Wednesday, December 12, 2007

தென் இலங்கையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடிக்குமா?

தமிழர் தரப்பின் பொறுமை என்பது அதன் எல்லைக்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, களநிலவரம் மாற்றமடைய ஆரம்பித்துவருகின்றது.
கடந்த 05.12.2007 அன்று கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் பொதுமக்கள் பிரயாணம் செய்த பேரூந்து ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற சம்பவங்களும், களமுனையில் தமிழர் தரப்பு ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அநுராதபுர மாவட்டத்திலுள்ள கெப்பிட்டிகொலாவ பிரதேசத்தில் கடந்த 05.12.2007 அன்று இரவு 8 மணியளவில் கிளைமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தை இலக்குவைத்தே அத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டு, 23 பேர் காயம் அடைந்துள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களில் மூவர் சிறிலங்கா படையை சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் படையினரின் உறவினர்களான சிங்களப் பொதுமக்கள்.கெப்பிட்டிகொல்லாவாவ பகுதியிலிருந்து 14 கிலோ மீட்டர் வடக்காகவுள்ள அம்பினாபுர என்ற இடத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. பெருந்தொகையான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது

கடந்த 28.11.2007 புதன் கிழமை கொழும்பு நுகேகொடையில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தது.

நுகேகொட குண்டு வெடிப்பில் அகப்பட்டு 18 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் வரையில் படுகாயம் அடைந்திருந்தார்கள். நுகேகொடையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஓரிரு சிறிலங்கா படையினர் அகப்பட்டிருந்தாலும், அந்தக் குண்டு பொதுமக்களைக் குறிவைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நுகேகொடைக் குண்டு வெடிப்புப் பற்றி பல்வேறு அனுமானங்கள் வெளியாகியிருந்தாலும், அந்த குண்டு தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளைவத்தை, தெகிவளை, கல்கிசை, பம்பலபிட்டி பகுதிகளில் வைக்கப்படாமல், சிங்கள மக்கள் அதிகம் வாழும் நுகேகொட பகுதியில் வைக்கப்பட்டிருந்ததன் மூலம், சிங்கள மக்களைக் குறிவைத்தத்தான் அந்தக் குண்டு வைக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவக்கு நாங்கள் வரமுடிகின்றது.

சிங்கள மக்களைக் குறிவைத்து…

கடந்த வாரம் 28.11.2007 புதன் கிழமை கொழும்பு நுகேகொடையில் குண்டு வெடிப்பு இடம்பெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், அடுத்த புதன் கிழமை 05.12.2007 அன்று கெப்பிட்டிக்கொலாவ குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கெப்பிட்டிகொல்லாவ தாக்குதலும் சிங்கள பொதுமக்களைக் குறிவைத்துத்தான் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்த தாக்குதலில் சில ஊர்காவல்படை வீரர்களும், இராணுவத்தினர் சிலருடைய குடும்ப உறுப்பினர்களும் அகப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிங்களப் பொதுமக்களைக் குறிவைத்துத்தான் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சிங்களப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு குண்டுத் தாக்குதல்களையும் நாம் இரண்டு கோணங்களில் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

முதலாவது பார்வை:

இப்பொழுது மக்கள் மத்தியில் எழும்பியுள்ள கேள்வி இதுதான்? ’’இந்தக் குண்டு வெடிப்புக்களுக்கு யார் காரணம்?’’


சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகவே விடுதலைப் புலிகளை நோக்கி தனது கரங்களை நீட்டிவிட்டுள்ளது. சர்வதேசமும் அந்தக் கோணத்தில்தான் தனது பார்வையைச் செலுத்தியுள்ளது.

தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் தின உரையைத் தொடர்ந்து, இந்தக் குண்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக, பிரபல இராணு ஆய்வாளர் ரொஜர் பலியப்பிட்டிய ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அதாவது விடுதலைப் புலிகள் தமது பழைய பாணியிலான பதிலடிகளை இனிமேல் மேற்கொள்ள இருப்பது, புலிகளின் தலைவரினது உரையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என்று அவர் தெரிவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையானது சிறிலங்கா படைகளுக்கு எதிரான ஒரு யுத்தப் பிரகடனம் என்று இராணுவ ஆய்வாளர் ரொஜர் பலியப்பிட்டிய தெரிவித்திருந்தார்..

பல்வேறு வார்த்தைகளுள் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட ஏராளமான யுத்த அறை கூவல்கள், புலிகளின் தலைவரது உரையினுள் பொதிந்து உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சமாதானத்தைப்பற்றியோ சர்வதேசத்தைப் பற்றியோ அக்கறை காட்டாது, புலிகள் முழு அளவில் யுத்தத்தை முன்னெடுக்க உள்ளதை புலிகளின் தலைவர் தனது உரையில் மறைமுகமாகத் தெரிவித்திருக்கின்றார்.
‘’தமிழர்களை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவு நிச்சயம்’’ என்று கூறியுள்ளதன் மூலம், சிறிலங்காப் படைகளுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு யுத்த நடவடிக்கையை புலிகள் மேற்கொள்ள இருப்பதையும் தலைவர் பிரபாகரன் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னைய வெற்றிகள் பற்றியும், அவர்களது படை அணிகள் பற்றியும், யுத்த தந்திரங்கள் பற்றியும், நிறைய இடங்களில் சுட்டிக் காட்டியுள்ள .பிரபாகரன், யுத்தத்தின் மூலமான விடுதலையையே புலிகள் வாஞ்சித்து இருக்கின்றார்கள் என்பதையும் தனது உரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் புலிகளின் தலைவரது இந்த மாவீரர்தின உரை என்பது, சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் முழுவீச்சில் மேற்கொள்ள இருக்கின்ற யுத்த நடவடிக்கைகளுக்கான ஒரு முன்னுரையே என்று, இராணுவ ஆய்வாளர் ரொஜர் பலியப்பிட்டிய தனது ஆய்வில் தெரிவித்திருந்தார்.

முக்கிய கேள்வி:

ஆனால் இங்கு எழும்; மற்றொரு கேள்வியையும் நாம் இலகுவில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

உண்மையிலேயே நுகேகொடையில் இடம்பெற்ற குண்டு விடுதலைப் புலிகளினால் வைக்கப்பட்ட குண்டுதானா என்கின்ற கேள்வி சில தரப்புக்களிடத்தில் இருந்து எழுந்துள்ளன.

இந்த நுகேகொட குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியாகி வருகின்ற சில செய்திகள் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது போன்றும் இருக்கின்றன.

முதலாவது நுகேகொட குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடம்.
குண்டு வெடிப்பு இடம்பெற்ற நோ லிமிட் (No limit) என்ற அந்தக் கடை காத்தான்குடியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமானது. நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்ட மிகப் பிரபல்யமான வர்த்தக நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்; ஐ.தே.கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.தே.கட்சிக்கு பாரிய அளவில் நிதி உதவி செய்து வருகின்ற ஒரு நிறுவனம்தான் இந்த நோ லிமிட்(No limit) நிறுவனம். முன்னர் பிரெஞ் கோணர் (French Corner) என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனம் தனது பெயரினை ‘நோ லிமிட்’ என்று மாற்றி, பழைய பெயரில் பல வங்கிகளிடம் இருந்த பெற்றுக்கொண்ட பாரிய கடனை கட்டாமல் தப்பியிருந்தது. இந்த நடவடிக்கைக்கு ஐ:தே.கட்சி பெருமளவு உதவி செய்ததாகக் கூறப்படுகின்றது.இந்த நிறுவனத்தின் நுகேகொடைக் கிளை மீதுதான் குண்டுத்தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது.

நன்மைகள்:
சரி இனி விடயத்திற்கு வருவோம்.

இந்தக் குண்டுத் தாக்குல் பற்றி சற்று ஆழமாக யோசித்தால் ஒரு உண்மை தெரிய வரும்.

அதாவது, இந்தக் குண்டுத் தாக்குதலினால் விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த நன்மைகளை விட, சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிடைத்த நன்மைகள் அதிகம் என்கின்ற உண்மை தெரிய வரும்.

முதலாவது நன்மை
தற்போதைய அரசாங்கமும் அதன் தோழமை அமைப்புக்களும் மிக அதிகமாக வெறுக்கின்ற முஸ்லிம் வர்;த்தகநிறுவனம் ஒன்று பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இது பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிடைத்த முதலாவது நன்மை.
அடுத்ததாக, நாட்டிலுள்ள அனைத்து ‘நோ லிமிட்’ கடைகளும் அடுத்த தினம் மூடப்பட்டதுடன், பாரிய விற்பனைச் சரிவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.கட்சிக்கு பரிய அளவில் நிதியையும், ஆதரவையும் வழங்கிக்கெண்டிருக்கின்ற ஒரு முக்கிய வர்த்தகர், இந்தக் குண்டு வெடிப்பினால் மிக மோசமான முறையில் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.
இரண்டாவது நன்மை.
அண்மைக்காலமாகவே விடுதலைப் புலிகள் பொது மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவதில்லை என்கின்ற ஒரு ‘இமேஜ்’ புலிகளுக்கு இருந்து வருகின்றது. வான் புலிகளின் விமானக் குண்டு வீச்சுக்கள், மற்றும் தென் இலங்கையில் பொருளாதார இலக்குகள் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அனைத்துமே, கவனமாகத் திட்டமிடப்பட்டு பொதுமக்களின் இழப்புக்களை முற்றாகத் தவிர்த்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்கின்ற ஒரு உண்மையை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்திக்கொண்டு வருகின்ற நேரம் இது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் பாரிய பொதுமக்கள் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நுகேகொட மற்றும் கெபிடிகொல்லாவ குண்டு வெடிப்ப்புக்களானது, நிச்சயம் புலிகளின் ‘இமேஜை‘ உடைத்துவிடுகின்ற ஒரு நடவடிக்கையே என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்த குண்டு வெடிப்பானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு மற்றொரு பாரிய நன்மையைப் பெற்றுத்தந்த ஒரு நிகழ்வே.

அடுத்ததாக, ‘யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழத்தெறிய வேண்டும்’, ‘விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும்’ என்று ஜே.வி.பி மகிந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்தக் காரியத்தை மகிந்த அரசாங்கம் செய்துவிட்டால் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெற இருக்கின்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் மகிந்தவுக்கு சார்பாக தாம் வாக்களிக்க இருப்பதாகவும் ஜே.வி.பி. தெரிவித்து வருகின்றது.


ஜே.வி.பி கேட்டுக்கொண்ட இந்த இரண்டு விடயங்களும் மகிந்தவுக்கும் இனிப்பான விடயங்களே. மகிந்த தேர்தல் காலத்தில் முன் வைத்த ‘மகிந்த சிந்தனை’ என்ற அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இந்த இரண்டு விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக மகிந்த கிழத்தெறிவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை.


‘பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்துகின்றார்கள்’ என்று கூறி புலிகளை தடை செய்வதற்கு அரசாங்கத்தினால் முடியும். அப்படி புலிகள் தடைசெய்யப்பட்டால், யுத்த நிறுத்த ஒப்பந்தம் தானாகவே கிழந்ததொன்றாகிவிடும்.
எனவே பொதுமக்கள் மீதான குண்டு தாக்குதல்கள் என்பது, மகிந்த புலிகளைத் தடைசெய்வதற்கும், அதன் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கிழத்தெறிவதற்கும், அதன் மூலம் ஜே.வி.பியின் அரசியல் ஆதரவை வென்றெடுப்பதற்குமான பல நன்மைகளைப் பயக்கும் விடயமே என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக, விடுதலைப் புலிகள் விரைவில் தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொள்ள இருக்கின்றார்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகின்றது. தமிழர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகின்ற ஒரு போராட்ட அமைப்பாக தன்னை வெளிக்காண்பிக்கும் ஒரு அமைப்பினால் மட்டுமே சுயநிர்னயப் பிரகடனத்தை மேற்கொள்ள முடியும். அப்பாவிப் பொதுமக்கள் மீது குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தும் ஒரு அமைப்பினால் நிச்சயம் ஒரு சுய நிர்ணயப் பிரகடனத்தை செய்ய முடியாது. அப்படிச் செய்தாலும் யாருமே அதனை அங்கீகரிக்க மாட்டார்கள்: சிங்களப் பொதுமக்கள் மீதான குண்டுவெடிப்பானது, விடுதலைப் புலிகள் சுயநிர்ணய உரிமைப் பிரகடனம் செய்வதாகக் கூறப்படும் தளத்தை இழக்கச் செய்யும் ஒரு சம்பவம்.

ஆக, இது மகிந்த அரசாங்கத்திற்கு மிகப் பெரிய நன்மை பயக்கின்ற ஒரு தாக்குதல் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இவற்றில் இருந்து ஒரு உண்மை வெளிப்படுகின்றது.
நுகேகொட குண்டுத் தாக்குதலினால் பாரிய நன்மைகளை அடைகின்ற தரப்பாக இருப்பது மகிந்த அரசாங்கமே தவிர விடுதலைப் புலிகள் அல்ல.
அப்படி இருக்க மகிந்த அரசாங்கமோ அல்லது ஜே.வி.பியோ அல்லது சிங்கள தீவிரவாத அமைப்பக்களோ ஏன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது?

அம்பாந்தோட்டை தாக்குதல்:

இந்தச் சந்தர்ப்பத்தில், அண்மையில் தென் இலங்கையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பற்றியும் பார்த்துவிடுவது அவசியம்.

அம்பாந்தோட்டை பகுதியில் அப்பாவி சிங்கள பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. விடுதலைப் புலிகளே இந்த தாக்குதலை நடாத்தி வருவதாக பீதி பரவியது. ஆனால் கடந்த வாரம் உண்மை வெளிவந்தது. சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களைப் படுகொலை செய்த ஆறு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்ட ஆறு பேருமே சிங்களவர்கள். அவர்கள் அனைவருமே ஜே.வி.பியினர் என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

மற்றொரு உதாரணத்தையும் நாம் பார்க்கலாம்:

1999ம் ஆண்டு காலப்பகுதியில் தென் இலங்கையில் மின் மாற்றிகள் (வசயளெகழசஅநசள) தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தன. இலங்கையின் பல பகுதிகளிலும் மின்மாற்றிகள் தொடர்ச்சியாக குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டன.

புலிகளே இதனைச் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டது. பொதுமக்களின் அன்றாட வாழ்வைக் குழப்பி புலிகள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கண்டனங்கள் எழுந்தன.
ஆனால் 2001 டிசம்பரில் ஐ.தே.கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும் உண்மை வெளியானது.

முன்னர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தையின்
உறவினர் ஒருவர் இலங்கைக்கான மின்மாற்றிகளின் மொத்த இறக்குமதியாளர்களாக செற்பட்டடிருந்தார். புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய அதே நேரம் பெருமளவு மின்மாற்றிகளை இறக்குமதி செய்து அனுருத்த ரத்வத்த குடும்பம் பெருமளவு பணம் சம்பாதித்த விடயம் பின்நாளிலேயே வெளிவந்தது.

எதிரிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் அதே நேரம், பெருமளவு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக மிக மோசமான சதிகளில் ஈடுபடுவதென்பது சிங்கள அரசாங்கங்களைப் பொறுத்தவரை ஒரு புதிய விடயம் கிடையாது. ஜே.வி.பிக்கும் இது ஒரு புதுமையான விடயம் அல்ல.

இரண்டாவது பார்வை:

சிங்கள மக்கள் மீதான தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் பற்றிய மற்றொரு கோணத்தினாலான பார்வையும் இருக்கின்றது. முன்னய பார்வையில் இருந்து இது சற்று மாறுபட்டுள்ளது.
அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் அகோர விமானக் குண்டு வீச்சுகள் மற்றும் சிறிலங்கா ஆழ ஊடுறுவும் படை அணியின் இரக்கமற்ற தாக்குதல்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், சிங்கள மக்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றது.

நுகேகொட மற்றும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கின்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையேயும் இருக்கின்றது.

விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அதனை மறுக்கவில்லை. கண்டிக்கவும் இல்லை. இந்தத் தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டதாக இருந்தாலும், அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத் தாக்குதல்களின் வீச்சை நிச்சயமாகக் குறைக்கும்படியான தாக்குதல்களே இவை என்பதில் சந்தேகம் இல்லை.

இதே கெப்பிட்டிக்கொலாவையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற இதே வகையான தாக்குதல் இதற்கு ஒரு உதாரணம்.

கடந்த வருட தாக்குதல்:

கடந்த 15.06.2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொலாவ பிரதேசத்தில் பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஒன்று கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. அதில் பயணம் மேற்கொண்டிருந்த ஒரு பௌத்த பிக்கு உட்பட 63 பேர் கொல்லப்பட்டார்கள். 95 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

தமிழ் மக்கள் மீதான அகோரமான படுகொலை சிங்கள அரசாங்கத்தினால் கட்டவிழ்துவிடப்பட்ட காலகட்டத்தில் இந்த கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்தத் தாக்குதல் இடம்பெறுவதற்கு சரியாக ஒரு வாரத்தின் முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பொழுது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த வடமுனை பிரதேசத்தில் உள்ள நெடுங்கல் என்ற இடத்தில், சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் பொதுமக்கள் மீதான ஒரு கோரத் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். 6 மாதக் கைக்குழந்தை உட்பட மேலும் 10 பொதுமக்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள். பொதுமக்கள் பயணம் செய்த உழவு இயந்திரத்தைக் குறிவைத்தே சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படை அணியினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர், சிங்களப் பகுதியான கெப்பிட்டிக்கொலாவையினுள் ஊடுருவி சிங்களப் பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து மீதான பதில் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

15.06.2006 அன்று சிங்களப் பொதுமக்கள் மீதான அந்தத் தாக்குதலை சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டித்திருந்தது. சமாதான ஆர்வலர்களும் கண்டித்திருந்தார்கள். சிறிலங்காவின் பல்வேறு அரசியற் கட்சிகளும் கண்டித்திருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்த தாக்குதலைக் கண்டித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் இந்தச் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்திருந்தார்.
இத்தனை கண்டனங்களுக்கு மத்தியிலும் தமிழருக்கு ஒரு நல்லகாரியம் நடைபெற்றது. அதாவது, கிழக்கில் ஊடுருவி அப்பாவித் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த தாக்குதல்கள் உடனடியாகவே நிறுத்தப்பட்டிருந்தன.

ஆக, சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள் தமிழருக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்துகின்றது.

அப்பாவித் தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் அகோரத் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்துவதற்கு சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதலும் ஒரு வழியே என்கின்ற உண்மை வெளிப்பட்டு நிற்கின்றது.

காரணம்:

அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிங்கள தேசம் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் காழ்புணர்ச்சி மாத்திரம் காரணம் அல்ல.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீது தாக்குதல் நடாத்துவதன் மூலம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு பயப் பிராந்தியை (குநயச pளலஉhழ) உருவாக்கி அதன் மூலமாக புலிகளுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கம் சிங்களப் படைகளுக்கு இருக்கின்றது. எந்த நேரமும் மக்களை அச்சத்திலும், மரண பயத்திலும் வைத்திருப்பதன் ஊடாக, ஆக்கமான பணிகள் எதுவும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடைபெறாமல் தடுத்துவிடும் நோக்கம் சிங்களப் படையினருக்கு இருக்கின்றது. புலிகளின் பெருமளவு பலத்தை, தமது மக்களைப் பாதுகாப்பதிலேயே விரயமாக்க சிங்களப் படை விரும்புகின்றது.
தனது உறவுகள், தனது பெற்றோர் எந்நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம், கொல்லப்படலாம் என்கின்ற எண்ணம் களமுனையில் இருக்கும் போராளிகளுக்கு ஏற்பட்டால், அவனால் சிரத்தையை களமுனையில் செலுத்தமுடியாமல் போகும் என்று சிங்களப் படை நினைக்கின்றது. மொத்தத்தில் புலிகள் மீது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால், ஒரு விடயத்தை சிங்கள தேசம் இலகுவாக மறந்துவிடுகின்றது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள தாக்கங்கள் அனைத்துமே, சிங்கள மக்கள் கொல்லப்படும் பொழுது சிங்கள தேசத்திற்கும் ஏற்படும் என்பதை சிங்களத் தலைமை அடிக்கடி மறந்துவிடுகின்றது.


சிங்கள தேசம் அடிக்கடி மறந்துவிடுகின்ற சில உண்மைகளை சிங்கள தலைமைக்குத் தெரிவிக்க இது போன்ற காரியங்களை இடைக்கிடை நடைபெறவேண்டி இருக்கின்றது.


எதிரிக்கு தெரிந்த, அவனால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியிலேயே அவனுடன் பேசியாகவேண்டிய தேவை அவ்வப்பொழுது ஏற்பட்டுவிடத்தான் செய்கின்றது.

பரவலாக்கப்படும் பலம்..

சிங்களப் பொதுமக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இன்று கொழும்பு அல்லோல்ல கல்லோல்லப் பட்டுக்கொண்டிருக்கின்றது.

வன்னிப் போர்முனையில் சிங்களத்தின் அனைத்துப் பலமுமே குவிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில், சிங்கள தேசத்தின் பாதுகாப்பிற்கென்று ஏராளமான துருப்புக்களை களமுனைகளில் இருந்து அகற்றவேண்டிய தேவை சிங்கத் தலைமைக்கு தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது.

களமுனையில் இருந்த மூன்று பட்டாலியன் துருப்பக்கள் யால சரணாலய மற்றும் அம்பாந்தோட்டைப் பாதுகாப்புக்கென்று மாத்திரம் மீளப் பெறப்பட்டிருக்கின்றது.

கொழும்பின் பாதுகாப்புக் கென்றும், தொடர் தேடுதல் வேட்டைகளில் ஈடுபடுத்துவதற்கென்றும் 18,000 துருப்புக்கள் அங்கு நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவசரத் தேவைகளுக்கென்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த விசேட படை அணியினரும், வவுனியா களமுனையில் இருந்த சில பட்டாலியன்களுமே கொழும்பின் பாதுகாப்புக்கென்று வரவழைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுர எல்லைக் கிராமங்களின் பாதுகாப்புக்கென்றும் கெமுனுவோட்ச் படைப்பிரிவின் பெருமளவு துருப்புக்கள் களமுனையில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றார்கள்.


இப்பொழுது அனுராதபுரம் முதல் கெப்பிட்டிக்கொலாவ வழியாக மணலாறு வரையான பெரும் பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக, மணலாற்றுக் களமுனையில் இருந்த சிறிலங்கா இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ஒரு தொகுதி துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள்.
ஆக மொத்தத்தில், சிங்கள மக்களைக் காப்பாற்றவென்று சிறிலங்கா படைத்துறைத் தலைமை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினால், களமுனையில் சிங்களத்தின் பலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது.
இன்றும் தெளிவாகக் கூறுவதானால், தமிழர் தாயகம் மீதான சிங்கள ஆக்கிரமிப்பின் வேகம் குறைக்கப்பட்டு வருகின்றது.

தலை குனியும் சர்வதேசம்..

மறுபக்கம், சிங்களப் பொதுமக்கள் மீதான இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சமூகத்திற்கும் பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்ற சந்தர்பங்களில் அவற்றைக் கண்டிக்கவோ, அல்லது தடுத்து நிறுத்தவோ சர்வதேச சமூகம் முயலவில்லை. ஆயுதங்களை வழங்கியும், இராஜதந்திர ஆதரவுகளை வழங்கியும் சிங்கள தேசத்தின் அந்த கோரதாண்டவத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கி வந்தது.
வழமை போன்று, பழியை விடுதலைப் புலிகள் மீது போட்டு அவர்கள் மீது கண்டிப்பினை மேற்கொள்ளும் நிலையை சர்வதேச சமூம் இழந்து நீண்ட நாட்களாகிவிட்டன.

சிங்களம் விதைத்த வினையை சிங்கள தேசம் அறுவடை செய்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், சர்வதேசத்தால் எதுவும் செய்யமுடியாது இருக்கின்றது.
எதுவும் செய்யும் நிலையிலும் அவர்கள் இல்லை.

விடுதலைப் புலிகள் அமைதி காத்துவந்த காலகட்டத்திலேயே சர்வதேச சமூகத்தின் பல நாடுகள் அவர்களைத் தடை செய்துவிட்டிருந்தன. விடுதலைப் புலிகள் தமது நல்லெண்ணத்தையும், நன் நடத்தையும் வெளிப்படுத்திவந்த காலகட்டங்களிலெல்லாம், சிங்கள தேசத்திற்கு அனைத்துலகு இராணுவ உதவிகளையும் வழங்கி அதனை உற்சாகப்படுத்தி வந்தன.
தமிழர்களுக்கு எதிராக என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவை அனைத்தையுமே சர்வதேச சமூகம் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற தரப்பு செய்து விட்டது.

இன்று சர்வதேச சமூகத்தின் வசம் எந்த ஆயுதமும் கிடையாது. புலிகளை தடைசெய்துவிடுவோம் என்று எச்சரிக்க முடியாது. சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுத உதவிகளை வழங்குவோம் என்று பேரம் பேச முடியாது. சர்வதேசத்திடம் எந்தவிதத் துருப்புச் சிட்டுமே கிடையாது.
அதற்கான தார்மீகமும் அவர்களிடம் கிடையாது.

சர்வதேச சமூகம் விதைத்ததை பாவம் சிங்கள தேசம் அறுவடை செய்ய ஆரம்பித்துவிட்டது.

அவலத்தைத் தந்தவனுக்கு அதனைத் திருப்பிக்கொடுக்கும் காலம் உருவாகி வருகின்றது.

அவலம் சிங்கள தேசத்தின் மீது வருவதைத் தடுக்க சிங்கள தேசத்திற்கு இருக்கும் ஒரே வழி, 'அப்பாவித் தமிழ் மக்கள் மீதான உங்கள் அகோரத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி விடுங்கள்’’.
உங்களுக்கு வீரம் இருந்தால், விடுதலைப் புலிகளுடன் மோதுங்கள்.
மோதிப் பாருங்கள்.

அப்பாவித் தமிழ் மக்கள் மீது உங்களது வீரத்தையோ அல்லது உங்களது இராணுவ தந்திரோபாயங்களையோ காண்பிக்க நினைக்காதீர்கள்.
செவ்வாய், 11 டிசம்பர் 2007
ஆய்வு ----> நிலவன்

1 Comment:

இவன் said...

Nilavan it's an good analysis. I agree with your most of the views.