Monday, November 12, 2007

ஈழத் தமிழர் குறித்து சர்வதேசம் நீதியான முடிவை எடுக்கும் வேளை

Posted on : 2007-11-12

*ஆள்மாறாட்டம் செய்யும் வகையில் இராஜதந்திரக் கட வுச்சீட்டை மோசடியாக வழங்கி, கொழும்பில் உள்ள பிரிட் டிஷ் தூதரகத்தைத் தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி "விஸா' பெற்று, பிரிட்டிஷ் அரசுக்கு உண்மைகளை ஒளித்து, சட்ட முறைமைகளுக்கு மாறான வழியில் கருணாவை பிரிட் டனுக்குள் கடத்தியிருக்கின்றது இலங்கை அரசு என்ற தக வல் இப்போது அம்பலமாகிவிட்டது.
* இலங்கைக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதை அடுத்த ஜனவரி முதல் கனடா, நெதர் லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் அடியோடு நிறுத்தத் தீர் மானித்து விட்டன. இலங்கை அரசு பாதுகாப்புச் செலவினத் துக்குப் பெரும் தொகை நிதியை ஒதுக்கி யுத்த வரவு செல வுத்திட்டம் ஒன்றை சமர்ப்பித்தமையை அடுத்தே இந்த நாடு கள் இவ்வாறு தீர்மானித்திருக்கின்றன என்று கொழும்பில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
*ஹெய்ட்டியில் ஐ.நாவின் அமைதிப் படை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்ட சுமார் 950 இலங் கைப் படையினரில் நான்கு அதிகாரிகள் உட்பட 110 துருப் பினர் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஐ.நாவினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.
*அரசுப் படைகளின் துணைப்படையாக இயங்கும் கருணா குழு அல்லது பிள்ளையான் அணியின் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக இருக்கும்படி கிழக் கில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் எச் சரிக்கப்பட்டிருக்கின்றன.
* அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் ஆட்சேபம் மற் றும் அதிருப்தியையும் மீறி ஈரானுக்கான தமது சர்ச்சைக் குரிய பயணத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டபடி அடுத்தவாரமளவில் முன்னெடுப்பார் என்று கொழும்பில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
* இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண் பதற்கான தென்னிலங்கையின் யோசனைத்திட்டத்தைத் தயாரிப்பதற்காக இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப் பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தனது திட் டத்தை இந்தா அறிவிக்கப்போகின்றது, அந்தா வெளியிடப்?2986;ாகின்றது என்று அயல் வல்லாதிக்க நாடான இந்தியாவுக் கும் மற்றும் மேற்குலகுக்கும் கடந்த சுமார் ஒன்றரை வருடங் களாக படம் காட்டி வந்த இலங்கை அரசுத் தலைமை, இப் போது அதனை மேலும் தள்ளிப்போட்டு, ஜனவரி வரை அடுத்த ஆண்டு முற்பகுதி வரை ஒத்திவைத்து விட்டது.
* இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வுக் கான சமாதான முயற்சிகளில் முழு மூச்சோடும், இதய சுத்தி யோடும் செயற்படுங்கள் என மேற்குலக நாடுகள் கொழும்பை வற்புறுத்தி வருகையில், அந்த அழுத்தத்தை உதாசீனம் செய்து தனது போரியல் வெறிப்போக்குத் திட்டத்தை இலங்கை அரசு அப்பட்டமாக வெளியே தோற்றக்கூடிய விதத்தில் முன்னெடுத்து வருகின்றது.
இவை எல்லாம் சர்வதேச சமூகத்தின் முன்னால் கொழும்பு அரசுத் தலைமைக்கு அண்மைக்காலத்தில் "நற் பெயரையும் கீர்த்தியையும்' (?) வேண்டித்தந்த விவகாரங் கள் பற்றிய செய்திகளாகும்.
அதேசமயம், மறுபுறத்தில் "பயங்கரவாத இயக்கம்' என மேற்குலக நாடுகள் பலவற்றில் பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் "கெட்ட பெயர்' மேற்குலக நாடு களில் மங்கித் தேய்ந்து வருவதும் பலதரப்பினாலும் அவதா னிக்கப்பட்டு விதந்துரைக்கப்பட்டு வருகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்நாட்டில் வெகுவாகக் குறைந்து விட் டன. சிவிலியன் இலக்குகளைப் புலிகள் தாக்குகின்றனர் என்ற கூக்குரல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அடங்கிவிட்டது. சிறுவர்களைப் படைக்குச் சேர்த்தல், பல வந்தமாக நிதி அறவிடல், கப்பம் கோரல், ஆட்கடத்தல் போன்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுடன் புலி களை நேரடியாகத் தொடர்புபடுத்தும் எத்தனங்கள் குறைந்து வருகின்றன.
இதேசமயம், தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய அரசி யல் பொறுப்பாளர் பா. நடேசன், அப்பதவியைத் தாம் ஏற்ற பின்னர், கொழும்பு ஆங்கில வார இதழுக்கு வழங்கிய தமது கன்னிப் பேட்டியில் இதை ஒட்டிய ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது.""எங்கள் மக்களின் உரிமைகளுக்கான எமது போராட்டம் நீதியானது. அது சர்வதேச நியமங்கள் (வழக்காறுகள்) மற்றும் சட்டங் களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அத னால்தான் அதை (அந்தப் போராட்டத்தை) அங்கீகரியுங்கள் என்று சர்வதேசத்தைக் கேட்கிறோம்.'' என்ற சாரப்பட அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது, தன்னை சட்டரீதியான இறைமையுள்ள அரசு என்று கூறிக்கொள்ளும் கொழும்பு நிர்வாகத்தின் செயற்பாடு கள், போக்குகள் சர்வதேச நியமங்களுக்கு முரணானவை யாக சர்வதேச அங்கீகாரத்துக்கு மாறானவையாக முன் னெடுக்கப்படுகின்றன. அதேசமயம், முக்கிய மேற்குலக நாடுகளால் "பயங்கரவாத இயக்கமாக' அறிவிக்கப்பட்ட புலி களின் செயற்பாடும், போக்கும் முன்னேற்றகரமானவையாக மனித உரிமைகள் உட்பட சர்வதேச நியமங்களை மதிப் பவையாக மாறிவருகின்றன. இந்த விவகாரம் மேற்குலகப் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் போன்ற தரப்புகளால் கூர்ந்து அவதானிக்கப்பட்டு குறிப்பிடப்படுகின்றன.
மேலும் மேற்குலகின் முக்கிய நாடான பிரிட்டனிடம், இலங்கை அரசுப் படைகளின் கூலிப்படைத் தளபதியாகச் செயற்பட்ட கருணா சிக்கியிருக்கின்றார். அவரிடம் இருந்து தான் "கறந்தெடுக்கும்' உண்மைகள் மூலம் கொழும்பின் நீதி யான(?) செயற்பாட்டுப் போக்குக் குறித்துத் திட்டவட்ட மான முடிவு ஒன்றுக்கு வருவதற்கான சான்றுகள், ஆதாரங் கள், விளக்கங்கள், தகவல்கள் போன்றவற்றை மேற்குலகு சார்பாக தேவைக்கு விஞ்சிய அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில் நீதியான முடிவு ஒன்றை சர்வதேசம் எடுக்கும் காலம் நெருங்கி வருகின்றது. தமிழர் தரப் பின் போராட்டம் குறித்து சர்வதேசத்தின் போக்கில் மீளாய்வு மாற்றத்தை அந்த முடிவு ஏற்படுத்தும் எனத் தமிழர்கள் நம்பு கின்றார்கள். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள்.
உதயன்

0 Comments: