அண்டன் பாலசிங்கத்துடன் தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன் என்றவுடன் பலரது நினைவுக்கும் வருவது அவரது மலர்ந்த புன்னகை பூக்கும் முகம்தான்.
இந்த மிக மோசமான உள்நாட்டுப்போரில் அவரது எதிரிகளுக்கோ, இந்த புன்னகை என்பது அவரது கொடூரத்தை மறைத்த ஒரு முகமூடி. அவ்வளவுதான்.
ஆனால் அவரது நண்பர்கள், அவரை ஒரு மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட போராளியாகவும், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராகவும் கருதினர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1984ல் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிகாக்கும் படைகளை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கியமானவர்.
1993ல் அவர் ஒரு விமானத்தாக்குதலில் காயமடைந்து ஒரு காலில் இருந்து எல்லா சதையும் எடுக்கப்பட்டு, கோல் ஊன்றாமல் நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியே தெரிந்த முகமாக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கை அரசுடன் நடந்த ஏறக்குறைய எல்லா அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார்.
இலங்கையில் உள்ள மற்ற எல்லா அரசியல்வாதிகளையும்விட ஒருக்கால் மிகவும் அதிகமாக பேட்டிகாணப்பட்டவர் அவராக இருக்கலாம்.
தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஒரு மகன் ஆகியோர் இருக்கின்றனர்.
bbc.com
Friday, November 2, 2007
தமிழ்ச்செல்வன் - ஒரு பார்வை
Posted by tamil at 6:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment