சிறிலங்காவின் பொருளாதாரம் புதிய வருடத்திலே மிக மோசமான நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வு என்பது கேள்விக்குறியாகியிருக்கின்br />?து. இந்த நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இவ்வருடத்தை போர் ஆண்டாக அறிவித்திருக்கின்றது. இந்த போரும் பொருளாதாரமும் பற்றிய ஆய்வுகளை தாயகத்தில் இருந்து பகிர்ந்து கொள்கின்றார் பொருளியல் ஆய்வாளர் கா. பாலகிருஷ்ணன்.
கேள்வி : போர் ஆண்டு என்ற பெரும் பரப்புரையை மஹிந்த தொடக்கம் பல்வேறு அமைச்சர்களும் , படைத்துறைத் தளபதிகளும் மேற்கொண்டுவருகின்றனர். உண்மையில் இதன் அடிப்படை உள் நோக்கம் என்ன ? எதற்காக இதனை அவர்கள் மீண்டும் மீண்டும் வலிந்து சொல்கின்றனர் ?
பதில் : சிறிலங்கா அரசாங்கம் 2008ஆம் ஆண்டை போர் ஆண்டு என்று கூறுவதற்கான உண்மையான காரணம் யாதெனில் , இலங்கையினுடைய வருமானத்தை விட சிறிலங்கா அரசாங்கம் ஒதுக்கிய பாதுகாப்புச் செலவினம் அதாவது யுத்தத்திற்காக ஒதுக்கிய செலவினம் மிக அதிகமாகும்.
இந்த அதிகரிக்கப்பட்ட யுத்த செலவினங்களுக்காகவே சிறிலங்கா அரசாங்கம் பொருட்கள் சேவைகள் மீது வரியை விதிக்கிறது. அந்த வரி வருமானத்தைக் கொண்டுதான் யுத்த செலவை சிறிலங்கா அரசாங்கம் ஈடுசெய்கிறது. பொருட்கள் சேவைகள் மீது இத்தகைய வரிகளை விதிப்பதால்தான் அவற்றின் விலைகள் உயர்வடைகின்றன. இதுதான் உண்மையான யதார்த்தம் .
அதேநேரத்தில் வேறு சில கருத்துக்களும் இருக்கின்றன. அதாவது பல்வேறு காரணிகளால் சர்வதேசச் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றமை உண்மைதான். ஆனால், சர்வதேசச் சந்தையில் ஏற்படுகின்ற விலை அதிகரிப்பு பெறுமதிக்கு வரி விதிக்கப்படுகின்ற பெறுமதியும் சேர்ந்தே இங்கு பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது.
அதாவது சர்வதேச சந்தையில் 10 ரூபா விலை அதிகரித்தால் அந்த அதிகரித்த தொகைக்கும் 10 வீதம் என்ற தொகையைச் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் ஒரு அதிகரித்த சுமையொன்றை இலங்கையில் உள்ள மக்கள் சுமக்கின்றார்கள்.
சர்வதேசச் சந்தையில் அதிகரித்த விலையை மட்டும் இங்கு அதிகரித்தால் மக்கள் அந்த அதிகரித்த விலையை ஓரளவுக்கு தாங்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் யுத்தத்திற்கு செய்ய வேண்டிய செலவையும் இந்த வரிவீதத்தினூடாக சிறிலங்கா அரசாங்கம் அதிகரித்து அதனை மக்களிடம் இருந்து வருமானமாக அறவிட்டுக் கொள்கிறது.
பொருட்கள் சேவைகள் மீதான விலை அதிகரிப்பிற்காக அரசாங்கத்திற்கெதிராக மக்கள் போராடுவார்கள் என்ற காரணத்தினால்தான் , சிறிலங்கா அரசாங்கம் இன்று யுத்த வெற்றிகளை , இனவாதத்தை தென்னிலங்கையில் பிரசாரப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பெரிய ஒரு மாயையை ஏற்படுத்துகிறது.
சிறிலங்கா அரசாங்கம் வெற்றியைப் பெற்று வருகிறது , நாங்கள் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுவருவதால் இத்தகைய விலை அதிகரிப்பை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், இந்த பிரதேசத்தைக் கைப்பற்றி விட்டோம், இன்னொரு பிரதேசத்தைக் கைப்பற்றப் போகிறோம் , இந்த பிரதேசத்தைக் கைப்பற்றி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்றெல்லாம் தவறான ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு இந்த விலை உயர்விற்கெதிரான மக்களுடைய சிந்தனையை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றது. எனவேதான் சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தை தீவிரமாகப் பிரசாரப்படுத்தி வருகிறது.
கேள்வி : இத்தகைய விலை உயர்வென்பது மிகக்குறுகிய நாட்களில் பல மாற்றங்களுக்குள்ளாகியிருக்br />?ின்றது. இதனை சிங்கள மக்களால் அல்லது சிறிலங்காவில் வாழ்கின்ற அனைவராலும் எவ்வளவு காலத்திற்கு பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் ?
பதில் : 2007 ஆம் ஆண்டில் கோதுமை மா மூன்று தடவைகள் விலையுயர்த்தப்பட்டிருக்கினbr />?றது. அதாவது 2007 ஆம் ஆண்டில் கோதுமை மாவின் விலை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றதbr />?.
ஆனால் நத்தார் , புதுவருடம் , தைப்பொங்கல் என இந்த பண்டிகைக்காலப் பகுதிகளில் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்திருக்கின்றன. இதுவரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இந்த வருடம்தான் இப்படி விலைகள் அதிகரிக்கின்ற வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்க்கின்ற போது இதுவரை காலமும் இப்படி நடக்கவில்லை.
ஆனால் ஒரு உண்மையான சம்பவம் என்னவெனில் , 1983 ஆண்டு ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதுகாப்புச் செலவைவிட 160 மடங்கு பாதுகாப்புச் செலவு 2007 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தகைய பாதுகாப்புச் செலவிற்காக சிறிலங்கா அரசாங்கம் வரைகின்ற காசோலைகள் எல்லாம் மத்திய வங்கிக்குப் போய்த்திரும்பின. இதனால் அரசாங்கம் உடனடியாக 2007ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து செப்ரெம்பர் மாதம்வரை கிட்டத்தட்ட 4500 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான புதிய நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களையே அந்த கடன் செலவுக் கொடுப்பனவிற்கும் , யுத்த செலவுக் கொடுப்பனவிற்கும், ஏனைய கொடுப்பனவுகளுக்கும் கொடுத்தது.
புதிய நாணயத்தாள்களை அச்சடித்தபோதும் கூட சிறிலங்கா அரசிற்கு அந்தப் பணத்தைக்கொண்டு கொடுப்பனவுகளை ஈடுசெய்யமுடியவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் மத்திய வங்கியிலிருந்த தங்கத்தையும் விற்றார்கள். அந்த பணத்தாலும் கொடுப்பனவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. வெளிநாடுகளில் இருந்து கடன்களையும் பெற்றது. அந்த பணத்தாலும் கொடுப்பனவுகளை ஈடுசெய்ய முடியவில்லை. இதனால் இறுதிமுயற்சியாக இறக்குமதி செய்யப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைகளை கூட இனிமேல் தரமுடியாதென்று அறிவித்து அந்த வரியையும் சிறிலங்கா அரசாங்கம் அறவிடுகிறது.
இந்த வரியை மீண்டும் விதித்தபோதுதான் இந்த வருட இறுதியில் பொருட்களின் விலை அதிகளவில் அதிகரித்தன. இந்த விலை அதிகரிப்பு மேலும் அதிகரிக்கும் நிலையே இன்று காணப்படுகின்றது.
ஏனெனில் 2007 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செலவிற்காக 13 ஆயிரத்து 955 கோடி ரூபா ஒதுக்கியதால்தான் இந்தவருட இறுதியில் இந்தளவு விலை அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால் 2008 ஆம் ஆண்டிற்கு அதாவது இந்த ஆண்டிற்கு 16 ஆயிரத்து 644 கோடி ரூபாவை சிறிலங்கா அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.
இதில் ஒரு உண்மை என்னவெனில் 13 ஆயிரத்து 955 கோடி ரூபா 2007 ஆம் ஆண்டிற்கென ஒதுக்கப்பட்டபோதும் சிறிலங்கா அரசிற்கு 2007 இல் ஏற்பட்ட பாதுகாப்புச் செலவு 15 ஆயிரத்து 570 கோடி ரூபாவாகும். எனவே இதில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபா வரை மேலதிகமான செலவு ஏற்பட்டிருக்கிறது.
இந்த செலவுகளை ஈடு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேறு வழியே இல்லை. இலங்கை ரூபாவைச் செலவழித்துத்தான் இராணுவ வீரர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். எனவே இலங்கை ரூபா சிறிலங்கா அரசுக்குத் தேவை. எனவே சிறிலங்கா அரசு உள்ள+ரில் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு வரியை விதிக்கிறது. இந்த வரி வருமானத்தின் ஊடாகத்தான் பாதுகாப்புச் செலவை ஈடுசெய்கிறது.
உலகத்தினுடைய சமனிலையுடன் ஒப்பிடும்போது இலங்கையினுடைய சமனிலை மிக பாதகமாகக் காணப்படுவதுதான் இதற்கு முழுமையான காரணம்.
அதாவது உலகளாவிய கணிப்பீட்டின்படி ஒரு நாட்டின் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 வீதத்தைத்தான் அந்த நாட்டு பாதுகாப்புச் செலவிற்கு ஒதுக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அந்த நிலை காணப்படவில்லை. இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 வீதத்திற்கு மேல்தான் பாதுகாப்புச் செலவிற்காக ஒதுக்கியிருக்கிறார்கள் . 2007 ஆம் ஆண்டில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 வீதத்தை ஒதுக்கியுள்ளனர். பாதுகாப்பிற்கென இப்படி நிதி ஒதுக்கும் ஆசிய நாடுகளில் இலங்கைதான் முதல்நிலையில் இருக்கிறது.
அதாவது ஒரு நாட்டினுடைய இயலளவிற்கு மேல் யுத்தத்திற்கென பணத்தைச் செலவழிக்கும் நாடுதான் இலங்கை. மக்களுடைய இயலளவிற்கு மேல் யுத்தத்திற்கு செலவழிக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். மக்களினுடைய வருமானத்தை விட கூட செலவழிக்கிறார்கள்.
அமெரிக்காவில் கூட சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 வீதம்தான் பாதுகாப்பிற்காக அதாவது யுத்தத்திற்காக ஒதுக்கியிருக்கிறார்கள். அதேநேரம் பிரான்ஸை எடுத்துப் பார்த்தால் 2.6 வீதம் , ஜேர்மனியை எடுத்துப் பார்த்தால் சராசரியாக 1.5 வீதம் , ஐக்கிய இராச்சியத்தை எடுத்துப் பார்த்தால் 1.9 வீதம் , இந்தியாவை எடுத்துப்பார்த்தால் 2.6 வீதம் என்றே பாதுகாப்புச் செலவினம் அமைந்துள்ளது.
ஆனால் இலங்கைதான் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 வீதத்தை பாதுகாப்புச் செலவிற்கென ஒதுக்குகிறது. இலங்கைக்கு அடுத்ததாக பாகிஸ்தான் 4.5 வீதத்தை பாதுகாப்புச் செலவிற்கென ஒதுக்குகிறது.
சைனா கூட 3.7 வீதத்தைத்தான் ஒதுக்கியிருக்கிறது. ஜப்பான் கிட்டத்தட்ட 1 வீதத்தைதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒதுக்கியுள்ளது.
இதனூடாக ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு நாட்டினுடைய மக்களின் இயலளவுக்கு மேலாக யுத்தத்திற்கான பணத்தை ஒதுக்கியதானது பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கும் மக்கள் துன்பப்படுவதற்கும் ஒரு காரணம் என்பதை இந்த சர்வதேசகுறி காட்டிகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன
(நன்றி - புலிகளின் குரல்)
Thursday, February 7, 2008
உலகஒழுங்கும் சிறிலங்காவின் போரும் பொருளாதாரமும்
Posted by tamil at 9:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment