Friday, November 23, 2007

ஆட்சியின் நாணயக்கயிறை பிடித்திருக்கும் அதிகாரக் குழு

Posted on : 2007-11-23

"த லீடர்' வெளியீட்டகத்தின் அச்சகத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து கண்டனம் தெரி வித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, அது தொடர்பாகத் தாம் விடுத்த ஆங்கில அறிக்கை யில் ஒரு வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டிருக் கிறார். அது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்க ஒன் றாக இருக்கின்றது.
""இன்று நாட்டை ஆளும் கும்பலினால் (ஒதணtச்) ஜன நாயக விழுமியங்களுக்கு மற்றோர் பேரடி விழுந்திருக் கின்றது'' என்று இந்தத் தாக்குதல் சம்பவத்தை விமர்சித்திருக்கின்றார் அவர்.
இந்த விமர்சனத்துக்கு அவர் தேர்ந்துள்ள சொல் "ஒதணtச்'. இது கவனிக்கத்தக்க ஓர் அம்சமாகும்.

ஆட்சி அதிகாரத்தைப் பலாத்காரம் மூலம் அல்லது கிளர்ச்சி மூலம் கைப்பற்றி வைத்திருக்கும் ஓர் இராணுவக் குழுவையே "ஒதணtச்' என்று அழைப்பர்.
"த லீடர்' வெளியீட்டக அச்சகசாலை மிக உயர் பாது காப்பு வலயத்துக்குள் அமைந்திருக்கின்றது. விமானப் படைக்குச் சொந்தமான பல விமானங்கள் அருகில் உள்ள இரத்மலானை விமானத் தளத்தில்தான் தரித்து நிற்கின் றன. அந்தப் பிரதேசத்துக்குள் எவரும் இலகுவாக நுழைந்து வெளியே வரமுடியாது. அதுவும் சுமார் பதினைந்து பேரைக் கொண்ட ஆயுதம் தாங்கிய குண்டர் குழு ஒன்று இத் தகைய உயர் பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் சர்வ சாதார ணமாகப் போய், இத்தகைய அத்துமீறல் அராஜகத்தைப் புரிந்துவிட்டு, சாவகாசமாகத் திரும்பிச் சென்றிருக்கின் றது என்றால் அது பாதுகாப்பு அமைச்சினதும் ஆட்சி நிர் வாகத்தினதும் அனுமதியின்றி நடக்கக்கூடிய காரியமேயல்ல என்று சுட்டிக்காட்டுகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்.
அதனால்தான் இந்தக் காரியங்களைப் பின்னின்று நடத்தும் குழுவினரை, ஆட்சி அதிகாரத்தை கிளர்ச்சி மூலம் கைப்பற்றி வைத்திருக்கும் இராணுவக் கும்பலைக் குறிப்பிடும் "ஒதணtச்' என்ற பெயரில் தாம் குறிப்பிடுகின் றார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விளக்கியிருக்கின்றார்.

நாட்டின் ஆட்சி அதிகாரம் அரசிடம் அதாவது அமைச் சரவையிடம் என்று வெளிப்படையாகக் கூறிக் கொண் டாலும், உண்மையில் அதுவல்ல யதார்த்த நிலைமை என்பதே இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நாட்டை நிர்வகிக்க 109 அமைச்சர்கள் இருந்தாலும் பல் வேறு முக்கிய அமைச்சுகளும் அதிகாரங்களும் ஜனாதிபதி யாகிய ஒருவரிடமே குவிந்து கிடக்கின்றன.
ஏற்கனவே அரசமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதி காரம் ஜனாதிபதியிடம். முப்படைகளின் தளகர்த்தரும் அவரே. அதே சமயம் நிதி அமைச்சு முதல் அதிக நிதி புர ளும் பாதுகாப்பு அமைச்சு, சமுர்த்தி விவகார அமைச்சு போன் றவை வரை பெரும்பாலான அமைச்சுகளின் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளன. அதேசமயம் ஒரு பொம்மை அமைச்சரவை பெயருக்குச் செயற்படு வதும் அப்பட்டமாகத் தோற்றுகின்றது.
ஜனாதிபதியைச் சூழவும் அவரைச் அவரைச் சுற்றி யும் இருக்கும் ஒரு குழுவினரால் இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் ஜனாதிபதி மஹிந்தர் மற்றும் அவரது சகோதரர் அணியினால் மட்டுமே பெரும்பாலான அதி காரங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்பதே கொழும்பு அரச நிர்வாகத்தின் யதார்த்த நிலையாகும்.

பிரதமர் முதல் 109 அமைச்சர்கள் வரை தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் வெறும் பெயருக்குத் "தலை'களாகவே இருக்கின்றனரே தவிர, தலைவர்களுக் குரிய அதிகாரங்களைப் பிரயோகிப்பவர்களாக இல்லை என்பதே உண்மை நிலைமை.
இத்தகைய ஒரு சிறு வட்டத்தினால் குழுவினால் ஆட்சி அதிகாரம் பிரயோகிக்கப்படும் நிலையிலேயே "த லீடர்' வெளியீட்டு அச்சகசாலை மீதான தாக்குதல் போன்ற ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும், கருத்து வெளியிடும் சுதந்திரத்துக்கும் பேரிடி தரும் நிகழ்வுகள் இத்தேசத்தில் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்றில் ஓர் எம்.பி. சுயாதீனமாகச் செயற்படு வதை அச்சுறுத்தி, மிரட்டித் தடுப்பதற்காக அவரது உற வினர் ஆயுத முனையில் கடத்தப்பட்டு பணயம் வைக் கப்படுகின்றார். கடத்தல்காரர்களின் உத்தரவுக்குக் கீழ்ப் படிந்து சம்பந்தப்பட்ட எம்.பி. செயற்பட்டதனால் பண யம் வைக்கப்பட்ட அந்த உறவினர் பின்னர் விடுவிக்கப் படுகின்றார்.
ஒரு சிறு உயர்மட்டக் குழாம் நாட்டின் ஆட்சி அதி காரத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு நிர்வகிக்க, அதன் கீழ் இத்தகைய அராஜகங்களும் கொடூரங்களும் தொடரு மாயின் இதனை "ஒதணtச்' ஆட்சி என எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க விமர்சிப்பதில் தப்பு இல்லை என்றே தோன்றுகின்றது.

நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதி ராக தமிழர் தேசத்துக்கு எதிராக பெரும் இராணுவ முஸ் தீபு நடவடிக்கைகளை மேற்கொண்டபடி அதன்மூலம் நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களை ஏமாற்றித் திருப்தி செய்வதாகக் கருதிக்கொண்டு தன் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிழுக்கிறது இந்த சிறிய அதிகார வட்டக் குழு.

அரசியல் தலைமைகளை அல்லது அரசியல் கருத் துருவ நிலைப்பாடுகளை ஓரங்கட்டி ஓடும் இக்குழு வினரின் போக்கால் நாடு எதிர்நோக்கப் போகும் விப ரீதத்துக்கான கட்டியமாக "த லீடர்' வெளியீட்டகம் மீதான இந்த நாசகாரத் தாக்குதலைக் கருதமுடியும்.

http://www.uthayan.com/

0 Comments: