Sunday, December 16, 2007

அரசுடன் ஒட்டியிருப்போரின் முக்கியத்துவம் குறைகின்றது

மிக நெருக்கடியான வரவு செலவுத் திட்ட வாக்கெ டுப்பில் மிக அநாசயமாக வெற்றியீட்டியிருக்கிறது மஹிந்த அரசு.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆக 16 மேலதிக வாக்குகளைப் பெற்ற அரசு அதற்குப் பின்னர் அரசிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறிய பின்னணியில் தோல் வியைத் தழுவும் இக்கட்டில் சிக்கலில் இருப்பதா கவே பலரும் கருதினர்.
ஆனால் பலரும் எதிர்பாராத விதத்தில் 47 அதிகப் படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தில் தனது யுத்த வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கரமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது அது.
யுத்தத் தீவிரத்தில் வெறி கொண்டலையும் மஹிந்த ரின் அரசு, போர் முனைப்பு வரவு செலவுத் திட்டமாகவே இதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்த வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க விடுவது அரசின் போரியல் தீவிரத் திட் டத்திற்கு ஆப்பு வைக்கும் வேலையாகிவிடும் என பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகள் கருதின. அதன் காரணமாகவே தென்னிலங்கையின் பேரினவாதக் கட்சிகள் எல்லாம் அரசியல் வேறுபாடுகளைத் தூரத் தள்ளி வைத்துவிட்டு இந்த வரவு செலவுத் திட்டம் தங்கு தடையின்றி நிறைவேறுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கியமாகச் செயற்பட்டு, பௌத்த சிங்கள ஐக்கியத்தை நிரூபித்துள்ளன.
"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பெயரில் தமிழர் தேசத்தின் மீது கொடூர யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது கொழும்பு. அதற்கு ஒன்றுபட்டு உதவு வதன் மூலம், தமிழரின் தேசிய விடுதலைத் தாகத்தை வேணவாவை அடியோடு தகர்த்து, தமிழினத்தை அடக்குவதில் கங்கணம் கட்டி நிற்கிறது தென்னிலங்கை. அந்தக் கருத்தியல் போக்கின் பிரதிபலிப்பையே வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தென்னிலங்கைக் கட்சிகள் வெளிப்படுத்தின.
புலிகளுக்கு எதிரான கடுந்தீவிரப் போரியல் நிலைப் பாடு என்ற ஒரேயொரு துரும்பை வைத்துக் கொண்டு, தமது அரசை வெற்றிகரமாகக் கொண்டு நடத்தலாம் என்று எண்ணும் கொழும்பு அரசு, அதற்கமைவாகவே தமது காய்களை நகர்த்தி வருகின்றது.
பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அந்த யுத்தத் தீவிரப் போக்கின் விபரீதங்களை விளங் கிக் கொள்ளாத சரிவரப்புரிந்து கொள்ளாத தென்னி லங்கைச் சமூகமும் "ஆஹா ஓஹோ' என்று இந்தப் போர் வெறிச் சிந்தனையைச் சிலாகித்து அதை ஆதரித்து நிற்கிறது.
இந்த வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதும், அரசுத் தரப்பின் பேச்சாளரும், அரசின் பிரதம கொறடாவும், சிரேஷ்ட அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பெரு மூச்சு விட்டபடி என்ன கூறினார்?
""இந்த வரவு செலவுத் திட்டம் துரதிஷ்ட வசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தால் பயங்கவாதத்திற்கு எதிராக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அனத்தும் தடுத்து முடக்கப்பட்டிருக்கும். நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. எனவே எமக்கு ஒத்துழைத்த அனை வருக்கும் நன்றி'' என்றார் அவர்.
சரி சிங்களக் கட்சிகளும் தென்னிலங்கைச் சக்திக ளும் இதனைக் கூறித் திருப்திப்படலாம். மகிழ்ந்து கொள்ளலாம்.
ஆனால் இந்தப் போர் வெறித் தீவிர வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் பேசும் மக்களை பிரதிநிதுத்துவப்படுத்துபவர்கள் எனத் தம்மை கூறிக்கொள்கின்ற "கோடரிக் காம்புகள்' எதனைக் கூறித் திருப்திப்படலாம்? எப்படித் தமது மனச்சாட்சியின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூறப் போகின்றார்கள்?
நாடாளுமன்றப் பேச்சுக்களில் ஏன், வரவு, செலவுத் திட்ட மீதான உரைகளின் போது கூட அரசின் யுத்த தீவிரப் போக்கை தமிழர் விரோதக் கொடூரச் செயற் பாடுகளை வேறு வழியின்றி கண்டித்து, உண்மை களை வெளிப்படுத்தும் வகையில் உரையாற்றிய இவர் கள், பின்னர் அந்த யுத்த தீவிர வரவு செலவுத் திட் டத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், தங்களின் அரசியல் குத்துக்கரணத்தை சுயநலத்தை பறைசாற் றிக் கொண்டார்கள்.
இந்தத் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளான இக் கோடரிக் காம்புகளின் ஆதரவு இருந்தாலும், இல்லா விட்டாலும் கூட, தென்னிலங்கை பௌத்த சிங்கள அரசினால் பலமாகத் தாக்குப் பிடிக்க முடியும் என்பதை அரசு மேற்படி வாக்கெடுப்பு மூலம் நிரூபித்துக் காட்டி யிருக்கிறது.
இந்தப் "போடுதடி'களின் முக்கியத்துவம் இவ்வளவு தான் என்பதை இந்த வாக்கெடுப்பு அம்பலப்படுத்தியி ருப்பதால், இனி அரசுக்குள் இத்தரப்பின் பட்டை கழன்று விடும். முக்கியத்துவம் இல்லாமல் மேலும் மூலைக்குள் இவர்கள் வீசப்படுவார்கள்.
ஆனால் ஒண்டிக்கொண்டு, கிடைத்ததை அள்ளு வதற்கு அலையும் கூட்டம் தன்னைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அந்தக் கூட்டம் வாலாட்டிக் கொண்டே இருக்கும் போர்த் தீவிரப் போக் கில் முழு மூச்சாக நிற்கும் தனது எஜமான் அரசுக்கு எப்போதுமே விசுவாசமாக!
16.12.2007
uthayan.com

0 Comments: