Sunday, December 2, 2007

அப்பாவிகளைக் கைதுசெய்வது நிழலோடு நடத்தும் யுத்தம்!

பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது.
அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம்.
ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பதும், இம்சைப்படுத்துவதும் வேறு.

இப்படிக் காரணமின்றி அர்த்தமின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டு தொல்லைப்படுத்துகின்றார்கள் என்பதை அரசின் பிரதி அமைச்சர் ஒருவரே பகிரங்கமாகச் சுட்டிக் காட்டி விசனம் தெரிவித்திருக்கிறார்; ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்; ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரின் சகோதர ருமான பஸில் ராஜபக்ஷவுக்கு நேரடியாகவும் விளங்கப் படுத்திக் கூறியிருக்கின்றார்.
சோதனைகளில் வழி மறிக்கப்படும் தமிழர்கள் அடை யாள அட்டை, கடவுச்சீட்டு, கிராம சேவையாளர் கடிதம், பொலீஸ்பதிவு, வேலைத்தள அடையாள அட்டை என இன்னோரன்ன அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித் துத் தமது ஆளடையாளத்தை ஐயம்திரிபுற நிரூபித்துக் காட் டிய பின்னரும் தமிழர்கள் என்ற காரணத்துக்காக் கைது செய் யப்படுகிறார்கள்; தடுத்துவைக்கப்படுகின்றார்கள்.

இத்தகைய அணுகுமுறையால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடமுடியாது என்று அரசுக்கு இடித்துரைக் கிறார் அதே அரசில் இடம்பெற்றுள்ள பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன்.
நாட்டில் தமிழ் மக்களின் அன்றாட இயல்பு நிலையைச் சீரழித்து, மக்களது ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்கு எதிராகக் காவல்துறையினரும் படையினரும் செயற்படு வதையே இக்கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன எனப் பிரதி அமைச்சர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
"தமிழர்கள் வேறு; புலிகள் வேறு' என்று தத்துவம் பேசு கிறது தென்னிலங்கை அரசு. புலிகளின் பயங்கரவாதத்துக்கு அரசின் பதில் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை என் றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசின் பதில் அரசியல் தீர்வு என்றும் கூட சர்வதேச சமூகத்துக்குப் படம் காட்டுகின்றது தென்னிலங்கை அரசுத் தலைமை.
ஆனால், தென்னிலங்கையில் பாதுகாப்புக் கெடுபிடி என்று வரும்போது அனைத்துத் தமிழர்களையும் புலிகளா கவோ அல்லது புலிச் சந்தேகநபர்களாகவோ அடையாளம் காண்கிறது அரசு.
"புலிகள் வேறு, தமிழர்கள் வேறு' என்று கூறிக் கொண்டே ஒவ்வொரு தமிழரையும் புலிச் சந்தேகநபராகக் கருதி கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைப்புகளில் ஈடுபடும் அரசுத் தலைமையின் பேரினவாத ஒடுக்குமுறைப் போக்கை, சர்வதேசசமூகம் இந்தக் கைதுகள் மற்றும் கெடு பிடிகள் பற்றிய தகவல்கள் மூலம் நன்கு உணர்ந்துகொள்ள முடியும்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங் களில் இருந்து தென்னிலங்கைக்கு வருவோர் மீதும் கட் டுப்பாடுகள், நெருக்குவாரங்கள் விதிக்கப்படுகின்றன. அவர்கள்அப்படி வருவதற்கு படைத்தரப்பின் முன் அனு மதி பெறவேண்டும் என்ற மட்டுப்படுத்தல் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகின்றது. இது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப் பிரதேச மக்கள் அனைவரையுமே புலிகள் என்று அடையாளம் கண்ட தென்னிலங்கையின் போக்கினால் எழுந்துள்ள நெருக்கடியன்றி வேறில்லை.

ஒவ்வொரு தமிழனையும் தனியாக அடையாளம் காணும் கருதும் சந்தேகிக்கும் அரசுத் தரப்பின் போக்கு தொடருமாயின் தென்னிலங்கைச் சிங்களவர்கள் ஒவ் வொருவரையும் அரசுப்படைகளாக மறுபக்கத்தில் நோக் கும் போக்கை அது நியாயப்படுத்திவிடும்.

இத்தகைய தவறுகளே இந்தப் பிணக்கில் அப்பாவிப் பொதுமக்களை சிவிலியன்களை அவர்களின் உயிர் களை இந்தப் பிரச்சினைக்குத் தேவையின்றிக் காவு கொடுக்க வைக்கின்ற நிலைமையை ஏற்படுத்தி விடுகின் றன என்பதைத் தென்னிலங்கை அரசுத் தலைமை முதலில் உணரவேண்டும்.
அப்பாவித் தமிழர்களை சரியான காரணங்கள் பின் னணிகள், சந்தேகிப்பதற்கான நியாயங்கள் ஏதுமின்றி புலிச் சந்தேக நபர்களாக்கும் பாதுகாப்புத்துறையின் அட்டூ ழியம் தொடர்வதற்கு அரசுத் தலைமை அனுமதி அளித்து அதற்கு ஊக்கமும் ஆதரவும் வழங்குமானால்
தென்னிலங்கையிலும் பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் அப்பாவிகளை இலக்குவைத்து அவர்களை நேரடி யாக யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மோதும் தரப்புகளாக அர்த்தப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படு வதைத் தடுக்க தவிர்க்க முடியாது போய்விடும்.
அப்பாவித் தமிழர்களை சரியான உறுதியான தெளி வான திட்டவட்டமான காரணமின்றிப் புலிச்சந்தேக நபராக்கும் தென்னிலங்கை அராஜகம் தென்னிலங்கை அப்பாவிச் சிங்கள மக்களையும் மறுபக்கத்தில் அர்த்தமற்ற தேவையற்ற ஆபத்துக்குள் ஆழ்த்தும் என்பதைத் தென் னிலங்கை அரசு புரிந்துகொள்ளாது ஏனோ?

அப்பாவிகளை பயங்கரவாதிகளாக்கி நிழலோடு யுத்தம் புரியும் இந்த அர்த்தமற்ற விபரீதத்தை அரசுத் தலைமை உடன் நிறுத்துவது நல்லது.

Posted on : 2007-12-02
uthayan.com

0 Comments: