Thursday, February 7, 2008

ஊடக சுதந்திரத்துக்காக உலகளாவிய ரீதியில் குரல்

புண்ணாகிப் புரையோடிப் போய்ப் பேரழிவைத் தந்தபடி இருக்கும் இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதை விடுத்து இராணுவத் தீர்வில் போர்வெறித் தீவிரத்தில் நாட்டம் கொண்டு துடியாய்த் துடிக்கின்றது கொழும்பு.

சகல தரப்பினருக்கும் நியாயம் செய்கின்ற ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிவதை விடுத்து
உரிமைக்காகக் குரல் எழுப்பும் சிறுபான்மை இன மக்களின் பேரம்பேசும் வலுவான ஆயுத பலத்தை அடியோடு தகர்த்து, அவர்களை வலுவற்றவர்களாக்கிவிட்டு, தான் விரும்பும் ஒரு முடிவைத் தீர்வுத் திட்டமாக அவர்கள் மீது திணிப்பதே கொழும்பு அதிகார வர்க்கத்தின் பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தின் ஒரே தீர்மானம் என்பதும் வெளிப்படை.
இந்த நிகழ்ச்சி நிரலின்படி விடயங்கள் வரிசையாக இங்கு கட்டவிழ்ந்து வருவதை நாம் அவதானிக்க முடியும்.

இவ்வாறு தான் விரும்பியதை தீர்வு என்ற பெயரில் திணிக்கும் தனது வலோற்கார எத்தனத்தின் பல்வேறு துணை நடவடிக்கைகளாகவே, அரச ஆதரவிலான மனித உரிமை மீறல்களை இங்கு அரங்கேற்றி வருகின்றது அதிகார வர்க்கம் என்பதும் தெளிவு.
உண்மைகள் வெளியாகாமல் மூடிமறைக்கச் செய்வதும் இந்தத் தந்திரோபாயத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு முக்கியமானது என்பதால் அதற்காகப் பல் வேறு விஷமத்தனமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
ஊடகங்களின் வாய்க்குப் பூட்டுப் போடுவதுபோல எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பின்னணி இதுதான்.
ஒருபுறம் அதிகார வர்க்கத்தின் ஊழல், மோசடிகள், குளறுபடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை.
மறுபுறம் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் தொடர் பாகவும் யுத்தம் தொடர்பாகவும் அரசுத் தலைமை பண் ணும் குளறுபடிகள், பொய்ப்பிரசாரம், தவறான கையாள்கை, விஷமத்தனங்கள் போன்றவை.
இந்த இரண்டையும் மக்களுக்கு அம்பலப்படுத்தி, உண்மை நிலையை உறைப்பாக உணரச் செய்யும் வகை யில் உரைப்பவர்களாக ஊடகவியலாளர்கள் திகழ்வதால் அவர்களுக்கு எதிராக அதிகாரத்தின் அரூபக் கரங்கள் ஆழமாகப் பாய எத்தனிக்கின்றன.
யுத்தம் பற்றிய செய்திகள் வெளியிடுவதைத் தடை செய்யவேண்டும், முன்னர் ஒழிக்கப்பட்ட குற்றவியல் அவ தூறுச் சட்டத்தை மீளவும் கொண்டுவரவேண்டும் என் றெல்லாம் அதிகார வர்க்க உயர் பீடங்கள் எச்சரிக்கை அறி விப்பு விடுகின்றமையும் இத்தகைய நியாயமற்ற அழுத் தங்களின் அங்கங்கள்தாம்.

ஒரு ஜனநாயக நாட்டின் நான்காவது தூணாக காவல் அரணாக மதிக்கப்படுவது ஊடகத்துறை.
அதன் வாயை இறுகப் பூட்டுப் போட்டு மூடவேண்டும் என்று பகிரங்கமாகக் கூறும் அளவுக்கு அதிகார மமதைத் திமிர் ஆட்சிப் பீடத்துக்கு ஏற்பட்டிருப்பதால் நாட்டின் ஜன நாயக ஆட்சி கேலிக்கூத்தாகி விட்டது.
கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கு எதிராக அடிப் படை உரிமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருக்கும் இந்த ஆட்சி முறை அராஜகத்தின் போக்கை ஆட்சேபித்து சர்வ தேச அமைப்புகளும் மனித உரிமை இயக்கங்களும் கடு மையாகக் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றமை இப் போது புதிய அம்சம். இதனால் இந்த விவகாரம் இப்போது ஒரு புதிய பரிமாணத்துக்குள் பிரவேசித்திருக்கின்றது.
ஊடகவியலாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் எதிரான வன்முறை அச்சுறுத்தல் பற்றிய தகவல்கள் தினசரி ஒரு புறம் வெளியாக
அத்தகைய செயற்பாடுகளுக்கு எதிரான சர்வதேச கண் டனங்களும், சாடல்களும் கூட மறுபுறம் தினசரி வெளி யாகத் தொடங்கியிருக்கின்றன.
சர்வதேச மன்னிப்புச் சபையிலிருந்து ஊடகவியலாளர் களுக்கான சர்வதேச அமைப்புகள் வரை பல்வேறு நிறு வனங்கள் இலங்கையில் ஊடக அடக்கு முறைக்கு எதிரா கக் காத்திரமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. அவை, இங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிச்சலு டன் தமது கடமையை ஆற்றுவதற்காகப் போராடி வரும் பேனாப் போராளிகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, உயிர் கொடுத்து நிற்கின்றன.

இலங்கையில் ஊடக அடக்குமுறைக்கு எதிராக சர்வ தேச மட்டத்தில் திரண்டு வரும் எதிர்ப்புணர்வுகளை எதிர்ப்பலைகளை இலங்கையின் அதிகார வர்க்கம் புரிந்து கொண்டு தன்னைத் திருத்த முயலவேண்டும். இல்லை யேல் ஊடக சுதந்திரம் இறந்துபோன நாடுகளின் வரிசை யில் இலங்கையையும் சேர்த்து, விபரீத நடவடிக்கைகளை சர்வதேசம் எடுப்பதற்கு அது வழி செய்துவிடும்.
இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலை மைகள் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் கூட, சுதந்திரமான ஊடகப் பணிக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் ஊடகவியலாளர் தமது கடமைகளைச் செய்ய வும், சகல இடங்களுக்கும் போய் உண்மைகளைக் கண்ட றிந்து வெளிப்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப் பட வேண்டும் என்று வற்புறுத்திக் குறிப்பிடப்பட்டிருந் தமை கவனிக்கத்தக்கது.


நன்றி - உதயன்

0 Comments: