Wednesday, November 14, 2007

இனப்பிரச்சினையை மையமாக வைத்தே தெற்கின் அரசியல் அதிகாரப் போர்

Posted on : 2007-11-14

ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே யான அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றன என்பதை இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.
தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பலப் படுத்தி, நிலைப்படுத்துவதற்கு ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்ட தமது அதிகாரப் போர்களையே தளங் களாக சிங்களத் தலைமைகள் பயன்படுத்தி வந்திருக்கின் றன. அதுவே இன்றும் தொடர்கின்றது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி முயற்சிகள் தென் னிலங்கையின் இந்த அதிகாரப் போர்கள் ஊடாக அணுகப்பட்டமையால்தான். இன்று வரை தீர்க்கப்பட முடியாத பெரும் விவகாரமாக இனப்பிணக்கு விஸ்வரூபம் எடுத்து, உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கின்றது.
"செல்லும் செல்லாது எல்லாம் செட்டியார் தலைமேலே' என்பார்கள். அதுபோல தென்னிலங்கை அரசியல் சிக்கல் கள், குளறுபடிகள் எல்லாவற்றையும் தலையில் கொட்டுவதற் கான நிலைக்களனாக இப்போது புலிகள் அமைப்பே தென் னிலங்கையால் பயன்படுத்தப்படுகிறது.
தென்னிலங்கைக்குள்ளேயே அரசுக்கு எதிரான எதிர ணிகள் எழுச்சி பெற்று, கிளர்ச்சியுற்று, பெரும் ஆர்ப்பாட்டங் களை பொதுக்கூட்டங்களை பேரணிகளை நடத்தத் திட்ட மிட்டால், அதைத் தடுப்பதற்கும் வாய்ப்பாக மாட்டும் செட்டி யார் புலிகள்தாம்.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களுடன் புலிகளின் தற்கொலைத் தாக்குதலாளிகள் தலைநகருக்குள் புகுந்துவிட்டார்கள் என்று புரளி கிளப்பி, புலிகளின் பேரால், எதிரணியின் மக்கள் பேரெழுச்சிக்கு வேட்டு வைக்கும் நாடகம் அங்கு அரங்கேறும்.
இப்போதும் கூட, தென்னிலங்கையில் அரசியல் குழப் பம் உச்சக்கட்டம் அடைந்திருக்கிறது. அரசு சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பை ஒட் டிய வாக்கெடுப்பு அடுத்த திங்கட்கிழமை நாடாளுமன்றத் தில் இடம்பெறும்போது அங்கு ஓர் அரசியல் அதிகாரப் போரும் வெடிக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன.
எதிரணியில் இருக்கும் பிரதான கட்சிகள் வெவ்வேறு கார ணங்களுக்காக இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றன.
பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வழமையாக எதிர்க்கட் சிக்குரிய பொறுப்பில் ஆட்சியைக் கவிழ்த்து அரசைக் கைப் பற்றும் நினைப்பில் எதிர்பார்ப்பில் இந்த வரவு, செலவுத்திட்டத்தை எதிர்க்கின்றது.
நாட்டில் என்றுமில்லாதவாறு மோசமான பாதிப்பை ஏற் படுத்தியிருக்கும் விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் பெரும் அவதிக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். போதாக் குறைக்கு தான் எதிர்பார்க்கும் வகையில் தமிழர் விரோதப் போரியலை முன்னெடுக்கும் தீவிரத்தை அரசு காட்டவில்லை என்ற காழ்ப்புணர்வும் சேர, இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்காமல் விடுவதன் மூலம் தனது எதிர்ப்பைக் காட்டத் திட்டமிடுகிறது எண்ணுகிறது ஜே.வி.பி. கட்சி. அத் தோடு வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதன் மூலம், அல்லது அதை ஆதரிக்காமல் விடுவதன் வாயிலாக, இந்த மோச மான விலைவாசி அதிகரிப்புக்குத் தான் பொறுப்பல்ல என் றும், அத்தகைய மோசமான பொருளாதாரப் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கும் அரசுக்குத் தான் முண்டு கொடுக்கவில்லை என்றும் காட்டுவதன் மூலம் தென்னிலங்கை மக்களின் வசவுகளிலிருந்து தப்பிக்கொள்ள ஜே.வி.பி. விரும்புகின்றது.
இதேபோன்ற அரசியல் காரணங்களுக்காக இச்சந்தர்ப் பத்தில் அரசைக் கவிழ்க்க ஸ்ரீ.ல.சு.கவின் மக்கள் பிரிவின் எம்.பிக்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி போன் றோர் விரும்புகின்றனர்.
அதேசமயம், மோசமான போர் ஒன்றைத் தமிழர் தேசம் மீது கட்டவிழ்த்து விடும் திட்டத்துடன் பெரும் யுத்த "பட்ஜெட்' ஒன்றை அரசு சமர்ப்பித்திருப்பதால் அதனை எதிர்க்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்திருக்கின்றார்கள்.
இந்தப் பின்புலத்தில் அரசுத் தரப்பில் ஒட்டியும், ஒட்டா மலும் இருக்கும் சில கட்சிகளும், குழுக்களும் 19 ஆம் திகதி வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு வாக் கெடுப்பின் போது, அரசுத் தரப்பின் காலை வாரி எதிரணிப் பக்கம் நின்று, அரசுக்கு எதிராக வாக்களிக்கலாம் என்று பேச் சடிபடுகின்றது. இதனால் அச்சமயம் அரசைக் கவிழ்ப்பதற் கான வாய்ப்பு ஐம்பது வீதத்தை எட்டியிருக்கின் றது. அன்று எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை.
தென்னிலங்கை அரசியல் அதிகாரப் போர் இவ்வாறு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டால் அடுத்து என்ன நடக் கும்? வழமைபோல இவ்விவகாரத்தை சிறுபான்மையின ரான தமிழர் மீது தூக்கிப்போட்டு, அதை மையமாக வைத்து அரசியல் போரைத் தொடரவேண்டியதுதானே.....! அதுதானே தென்னிலங்கையின் "பரவணி'ப்பழக்கம்? அதுவே இப்போதும் நடக்கின்றது.
""தனது இலக்குகளை இராணுவ ரீதியில் அடைய முடி யாமல் தோல்விகண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, அரசுத் தரப்பு எம்.பிக்களை விலைக்கு வாங்கி வரவு செல வுத்திட்டத்தின்போது அரசைக் கவிழ்க்கக் கபட சதித்திட்டம் தீட்டியுள்ளது.'' என்று பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருக்கின்றமை இப் படி மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் அவர் முடிச்சுப் போட்டிருக்கின்றமை தெற்கின் அரசியல் அதிகாரப் போருக்கு தமிழர் விவகாரத்தை மையத்துக்கு இழுக்கும் வழமையான போக்கின் ஓர் அங்கமே.
அரசை விட்டு வெளியேறி, அரசுத் தரப்புக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் வாக்களிப்போருக்கு பெருந்தொகைப் பணம் கொடுப்பதற்கு புலிகள் அமைப்புத் தயாராகி இருக் கிறது என அரசுக்கு நம்பகரமாகத் தகவல்கள் கிடைத்திருக் கின்றன என்றும் கூறியிருக்கிறார் ரம்புக்வெல.
ஆக, ஆளும் தரப்பில் இருப்போர் அரசுக்கு எதிராகத் திரும்பி னால் அவர்கள் மீது "புலி' முத்திரை குத்தப்படும் என்ப தைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார் ரம்புக்வெல.
தென்னிலங்கையின் அரசியல் குளறுபடிகளுக்குக் கூட புலிகளைத்தான் தெற்கு நம்பியிருக்க வேண்டியிருக்கின் றது. என்னே பரிதாபம்.....!
uthayan.com

0 Comments: