Sunday, March 9, 2008

மற்றோர் உதயத்துக்கு கால்கோள்

இலங்கைத் தமிழர்களின் விடுதலை வேட்கையாக வெடித்துப் பீறிட்டுவரும் சுதந்திர தேசிய இன உணர்வை எப்படியாவது அடக்கி, ஒடுக்கி, அமுக்கிவிட வேண் டும் என்பதில் கங்கணம்கட்டி நிற்கும் தென்னிலங்கைச் சிங்கள மேலாதிக்கம், அதற்கு நியாயமற்ற அநீதியான மிகமோசமான வழிமுறைகளையும் நாடி நிற்கிறது.
நாட்டில் மிக மோசமாக இடம்பெறும் ஆள்கடத்தல் கள், காணாமல் போகச் செய்தல்கள், வகை தொகை யற்ற கைதுகள், கண்மூடித்தனமான விமான ஷெல் குண்டுத் தாக்குதல்கள் போன்றவை எல்லாம் இந்தத் தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான அடக்குமுறை மற் றும் ஆக்கிரமிப்பு மேலாண்மைப் போக்கின் வெளிப் பாடுகள்தாம்.
ஆட்சி அதிகாரத்தின் இந்த ஆக்கிரமிப்பும் அராஜக மும் இன்று சர்வதேச மட்டத்தில் விசனத்தோடு நோக் கப்படும் விவகாரங்களாகிவிட்டன.
இலங்கை ஆட்சி அதிகாரத்தின் உண்மைச் சொரூபத் ததை அம்பலப்படுத்தும் விதத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் பகிரங்கமாக வெளி யிட்டுவரும் அறிக்கைகள் இலங்கை விவகாரத்தில் சர்வதேசத்தின் கண் இலங்கை மீது நுணுக்கமாகப் பதி யத்தொடங்கி விட்டது என்பதற்கான சான்றுகளாகும்.
பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான அடிப் படையில் முன்னெடுக்கப்படுகின்ற சுயநிர்ணய உரி மைப் போராட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை பெரிதும் மாறி வருகின்றது. அதற்கு கொசோ வோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்குலகு வர வேற்று அங்கீகரித்து இருப்பது நல்லதோர் முன்னு தாரணமாகும்.
1999 இல் ஐ.நா.தீர்மானம் ஒன்றின் மூலம் கொசோ வோப் பிரதேசம் சேர்பியாவின் ஆள்புல இறையாண் மைக்கு உட்பட்ட பகுதி என்று ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இருந்தது. சர்வதேச உலகம் கடந்த ஒன்பது ஆண்டு காலத்துக்குள் அந்த நிலைப்பாட்டைத் தலை கீழாக மாற்றிக்கொண்டு விட்டது.
ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட கொசோவோ மக்க ளுக்கு நியாயம் செய்ய மறுத்து தனது ஆக்கிரமிப்பு அரா ஜகத் திமிர்ப் போக்கை சேர்பியா குரூரமாகத் தொடர்ந்த காரணத்தினாலேயே அவ்விடயத்தில் மேற்குலகு தனது படைகளை அனுப்பித் தலையிட்டது. இறுதியில் கொசோவோ என்ற தனிநாட்டு உதயத்துக்கு அது ஆசீர் வாதமும் வழங்கியது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஆளும் சிங்களவர்கள், அடக்கப்படும் தமிழர்கள் என இரண்டு இனங்கள் சார்ந்ததாக இருக்குமாயினும் இப்பிரச்சினை யின் பிரதான இரு தரப்புகள் ஆக்கிரமிப்பு ஆட்சியைத் தொடரும் அரசும் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் விடுதலைப் புலிகள் அமைப்பும்தான் என்பது வெளிப் படை.
இந்த இரண்டு தரப்புகள் தொடர்பான சர்வதேச பார்வை இன்று வேறுபாடானது. ஒன்றை அரசாகவும் (State Factor) மற்றைய தரப்பான புலிகள் அமைப்பை அரசு அல்லாத கட்டமைப்பாகவும் (Non State Factor) உலகம் நோக்குகின்றது.
அதனால், தன்னை ஒத்த அரசுக் கட்டமைப்பு என்ற காரணத்தால் இலங்கை அரசை இப்பிரச்சினையில் மேம்பாடான தரத்தில் வைத்து சர்வதேச சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலக நாடுகள் நோக்கு கின்றன. ஓர் அரசுக் கட்டமைப்புக்குரிய மரியாதை யை யும், முன்னுரிமையையும், தனித்துவச் சிறப்புக்களை யும், அங்கீகாரத்தையும் கூட இலங்கையின் ஆட்சி அதி காரத்துக்கு அவை வழங்குகின்றன.
மறுபுறத்தில், விடுதலைக்காகப் புரட்சி செய்யும் கிளர்ச்சிக் கட்டமைப்பாக மட்டுமே புலிகள் அமைப்பை நோக்குகின்றன.
ஆனால், ஒன்பது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கொசோவோவை அடக்கித் தனது ஆட்சி அதிகாரத்துக் குள் அமுக்கி வைத்திருந்த சேர்பியாவையும் சர்வதேசம் இப்படித்தான் மேன்மைப்படுத்தி மதித்தது என்பதும்
கொசோவோ மக்களின் விடுதலைக்காகப் புரட்சி செய்த கொசோவோ விடுதலை இராணுவத்தை இப் படித்தான் கிளர்ச்சி அமைப்பாகக் கருதி சர்வதேசம் மிதித்தது என்பதும் குறிப்பிட்டுக் கூறத்தக்கவை.
ஆனால் சர்வதேசத்தின் நிலைப்பாடு இன்று அடி யோடு மாறிவிட்டது.
ஆக்கிரமிக்கப்பட்டு, அடக்கப்பட்ட மக்களுக்கு எதி ரான அராஜகம் தொடரும் போது "அரசு' என்ற கட்ட மைப்புக்குக் கொடுக்க வேண்டிய தனித்துவ மரியாதை யின் எல்லை மீறப்படுகின்றபோது அநீதிக்கு எதிராகத் தீர்க்கமான முடிவை எடுக்க சர்வதேசம் பின் நிற்காது என்ற உண்மை இப்போது அம்பலமாக அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.
இலங்கையிலும், அடக்கப்பட்டு, அநாதரவாக்கப் பட்டிருக்கும் தமிழினத்துக்கு எதிரான அரச பயங்கர வாதமும், அராஜகமும் எல்லை கடந்து செல்வதைச் சர்வதேச அமைப்புகளின் பகிரங்க அறிக்கைகள். வெளிப்படுத்தி வருகின்றன. அவற்றை ஒட்டி, சர்வ தேச சமூகத்தின் கருத்தியலிலும், குரலிலும் மெல்லிய மாற்றம் ஏற்பட்டிருப்பதும் புலப்படத் தொடங்கியி ருக்கின்றன.
1999 இற்குப் பிந்திய கொசோவோ நிலைமையை நோக்கி இலங்கை விவகாரமும் நகரத் தொடங்கியிருப் பதாகவே தோன்றுகின்றது.
மற்றோர் உதயத்துக்கான பாதையின் ஆரம்பமாக இது இருக்கலாம்.

நன்றி :-உதயன்

1 Comment:

தமிழன் said...

ஈரான் அதிபர் இலங்கை பயணம் மற்றும் கொசோவோ உதயத்திற்கு இலங்கை எதிர்ப்பு, மாவீரர் அவர்களின் மாவீரர் நாள் உரை கூட்டி கழித்து பாருங்க என்ன வரும் தனி தமிழ் ஈழம் வரும்.

http://dilipan-orupuratchi.blogspot.com/