எனது தாய் சோனியா முயற்சி எடுத்தார். கோபம், வெறுப்பு, மற்றும் வன்முறை ஆகிவற்றின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனது வாழ்க்கையில் இந்த விடயங்கள் மேலோங்க எப்போதும் நான் அனுமதித்தது இல்லை. இந்த சந்திப்பு எனது சொந்த விருப்பத்தின் பேரில், தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று" என்ற பிரியங்காவின் கூற்று நம் முடைய மதிப்பிற்குரிய ஒன்று. இப்பண்பு நம்முடைய இந்திய அரசியல் வாதிகளிடம் காணக்கிடைக்காத ஒரு அந்நிய சமாச்சாரம். ஆனால், பிரியங்காவுக்கு இந்தக் கொலையின் உண்மையான பரிமாணங்கள் தெரியுமா? அல்லது, குறைந்தபட்சம் அவர் நீதிபதி தாமசின் தீர்ப்பை வாசித்திருக்கிறாரா? ராஜீவ் காந்தி கொலை எதனால் நடந்தது? அதன் வரலாற்றுப் பின்னணி கள் என்ன?
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையை ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பியதற்கு அவர் கொடுத்த மிக அதிகபட்சவிலை அவருடைய உயிர், தாத்தா பாட்டிகளையே பிரதம மந்திரிகளாகப் பார்த்து வந்த நமக்கு கிடைத்த ஒரே இளைய பிரதமராக இருந்தார் ராஜீவ். உலகின் எந்த நாட்டையும் விட தொலைத் தொடர்புத் துறையில் இந்தியா முன்னணியில் நிற்பதற்கும் அவரே காரணம். ஆனால், அவர் செய்த மிகப்பெரிய தவறு அவருடைய உயிரைப் பலி வாங்கிவிட்டது. 1987இலிருந்து 1990 வரை இலங்கையிலிருந்து இந்திய அமைதிப்படையில் சுமார் 2000 பேர் இறந்திருப்பார்கள். இதே போல் பல மடங்கு இழப்பு ஈழத் தமிழர்களுக்கு இந்திய அமைதிப்படையால் ஏற்பட்டது.
"இந்திய அமைதிப் படையால் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதகமும் ஏற்படக்கூடாது என்றும், அதற்காக எவ்வித தியாகத்தையும் ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் இந்திய அமைதிப்படைக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. இதுகுறித்து மிகக் கடுமையான ஒழுங்கையும் கட்டுப் பாட்டையும் அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்." இது அப்போதைய இந்தியப் பிரதமா ராஜீவ் காந்தி 9-11-1987 அன்று நாடாளுமன்றத்தில் பேசியது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித் துறையில் 8-2-1989 அன்று நடந்தது என்ன தெரியுமா?
இலண்டன் "பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில் 17-8-1989 அன்று ஒரு நிருபர் எழுதியிருப்பது இது.
"வல்வெட்டித்துறையில் இந்திய சிப்பாய்கள் 6 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். அதனால் கோபமடைந்த இந்தியச் சிப்பாய்கள் அந்த ஊரில் கண்ணில் தென்பட்ட அத்தனை பேரையும் சுட்டுக்கொன்றார் கள். கடைகளையும் வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள். மொத்தம் 120 வீடுகள் தீக்கிரையாயின. 52 உடல்கள் கிடைத்தன. ஊரின் மொத்த சனத்தொகையான 15000 பேரில் பாதிப்பேர் ஊரைவிட்டு அகதிகளாகக் கிளம்பினர்.
24-08-1989 தேதியிட்ட "இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் ரீட்டா செபஸ்தியன் என்பவரும் இதே சம்பவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இந்திய "மைலாய்' என்று வர்ணிக்கப்பட்டது இச்சம்பவம் இது வெறும் ஒரு நாள் சம்பவம். இதுபோல் 1987-90 என்ற மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான துயர சம்பவங்கள் நடந்தன. சுமார் 3000 தமிழர்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். துயரம், வெறும் உயிரிழப்போடு மட்டும் போகவில்லை. பல நூறு தமிழ் பெண்கள் வன்கலவி செய்யப்பட்டனர். அப்போதே தமிழ்நாட்டில் மிகப்பரவலாக ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து பற்றி பொது மக்களிடையே பேசிக்கொள்ளப்பட்டது. ஏனென்றால், தமிழர்கள் என்று மட்டும் அல்ல, எந்த ஒரு இனமுமே தங்கள் பெண்களின் கண்ணியத்தைத் தங்கள் உயிரையும் விட உயர்ந்ததாகக் கருதும் பண்பைக் கொண்டதுதான். இந்திய அமைதிப் படையினாரால் நேர்ந்த உயிரிழப்புக்கள் பற்றியும், தங்கள் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் நான் எத்த னையோ நூற்றுக்கணக்கான கண்ணீர்க் கதைகளைக் கேட்டிருக்கிறேன். மேலும், ஈழத்தமிழர்களால் இலங்கை இராணுவத்தினரின் கொடுமைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இந்தியா அவர்களுடைய நேச நாடு அவர்களுடன் இரத்த உறவு கொண்ட தமிழர்கள் வாழும் நாடு. இந்தியா தங்களுடைய இனப் போராட்டத்துக்கும், ஈழ விடுதலைக்கும் தோள்கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்களால் வன்கலவி செய்யப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தான் தாணு போன்ற மனித வெடிகுண்டுகளாக மாறினர். இந்த வரலாறு எல்லாம் இன்று நளினி என்ற பெண்ணிடம் சென்று "என் அப்பாவைக் கொள்வதற்கு பதிலாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாமே? என் அப்பா ரொம்ப நல்லவர். பிறருக்கு கெடுதல் செய்ய நினைக்கவே மாட்டார்" என்று கண்கலங்கியபடி கேட்கும் பிரியங்காவுக்குத் தெரியுமா?
இங்கே மற்றொரு பிரச்சினையும் நாம் கவனிக்க வேண்டும். உலகில் எந்த ஒரு இராணுவமாக இருந்தாலும் சரி, இராணுவத்தினரின் உளவியல் என்பது தனிவகைத்தானது. ஒரு குடும்ப உறுப்பினர்களைப் போலவே இயங்க கூடியது. அவர்களின் உளவியல் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தங்களைப் பற்றிப் பேசியதோ, தங்கள் நன்னடத்தை பற்றி அவர் கொடுத்த சான்றிதழ் பற்றியோ எதுவும் தெரியாது. அவர்கள் இருப்பது ஒரு அந்நியப் பூமியில். எதிரிக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள்தங்கள் தேசத்தைக் காப்பாற்றுவதற்காக அங்கே வந்திருக்க வில்லை. அரசியல் திருப்பங்களில் பலிகொடுக்கப்படுவதற்காக அனுப்பப் பட்டிருக்கும் காலாட்படை சதுரங்கக் காய்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்கள், தங்களில் சிலர் யாரோ முகம் தெரியாத வர்களால் கொல்லப்படும்போது அப்படித் தான் எதிர்வினையாற்றுவார்கள். அதுதான் எதிர்பார்க்கக்கூடியதுமாகும். எனவே, தவிர்க்கப்பட்டிருக்க வேண்டி யது என்னவென்றால், இந்திய அமைதிப் படையே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடாது என்பதுதான்.
இவ்வளவு பெரிய துயர சரித்திரத்தைப் பறறி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நமது பத்திரிகைகள் இன்று பிரியங்காவும் அழுதார். அவரைப் பார்த்துவிட்டு நளியும் அழுதார். என்று தொலைக்காட்சி "சீரியலுக்கு கதை வசனம் எழுதுபவர்களாக மாறிவிட்டது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றாகும்!
நன்றி
சாரு நிவேதிதா
Saturday, June 7, 2008
இந்தியப்படைகளின் அட்டூழியத்தை பிரியங்கா அறிவாரா?
Posted by tamil at 3:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment