Saturday, February 9, 2008

தமிழர் தேடும் சுதந்திரம்

மேற்கிந்திய வல்லாதிக்கங்களான காலனித்துவ சுரண்டல் சக்திகள், கிண்டிக் கிளறி ரணகளப்படுத்தி விட்டுப் போனதால் எழுந்த தீராத வலிகளில் இருந்து மூன்றாம் மண்டல நாடுகள் இன்னும் விடுபட்டுக் கலூன்றி எழுந்து நிற்கவில்லை. காலனித்துவம் விதைத்து விட்டுச் சென்ற விஷத்தின் நீண்டகால விளைவுகளை இன்னமும் அனுபவித்துத் தட்டுத்தடுமாறித் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

பூமியின் முகத்தைக் காலனித்துவம் கோரமாக அகோரமாக ஆழமாக சிதைத்துவிட்டே மூன்றாம் மண் டல நாடுகளிலிருந்து அகன்றிருக்கின்றது.

தன்னுடைய ஆதிக்க, அதிகார வலுவால் பூமியின் பிற பிராந்தியங்களை ஆக்கிரமித்த காலனித்துவம், ஒரு புறம் தேசங்களை தேசியங்களை பிரித்து, சமூகங் களைப் பிளந்து, பண்பாடுகளைச் சீர்குலைத்து, சுதேசி களைச் சின்னாபின்னப்படுத்திய அதேசமயம்
மறுபுறம், வெவ்வேறு தனித்துவமான பண்பியல் புகளைக் கொண்ட தேசியங்களை வல்வந்தமாக இணைத்து, ஒன்றின் கீழ் மற்றையதை அடிமையாக்கி, அச் சமூகங் களை எதிரி வர்க்கங்களாக உருவேற்றி, உசுப்பேற்றி, நாக ரிகங்களை ஒன்றையொன்று கபளீகரம் செய்ய வைத்து, தேசியங்களை நிரந்தர விரோத சக்தியாக பகையுறவுப் பங்காளிகளாக மாற்றிவிட்டுச் சென்றிருக்கிறது.

இந்தப் பின்னதன் விளைவைக் கொடூர யுத்தமாக சுலபமாகத் தீர்க்க முடியாத இனச் சிக்கலாக பேரழிவு தரும் கொடூரப் போராக இன்றும் அறுவடை செய்து கொண்டிருக்கும் அபாக்கிய பூமியில் இலங்கைத் தீவும் அடங்கும்.

சரித்திர காலம் தொட்டே தனித்தனிப் பண்பாடு, மொழி, பழக்க வழக்கம், தெளிவாக அடையாளப்படுத் தப்பட்ட பாரம்பரியத் தாயகப் பூமி ஆகியவற்றோடு விளங்கிய இரு தேசியங்களை சிங்களம், தமிழர் தாயகம் ஆகிய இரு தேசங்களை தனது ஆட்சி அதிகார நலனுக்காக ஒன்றிணைந்த காலனித்துவம், தனது ஆதிக் கப் பிடியைத் துறந்த சமயத்தில் கூட நீதியாக நடந்து கொள்ளாததன் விளைவை இன்று இலங்கைத் தீவு விரும்பியோ விரும்பாமலோ எதிர்கொண்டபடி இருக்கிறது.

சுதந்திரத்துக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், நீதிக்காகவும் ஈழத் தமிழர்கள் இன்று நடத்தும் வாழ்வா, சாவா என்ற உயிர்ப் போராட்டம் இந்த இலங்கைத் தீவை ஆக்கிரமித்த மேற்குலகக் காலனித்துவம் குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியப் பேராதிக்கம் இத் தீவில் விதைத்து விட்டுச் சென்ற நச்சு விதையின் பெறு பேறன்றி வேறில்லை.

மனிதன் உணர்வற்ற, உயிரற்ற, விருப்பு வெறுப் பற்ற, அசைவற்ற, வெறும் ஜடப்பொருள் அல்லன். அவன், சுயவுணர்வுடன், சுயவிருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, சுய முடிவுகளை எடுத்து, சுய பிரக்ஞையுடன் தனியனாகவும் அதேசமயம் குடும்பம், கிராமம், நகரம், சமூகம் என்று கூட்டாகவும் வாழ உரிமையுடைய ஆற றிவு ஜீவன்.

"மனிதன் சுதந்திரமாக வாழ விதிக்கப்பட்டிருக்கின் றான்' (Mச்ண டிண் இணிணஞீஞுட்ணஞுஞீ tணி ஊணூஞுஞுஞீணிட்) என்றுரைத்திருக் கின்றார் பிரெஞ்சு தத்துவ வித்தகர் சாத்தர். அது அவனது வாழ்நிலை உரிமை மட்டுமல்ல, தலைவிதியும் கூட. அதற்காகவே அவனது வாழ்நிலைப் போராட்டமும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.
மனித வாழ்வைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது வெறும் உணவும், உடையும், உறைவிடமும், பொழுது போக்கும் கட்டுப்பாடின்றிப் பெறுவதல்ல. அதேபோல் அபிவிருத்தியையும், வசதிகளையும் ஈட்டுவதை மட் டும் அது குறிக்கவில்லை. அதற்கு அப்பாலும் அதில் அனேகம் உண்டு.

சுதந்திரம் என்பது மனவுலகத்தின் வெறும் மானசீகப் பொருளும் அல்ல.
அது, சமூக வாழ்வியல் நிலையோடு ஒன்றிணைந்து பின்னிப்பிணைந்தது. ஒருபுறம் அகவயமாகவும், மறு புறம் புறநிலையாகவும் அனுபவித்து, அறியப்பட்ட உரிமை யுள்ள விவகாரம் அது. அடிமைத்தளையிலிருந்து ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து அதிகார விலங்குக் கட்டுகளிலிருந்து ஒடுக்குமுறை நெருக்குவாரங்களில் இருந்து மனிதன் விடுபட்டு, சமூகத்தில் ஒத்திசை வாகவும், கௌரவ வாழ்நிலையோடும், பிற மனிதனு டன் சம அந்தஸ்துடனும் சமத்துவமாகப் பரிமளிப்பதை குறிக்கின்றது இந்த வாழ்வியல் சுதந்திரம்.
அதிகார ஆதிக்கப் பிடிகள் அற்றுப்போக, அடக்கு முறைச் சுவர்கள் தகர, தனி மனிதனின் அக வாழ்வும், புற வாழ்வும் தேவையற்ற தளைகள் நீங்கித் தழைத் தோங்க வழி செய்யப்படுவதே உண்மையான சுதந்திரமாகும்.

மதம், மொழி, இனம், சாதி, பால், நிலை ஆகியவை காரணமாகப் பாகுபடுத்தலுக்கு உள்ளாக்கப்படாமல் தன்னுடைய சமூக, இனப் பண்பியல்புகளைக் கட்டிக் காத்து, தனது மத நம்பிக்கையைப் பேணி, கருத்து வெளியிடும் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமை களை அனுபவித்து, உணர்வுபூர்வமாக ஒரு மனிதன் வாழ்வதற்கு உரித்துடையவன். இது உறுதிப்படுத்தப் படுவதே உண்மைச் சுதந்திரம் ஆகும்.

காலனித்துவ ஆதிக்க சக்திகளில் இலங்கைத் தீவின் பெரும்பான்மையினரான தேசியத்திடம் அடிமை சாசன மாக எழுதி ஒப்படைக்கப்பட்ட தனது இந்த உரிமைகளை அதாவது தனது தேசியத்தின் இறைமையை மீட்டெ டுப்பதே தனது சுதந்திர மீட்பு எனத் தமிழக தேசம் கருது கின்றது. அந்தச் சுதந்திரத்தையே தமிழர்கள் தேடுகின் றனர். அதன் பொருட்டே இந்தப் போராட்டம் எல்லாம்.

நன்றி - உதயன்

0 Comments: