Tuesday, November 13, 2007

சர்வகட்சி மாநாட்டிலிருந்து தீர்வுப்பொதி முளைக்குமா?

[ உதயன் ] - [ Nov 13, 2007 05:00 GMT ]


இனப்பிரச்சினைக்கு உகந்த தீர்வு ஒன்றை வகுப்பதற் காக நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழு தொடர்ந்து பேச்சுக் களை நடத்தும் என்றும் இறுதி ஆவணத்தை அனேகமாக பெப்ரவரி மாதத்தி லேயே சமர்ப்பிக்க முடியும் என்றும் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

எனினும் பலதரப்பட்ட கலந்தாலோசனைகள் நடை பெறவேண்டி இருப்பதால், குறித்த நேர அட்டவணைப் பிரகாரம் இறுதி ஆவணத்தைச் சமர்ப்பிப்பதில் சிரமங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன் அர்த்தம், பெப்ரவரியைத் தாண்டி மார்ச் மாதத்திலா வது இறுதி ஆவணம் உருப்பெறுமா என்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது என்பதாகும்.

நிலைமை இப்படியிருக்க, அரசியல் தீர்வுக்கான அடிப் படை ஆவணத்தை ஜனவரி மத்தியில் வெளிப்படுத்த முடி யும் என்றவாறு ஜனாதிபதி இந்தியாவில் வைத்துத் தெரி வித்திருந்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், சர்வகட்சி மாநாடு கள், வட்டமேசை மாநாடுகள் என்று கொழும்புத் தலைவர் கள் போடும் சீட்டுக்கள், காலம் வாங்கும் தந்திரம் என்பதும், ஆட்சியில் உள்ளவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலம்வரை தமது பதவியைத் தக்கவைக்க மேற்கொள்ளும் உத்தி என் பதும் அனுபவப் பாடம்.

இனப்பிரச்சினைத் தீர்வில் அது விரைந்து காணப்பட வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் சற்று அக்கறை காட்டு வதால் யுத்த நிலைமை நீக்கப்பட்டு, அமைதி உருவாக்கப்பட் டால் தான், நிதி உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்க வெளிநாடுகள் ஆரம்பித்துள்ளதால் அவற்றைத் திருப்திப்படுத்தவே இந்தச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு என்பதையும் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் அல்லர்.

சர்வகட்சிப் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்க நிய மிக்கப்பட்ட நிபுணர்கள் நான்கு கூறுகளாகப் பிரிந்து யோச னைகளைச் சமர்ப்பித்திருப்பதும், குழு "ஏ' சமர்ப்பித்த யோசனைகளுக்கு ஜே.வி.பி. எதிர்ப்புத் தெரிவித்து வெளி யேறி இருப்பதும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக தீர்வுக்கான இறுதி ஆவணம் ஒன்று முளைவிட்டு மேல் எழுமா என்ற பெரும் சந்தேகத்தையே தோற்றுவித் திருக்கிறது.

இம்மாதம் இருபதாம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையோடு ஜனாதிபதியைச் சந்தித்து அரசியல் தீர்வுப் பொதி ஒன்றை இயன்றளவு விரைவில் முன்வைத்து நாட்டில் மீண் டும் ஒரு பெரிய யுத்தம் மூளாமல் தடுத்துக்கொள்ள வேண் டும் என்று வற்புறுத்தி இருந்தார் என்பது தகவல்.

ஆனால் ஜனாதிபதி அதனை உளமார காதில் போட்டுக் கொண்டாரா என்பது சந்தேகத்துக்குரியது எனச் சொல்லப் படுகிறது.

அரசாங்கத் தரப்பில் வேறு திட்டங்களும் உத்திகளும் இருப்பதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே அதிக நாட்டம் உள்ளதாகவும் சில வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம், இனப்பிரச்சினைக்கு ஓர் உகந்த தீர்வை விரைந்து உருவாக்க வேண்டும் என்பதேயாகும் என்று பிரசாரம் செய் யப்பட்டது. ஆனால், இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த தலைமை யிலான சுதந்திரக் கட்சியிடம் அவசரமோ அதிக அக்கறையோ இருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

ஸ்ரீ.ல.சு.க. ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இனப் பிரச்சினை சம்பந்தமாக உள்ள பகுதியில் மத்திய அரசுக் கும் பிராந்திய நிர்வாக அலகுகளுக்கும் வழங்கப்படக் கூடிய அதிகாரங்கள் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.

நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் அர சாங்கத்துக்கு உண்மையான விருப்பம் இருந்தால், அதன் அவசியத்தையும் அவசரத்தையும் அது உணர்ந்துகொண்டு செயற்படுவதாக இருந்தால் ஸ்ரீ.ல.சு.க. ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடி காட்டப்பட்டுள்ள அடிப்படையைக் கொண்டேனும் ஒரு தீர்வுப் பொதியை விரைந்து தயாரிக்க முடியும்.

ரணில் என்ன, இணைத் தலைமை நாடுகள் என்ன, உல கமே வந்து நெருக்குதல் கொடுத்தாலும் அரசு தன்னகத்தே வைத்துள்ள நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே இனப்பிரச்சினைக் கான தீர்வு விவகாரத்தைக் கையாள விரும்புவதாகவே கொள்ள வேண்டி உள்ளது.

அவ்வாறில்லையெனில், நிபுணர் குழு "ஏ' சமர்ப்பித்த யோசனையைக் கண்டு அரசு பதற்றமும் ஆத்திரமும் கொண் டிருக்க எவ்வித காரணமும் இல்லை.

கடந்த பல தசாப்தங்களாக, இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான, நேர்த்தியான தீர்வைக் காண்பதில் கண்ட துரதிஷ்டமான அனுபவங்களை மனதில் வைத்தேனும் அவற்றை ஒரு பாடமாக வைத்தேனும் ஆகக் குறைந்தது சமஷ்டி அரசு முறைக்கு உட்பட்ட ஒரு தீர்வுப் பொதியையாவது உருவாக்குவதற்கு அரசுக்கு நாட்டமில்லை என் பது அதன் நடத்தைகளிலிருந்து மிக வெளிச்சமாகத் தெரி கிறது.

இதற்கிடையில் நிபுணர்குழு "ஏ' சமர்ப்பித்த அறிக்கையில் வடக்கு கிழக்கு இணைப்பைத் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு நீடித்து அதன் பின்னர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஒரு சிபார்சும் அடங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அத்தகைய ஒரு சிபார்சு அனைத்துக் கட்சி மாநாட்டுப் பொதியில் சேர்க்கப்படுவதனைத் தடுக்கவே வடக்கு கிழக்குப் பிரிப்பு நடந்திருக்கிறது.

இவை எல்லாம் எவற்றைப் புலப்படுத்துகின்றன? தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்த தீர்வு ஒன்றை இந்த அரசாங்கம் முன் வைக்கப்போவதில்லை. அவ்வாறு செய்வதற்கு விருப்பம் உள்ளதாகக் காட்டிக்கொள்கிறதே அன்றி உள்ளார்ந்த அக் கறை இல்லை என்று கொள்வதன்றி வேறு முடிவு எதற்கும் வர இயலவில்லை!

0 Comments: