Thursday, November 22, 2007

ஊடக சுதந்திரத்துக்குச் சாவுமணி

Posted on : 2007-11-22


தென்பகுதி மக்களை குறிப்பாக சிங்கள மக்களை அரசியல் அந்தகாரத்துக்குள் வைத்துக்கொண்டு, யதார்த்தத் தையும் நிதர்சனத்தையும் அவர்களுக்கு மறைத்துக்கொண்டு, தமது திருகுதாள அரசியலைக் கனகச்சிதமாக முன்னெடுக் கும் சிங்கள அரசியல் கட்சிகளின் மனவமைப்பில் மாற்றம் ஏதும் ஏற்படவே போவதில்லை என்பது தெளிவாகி வருகின்றது.
"த லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் அச்சு இயந்தி ரங்கள் எரிக்கப்பட்ட அராஜகம் இந்தச் செய்தியையே ஆணித் தரமாக உரைத்து நிற்கின்றது.
இலங்கையின் அரசியல் நிலைவரங்களைப் பற்றிய உண்மைகளைத் தென்னிலங்கையில் எடுத்துரைக்க முனை யும் ஊடகவியலாளர்கள் "தேசத் துரோகிகள்' எனப் பச்சை குத்தப்படுகின்றார்கள். அல்லது அந்த ஊடக நிறுவனங் களுக்கு ஊறு விளைவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இரண்டாவது தடவையாகக் கொழும் பில் "லீடர் பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தின் பத்திரிகைகளை அச்சிடும் அச்சகப்பிரிவு அராஜக அட்டகாசத்தில் நாசமாக்கப் பட்டிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் தேர்தலுக்கு முதல் மாதத்தில் இந்த நிறுவனத்தின் அச்சகப் பிரிவுக்குத் தீயிடப்பட்டது.
ஆனால் இம்முறை சேதம் அதிகம் எனக் கூறப்படுகின் றது.
இரத்மலானை விமான நிலையத்தை ஒட்டிய உயர் பாது காப்பு வலயத்துக்குள் இந்த அச்சு இயந்திரசாலை அமைந்தி ருக்கின்றது.
அத்தகைய பகுதிக்குள்தான் சுமார் பதினைந்து பேர் முகமூடி அணிந்தபடி, ரி 56 ரக ஆயுதங்களுடன் இரு வாகனங் களில் வந்து, அச்சு இயந்திரங்களை எல்லாம் எரித்து அராஜ கம் புரிந்துவிட்டு, ஆசுவாசமாகத் தப்பிச் சென்றிருக்கின்றார் கள்.
""இந்த அரசின் கீழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் புரியப்பட்ட மோசமான வன்முறை நட வடிக்கைகள் குறித்து அர்த்தமுள்ள விசாரணைகள் நடை பெறுவதை, குற்றம் புரிந்த படையினருக்கு குற்ற விலக் களிப்பு வழங்கும் வகையில் நாட்டில் விளங்கும் விசேட சிறப்புரிமைக் கலாசாரம் தடுத்து, இடையூறு செய்து வரு கின்றது.'' என்று சுதந்திர ஊடக இயக்கம் உண்மையை விளம்பியிருக்கின்றது.
ஊடக நிறுவனங்களுக்குள் புகுந்து தாக்குதல்கள் நடத் தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப் படுகின்றார்கள்; கடத்தப்பட்டுக் காணாமற்போகின்றார்கள். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படு கின்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகள் விலக் கப்பட்டு அவர்கள் கையறு நிலையில் அந்தரிக்க விடப்படு கின்றனர். ஊடக நிறுவனங்களுக்கு எதிராகப் பழிவாங்கும் அரச நிர்வாக நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப் படுகின்றன.
ஆனால் இந்தக் குற்றங்களுக்காக அட்டூழியங்களுக் காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை. யாரும் கைது செய் யப்படுவதில்லை. இத்தகைய கொடூரங்களில் சம்பந்தப் பட்ட எவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுவதில்லை.
அநாமதேயங்கள் புரியும் செயலாகக் காட்டிக்கொண்டு ஊடக சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கும் மிகவும் ஆபத்தான மோசமான கலாசாரம் ஒன்று இலங்கையைப் பற்றிப் பீடித்து நிற்கின்றது.
அண்மைக்காலத்தில் பன்னிரண்டு ஊடகப் பணியாளர் கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள௼br />?. மூவர் கடத்தப்பட்டிருக் கின்றனர். நான்குபேர் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒலிபரப்பு அலைவரிசைச் சேவைகள் ஐந்து தடை செய்யப் பட்டிருக்கின்றன. செய்திகளை வழங்கும் ஓர் இணையத் தளம் ("தமிழ் நெற்') தடை செய்யப்பட்டிருக்கின்றது. மூன்று பத்திரிகைகள் பலவந்தமாக மூடப்பட்டிருக்கின்றன. ஊடக வியலாளர்களையும் ஊடகங்களையும் அச்சுறுத்தும் மூன்று சட்ட மூலங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஊடக அலுவலகத்துக்குள் புகுந்து தாக்கும் கொடூரம் இப்போது மீண்டும் அரங்கேறியிருக்கின்றது. இதைத் தவிரவும் எண் ணிக்கையில் அடங்காத அளவு அச்சுறுத்தல்கள் அண்மைக் காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக விடுக்கப்பட்டிருக்கின் றன.
இவ்வளவு ஊடக விரோதக் கொடூரங்கள் இடம்பெற்றும் கூட அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியைக் கூட இந்த அரசினால் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு மே 2 ஆம் திகதி சர்வதேச பத்திரிகை யாளர் தினத்துக்கு முதல்நாள் "உதயன்' அலுவலகத்துக் குள் ஐந்து, ஆறு முகமூடி தரித்த ஆயுததாரிகள் புகுந்து, இரு நூறுக்கும் அதிகமான வேட்டுக்களைத் தீர்த்து, இருவரைக் கொன்று, மற்றிருவரைப் படுகாயப்படுத்தி, முழு கணினிப் பிரிவையுமே நாசமாக்கிப் பண்ணிய கொடூரத்தோடுதான் தற்போதைய ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அராஜகங்கள் எல்லை மீறிக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கின்றன.
"உதயன்' பத்திரிகைத் தாள் வைத்திருக்கும் களஞ்சியம் தீயிடப்பட்டு பெரும் நாசம் விளைவிக்கப்பட்டது. அந்த வரி சையில் திரும்பவும் ஒரு தடவை "லீடர் பப்ளிக்கேஷன்ஸ்' அலுவலகம் தீயிடப்பட்டிருக்கின்றது.
ஊடக சுதந்திரத்துக்கு எதிராக இத்தகைய கொடூரங் களைப் புரிவோரை குற்றவாளிகளை பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் உறுதியும், திடசங்கற் பமும், தீர்க்கமான தீர்மானமும் அரசுத் தலைமையிடம் ஏற்படாதவரை இக்குற்றங்கள் தொடரவே செய்யும்.
ஊடக சுதந்திரத்துக்கு விலை உலை வைக்கும் பிரகிருதிகளை, அவர்கள் எந்தத் தரப்பில் இருந்தாலும் அதை நோக்காது, தண்டிக்கும் தெளிவான நிலைப்பாடு அரசுத் தலை மைக்கு வரவேண்டும். அந்த நிலைப்பாட்டை சொல்லிலும் செயலிலும் அது வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.
அப்படிக் காட்டினால் மட்டுமே ஊடக சுதந்திரம் கொஞ்ச நஞ்சமாவது மிஞ்சிப் பிழைக்க வாய்ப்பு ஏற்படும். இல்லை யேல் "மஹிந்த சகோதரர் அண்ட் கம்பனி' யின் ஆட்சியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் ஆழக் குழிதோண்டி நீளப் புதைக்கப்பட்டதாகவே சரித்திரத்தில் பதிய வேண்டி நேரும்.

uthayan.com

0 Comments: