Friday, November 16, 2007

ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிலும் தன்னாதிக்க ஆட்சி உலகில் அதிசயமல்ல!

சிதறுண்ட யூகோசிலாவியா இலங்கைக்கு உணர்த்தும் பாடம்

ஏறத்தாழ இரண்டு லட்சத்து 90 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் கொண்டிருந்த ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது.
பெல்கிரேட் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த யூகோசிலாவியாவே அந்த நாடு. பல்லின மொழிகளையும் மதங்களையும் கொண்டிருந்த யூகோசிலாவியா ஒரு சோசலிசக் குடிரசாக விளங்கியது.
அமெரிக்காவின் சூழ்ச்சியினால் தங்களுக்குள் வேறுபட்டு ஐந்து நாடுகளாகி 2006ஆம் ஆண்டு ஆறாவது நாடும் உருவெடுத்துவிட்டது. மேலும் ஏழு,எட்டு என்ற நிலையில் பிரிவினையை எதிர்நோக்கியுள்ளது.
பல லட்சம் மக்கள் இப்பிரிவினையின்போது கொல்லப்பட்டிருக்கிறார்கள். சோசலிச நாடுகளைச் சிதைப்பதே அமெரிக்காவின் நோக்கம்.
மார்ஷல் டிட்டொவின் தலைமையில் சமத்துவக் குடியரசாகிய யூகோசிலாவியா கீழ்க்காணும் விவரப்படி சிதறுண்டுள்ளது.
நாடு, தலைநகர், நிலப்பரப்பு, குடிசனம்,இன, மத, ரீதியில் யூகோ சிலாவியா சிதறுண்ட விவரம் கீழே தரப்படுகிறது.
பொஸ்னியா சரஜீவோ 51,129 சதுரகிலோ மீற்றர் 4198976 மக்கள் சேர்பியர், குரோசியர் இஸ்லாம் 40 %,கத்தோலிக்கர் 60%.
குரோஷியா சாக்றொப் 56,338 சதுரகிலோ மீற்றர் 44,98,976 மக்கள் சேர்பியர், குரோசியர், கத்தோலிக்கர் 87 %.
மசிடோனியா ஸ்கோப்ஜி 25713 சதுரகிலோ மீற்றர் 2050554 மக்கள் மசிடோனியர் வைதீகக் கிறிஸ்தவர் 60 %, இஸ்லாமியர் 33.3 %.
சுலோவேனியா லிம்புஜா 20,531 சதுரகிலோ மீற்றர் 20,10,347 மக்கள் சுலோவேனியர் கத்தோலிக்கர்.
சேர்பியா பெல்கிறேட் 88,361 சதுரகிலோ மீற்றர் 23,96,411 மக்கள் சேர்பியர் சோல்வேனியர் .
மொன்ரி நீக்ரோ பொட்கொறியா 14,026 சதுரகிலோ மீற்றர் 6,30,458 மக்கள் சேர்பியர் வைதீகக் கிறிஸ்தவம்.
கொசோவோ பிறிஸ்னா 10887 சதுரகிலோ மீற்றர் 2,00,000 மக்கள்
வோட்வோடினோ நொவிசாட் 21,506சதுரகிலோ மீற்றர் 2,05,000 மக்கள்.
சேர்பியாவிலிருந்து கடந்த வருடம் மொன்ரிநீக்றோ நாடு பிரிந்து விட்டது. இதைவிட கொசோவோ, வொற்வோடினோ ஆகிய இரு பிரிவுகள் இன்று சேர்பியாவிலிருந்து பிரியும் நிலையும் உள்ளன. கொசோவோவுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் நிலையில் உள்ளது.
இனி ஸ்ரீலங்காவைப் (இலங்கையை அல்ல) பார்ப்போம்.
65,610 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் இரண்டு கோடி மக்களையும் இந்நாடு கொண்டிருக்கிறது.
இவர்களில் 69 சதவீதத்தினர் பௌத்த சிங்களவர்கள். 19 சதவீதத்தினர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய தமிழர்கள். இஸ்லாமியர்கள் 7 சதவீதம். எண்களிடிப்படையில் ஒரு கோடி 48 லட்சம் சிங்களவர்களும் 40 லட்சம் தமிழர்களும் 20 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.
இனப்பிரச்சினை காரணமாக ஏறத்தாழ 10 லட்சம் தமிழர்கள்வெளிநாடுகளில் அகதிகளாகவுள்ளனர்.
ஸ்ரீலங்காவின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு சிங்களப் பிரதேசமாகவும் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் பரம்பரை வாழ்விடமாகவும் உள்ளன.
கடலைப் பொறுத்தவரையும் இதேநிலை. ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு உள்ளது. இந்த நிலையில்தான் 1948 தொடக்கம் வழிவந்த சிங்கள அரசுகள்தமிழர் தாயகப் பூமியைப் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றன.
இதன் காரணமாக முல்லைத்தீவு திருகோணமலைக்குட்பட்ட டொலர் பாம், கென்ற் பாம் போன்ற பகுதிகளிலிருந்த தமிழர்களின் தாயகமான மணலாறு வெலி ஓயாவாகவும், திருகோணமலையில் பன்குளம் மொறவேவா ஆகவும் மாறின.
குமரேசன்கடவை கொமரன் கடவையாகவும், சேரவாவி சேருவிலவாகவும் மாற, மட்டக்களப்பில் பட்டிப்பளை கல்லோயாவாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதைவிட மன்னார் பிரதேசமும் விட்டு வைக்கப்படவில்லை. கொண்டைச்சி கஜுவத்தையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆக, மூன்றில் ஒரு பகுதியான 21,687 சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட தமிழர் பிரதேசம் முன் குறிப்பிடப்பட்டுள்ள மசிடோனியா, சுலோவேனியா, மொண்ரிநீக்றோ, கொசோவோ ஆகியவற்றிற்கு நிலப்பரப்பிலும் குடிசனக் பரப்பிலும் எவ்விதத்திலும் குறைந்ததல்ல.
கீழ்க்காணும் 1,000 சதுரகிலோ மீற்றர் குறைந்த பரப்பளவுள்ள நாடுகள் தன்னாதிக்க அரசுகளைக் கொண்டுள்ளன. இது சர்வதேசத்தின் விழிப்புணர்வுக்கும் தமிழரின் விடுதலைக்குமாக சமர்ப்பிக்கப்படுகின்றது.
நாடு,தலைநகர், நிலப்பரப்பு, குடிசனம், அமைவிடம் ஆகியவற்றின் விவரம் வரிசைக்கிரமத்தில் கீழே தரப்படுகிறது.
வத்திக்கான் வத்திக்கான் .4 சதுரகிலோ மீற்றர் 900 இத்தாலி.
மொனாக்கோ மொனாக்கோ 1.95 சதுரகிலோ மீற்றர் 32,453 மத்தியதரைக் கடல்.
மாக்கோ மாக்கோ 15.5 சதுரகிலோ மீற்றர் 46,3,125 சீனா தென்பகுதி.
நவ்று யாறேன் 21.1 சதுரகிலோ மீற்றர் 3,267 மத்தியபசுபிக்
துவலு புனாபதி 26 சதுரகிலோ மீற்றர் 118,10 மேல்பசுபிக்
சான்மரீனா சான்மரீனா 61 சதுரகிலோ மீற்றர் 29,251 இத்தாலி.
லீச்ரென்சின் வடுஸ் 160 சதுரகிலோ மீற்றர் 33,487 ஒஸ்ரியா சுவிஸ்சலாந்து.
மதஷல் தீவு டுலிப் உலிகா 181சதுரகிலோ மீற்றர் 61,422 பசுபிக்.
சென்கீற்ஸ்நெவிஸ் பெசற்றறி 269 சதுரகிலோ மீற்றர் 39,129 கரீபியன்கடல்.
மாலைதீவு மாலே 298 சதுரகிலோ மீற்றர் 3,59,008 இந்து சமுத்திரம்.
சிசெல்ஸ் விக்ரோறியா 308 சதுரகிலோ மீற்றர் 81451 இந்து சமுத்திரம்
மோல்ரா வலேட்டா 316 சதுரகிலோ மீற்றர் 4,00,214 மத்தியத்தரைக்கடல்.
கிறெனடா சென்ஜோர்ஜ் 344 சதுரகிலோ மீற்றர் 89,703 மேற்கிந்தியதீவு.
கிறெனடா கிங்ஸ்ரன் 388 சதுரகிலோ மீற்றர் 1,17,848 மேற்கிந்தியதீவு.
பார்படோஸ் பிறிட்ஜ்ரவுண் 430 சதுரகிலோ மீற்றர் 27,912 மேற்கிந்தியதீவு.
பார்புடா சென்ஜோன்ஸ் 442 சதுரகிலோ மீற்றர் 69,108 மேற்கிந்தியதீவு.
அன்டோறா அன்றுவில்லி 464 சதுரகிலோ மீற்றர் 7,01,201 ஸ்பெயின்,பிரான்ஸ்,இத்தாலி.
சென்லூசியா கஸ்றீஸ் 616.0 சதுரகிலோ மீற்றர் 1,68,458 கீழ்க்கரிபியன்.
சிங்கப்பூர் சிங்கப்பூர் 616.3 சதுரகிலோ மீற்றர் 44,92,150 மலாக்காகக்குடா.
பஹ்ரெய்ன் மணாமா 669 சதுரகிலோ மீற்றர் 6,98,585 மத்தியக்கிழக்கு.
மைக்ரோனேசியா பலிக்கீர் 702 சதுரகிலோ மீற்றர் 1,08,004 மேல்பசுபிக்.
டோங்கோ நூக்குஅலிப் 748 சதுரகிலோ மீற்றர் 1,14,689 மேற்கிந்தியதீவு.
டோமினிக்கா றொசயு 750 சதுரகிலோ மீற்றர் 68,910 கீழ்க்கரீபியன்.
கிரிமார்ட்டி தறாவ 861 சதுரகிலோ மீற்றர் 1,05,432 பசுபிக்
சய்தோம் + பிறிசிப் சய்தோம் 964 சதுரகிலோ மீற்றர் 1,93,413 கயானாக்குடா
பிச்சைக்காரர் தொடக்கம் விஞ்ஞானிகள் வரையான யூதர்கள் இருப்பிடமின்றி, வாழ வகையின்றி ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜேர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசித்தார்கள்.
இவர்களின் குழிபறிக்கும் குணம் காரணமாக இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் நச்சுவாயுமூலம் லட்சக் கணக்கானோரைக் கொன்றொழித்தார். மீதிப்பேர் இருக்க வழியின்றி உலகின் பலபாகங்களிலும் குறிப்பாக அமெரிக்காவில் குடியேறினார்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது 1946 இல் பலஸ்தீனத்தில் இவர்களுக்கு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி பிரித்தானியரும் அமெரிக்கர்களும் அவர்களை குடிமர்த்தினார்கள்.
அன்று தொடக்கம் பாலஸ்தீனியர்கள் இன்று வரை ஓர் அங்கீகரிக்கப்பட்ட நாடின்றி அகதிகளாக வாழ்கின்றனர்.
20,772 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இஸ்ரேல் அண்டை அரபு நாடுகளுடன் போரிட்டு மேலும் ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீற்றர் பரப்பளவுகளைச் சுரண்டியுள்ளது.
ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களை அகதிமுகாம்களில் இஸ்ரேல் கொன்றபோது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தர்ம நியாயம் பேசின.
பிரித்தானியாவிலிருந்து 1600ஆம் ஆண்டுகளில் ஒருதொகை வெள்ளைக்காரர் அமெரிக்காவில் குடியேறினர். அங்கு பூர்வகுடிகளாக வாழ்ந்த செவ்விந்தியர்களைக் கொன்றொழித்து நாட்டைத் தங்கள் ஆதிக்கத்திற்குக் கொண்டுவந்த இந்தக் குடியேற்ற வாசிகள் இன்று உலக காவல்காரனாக விளங்குகின்றார்கள்.
நான்கு தலைமுறைக்கு முன்பு கடுங்குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரித்தானியர்களைப் பிரித்தானியா அவுஸ்திரேலியாவிற் கொண்டுசென்று குடியேற்றியது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை 300 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள் துன்புறுத்தி அழித்தொழித்தார்கள். இன்று ஆஸ்திரேலியா ஒரு பிரபலம் மிக்க நாடாக விளங்குகின்றது.
மேற்கே நீர்கொழும்பிலிருந்து கிழக்கே பாணமைவரை தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான தமிழ் ஊர்கள் பெயர் மாற்றப்பட்டு மக்களும் படிப்படியாக சிங்களவர்களாக அல்லது சிங்களம் பேசும் தமிழர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.
மாதம்பை, காக்கப்பள்ளி போன்ற முஸ்லிம் கிராமங்கள் புத்தளம் மாவட்டத்திலும், பெரிய முல்லை கம்பஹா மாவட்டத்திலும் அப்படியே உள்ளன.
இதேபோல், ஆண்டி அம்பலம் ஆண்டி அம்பலம ஆகவும் வாய்க்கால் வைக்கம ஆகவும் மாறியுள்ளன.
தமிழ் கிராமமான கொச்சிக்கடை, மலையாளிகள் அங்கு இன்றும் வாழ்வதால் அப்படியே இருக்கின்றது.
புத்தளத்தில் தமிழ் கிராமங்களான ஆராய்ச்சிக்கட்டு ஆராய்ச்சி கட்டுவ ஆகவும் மங்களவெளி மங்கள எலியவாகவும் முந்தல் முந்தளம ஆகவும் மாறியுள்ளன.
அதேநேரம் உடப்பு, மதுரங்குளி கடையா மோட்டை, பாலாவி, நுரைச்சோலை, மாம்புரி, தலைவில்லு, குறிஞ்சிப்பிட்டி, கல்பிட்டி, பனையடி, பொன் பரப்பிப்பற்று பூக்குளம் என்பன பெயர்கள் மாறுபடாமல் அப்படியே உள்ளன.
எனினும், இவை காலப்போக்கில் சிங்களக் கிராமங்களாகவும் மக்கள் சிங்களவர்களாகவும் மாறுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.
ஆக, 21,867 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள தமிழர் தாயகம் 20 லட்சம் மக்களைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்குக் கரம்கொடுத்து அதனை இன்று கையாளாக வைத்திருக்கும் அமெரிக்கா தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதில் முன்நிற்கிறது.
அதேபோல், தமிழர் தாயகத்தையும் சிங்களத்தையும் தன் ஆட்சிச் சுகத்திற்காக ஒன்று சேர்த்த பெரிய பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய போதும் சரி,பாகிஸ்தானைப் பாரதத்திலிருந்து பிரிக்க ஒற்றைக்காலில் நின்றபோதும் சரி தமிழீழ சுதந்திர தயாகத்தைப் பிரித்துக் கொடுக்காத காரணம் இன்றும் புரியவில்லை.
ஈழத்தமிழர் இன்று படும் அவலங்களுக்குப் பிரித்தானியாவே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும்.
எனவே,யூகோசிலாவியாவை ஆறு துண்டுகளாக்கி பின்பு எட்டுத் துண்டுகளாக வழிவகுத்த அமெரிக்கா, ஐக்கியசோவியத் சமத்துவக் குடியரசை ரஷ்யா ஆக ஆக்கியும் விட்டது. எனினும், ரஷ்யாவின் பரப்பளவை மேலும் குறைக்க அமெரிக்காவால் முடியாது.
தன் நலனுக்காக நாடுகளைத் துண்டாக்குவதிலும், உண்டாக்குவதிலும் பெருமை கண்ட அமெரிக்கா இலங்கையில் தமிழர் தாயகத்திற்கு உதவாவிடினும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உபத்திரம் தராமல் இருப்பது மிகவும் நல்லது.
யூகோசிலாவியா உடைந்து துண்டு துண்டானமை ஸ்ரீலங்காவுக்கு ஒரு படிப்பினை. இதனைச் ஸ்ரீலங்கா உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
""யார் குற்றினாலும் அரிசியாக வேண்டுமென்ற நிலையிலிருந்த தமிழீழ மக்கள் ""அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்'' என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். (ம)

சுடர் ஒளி

0 Comments: