Thursday, November 22, 2007

போரில் விரைவான வெற்றி குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்க்கும் அரசின் பிரசாரங்கள்

[21 - November - 2007]

* அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன. கொழும்பிலும் வன்னியிலும் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய சர்வதேச சக்திகளும் இல்லை
** அரசாங்கத்தின் செயல்கள் தமிழர்களையும் இந்நாட்டின் பிரஜைகளாக கணக்கிலெடுப்பதாக அமைந்திருக்கவில்லை. பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் போரில் பங்கேற்காத பட்சத்தில் அல்லது அதற்கு ஆதரவாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தமிழருமே- அவர் இளைஞராக இருந்தாலென்ன, முதியவராக இருந்தாலென்ன, ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன, நோயாளியாக இருந்தாலென்ன, சுகதேகியாக இருந்தாலென்ன - இலங்கைக்கும் அதன் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே கணிக்கப்படுகிறார் என்ற செய்தியே அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு விடுக்கப்படுகிறது.யாழ்ப்பாண༢r />??்திலாக இருந்தாலும் சரி நான் வாழும் தெஹிவளை சுற்றுச் சூழலிலும் சரி சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின்போது தமிழர்கள் நடத்தப்படுகின்ற முறை அவர்களுக்கு ஒரேயொரு அடிப்படைச் செய்தியைச் சொல்கிறது. அரசாங்கத்தினால் நீதியாகவும் சமத்துவமானவர்களாகவும் நடத்தப்படுவதற்கான தமிழர்களின் உரிமை போரின்போது இடைநிறுத்தப்படுகிறது. நாட்டின் பிரஜைகள் என்றவகையில் சமத்துவத்தையும் கௌரவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு இதுவல்ல நேரம் என்ற செய்தியே அதுவாகும்

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

அரசாங்கமும் விடுதலை புலிகள் இயக்கமும் வடமாகாணத்தில் பெரியதொரு பலப்பரீட்சையை நோக்கிய நகர்வுகளைச் செய்து கொண்டிருக்கின்றன போலத் தோன்றுகிறது. வடக்கில் வெகுவிரைவில் முழு அளவிலான தாக்குதலை நடத்துவதற்கான இராணுவத் தயார் நிலை குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் அரசாங்க ஊடகங்களும் மிகவும் பகிரங்கமாக கருத்துகளைத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. போரில் வெற்றிபெறுவது குறித்தும் விடுதலைப் புலிகளின் முழுத் தலைமைத்துவத்தையும் வலுவிழக்கச் செய்வது குறித்தும்கூட அதிர்ச்சி தரும் வகையிலான நம்பிக்கையை அவர்கள் வெளிக்காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதேவேளை, விடுதலைப்புலிகளும் அதேயளவு நம்பிக்கையுடன் அரசாங்கத்தின் தயார் நிலைக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். வன்னி மீதான இராணுவத்தின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிப்பதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதாக விடுதலைப்புலிகள் கூறுகிறார்கள். போர்வீச்சு எதிர்வரும் வாரங்களில் எத்தகைய நிலைவரங்களைத் தோற்றுவிக்கும் என்பதை ஊகிப்பதுகூட சாதாரண மக்களுக்கும் என்னைப்போன்ற உணர்ச்சி ஆர்வம்மிக்க அவதானிகளுக்கும் மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. ஆனால், ஒன்றை மாத்திரம் சொல்ல முடியும். இலங்கையின் உள்நாட்டுப் போர் (திரும்பிவருவதற்கு மார்க்கமில்லாத அளவுக்கு) தீர்க்கமானதொரு கட்டத்தை இப்போது அடைந்திருக்கிறது.

சமூக, அரசியல் பாதக விளைவுகள்

இராணுவ பலாபலன்களும் விளைவுகளும் எந்தவொரு உள்நாட்டுப் போரிலுமே ஒருபக்கக் கதை மாத்திரமேயாகும். உள்நாட்டுப் போர்கள் மறுபுறத்தில் மனித, சமுதாய மற்றும் அரசியல் பாதக விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. போரில் சம்பந்தப்பட்டிருக்கின்ற தரப்பினரும் அவர்களது நேச அணிகளும் இந்தப் பாதகவிளைவுகள் பற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. `விடுதலை புலிகளின் பயங்கரவாதத்தை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிடுங்கள், மக்கள் தங்களது வெறு வயிறுகளை இறுக்கக் கட்டிக்கொண்டு பொருளாதார இடர்பாடுகளை பொறுத்துக்கொள்ளத் தயாராயிருக்கிறார்கள்' என்று ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இன்று மக்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாகப் பிரபல்யப்படுத்தப்படுகிறது. பிரசாரங்களின் மூலமாக அத்தகைய போர் விருப்ப உணர்வுகளைப் பரப்புவது விரைவான வெற்றியொன்று குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்ப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாயமேயாகும். அத்தகைய போர் விருப்ப எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமுடியாமல் போகும் பட்சத்தில், அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் குறித்து அரசாங்கம் தற்சமயம் எந்தவிதத்திலுமே அக்கறையுடன் சிந்திப்பதாகத் தெரியவில்லை. எதிர்பாராத சில காரணங்களுக்காக வன்னிமீதான தாக்குதலை தாமதிப்பதற்கு ஜனாதிபதி விரும்பினால் கூட , அவ்வாறு செய்யக்கூடிய நிலையில் அவர் இருக்கப்போவதில்லை என்பதுதான் தற்போதைய நிலைமையாகும். போரின் ஊடாக ஆட்சியை ஸ்திரமான நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற அரசியல் நோக்கமே நியாயத்தன்மை, கொள்கை மற்றும் நிகழ்வுகள் சார்ந்த எந்தவொரு தர்க்கத்தையும் மேவி நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

நாட்டினதும் மக்களினதும் நலன்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பவை போர் ஆர்வத்திற்குள் சிக்குண்டிருக்கும் அரசாங்கங்களின் ஏகபோக உரிமை அல்ல என்பதால், போர் தயார் நிலையின் பாதக அரசியல் விளைவுகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கான உரிமையும் கடமையும் மாற்றுக்கருத்துடைய பிரஜைகளுக்கு இருக்கிறது. பல பாதக அரசியல் விளைவுகளை எம்மைச்சுற்றி ஏற்கனவே காணமுடிகிறது.

தமிழர்களுக்கு அரசின் செய்தி

இலங்கை அரசிடமிருந்து தமிழ்ப் பிரஜைகள் தொடர்ந்து மிகத் தீவிரமாக அந்நியப்பட்டுக் கொண்டேயிருக்கின்றமை இந்த பாதக அரசியல் விளைவுகளில் முதன்மையானதாகும். வடக்கு, கிழக்கில் அரசாங்கம் போர் செய்கின்ற முறையும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும் இனத்துவ மேலாண்மை மற்றும் கர்வ உணர்வுகளினால் வரையறை செய்யப்பட்டவையாக இருக்கின்றன. ஏனென்றால், அரசாங்கத்தின் செயல்கள் தமிழர்களையும் இந்நாட்டின் பிரஜைகளாக கணக்கிலெடுப்பதாக அமைந்திருக்கவில்லை. பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் போரில் பங்கேற்காத பட்சத்தில் அல்லது அதற்கு ஆதரவாக இல்லாத பட்சத்தில் எந்தவொரு தமிழருமே, அவர் இளைஞராக இருந்தாலென்ன, முதியவராக இருந்தாலென்ன, ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன, நோயாளியாக இருந்தாலென்ன, சுகதேசியாக இருந்தாலென்ன - இலங்கைக்கும் அதன் பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தலாகவே கணிக்ப்படுகிறார் என்ற செய்தியே அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு விடுக்கப்படுகிறது.

இந்தக் கூற்று மிகைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. அதற்கு அரசாங்கத்தின் போர்ச் செயலகம் ஐந்துபக்க அறிக்கையொன்றை பதிலாக விடுக்க வேண்டிய தேவையும் இல்லை. யாழ்ப்பாணத்திலாக இருந்தாலும் சரி நான் வாழும் தெஹிவளை சுற்றுச் சூழலிலும் சரி சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின்போது தமிழர்கள் நடத்தப்படுகின்ற முறை அவர்களுக்கு ஒரேயொரு அடிப்படைச் செய்தியைச் சொல்கிறது. அரசாங்கத்தினால் நீதியாகவும் சமத்துவமானவர்களாகவும் நடத்தப்படுவதற்கான தமிழர்களின் உரிமை போரின்போது இடைநிறுத்தப்படுகிறது. நாட்டின் பிரஜைகள் என்றவகையில் சமத்துவத்தையும் கௌரவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு இதுவல்ல நேரம் என்ற செய்தியே அதுவாகும்.

தற்போது இலங்கை அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறவர்கள௼br />? அல்லது தவறாக நடத்திக்கொண்டிருக்கிறவர்கள௼br />? மீது எந்தவிதமான வன்மத்துடனும் இதை நான் கூறவில்லை. இனத்துவ உள்நாட்டுப் போர்ச் சூழ்நிலைகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் அடிப்படைக் கோட்பாடுகளை அவர்கள் கற்கத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையிலேயே கூறுகிறேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவப் போரில் வெற்றிபெற வேண்டுமென்ற குருட்டுத்தனமாக உறுதிப்பாட்டில் தாங்கள் அரசியல் போரில் தோல்வியடைவதற்கான விதைகளைத் தூவுகிறார்கள் என்பதை அரசாங்கத் தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தீவிரமடைந்திருக்கும் இராணுவவாதம், இனத்துவ பெரும்பான்மையின வாதம் மற்றும் போர் ஆர்வச் சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு அல்லது அவரது ஆலோசகர்களுக்கு (அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தாமல் அல்லது ஜனநாயக விதிமுறைகளையும் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகளையும் தலைகீழாகப் புரட்டாமல்) எவ்வாறு விடுதலைப் புலிகளுடனான போரை அரசியல்ரீதியாகக் கையாள்வதென்பது குறித்து தன்னடக்கமானதும் அறிவுபூர்வமானதுமான எந்தவொரு ஆலோசனைகளையும் என்னைப் போன்றவர்கள் பகிரங்கமாக வழங்குவது எளிதானதோ, சாத்தியமானதோ அல்லது விவேகமானதோ அல்ல.

அரசும் ஆட்சிமுறையும்

அரசுக்கும் ஆட்சிமுறைக்கும் இடையிலான வேறுபாடு படிப்படியாக துடைத்தெறியப்படுகின்றமையும௼br />? தாங்களே அரசு என்றும் தாங்கள் இல்லையென்றால் விளைவு அனர்த்தமானதாகவே இருக்கும் என்றும் அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நம்பிக்கையும் இலங்கை நாட்டுப்போரின் தற்போதைய கட்டத்தின் இன்னொரு விளைபயனாகும்.

தங்களையும் தங்களது ஆட்சிமுறையையும் அரசுடன் சமமாகக் கருதுவதில் இலங்கையின் ஆளும் அரசியல்வாதிகள் காட்டுகின்ற நாட்டம் ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்களினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. 1970 இல் ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த இப்போக்கு ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் தொடர்ந்தது. ஆட்சிமுறையை அரசுடன் ஒன்றாக நோக்கும் நடைமுறை டி.பி. விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களின் போது பின்னணிக்குத் தள்ளப்பட்டது. இப்போது அந்த நடைமுறை பழிதீர்க்கும் தன்மையுடன் மிகவும் தீவிரமாக திரும்பிவந்திருக்கிறது.

அரசுக்கும் ஆட்சிமுறைக்கும் இடையிலான இந்த வேறுபாடு துடைத்தெரியப்படும்போது என்ன நேரும்? 1970 களிலும் 1980 களினதும் சரித்திர நினைவுகளை இன்னமும் மனதில் வைத்திருக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு இக் கேள்விக்கான விடை ஒன்றும் பரிச்சயமானதல்ல என்றில்லை. ஆளுகையில் ஏற்பட்ட இந்த ஏதேச்சாதிகார சறுக்கலில் தாராள ஜனநாயகம் என்பது கட்டுப்படியாகாத ஒரு ஆரம்பமாக ஏன் ஒரு அச்சுறுத்தலாகக் கூட நோக்கப்படுகிறது. அரசினதும் ஆட்சிமுறையினதும் பாதுகாப்பு மக்களின் பாதுகாப்பைவிட மேன்மையானதாகவும் சட்டத்தின் ஆட்சியென்பது நிறைவேற்று அதிகாரபீடத்தின் மட்டுமீறிய அதிகாரங்களுக்கு கீழ்ப்படிவானதாகவும் நோக்கப்படும் நிலையே தோன்றும். இதில் சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் நலன்கள் மீதான ஒரு சுமையாக நோக்கப்படும். துரதிஷ்டவசமாக இந்தப் போக்கு இலங்கையில் இன்று மிகவும் தீவிரமடைந்திருக்கக் காணப்படுகிறது.

உள்நாட்டுப் போரின் விளைவாக மிகவும் சீர்செய்ய முடியாத அரசியல் தாக்கம் அரசு மீது ஏற்படுகின்ற பாதிப்பேயாகும். இது அரசையும் அரசுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுகளையும் இராணுவமயப்படுத்துகிறது. அரசின் ஒடுக்குமுறை ஆற்றலையும் அட்டகாசமாக தலையீடு செய்வதற்கான ஆர்வத்தையும் இது உச்ச நிலைக்குக் கொண்டு செல்கிறது. சிறுபான்மை இனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான பிளவை அகலப்படுத்துகிறது. இது அரசினதும் ஆட்சிமுறையினதும் அசாதாரண நடத்தைப் பாணியை சாதாரணமானதாக்குகிறது. அரசின் ஜனநாயக அத்திபாரங்களை படுமோசமாக சீர்குலைக்கிறது. தேசபக்தி இராணுவவாத உணர்வுகளைக் கிளறிவிடும் அரசியல் போக்கை உள்ளறிவினது மூலாதாரமாக இது முன்னணிக்குக் கொண்டுவந்து விடுகிறது.

இவையெல்லாம் எம் முன்னாலேயே எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. பாரிய இராணுவ வெற்றியைக் காணவேண்டுமென்ற வேட்கை மாயைத்தனமான கோட்பாட்டுக்கு அப்பால் யதார்த்தங்களை பார்க்க முடியாமல் பலரைத் தடுக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலே போர் விருப்பின் பாதக விளைவுகளைப் பற்றிப் பேசுபவர்கள் துரோகிகளாக நோக்கப்படுவார்கள் அல்லது கேலிசெய்யப்படுவார்கள்.

சட்டத்தின் ஆட்சி பின்னடைவு

உள்நாட்டுப் போரின் நிர்ப்பந்தங்களின் விளைவான சூழ்நிலைகளின் கீழ் சட்டத்தின் ஆட்சியில் இருந்து அரசு பின்வாங்கியதில் உள்ள மிகவும் கவலைக்குரிய ஒரு அம்சம் சட்டபூர்வமான இலங்கை அரசுக்கும் விடுலைப்புலிகளின் அரசு போன்ற நடைமுறைகளுக்கும் இடையிலான வேறுபாடு துடைத்தழிக்கப்படுகின்றமையா஼br />?ும். மனித உரிமை மீறல்கள், போர் நடவடிக்கைளின்போதான இராணுவ அத்துமீறல்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகசுதந்திரம் மீதான தாக்குதல், ஐயுறவுடன் நோக்கும் சர்வதேச சமூகத்தைக் கையாளுவதில் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள், அகங்காரத்தை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கம் பெருமளவுக்கு தற்பெருமையுடன் விடுதலைப்புலிகளைப் பின்பற்றிச் செயற்படுகின்றது போலத் தோன்றுகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுப்போக்கு இன்றைய ஆட்சிமுறையின் ஒரு புதிய பங்களிப்பாகும்.

சர்வதேச ஜனநாயக ஆளுகை முறைமையின் ஒரு பங்களி என்று உரிமைகோரிக் கொள்ளும் அரசுக்கு இது உகந்ததல்ல. குறிப்பாக, மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் விடுதலைப் புலிகளை ஒத்ததாகச் செயற்படுவது அரசுக்கு சுய அழிவைத் தேடித்தருவதாகும். தர்ர்மீக ரீதியில் மேம்பட்ட நிலையில் இருப்பதாக உரிமை கேரிக் கொள்ளமுடியாத நிலையை இது இலங்கை அரசுக்கு ஏற்படுத்துகிறது. உண்மையில் உலகம் அரசையும் அவதானித்துக் கொண்டேயிருக்கிறது. இதன் விளைவாக அரசு சர்வதேசரீதியில் நிலவிய நியாய பூர்வத்தன்மை, சட்டபூர்வத் தன்மை தொடர்பில் நெருக்கடியொன்றை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்தக் கட்டுரையை பிரசுரத்துக்கு அனுப்புவதற்கு முன்னதாக வாசித்தபோது ஒவ்வொரு வசனத்திலுமே கடுமையான விரக்தியும் வேதனையும் கலந்த உணர்வு வெளிப்படுத்தப்படுவதை நான் அவதானித்தேன். இலங்கைக்கு ஏற்படப்போகின்ற அனர்த்தத்தை முன்னுணரக்கக்கூடிய என்னைப்போன்ற தனிநபர்களினால் அந்த அனர்த்தத்தைத் தடுப்பதற்கு எதையுமே செய்யமுடியாது என்பதை உணர்ந்ததனால் ஏற்பட்டதே அந்த விரக்தியும் வேதனையும். அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீனமடைந்தவையாகக் காணப்படுகின்றன. கொழும்பிலும் வன்னியிலும் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய சர்வதேச சக்திகளும் இல்லை.

இலங்கை அரசு உள்நாட்டுப் போரில் எவ்வாறு வெற்றிபெறுகின்றது என்பதை பார்ப்பதற்கு சர்வதேச சமூகத்தின் பிரதான நாடுகள் காத்திருக்கின்றன போல் தெரிகிறது. ஏனென்றால், இலங்கை அரசு கையாளும் தந்திரோபாயங்களை அதன் பாடங்களை ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வேறு பகுதிகளிலும் பிரயோகிக்கலாம் என்று அந்த வல்லாதிக்க நாடுகள் நம்புகின்றன. தடுக்கமுடியாதாக இருக்கும் ஒருபோரின் விளைவுகளினால் தீர்மானிக்கப்படப்போகும் விதியைக் கொண்ட ஒரு மக்களாக நாம் இருக்கின்றோம். இந்தப்போரின் நலம்நாடிகள் பலர் இருக்கிறார்கள். அதன்மீது ஐயுறவு கொண்டவர்கள் சிலரே இருக்கிறார்கள்.

http://www.thinakkural.com

0 Comments: