Tuesday, February 5, 2008

அரசாங்கத்தின் நகர்வுகளும் புலிகளின் எதிர் நகர்வுகளும்

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட நகலை தயாரிப்பதற்காக 63 இற்கு மேற்பட்ட தடவை கூடிய அனைத்துக்கட்சி குழு அதன் தீர்வுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைத்து விடும், அடுத்த மாதம் முன்வைத்துவிடும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அதனை நம்பி ஏமாந்த அனைத்துலக சமூகம் தமது பொறுமையின் எல்லைகளை கடந்துவிட்டது.

இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் என மிக அதிகளவான உதவிகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசும் ஏதாவது ஒரு தீர்வுத்திட்டத்தை பெயருக்காவது முன்வைப்பதன் மூலம் இராணுவத்தீர்வு என்ற வெளிப்படையான போக்கின் உக்கிரத்தை உலகின் கண்களில் இருந்து மறைத்துவிடலாம் என எண்ணியுள்ளது.

ஆனால், பெயருக்கு தன்னும் ஒரு தீர்வை முன்வைக்கும் மனநிலை இலங்கையில் ஆட்சிபுரியும், மற்றும் ஆட்சிபுரிந்த அரசுகளுக்கு இருந்ததில்லை என்றே கூறப்படுகிறது. இலங்கை அரசுகளைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இராணுவத்தீர்வை அடைவதற்கு தேவையான படைத்துறை மற்றும் பொருளாதார உதவிகளை பெறுவதற்காகவே அவ்வப்போது தீர்வைக் காண்பதற்கு என பல குழுக்களை அமைப்பதுண்டு.

பிரித்தானியாவின் அமைச்சர் ஹிம் ஹாவல் அதன் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டும், இலங்கையின் 60 ஆவது சுதந்திரதினத்தில் பங்கெடுப்பதானால் அரசு ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என இந்திய பிரதமர் தெரிவித்த போதும் எதுவும் நடைபெறவில்லை. குழுவின் பரிந்துரைகளை ஆராய மற்றுமொரு குழு அமைக்கப்பட்டதுதான் மிச்சம். குழுக்கள் அமைக்கப்படுவது இலங்கையில் ஒன்றும் புதியது அல்ல.

எனினும் இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என வாதிட்டு வந்த அரசின் வாதங்கள் மறைந்து இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வையுங்கள். தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குங்கள் என அனைத்துலக சமூகம் ஒருமித்த குரலில் கருத்துக்களைக் கூறிவருவது தான் அரசிற்கு இன்றுள்ள சங்கடமான நிலமை. ஒருபுறம் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை திருப்பும் அரசியல் நாடகங்கள் புதிது புதிதாக அரங்கேறி வருகையில் இராணுவத் தீர்வுக்கான முன்னெடுப்புக்களில் அரசு பலமாக முயன்று வருகின்றது என்பதையே தற்போதைய களநிலமைகள் தெளிவாகக் காட்டி நிற்கின்றன. அங்கு புதிது புதிதாக படையணிகளின் உருவாக்கமும் அதற்கான விழாக்களும் களை கட்டி வருகின்றன.

தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளில் தோன்றியுள்ள தாக்குதல் அச்சம் காரணமாக சிங்கள் கிராம மக்கள் அனைவரும் ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகையில் புதிய படையணிகளையும் அரசு சீர்செய்து வருகின்றது.

ஜனவரி 5 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் சிறப்பு படையணியின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழா மாதுறு ஓயாவில் உள்ள அதன் பயிற்சி தளத்தில் நடைபெற்ற போது யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படையணி தற்போது மூன்று றெஜிமெனட் படையினரை கொண்டுள்ளதுடன் கடந்த வருடம் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளை பிரசாரப்படுத்தி அதற்கு பெருமளவில் படையினரைச் சேர்க்க முனைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கடற்படையினரின் சிறப்பு கடல் தாக்குதல் அணி ஒன்றும் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறியுள்ளது. பூசாவில் உள்ள நிபுனா கடற்படை பயிற்சிக் கல்லூரியில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இராணுவத்தினரின் சிறப்பு படையணியினருக்கு ஈடான இந்த படையணி அமெரிக்காவின் கடற் கொமோண்டோக்கள் (ளு.நு.யு.டு.), பிரித்தானியாவின் கடல் சிறப்புத் தாக்குதல் படையணி (ளுpநஉயைட டீழயவ ளுநசஎiஉந ழக வாந சுழலயட யேஎல) போன்றவற்றை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை.

அதன் தொடர்ச்சியாக யாழ். குடாநாட்டிலும் மற்றுமொரு புதிய படைப்பிரிவின் ஆரம்ப விழா பெரும் எடுப்பில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. இராணுவத்தினரின் நகர்வுத்திறனை அதிகரிப்பதற்காகவும் அதன் தாக்குதிறனை அதிகரிக்கும் நோக்குடனும் இலகு காலாட் படையணிக்கு துணையாக கவசத்தாக்குதல் படையணியை (ஆநஉh-யnணைநன iகெயவெசல) இராணுவம் உருவாக்கி வருவது நாம் அறிந்தவையே.

இந்தப் படையணியின் சம்பிரதாயபூர்வமான ஆரம்ப நிகழ்வு கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படையணியின் தலைமையகத்தில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அந்த படையணியின் கட்டளை அதிகாரி கேணல் ரால்ப் நுகெரா உட்பட பல உயர் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர்.

கவசப்படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவு போன்றவற்றில் இருந்து படையினரை தெரிவு செய்து தாக்குதல் வலுமிக்க படைப்பிரிவாக இதனை அரசு உருவாக்கியுள்ளது. இராணுவத்தில் உள்ள கவசப்படை பிரிகேட்டில் இருந்து வேறுபட்டதாக இந்த கவசத்தாக்குதல் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்னர் 53 ஆவது படையணியின் 4 ஆவது பிரிகேட்டாக இருந்த இந்த பிரிவு தற்போது தனியான பிரிகேட்டாக மாற்றமடைந்துள்ளது.

தாக்குதலின்போது படையினரின் நகர்வை அதிகரித்தல், பாதகமான களநிலமைகளில் இருந்து படையினரை அகற்றுதல் அல்லது அங்கு மேலதிகமான படையினரை நகர்த்துதல் போன்றவற்றில் இந்தப் பிரிவு பணியாற்றும். மேலும் நடவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கான ஆதரவுச் சூடுகளை வழங்குவதிலும் இந்த படையணி உதவிகளை வழங்கும்.

இந்த படைப்பிரிவு டீவுசு-80இ றுணு551இ வுலிந-89 (லுறு534)இ டீவுசு-152 போன்ற துருப்புக்காவி கவசவாகனங்களையும் (யுசஅழரசநன pநசளழnநெட உயசசநைச)இ டீஆP-1இ டீஆP-2இ டீஆP-3இ வுலிந-86 (றுணு501) போன்ற இலகு காலாட் தாக்குதல் கவச வாகனங்களையும் (ஐகெயவெசல கiபாவiபெ எநாiஉடந) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியம், சீன ஆகிய நாடுகளின் தயாரிப்பான இந்த வாகனங்கள் சங்கிலித் தொடர் சக்கரங்கள் (வுசயஉமள) அல்லது எல்லாச் சக்கரங்களும் இயங்கும் தன்மையை கொண்ட சக்கரங்கள் போன்றவற்றை கொண்டிருப்பதனால் கரடுமுரடான தரையமைப்புக்களிலும் இயங்கக்கூடியவை.

மூன்று றெஜிமென்டுகளைக் கொண்ட இந்த பிரிகேட்டின் இறுதி றெஜிமென்ட் படையினர் இந்த மாதத்தின் முற்பகுதியில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த பிரிகேட்டின் முழுமையான இயக்கத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாட படைத்தரப்பு தீர்மானித்திருந்தது. வவுனியா பிராந்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அடிக்கடி நிகழ்த்தப்படும் இந்த விழாக்களின் மூலமும், களமுனைகளுக்கு விஜயம் செய்யும் உயர் அதிகாரிகளின் விஜயங்களின் மூலமும் படையினரின் உளவுரனை அதிகரிக்கலாம் என்பது இதன் மற்றுமொரு உத்தி.

பெரும் எடுப்பில் கொண்டாட தீர்மானித்திருந்த இந்த விழா தொடர்பான தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டதுடன், உயர் அதிகாரிகளின் வருகையும் மிக மிக இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

ஏனெனில், விடுதலைப் புலிகளின் பீரங்கிகளின் தூரவீச்சிற்குள் யாழ். குடாநாட்டில் உள்ள பெருமளவான முக்கிய தளங்கள் இருப்பதனாலும், கடந்த ஆண்டு இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரை குறிவைத்து பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததனாலும் இந்த விழா தொடர்பான தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டிருந்தன. கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை யாழ். குடாவுக்கான தொலைபேசி அழைப்புக்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. எனினும் அன்று காலை நிலைமை தலைகீழாகி விட்டது.

உயர் அதிகாரிகளை வரவேற்பதற்காக காலை 9 மணியளவில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய உட்பட யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள 51, 52, 53, 55 ஆவது படையணிகளின் தளபதிகள் பலாலி விமான ஓடுபாதையில் காத்திருந்தபோது அன்ரனோவ்-32பி தரையிறங்குவதற்கு பதிலாக 130 மி.மீ எறிகணைகள் தாறுமாறாக வீழந்து வெடிக்கத் தொடங்கின.

பெரும் அதிர்ச்சி அலைகள் அதிகாரிகள் மத்தியில் எழுந்த போதும் யாருக்கும் சிந்திக்க நேரமிருக்கவில்லை. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, படைகளின் பிரதம அதிகாரி ஏயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா ஆகியோரை சுமந்து வந்த அன்ரனோவ் விமானம் அப்போது மன்னாருக்கும் காரைநகருக்கும் இடையில் பறந்து கொண்டிருந்தது.

இராணுவத் தளபதிகள் பாதுகாப்பு தேடி ஓடியதுடன், பலாலி தளத்தின் அனர்த்தம் விமானத்தில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானம் கட்டுநாயக்கா நோக்கி திருப்பப்பட்டது. காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தை மீண்டும் சென்றடைந்த விமானத்தில் இருந்த உயர் அதிகாரிகள் பெல்-412 உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வவுனியா பிராந்திய கட்டளைத் தளபதி உட்பட நான்கு டிவிசன் படையணிகளின் கட்டளைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், மூத்த மற்றும் இளநிலை அதிகாரிகள் என 1500 பேருக்கு மேற்பட்டோருடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த விழா பிசுபிசுத்து விட்டது.

எனினும், மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா ஆகியோர் தலைமையில் விழா கொண்டாடப்பட்டதுடன், ரீ-89 மற்றும் றுஆணு-551டீ வகை கவசத் தாக்குதல் வாகனங்களின் அணிவகுப்புக்களும் இடம்பெற்றன.

விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் 130 மி.மீ பீரங்கிகள் இரண்டே பூநகரி மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் இருந்து தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது 34 எறிகணைகள் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் எதுவும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. மிகவும் உயர் பாதுகாப்பு வலயமான இந்த பகுதியில் இருந்து தகவல்களை அறிவதும் கடினமானது. எனினும் இராணுவத்தினரின் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இராணுவத்தின் ஒரு சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உயர் அதிகாரிகளின் விஜயத்தை எவ்வாறு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு அறிந்து கொண்டது என்பது படைத்தரப்பில் பெரும் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது. மேலும் தினமும் நடத்தப்படும் வான் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை அழித்துவிட்டதாக அரசு பிரசாரப்படுத்தி வருகையில் யாழ். குடாநாட்டின் பிரதானதளம் 34 எறிகணைகளால் ஒரு சில மணிநேரம் செயலிழந்து போனதும் அரசின் பிரசாரங்களை அடித்துச் சென்றுவிட்டது.

இவை அனைத்தையும் விட இராணுவத்தின் நான்கு பிரதான டிவிசன் படையணிகள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரை கொண்டுள்ள யாழ். குடாநாட்டிற்கான இரு வழங்கல் வழிகளில் வான் வழியானது எந்த வேளையிலும் மூடப்படலாம் என்பதும் படைத்தரப்பிற்கு எற்பட்டுவரும் பெரும் நெருக்கடியான விடயமாகும்.

30 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்து பீரங்கிகள் மூலம் ஒரு சிறிய விமானத்தை குறிவைப்பது மிக மிக கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எனினும் பெரும் இராணுவ வலயத்திற்குள் நடைபெற இருந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை மாற்றும் வல்லமை விடுதலைப் புலிகளிடம் உண்டு என்பதை இந்த தாக்குதல் இலகுவாக நிரூபித்துள்ளது.

இலங்கையில் நடைபெறும் போரைப் பொறுத்தவரையில் அது ஒரு சக்கரம் போன்றது. கிழக்கின் படை நடவடிக்கையுடன் அரசு நினைக்கலாம் தாம் வென்றுவிடலாம் என்று, எனவே அவர்கள் ஏதோ ஒன்றை முயன்று பார்க்கப் போகின்றார்கள் என்பது தற்போது வெளிப்படை. அதற்கான அறிகுறிகள்தான் புதிய படையணிகளின் உதயங்கள். ஆனால், விடுதலைப் புலிகளின் மௌனங்களிலும் அர்த்தம் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது, நடைபெற்று வரும் இந்த போரில் அரசு ஆழ ஊடுருவும் படையினரை இராணுவத்தினரின் எல்லைகளை அண்டிய காட்டுப் பிரதேசங்களின் நடவடிக்கையில் ஈடுபடுத்த முற்பட்டபோது, விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் படையணிகள் ஏறத்தாழ 300 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள அம்பாந்தோட்டை காடுகளுக்கள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள கவசத்தாக்குதல் படையணி 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முகமாலையில் நடைபெற்ற சமரின் போது ஒரு டசின் டாங்கிகளையும், கவச வாகனங்களையும் இழந்ததும் நோக்கத்தக்கது. அதனுடன் தினமும் வன்னியில் தொன் கணக்கில் குண்டுகளை கொட்டி வரும் வான்படை அனுராதபுரம் தாக்குதலில் ஒரே தாக்குதலில் 27 வான்கலங்களை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி -அருஸ் (வேல்ஸ்)-

0 Comments: