.இலங்கையின் சுதந்திரத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவு தினம் நாளை கொண்டாடப்படுகின்றது.
ஆனால் இலங்கைத் தீவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் முன்னரைப் போலவே இப்போதும் சுதந்திரக் காற்றை சுவா சிக்கும் சூழலில் இல்லை. அவர்களின் தேசியமும் சுயநிர் ணய உரிமையும் அந்நியரின் ஆதிக்கப் பிடிக்குள் சிக்கிப் பல நூற்றாண்டுகளாகி விட்டன. அவை காலனித்துவவாதி கள் பிடியில் இருந்து பேரினவாதிகளின் கைகளுக்கு மாறியமையை ஒட்டிய அறுபதாவது ஆண்டுப் பூர்த்தி யையே இன்று பெரும் சோகத்துடன் அனுபவிக்க வேண் டிய பேரலவத்தில் இப்போது அவர்கள் இருக்கிறார்கள்.
பேரினவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ள தமது வாழ்வியல் உரிமைகளை மீட்பதற்கு இந்த அறுபதாண்டுக் காலத்தில் சிறுபான்மையினரான ஈழத்தமிழர்கள் நடத்திய வாழ்வா, சாவா என்ற இந்த மரணப் போராட்டம் இந்தச் சம யத்தில் சிந்திக்கத்தக்க விடயம்.
இலங்கைத் தீவின் ஆட்சி அதிகார உரிமை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேய காலனித்துவ வாதி களிடமிருந்து பெரும்பான்மையினரான பௌத்த சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோதே சிறுபான் மைத் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறை, பல்பரிமாண வடிவம் கொண்டு தீவிரம் பெற்றது. சிங்களப் பேரினவாதம் மேலாண்மை பெற்று, அடக்குமுறைக் குரூரமாக அது உருக்கொண்டது. மாறிமாறி வந்த பௌத்த சிங்கள அரசு களால் அதுவே தேசியக் கொள்கையாகக் கடைப்பிடிக்கப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஈழத்தமிழர்கள் ஒன்றுபட்ட ஒரு தேசிய இனமாக தேச மாக திரண்டு ஐக்கியப்பட்டு நிற்பதற்கு அடித்தளமாக விளங்கிய ஒவ்வோர் ஆதாரத்தையும் அழித்து, தமிழ்த் தேசத்தின் ஆன்மாவையே உருவின்றித் தகர்ப்பதற்கான செயற்போக்கில் ஆட்சி அதிகாரம் தனது அடக்குமுறை களைக் கட்டவிழ்த்து விட்டது.
இந்த அடங்குமுறைகளுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான ஈழத்தமிழர்களின் தேசியப் போராட்டம் ஆறுதசாப்த காலத்தையும் தாண்டி நீண்டு செல்கின்றது.
நிகழ்கால வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் அது கட்டவிழ்ந்து வளர்ச்சியுற்று முதிர்ச்சி கண்டு இன்றைய விருத்திக் கட்டத்தைத் தொட்டு நிற்கின்றது.
1948 இல் இலங்கைத் தீவின் ஆட்சி அதிகாரம் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளின் கைக்கு மாறியபோதே தமிழரின் இறைமை மீட்புக்கான தாகம் கருக்கொண்டு உருக்கொண்டு விட்டது என்பது மிகையல்ல.
ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஈழத்தமிழ்களின் உரி மைக்கான நீதி நியாயத்துக்கான கௌரவ வாழ்வுக்கான அரசியல் போராட்டம் அமைதியான மென்போக்கிலான, சாத்வீக நெறியிலான ஜனநாயக நாடாளுமன்ற முறைமை யில் நம்பிக்கை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அமைந் தது. அன்றைய ஈழத்தமிழ்த் தலைவர்கள் காந்தீய நெறியை மகாத்மாவின் ஆத்மதரிசனத்தை முற்றும் முழுவதுமாக நம்பி ஏற்று அதன் வழி நடப்பவர்களாகத் தமிழர்களின் உரி மைப் போராட்டத்தை நடத்தினார்கள்.
அஹிம்சை வழியிலான அந்தப் போராட்டம் அதுவரை சாதி, மதம், குலம், கோத்திரம் என்று பிளவுபட்டு அந்த வழக்காறுகளில் கட்டுண்டு கிடந்த தமிழ் மக்களை அந்தத் தளைகளில் இருந்து விடுவித்து, முரண்பாடுகளைக் களைந்து தேசியப் பற்றுணர்வோடு ஓர் எழுச்சி பெற்ற சக்தியாக அணிதிரண்டு கிளர்வதற்கு வழி சமைத்தது. தமது வரலாற் றுத் தாயகத்தில் பாரம்பரிய பூமியில் தம்மைத் தாமே ஆளும் நியாயமான சுயாட்சி உரிமை கோரும் போராட்டத் தில் தீவிரத்துடன் ஈடுபடுவதற்கான உந்துதலையும் உணர் வெழுச்சியையும் வழிகாட்டலையும் அது அளித்தது.
நீதி கோரி காலத்துக்குக் காலம் தமிழர்கள் நடத்தி வந்த அறவழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து வந்த சிங்கள அரசு களின் ஆயுத வன்முறைகள் மூலம் மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கப்பட்டன. தமிழரின் எழுச்சியை இராணுவப் பலத் தால் நசுக்கக் கொழும்பு வெறிகொண்டு செயற்பட்டது.
உரிமைக்குரல் ஆயுத முனையில் அடக்கப்பட, அரச ஒடுக்குமுறையும் தீவிரம் பெற்றது. பல முனைகளில் ஏவி விடப்பட்ட இந்த அடக்குமுறை தமிழரின் சமூக, பொருளா தார, கலாசார, வாழ்வியல் அம்சங்களில் ஆழமான பாதிப்புக் களையும் அழியாத வடுக்களையும் தீராத பின்னடைவு களையும் ஏற்படுத்தியது.
மொழியுரிமை, உயர்கல்வி உரிமை, பாரம்பரிய நிலங் கள் மீதான சொத்துரிமை என்று தொடங்கி கௌரவ வாழ் வுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட பேரினவாதம் பறிக்கத் தொடங்கியது.
அஹிம்சை வழிப் போராட்டங்களும் நியாயம் கோரல் களும் ஆயுதப் பலாத்காரம் மூலம் அடக்கப்பட்டதால் விரக் திக்குள் தள்ளப்பட்ட ஈழத்தமிழர்கள், புரட்சிகர வழிமுறை ஒன்றை நாடி அரசியல் வன்முறைக்குள் குதித்தனர். ஆயு தம் தாங்கிய கிளர்ச்சி உருக்கொண்டது.
அரச ஒடுக்குமுறையும் அதற்கு முகம்கொடுக்கும் எதிர்ப் போராட்டமுமாக தமிழரின் அரசியல் களம் விரிவாக்கம் பெற்றபோது, அரச அடக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் பெற்றது. அதனை எதிர்கொள்வதற்காக தமிழ் இளைஞர் களின் வன்முறை எழுச்சி ஒழுங்கமைந்த ஓர் ஆயுதப் போராட் டமாக படிமாற்றம் பெற்றது.
பல் பரிமாண அரச ஒடுங்குமுறையினதும் அதற்குச் சவாலாகக் கிளர்ந்த தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்ட மாகவும் பின்னர் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கமாகவும் கட்ட விழ்ந்திருக்கிறது இந்த அறுபது ஆண்டு காலச் சரித்திரம்.
சிறுபான்மையினருக்கு எதிரான காழ்ப்புணர்விலும் பகையுணர்விலும் விரோதச் செயற்போக்கிலும் தீவிரம் கொண்டலையும் தற்போதைய அரசும், அந்தக் காரணங் களினால் தமிழர் தேசம் மீது கொடூர நாசகார பேரழிவு தரு கின்ற யுத்தம் ஒன்றைத் தொடுத்தும் போர் வெறியோடு நிற்கின்றது.
இந்நிலையில், சுதந்திர தினம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் கௌரவ வாழ்வு என்ற உன்னத விடயத்தை அந்நியரால் சிங்களவரிடம் அடிமைப் பட்டய மாக, சாசனமாக எழுதி ஒப்படைத்த பேரிழுக்குத் தரும் நாளாகவே கருதகக்கூடியது. அவ்வளவே
thanks ,- Uthayan.
Sunday, February 3, 2008
அடிமைப் பட்டயம் அறையப்பட்ட நாள் இது
Posted by tamil at 7:01 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment