Monday, December 3, 2007

தமிழ் பேசும் எம்.பிக்களே! உங்களின் பிரதிபலிப்பு என்ன?

கண்ணில்படும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்களாக நோக்கும் தென்னிலங்கைப் பாதுகாப்புத்துறை உயர்மட் டத்தின் "அதிமேதாவித்தனத்தினால்' தெற்கில் குறிப்பாக மேற்கு மாகாணத்தில் தமிழர்களின் வாழ்வு பெரும் அச்சத்துக்குள்ளும் அவலத்துக்குள்ளும் மூழ்கிக் கிடக்கின்றது.

ஹிட்லர் யூதர்களை நாசிவதை முகாம்களுக்கு அள்ளிச் சென்ற மாதிரி தென்னிலங்கையில் தமிழருக்கு குறிப் பாகத் தமிழ் இளம் சமுதாயத்துக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு மேலிடத்து ஆசியோடும், வழிகாட்டலோடும் முழு மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

தலைநகர் கொழும்பிலும் அதை அண்டிய பிரதேசங் களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் சல்லடை போட்டுத் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிக ளில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டு, பயணிகள் இறக்கப் பட்டு, துருவப்படுகின்றார்கள். தமிழர்கள் தடுத்து வைக்கப் படுகின்றார்கள். உரிய ஆவணங்கள், அடையாளப் படுத்தல் பதிவுகள், சான்றுகள் இருந்தாலும் கூட வழி மறிக் கும் படையினருக்கு அல்லது பொலிஸாருக்கு வழி மறிக் கப்பட்ட தமிழரின் தோற்றம் குறித்து மனதில் ஏதும் சந்தே கம் தோன்றுமானால் அந்தத் தமிழர் தடுக்கப்படுகின்றார்; கைதுசெய்யப்படுகின்றார். ஏற்கனவே தயாராக இருக்கும் தடுப்புக் காவல் உத்தரவுப் பத்திரத்தில் அவரது பெயர் பொறிக் கப்படுவதோடு அவர் தடுப்புக் காவல் கைதியாகின்றார்.

இவ்வாறு கண்களில் கண்ட தமிழர்கள் எல்லோரையும் அள்ளுவதன் மூலம் புலிகளை மடக்கிப் பிடிக்கலாம் என்ற தென்னிலங்கை அறிவாளிகளின் "அதிபுத்திசாலித்தன' சிந்தனை செயலுருவில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

தடுப்புக் காவல் கைதிகளாக மாறிக்கொண்டிருக்கும் தமி ழர்களின் எண்ணிக்கை கடந்த ஓரிரு நாட்களில் பல ஆயிரங் களைத் தாண்டிக் கொண்டிருக்கின்றது.

வேறு ஏதேனும் குற்றமும் செய்யாமல் தமிழனாகப் பிறந்த குற்றத்துக்காக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப் படல் என்ற அவமானத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் தமிழ்ச் சமூகம் முகம் கொடுத்துக் கொண்டிருக்க, அந்தத் தமிழ் மக் களின் வாக்குகளில் ஏறி, எம்.பிக்களான சிலர் அமைச்சு பதவி களைச் சுகித்துக்கொண்டு உல்லாசம் கழிக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளோடு அரசு யுத்தம் புரிவதும், "பயங்கரவாத எதிர்ப்பு' நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வேறு. அதற்காகக் கண்ணில் கண்ட எல்லாத் தமிழர்களையும் பயங்கரவாதச் சந்தேக நபர்களாக அடையாளம் கண்டு தீர் மானிப்பது வேறு.
புலிகள் இயக்கத்தோடு அல்லது அதன் செயற்பாடுகளு டன் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள், அதன் மூலம் தனது நாட்டின் சட்டங்களை மீறியவர்கள் என்று கருதுவோரை தென்னிலங்கை அரசு கைது செய்வதும், தடுத்து வைப்ப தும், விசாரணை செய்வதும் பெயருக்கேனும் நியாயப்படுத் தக் கூடியவைதான்.

இவை எதுவுமில்லாமல், தமிழன் என்பதற்காக ஒவ்வொ ருவரையும் சந்தேக நபராகவும், பயங்கரவாதியாகவும் நோக் குவதும் தீர்மானிப்பதுவும் மிகமோசமான நடவடிக்கையா கும். ஒன்றுமறியாத அப்பாவிகளுக்கு புலிச் சந்தேக நபர்கள் என்ற
நாமத்தைச் சூட்டித் தடுத்து வைப்பது தென்னிலங் கைப் பாதுகாப்புப் பிரிவினரின் கையாலாகாத்தனமன்றி வேறில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமிழ் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது அரசியல், கொள்கை, கருத்து வேறுபாடுகளைத் துறந்து ஒரே குரலில் கடுமையாக எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டிய அராஜகம் ஒன்று தமிழர்களுக்கு எதிராக பெரும் அட்டூழியமாக அரங் கேறிக் கொண்டிருக்கின்றது.

தமது குறுகிய அரசியல் லாபங்கள், பதவி நலன்களைத் துச்சமாக மதித்து; தூக்கி எறிந்துவிட்டு இனத்துக்காக ? தமிழ்பேசும் மக்களுக்கு அந்த இனத்தில் பிறந்த குற்றத்துக் காக இழைக்கப்படும் இந்த அநாகரிகக் கொடூரத்துக்காக பொங்கியெழ
வேண்டிய வேளை இது.

தென்னிலங்கை அரசு தமிழ் பேசும் இனத்துக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை அராஜகமாகப் பயன்படுத்தி அடாவடித்தனமாக நியாயப்படுத்த முடியாத நீதியற்ற கைதுகளை பெரும் எடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றது.

புலிச்சந்தேகத்தின் பேரில் அகப்படும் தமிழர்களை எல்லாம் கைது செய்யும் இந்த மிலேச்சத்தனத்துக்கு கருவி யாக அமைந்திருப்பது அவசரகாலச் சட்டமே என்பது வெள் ளிடைமலை.

ஆகவே, இந்தக் கொடூரத்துக்காக அரசுடன் பேசுகின் றோம், கொஞ்சிக் குலாவுகின்றோம், உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்துகின்றோம். ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுகின்றோம், கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்று பத்திரிகைகளுக்குக்
கதை அளந்து, அறிக்கை வெளியிட் டுக் கொண்டிருப்பதை விடுத்து, ஒருமித்த ஒரே குரலில், சர்வதேசத்தின் செவிப்பறையிலும் ஓங்கி அறையக் கூடிய விதத்தில், ஏதேனும் காத்திரமான நடவடிக்கையைத் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டும்.
வரவு செலவுத் திட்டத்துக்கு போதிய ஆதரவை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் அல்லாடும் மஹிந்தரின் அரசு, பேரினவாத சர்ச்சையையும், பௌத்த சிங்கள தேசிய வாத உணர்ச்சியையும் தூண்டிவிட்டுத் தனக்குரிய ஆரவைத் திரட்ட முயல்கிறது. அதற்காக அது அரங்கேற்றும் திருக் கூத்தே இப்போது கட்டவிழ்கின்றது.

தெற்கில் குண்டு வெடித்தால் மட்டுமே தனக்குக் கேட் கும் என்று தனது காதை பக்கச் சார்பாக மூடி வைத்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு, இப்பிரச்சினையை உறைப்பாக உணர்த்தக் கூடிய வகையில் தமிழ் எம்.பிக்க ளின் பதில் நடவடிக்கை தீவிரமாகவும், காத்திரமாகவும், ஆழமாகவும் இருக்க வேண்டும். செய்வார்களா அவர்கள்?
2007-12-03

uthayan.com

0 Comments: