Monday, November 26, 2007

பிரபாவின் நாளைய செய்தி திருப்புமுனையை ஏற்படுத்துமா?

Posted on : 2007-11-26


விடுதலைப் புலிகளின் மறைந்த போராளிகளையும், போராட்டத்தில் சிக்கி உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை.

இன்று தனது 53 ஆவது பிறந்த தினத்தைக் கடக்கும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது வருடாந்த உரையில் என்ன கூறப்போகின்றார் என்பதை, நாளைய மாவீரர் தினத்தைத் தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கும் ஈழத் தமிழர்கள் மட்டு மல்லாமல், முழு உலகத்தவருமே பார்த்திருக்கின்றனர்.

"பயங்கரவாத ஒழிப்பு' என்ற பெயரில் தமிழர் தேசத்தின் மீது பெரும் இராணுவப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிங்கள தேசத்தின் போர்வெறிப் போக்குக் குறித்து, தமிழர் தாய கத்தின் தலைவரின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமானதல்ல.

இவ்விவகாரத்தில் தமிழர் தரப்பின் அதிருப்தியை, சீற் றத்தை, விசனத்தை என்ன வார்த்தைகளில் அவர் வெளிப் படுத்தப் போகின்றார், தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குத் தாம் தேர்ந்தெடுக்கப்போகும் பாதையின் போக்குக் குறித்து அவர் என்ன கோடிகாட்டப் போகின்றார் என்பதை அறிவதற்குத்தான் உலகம் காத்துக்கிடக்கின்றது.

செத்துச் சருகாகி, உக்கி உருக்குலைந்து போய்க்கிடக் கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்தும்
அதைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டே பெரும் யுத்த முஸ்தீபில் ஈடுபட்டுவரும் சிங்களத் தலைமை குறித்தும்
இவ்வளவு தமிழர் விரோதக் கொடூரங்களும் அப்பட் டமாக அரங்கேற இன்னும் புளித்துப்போன பயகரவாத அடையாளப்படுத்தலைக் காட்டிக்கொண்டு, தமிழர் தேசத்தை ஒதுக்கி வைத்து, கொழும்பின் கொடூரங் களுக்கு இடமளித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வ தேசத்தின் அசிரத்தை தொடர்பாகவும்
இவற்றுக்கு மத்தியிலும் தமிழர் போராட்டத்தின் பின்புலமாகத் திகழும் புலம்பெயர்வாழ் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பற்றுணர்வு பற்றியும்
தமிழர் தேசியத்தின் தலைவர் கூறப்போகும் செய்தி மிக முக்கியமானதாகவே இருக்கும்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பாதை யைத் திரும்பிப் பார்ப்பவர்கள் அது ஆரம்பத்தில் உரிமை கோரி நடத்தப்பட்ட அஹிம்சை வழியிலான அறக் கள மாகவும், பின்னர் வன்முறைப் புயல் வீசும் போராட்டத் தின் மறக்களமாகவும் இரு வழிகளில் பரிணாமம் கொள்வதைக் காண்பர்.

இந்த இரண்டுக்கும் நடுவே அவ்வப்போது வந்து போகும் சமாதான முயற்சி நாடகங்களையும் நாம் காணமுடியும். இந்த சமாதான அரங்குகள் அல்லது அமைதி முயற்சி எத்தனங் கள் எல்லாமே சிறுபான்மையினரான தமிழர்களைப் பெரும் பான்மையினரான பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த அங்கங்களாகவே விரியும்.
கடைசியாக 2002 முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அமைதி முயற்சி கூட, "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு வரை' முன்னேறி, வாக்குறுதி அளிக்கப் பட்ட நிலையில், தென்னிலங்கைச் சிங்களத்தினால் இப் போது மீண்டும் புளித்துப் போன "மாவட்டசபை மட்டத் துக்கு' ஏமாற்றி கீழிறக்கப்பட்ட வரலாற்றை நாம் கண்டு நிற்கின்றோம்.

இதற்குப் பின்னரும் சமாதான முயற்சிகள் என்ற பெய ரில் அமைதி காத்து, ஏமாந்து கிடப்பதில் அர்த்தமே யில்லை என்பது தமிழர் தேசத்துக்குத் தெளிவுபட்டு விட்டது. இதை என்ன வடிவத்தில் நாளை பிரபாகரன் எடுத்துக் கூறுவார் என்பதையே உலகம் பார்த்திருக்கின்றது.
தமிழ் மக்கள் ஓரினமாக ஒருங்கிணைந்து வாழ்வதற் கும், ஓரினமாகத் தம்மை அடையாளப்படுத்தி நிற்பதுக் குமான அடிப்படைக் கட்டுமானங்களை அவசியமான அடித் தளங்களை மையமான அத்திபாரத்தை இலக்கு வைத்துத் தாக்கும் சிங்கள அரசியல் ஒடுக்குமுறையானது மறுபுறத் தில் "பயங்கரவாதிகளிடமிருந்து தமிழர்களை விடுவித் தல்' என்ற பெயரில் தமிழர் தாயகத்தைக் கைப்பற்றி, மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவற்றைச் சிங்கள மயப் படுத்தும் கபட சதித் திட்டமாக கனகச்சிதமாக முன்னெடுக் கின்றது. இதன்மூலம் தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கி, அந்தத் தேசத்துக்கும், தேசியதிற்கும் உரிய விடுதலை வேணவாவை நசுக்கிவிட லாம் எனக் கொழும்பு எண்ணுகிறது
இந்தச் சதித்திட்டங்களை கபட வலைப்பின்னலை வெற்றிகொள்வதற்கான தனது வியூகத்தைப் பிரபா கரன் தமது நாளைய மாவீரர் தின உரையில் கோடி காட்டு வார் என எதிர்பார்க்கலாம்.
கிழக்கு மாகாணத்தில் தமது நிர்வாகக் கட்டுப்பாடு களை இழந்து, வன்னிக்குள் முடக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் விடுக்கப்போகும் செய்தி, இலங்கை அரசிய லிலும், தமிழர் வாழ்வின் விமோசனத்திலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


uthayan.com/

0 Comments: