Friday, December 21, 2007

இலங்கைத்தீவு எதனை நோக்கிச் செல்கிறது

சிறிலங்கா தொடர்பாக அண்மைக்காலங்களாக இடம்பெறும் சம்பவங்களையும் அது தொடர்பாக வெளிவருகின்ற செய்திகளையும்- அது சர்வதேச ஊடகங்களாக இருக்கலாம் அல்லது உள்நாட்டு செய்தி நிறுவனங்களாக இருக்கலாம்- நாம் சற்று ஊன்றிக் கவனித்தால் இலங்கைத்தீவு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

யாழ். குடாநாட்டின் செஞ்சிலுவைச் சங்க தலைவராக விளங்கிய தவராஜா கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களைக் காப்பாற்றிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

'மனிதாபிமானப்பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் சுதந்திரமாகக் கடமையாற்றுவதற்கான சூழல் நலிவடைந்து வருகின்றது. அவர்கள் மிகவும் கடினமான நிலைமைகளிலேயே கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் தங்கள் பணிகளை எந்தவிதமான இடைய+றுகளும் இன்றி மேற்கொள்வதற்கான ஒத்துழைப்பினையும் பாதுகாப்பினையும் வழங்க வேண்டியது அவசியம். அத்துடன் இந்தப்படுகொலை செய்யப்பட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டு அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியம். இதனை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்." என்று ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையிலே மேலும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க சிறிலங்காவின் மனித உரிமை அமைப்பானது மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் வெறும் பார்வையாளராக மாறி சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான மகாநாடுகளில் வீற்றிருப்பதாகத் தேசிய நிறுவனங்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான சர்வதேச ஒருங்கிணைப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் சிறிலங்கா மனித உரிமை அமைப்பானது தரம் ~டீ|க்கு தரமிறக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சிறிலங்கா மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான மகாநாடுகளில் வாக்களிக்கும் உரிமைகளை இழக்கின்றது என்று நியூயோர்க்கினைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வதில் சிறிலங்கா அரசானது மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஜெனீவாவில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள சுதந்தர ஊடக கண்காணிப்பு அமைப்பான பிரஸ் எம்பலம் கம்பெயின் (Pசநளள நுஅடிடநஅ ஊயஅpயபைn) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது சிறிலங்காவிலே 2007 ஆம் ஆண்டில் இதுவரை 7 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வருடம் 4 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறிலங்காவானது ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதில் ஈராக் மற்றும் சோமாலியா என்பவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கின்றது என்று அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவிலே இடம்பெற்றுள்ள படுகொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட சுயாதீனமான சர்வதேச ரீதியில் தகைமை வாய்ந்தவர்களைக் கொண்ட அமைப்பு தமது விசாரணகளுக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மறுப்பதோடு ஜனாதிபதி மகிந்தவின் அலுவலகம் தேவையில்லாமல் தமது நடவடிக்கைகளில் தலையீடு செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக ரொய்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

படைத்துறைச் செயற்பாடுகள்;;;;;

அண்மையில் இடம்பெற்ற வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி அமர்வில் மகிந்த அரசாங்கம் வெற்றியைப் பெற்றாலும் அந்த வெற்றி எவ்வாறு பெறப்பட்டது என்பதனை ஆராய்ந்து பார்ப்போமானால் சிறிலங்காவின் எதிர்காலம் என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தாகவும் அரசியல் படைத்துறை நெருக்கடிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றமையை அவதானிக்கமுடியும்.

அதாவது ஏனைய இரண்டு அமர்வுகளைப் போலன்றி மூன்றாவது அமர்விலே மகிந்தவின் அரசாங்கமானது வரவு-செலவுத் திட்டம் வெற்றி பெறுவதற்கு முற்று முழுதாக ஜே.வி.பியினரையே நம்ப வேண்டியிருந்தது. இதன் கருத்து என்னவெனில் எதிர்காலத்தில் நடைபெறப்போகின்ற மகிந்த அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஜே.வி.பினரின் செல்வாக்கு அதிகமானளவிற்கு காணப்படும் என்பதேயாகும்.

அத்துடன் மகிந்த அரசின் எதிர்கால வாழ்வு என்பது முற்றுமுழுதாக போரினை நம்பியதாகவே இருக்கப்போகின்றது. போரில் ஏற்படும் சிறு பின்னடைவுகளைக் கூட மகிந்த அரசானது தாங்க முடியாதளவிற்கு ஏனைய பல்வேறு அரசியல் பொருளாதார நெருக்கடிகளை ஜனாதிபதி மகிந்த தற்போது எதிர்கொள்கின்றார். அதாவது சர்வதேச ரீதியாக தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என்று பன்னாட்டு சமூகம் ஒருபுறம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிலங்கையிலோ மக்கள் பல்வேறு அன்றாட வாழ்வாதாரப்பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு திணறுகிறார்கள்.

இந்நிலையில் மகிந்த அரசானது போரினை தீவிரப்படுத்தி நாட்டினை முற்றுமுழுதான போர் சூழலிற்குள் தள்ளுவதே தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை தவிர்ப்பதற்கான ஒரே வழியாக உள்ளது.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி மகிந்தவும் அவரது சகோதரர்களும் வெளியிடும் அறிக்கைகளும் செவ்விகளும் வட பிராந்தியத்தின் போரரங்கிலே பாரிய படை நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வதற்கு விரும்புகின்றார்கள் என்பதனையே கோடி காட்டி நிற்கின்றது.

அதாவது குடாநாட்டின் முன்னரங்க நிலையிலே அமைந்திருக்கும் முகமாலை- கிளாலி-நாகர்கோவில் மற்றும் ப+நகரிப் பகுதி என்பனவற்றினை உள்ளடக்கிய வடபோரரங்கு, யு-9 வீதியில் அமைந்திருக்கும் ஓமந்தை பகுதிகளை மையமாகக்கொண்டுள்ள தென்போர்முனை, முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பகுதியில் அமைந்திருக்கும் வடகிழக்கு முன்னரங்க நிலை ஆகிய மூன்று பகுதிகளில் சிறிலங்கா படையினர் படை நடவடிக்கைகளை சிறிலங்கா கடற்படை மற்றும் வான் படை என்பனவற்றின் துணையுடன் மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது சிறிலங்கா படையினர் இப்பகுதிகளிலே ஒரு முனையையோ அல்லது பல முனைகளையோ திறக்கலாம் என்று ஜேன்சின் புலனாய்வு பார்வை என்ற சஞ்சிகையில் ரொம் பாரெல் என்ற படைத்துறை ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினர் புலிகளின் மீது இறுதிப்போருக்குத் தயாராகி விட்டதாகவும் தாங்கள் அவர்களை வெல்ல முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ள போதிலும் புலிகள் கடந்த காலங்களிலே இதனை விட கடுமையான நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்ட வேளையில் அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையிலே அந்த நெருக்கடிகளில் இருந்து மீண்டு முன்னரை விட அதிக பலத்துடன் அவர்கள் எழுந்ததை இலங்கைத்தீவின் போர் வரலாறு பதிந்துவைத்துள்ளது என்று தெரிவிக்கின்ற பாரெல் இப்பொழுதும் விடுதலைப் புலிகளின் தலைவர் புதிய போரியல் நுட்பங்களையும் தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி சிறிலங்காப் படையினருக்கு ஜெயசிக்குறு காலப்பகுதியில் பாரிய தோல்வியையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது போன்று இப்போதும் செய்யலாம் என்று மேலும் கூறியிருக்கின்றார்.

வருகின்ற வாரங்களும் மாதங்களும் இலங்கைத்தீவின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகின்றது என்பதனை எடுத்துக்காட்டும் காலங்களாக இருக்கும். தற்போது குத்துசண்டையில் ஈடுபட்டிருக்கின்ற இரண்டுதரப்பினரில் எவர் முதலில் களைக்கின்றாரோ அவரே இந்தக்களத்தில் இருந்து தோல்வியுடன் பின்னவாங்க வேண்டும் என்று தென்னிலங்கையில் ஒரு படைத்துறை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பொழுது எழும் கேள்வி என்னவென்றால் சிறிலங்காப் படையினர் கிழக்கிலே தாம் கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைத்துக்கொண்டு வடக்கிலே பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு உரிய படைபலங்களைக் கொண்டிருக்கின்றார்களா என்பதுதான். அத்துடன் தென்னிலங்கைக்குள் ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் படையணிகளை தேடுவதற்கெனவே புதிதாக ஒரு படைத்தளபதியை நியமிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் தற்போது மகிந்த அரசு காணப்படுகின்றது. மேலும் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் தீவிரப்படுத்தியுள்ளார்கள் என்பதனை அண்மைக்காலமாக வவுனியா, மதவாச்சி மற்றும் பதவியா பகுதிகளில் இடம்பெறும் தாக்குதல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

-எரிமலை-

0 Comments: