Saturday, November 24, 2007

தென்னிலங்கை கோமாளித்தனங்களால் 'இலங்கையிலும்" தோல்வியடைகிறதா நோர்வே?

சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நடவடிக்கைகளையும் வௌ;வேறு அறிக்கைகளையும் உற்று கவனிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமால் இருந்தால் வியப்புத்தான்.

அவ்வளவு தூரத்திற்கு குத்துக்கரணங்களும் கட்சித்தாவல்களும் பணம், பதவிகள், பொறுப்புக்கள் என பல்வேறு 'திருப்பங்கள்" தங்களின் சுயநலன்களுக்காக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதைவிட வேடிக்கை என்னவென்றால் கட்சி மாறுபவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை நம்புவதற்கும் கூட தென்னிலங்கையிலே ஆட்கள் இருப்பதுதான்.

இப்பொழுது மகிந்த ராஜபக்ச வரவு-செலவு திட்டத்தின் இரண்டாவது கட்டத்தினை ஒருவாறு கடந்திருக்கின்றார். அதுவும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் மற்றும் பணப்பரிமாற்றங்கள் என்று மெதமுலனவின் சண்டித்தனங்களை எல்லாம் தென்னிலங்கையில் உள்ள எல்லாக் கட்சிகளின்மீதும் கட்டவிழ்த்துவிட்டு ஒருமாதிரியாக மட்டு மட்டாக கடந்திருக்கின்றார்.

ஆனால் இன்னமும் மகிந்தவின் ஆட்சிப் பாதையிலே பல்வேறு கண்டங்களும் சிக்கல்களும் நெருக்கடிகளும் நிறைந்துபோயிருக்கின்றன.

மகிந்த அரசின் இரண்டு வருடகால ஆட்சி முடிவில் மகிந்த சிந்தனையின் பெறுபேறுகளை தென்னிலங்கையிலே சிங்கள மக்கள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிகரித்த விலைவாசி உயர்வுகள், பணவீக்கம், பொருளாதார சீரழிவு, ஊழல் மோசடிகள், குடும்ப ஆட்சி ஆகியவற்றின் காரணமாக அன்றாட வாழ்க்கையினை நடத்த முடியாமல் சிங்கள மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றா஼br />?்கள். இவை எல்லாவற்றினையும் மறைத்து மக்களை ஏமாற்றுவற்கும், அவர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளை மறக்கப் பண்ணுவதற்கும் மந்திரவாதியின் கையில் இருக்கும் மந்திரக்கோல் போலவே போரினைப் பயன்படுத்த மகிந்த முயல்கின்றார்.

நோர்வே தரப்பினரின் சர்வதேச சமாதான முயற்சிகள் மற்றும் கொழும்புப் பயணம்

அண்மையில் நோர்வே வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த தோமஸ் ஸ்ரங்லான்ட் மற்றும் நோர்வே சிறப்புத் தூதுவர் கான்ஸ் பௌரரின் செயலாளர் சொன்ரே ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் கொழும்பில் தங்கியிருந்த போது சிறிலங்கா அரச தலைவரின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச மற்றும் மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்கா ஆகியோரைச் சந்தித்திருந்தனர்.

சிறிலங்கா அரசாங்கம் சமாதான முன்னெடுப்புக்களுக்கான அனைத்து கதவுகளையும் மூடியுள்ளது என்றும் இராணுவ ரீதியான செயற்பாடுகளையே தீவிரப்படுத்தப்போவதாகவும் இக்கலந்துரையாடல்களில் இருந்து அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

மகிந்த அரசின் மீது ஜே.வி.பியினரின் நான்கு கோரிக்கைகளான போர்நிறுத்த உடன்படிக்கையினைச் செயலற்றதாக்குதல், ஐ.நா போன்ற சர்வதேச பிரதிநிதிகள் தலையீடுகள், வருகைகள் மற்றும் ஆலோசனைகளை முற்றாக எதிர்த்தல், அனைத்துக்கட்சி மகாநாட்டுத் தீர்மானங்களை குப்பையில் போடுதல், சிறிலங்காவின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற நிபந்தனைகள் சர்வதேச சமூகத்தினையும் அதிலும் குறிப்பாக இணைத்தலைமை நாடுகள், நோர்வே அனுசரணையாளர்கள் எல்லோரையும் குழப்பத்திலும் நெருக்கடிகளிலும் ஆழ்த்தியுள்ளது.

நோர்வே அரசின் சமாதான முயற்சிகள் ஏற்கனவே பலஸ்தீனம், சூடான் மற்றும் ஏனைய தென்கிழக்காசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதுவிதமான உருப்படியான தீர்வுகளைக் காண்பதற்கோ அல்லது நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கோ உதவவில்லை. அத்துடன் பலஸ்தீனத்தின் யசீர் அரபாத் சொந்த மக்களாலும் கமாஸ் போன்ற புரட்சிகர அமைப்புக்களாலும் நோர்வேயின் அமைதி முயற்சி காரணமாக மேற்கு நாடுகளின் வலையில் வீழ்ந்துவிட்டார் என்று ஒதுக்கப்பட்டார்.

தென் சூடானின் விடுதலை அமைப்பின் தலைவரும் நோர்வேயின் சமாதான ஒப்பந்தத்தின் மூலம் சூடானிய துணை அரச தலைவராக விளங்கிய ஜோன் கராங் ஒரு உலங்குவானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.

அத்துடன் தற்போது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவராகவும் விளங்கிய பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் அவரது செயலகத்தில் வைத்து சிறிலங்கா வான்படையினரால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில் நோர்வேயினரின் சமாதான முயற்சிகள் அனைத்து இடங்களிலும் சிக்கலுக்குள்ளாகி பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் இலங்கைத்தீவிலும் சமாதான முயற்சிகள் தோல்வியடையுமாயின் உலகிலே அமைதியை ஏற்படுத்துபவர் என்ற பெயரை நோர்வே இழக்க வேண்டியிருக்கும் என்று அஞ்சுகின்றது.

அண்மைய வாரங்களில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொண்டலிசா ரைசினால் மத்திய கிழக்கிலே மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் காரணமாக பலஸ்தீன தலைவர் மக்மூட் அபாசும் இஸ்ரேலியத் தலைவர் ஈகுட் ஒல்மேற்றும் எதிர்வரும் வாரம் அமெரிக்க செல்லவுள்ளார்கள்.

அவர்கள் எவ்வளவு கலந்துரையாடல்களை மேற்கொண்டாலும் எதுவிதமான உருப்படியான தீர்வுகள் எதனையும் பலஸ்தீன மக்கள் இந்தப் பேச்சுவார்;த்தையின் விளைவாக பெற்றுவிடப்போவதில்லை என்று ரெலிகிராப் செய்தி ஏட்டிற்கு தோல்வியுற்ற தலைவர்கள் பலஸ்தீன மக்களுக்கு அமைதியைக் கொண்டுவர மாட்டார்கள் என்ற தலையங்கத்தில் டேவிட் பிளேயர் எழுதிய பத்தியில் தெரிவித்துள்ளார்.

அதாவது இஸ்ரேலிய- பலஸ்தீன நெருக்கடிகளின் மையப்பிரச்சினைகளாக விளங்கும் மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றம், பலஸ்தீன சுயாட்சி தேசத்தின் எல்லைகளை வரையறுத்தல், பலஸ்தீன அகதிகள் மீள திரும்புவதற்கான உரிமைகள் மற்றும் எல்லாவற்றிலும் பிரதானமான ஜெருசேலத்தினை இரண்டு தேசங்களின் நகரங்களாகப் பிரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கண்டால் மட்டுமே பலஸ்தீன நெருக்கடிக்கு அமைதித் தீர்வு காணமுடியும்.

இதற்கான சாத்தியங்கள் ஒரு கிஞ்சித்தும் இல்லை என்று ஜெருசேலம் மற்றும் ரெல்அவிவ் இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றார்கள்.

அதாவது இஸ்ரேலிய பிரதமர் ஒல்மேற் மிகவும் சிறுபான்மை அரசினை மட்டுமட்டாக ஆட்சி புரிந்து வருகின்றார். லெபனான் போர் காரணமாகவும் மத்திய கிழக்கின் அரசியல் ஸ்திரமற்றதன்மை காரணமாகவும் மிகவும் செல்வாக்கு குறைந்தவராக ஒல்மேற் விளங்குவதால் அவரால் இவ்வாறான அமைதி தீர்வுகளுக்கு செல்வது என்பது சாத்தியமேயில்லை.

மகிந்தவிற்கும் ஒல்மேற்றும் இந்த விடயங்களில் பெரிதாக வித்தியாசமில்லை. மகிந்தவும் மிகவும் சிறுபான்மை அரசினையே நடத்துகின்றார். அவருக்கு ஆதரவு வழங்குபவர்களில் பெரும்பான்மையோர் தீவிர இனவாத கடும்போக்காளர்கள் ஆகும். மகிந்த அரசோ போருக்கான வரவு-செலவுத்திட்டம் என்று சொல்லப்படுகின்ற பாதீட்டை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. மகிந்தவின் அரசு உயிர்தப்பிப் பிழைப்பதற்கான அனைத்து முதலீடுகளும் போரிலேயே போடப்பட்டிருக்கின்றது. எனவே மகிந்த அரசு போரினை எதிர்காலத்தில் மிகவும் தீவிரப்படுத்தப்போகின்றது.

அதனைத்தான் அவரது சகோதரர்களான பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவும் பசில் ராஜபக்சவும் பல்வேறு அறிக்கைகளில் வெளிப்படுத்திவருகின்றார்கள௼br />?.

ஆனால் விடுதலைப் புலிகளோ சர்வதேச மற்றும் உள்நாட்டு படைத்துறை மற்றும் பத்தி ஆய்வாளர்களின் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கியபடி தமது படைத்துறை வல்லமைகளையும் போரியல் திறன்களையும் பல்வேறு களமுனைகளிலே வெளிப்படுத்திவருகின்றார்கள்

யால சரணாலய படை முகாம் மற்றும் அனுராதபுர வான்படைத்தள அழிப்புகளில் இருந்து மன்னார் மற்றும் முகமாலை சிறிலங்கா படையினரின் முன்னேற்ற முயற்சிகளை முறியடித்ததுவரை இந்த அனைத்து வலிந்த மற்றும் முறியடிப்பு தாக்குதல்களில் தமது வல்லமையை உலகிற்கு நிரூபித்துள்ளார்கள்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் மரபிற்கு இணங்க இழப்புக்கள் ஏற்படும்போதுதான் புலிகள் மிகவும் மூர்க்கத்தனமாக எதிரிகளுடன் போரிட்டு வெற்றிகளைக் குவிப்பார்கள். இதற்கு உதாரணமாக குமரப்பா, புலெந்திரன் போன்ற தளபதிகள் இந்திய சிறிலங்கா கூட்டுச் சதியால் கொல்லப்பட்டபோது உலகின் நாலாவது பெரிய இராணுவத்துடன் மோதி அவர்களை படையியல், அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் தோற்கடித்து உலகின் கண்களை உயர்த்தவைத்ததைக் கூறலாம்.

தற்போது எமது தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரையில் எவ்வாறான கொள்கைப் பிரகடனங்களை வெளியிடப்போகிறார் என்பதை கேட்பதற்கு பல்வேறு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள், வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மற்றும் தூதுவர்கள் ஆவலோடும் எதிர்பார்ப்போடும் நவம்பர் 27 ஆம் நாளைப் எதிர்பார்த்திருக்கின்றார்க஼br />?்.

இதேபோன்று தென்னிலங்கையிலும் சிங்கள தேசம் பதற்றத்தோடும் யோசனைகளோடும் இந்த உரையில் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் என்ன கூறப்போகின்றார் என்பதை அறிவதற்காகக் காத்திருக்கின்றது.

மாவீரர் நாளுக்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கைகளைக் கட்டிக்கொண்டு எமது தலைவரின் உரையினை அறிவதற்காகக் காத்திருப்பதை மட்டும்தான் செய்யமுடியும்.

0 Comments: